Saturday 12 September 2009

மூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒரு சோதனை!

 

சக்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை!

ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!!

சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!!

இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்!

”அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது?”  

என்ற கேள்வி எழும்!!

அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!!

அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ”ஆம் உள்ளது” என்பதுதான் பதில்!!

அந்த சோதனையின் பெயர் என்ன? 

அந்த சோதனையின் பெயர் Hb A1c .

இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.

இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின்  உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால் அதிகமாகவும் குறைய சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்!  இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!

இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.

2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7%-8%- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!

3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!

4.பத்துக்கு மேல்->10% - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!!

ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் என் சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என்போர் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!

25 comments:

அகல்விளக்கு said...

மிக பயனுள்ள பதிவு...

தேவன் மாயம் said...

அகல் விளக்கு
பயனுள்ள பதிவு...

12 September 2009 18:30//

நன்றிங்க !!

துபாய் ராஜா said...

அறிய வேண்டிய தகவல்கள் கொண்ட பதிவு.நன்றி மருத்துவர் ஐயா.

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...
அறிய வேண்டிய தகவல்கள் கொண்ட பதிவு.நன்றி மருத்துவர் ஐயா.//

நன்றிங்க!

தேவன் மாயம் said...

தமிழினி said...
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

12 September 2009 19:///

என்னுடைய எச்.டி.எம்.எல் கோளாறா இருக்குங்க!!

cheena (சீனா) said...

அன்பின் தேவன் மாயம்

பயனுள்ள தகவல் - யாரெல்லாம் இச்சோதனை செய்து கொள்ள வேண்டும் - நான் மாதா மாதாம் பாஃஸ்டிங் - பீப்பி சோதனை செய்து கண்ட்ரோலில் இருப்பதாக திருப்தி அடைகிறேன். இச்சோதனையும் செய்து கொள்ள வேண்டுமா

நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

அன்பின் தேவன் மாயம்

பயனுள்ள தகவல் - யாரெல்லாம் இச்சோதனை செய்து கொள்ள வேண்டும் - நான் மாதா மாதாம் பாஃஸ்டிங் - பீப்பி சோதனை செய்து கண்ட்ரோலில் இருப்பதாக திருப்தி அடைகிறேன். இச்சோதனையும் செய்து கொள்ள வேண்டுமா

நல்வாழ்த்துகள்

12 September 2009 19:33 //

6 மாதம் ஒரு முறை செய்து பாருங்கள்! கட்டாயம் செய்ய வேண்டும்!

மலரகம்(நாகங்குயில்) said...

I am also diabetic., It is useful information. I do this checkup every year., but every week i do blood test thru sticks.
This information helpful to diabetic patients. Thanks

நட்புடன் ஜமால் said...

நம் உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு இடுக்கை.

நன்றி தேவா!

மாதேவி said...

நீரிழிவு நோயாளர்களுக்கான பயனுள்ள பதிவு.

அனைவரும் தெரிந்திருக்கவேண்டியது.

மங்களூர் சிவா said...

டாக்டர் நல்ல தகவல். சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதும் ஒன்றா வேறு வேறா?

வேறு எனில் இந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு செலவாகும்?

நன்றி

ஜோ/Joe said...

பயனுள்ள பதிவு!

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
டாக்டர் நல்ல தகவல். சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதும் ஒன்றா வேறு வேறா?

வேறு எனில் இந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு செலவாகும்?

நன்றி

12 September 2009 22:01//

இது வேறு ! இது ஒரு அளவுகோல்!

மேவி... said...

nalla padivu

வழிப்போக்கன் said...

மிக பயனுள்ள பதிவு அண்ணா.....

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப பயனுள்ள இடுகை தேவா சார்

Menaga Sathia said...

மிக பயனுள்ள பதிவு!!

Ashok D said...

என் தந்தைக்கு பாதங்களுக்கு மேல் உள்ள பாகம் வீங்கிவிடுகிறது(while he travels more than nearly 60 km that day). முகமும் வீங்கிவிட்டது இரண்டும் கடந்த 1 1/2 வருடங்களாக. இப்போது டாக்டர் அவருக்கு thyroid என்று சொல்லவதாக கேள்வி. உணவு கட்டுபாடு தந்தையிடம் சிறிதும் இல்லை. தற்போது dianil, glyciphage’il காலம் ஒட்டுகிறார். உங்கள் சர்க்கரை பதிவுகளை printout எடுத்து தந்துவிடுவேன். அவருக்கு வயது 62.

தேவன் மாயம் said...

D.R.Ashok said...
என் தந்தைக்கு பாதங்களுக்கு மேல் உள்ள பாகம் வீங்கிவிடுகிறது(while he travels more than nearly 60 km that day). முகமும் வீங்கிவிட்டது இரண்டும் கடந்த 1 1/2 வருடங்களாக. இப்போது டாக்டர் அவருக்கு thyroid என்று சொல்லவதாக கேள்வி. உணவு கட்டுபாடு தந்தையிடம் சிறிதும் இல்லை. தற்போது dianil, glyciphage’il காலம் ஒட்டுகிறார். உங்கள் சர்க்கரை பதிவுகளை printout எடுத்து தந்துவிடுவேன். ///

ஏதேனும் சந்தேகம் என்றால் கேளுங்கள் நண்பரே!

அப்துல்மாலிக் said...

//ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் //

அதிர்ச்சி! அதிர்ச்சி!

அப்துல்மாலிக் said...

//சோதனையின் பெயர் Hb A1ச் . //

இதே பெயரை சொல்லி சோதனை செய்துக்கொள்ளனுமா

சர்க்கரை அளவை 85 முதல் 110 வரை இருக்கலாம் என்று கால்குலேட் பண்ணி சொல்லுகிறார்கள், இதற்கு தாங்கள் சொன்ன அளவிர்க்கும் என்ன வித்தியாசம்?

சுந்தர் said...

சக்கரை என்றால் கசப்பு தானா ? சக்கரைய பற்றி இனிப்பா ஒரு கவிதை யாவது போடுங்க பிளீஸ் !

Jaleela Kamal said...

நல்ல பயனுள்ள பதிவு , இது பலரை சென்றடையும்/

Dr.ராம் said...

வணக்கம் சார்.. எளிய முறையில் மருத்துவ விளக்கங்களை அற்புதமாக தருகிறீர்கள்..

கொஞ்சம் எனது வலைப்பூவுக்கும் வந்து உங்கள் கருத்துக்களை இட்டால் மகிழ்ச்சி அடைவேன்..http://sakalakaladr.blogspot.com/

Anonymous said...

I usually do not leave a comment, but you really impress me, also I have a few questions like to ask, what's your contact details?

-Johnson

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory