Saturday 19 September 2009

சிந்துவும்! சாஷிகாவும்!

சிந்து மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாத பெண். கல்லூரி மாணவி!!

சாஷிகா பல்துறையில் கலக்குபவர்!! 

இந்த இருவரும்  SCRUMPTIOUS BLOG AWARD எனக்கு  வழங்கிவிட்டார்கள்.விருதுகளை பதிவர்களிடையே அன்பை வளர்க்கும் ஒரு பாலமாகத்தான் நான் கருதுகிறேன். கொடுப்பதும் பெறுவதும் மனத்துக்கு மிகவும் இதமான விசயம்.
 
.

 

1.சாஷிகா- சாஷிகாவின் பதிவுக்குப் போனால் அசந்து போவீங்க! அவ்வளவு அருமையான சமையல் குறிப்புகளுடன் பிச்சு உதறியிருப்பாங்க. இறால் சமையல் குறிப்புகள் அவர்கள் தளத்திலிருந்து சுட்டு உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும்.  இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு  கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன்.!!! இஃகி!! இஃகி!!

இறால் தொக்கு!!.

Labels: அசைவம், இறால், வறுவல் - Thursday, 13 August 2009

தே.பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் - 500கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை கட் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு+இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.
*ஈஸி இறால் தொக்கு ரெடி.

*************************************************


2.சிந்து - சிந்துவும் இந்த விருதை எனக்குக் கொடுத்து உள்ளார்கள்.

சிந்து மாணவர்தான். அன்பு , நடைமுறை வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து பதிவிடுபவர் .  அவர்  பணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

பணம்
இது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை.

*************************************************


இந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம்.

1.ஜெரி ஈஷாநந்தா-http://jerryeshananda.blogspot.com

2.சிங்கக் குட்டி-http://singakkutti.blogspot.com/.

3.எஸ்.ஏ.நவாசுதீன்.http://syednavas.blogspot.com/

4.ஹேமா-http://kuzhanthainila.blogspot.com

5.கதிர்-ஈரோடு-http://maaruthal.blogspot.com/

6.அன்புமணி-http://anbuvanam.blogspot.com/

7.பட்டர்ஃப்ளை சூர்யா-http://butterflysurya.blogspot.com/

8.விதூஷ்-http://vidhoosh.blogspot.com/

9.ஸ்ரீ-http://sridharrangaraj.blogspot.com

10.சி @ பாலாசி.http://balasee.blogspot.com/

ஒரு வழியாகப் பத்துப்பேருக்கு இந்த விருதை வழங்கிவிட்டேன். அவர்கள் இதனைப் பத்துப் பேருக்கு வழங்கலாம்!!

தமிழ்த்துளி தேவா!!

26 comments:

Sinthu said...

நன்றி தேவா அண்ணா... இப்படி அசத்துவீங்க என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை..

நான் சொன்ன அதே பணத்துக்கு உங்கள் விமர்சனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாமே.......தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்............. கலந்து கொள்க...

S.A. நவாஸுதீன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் தேவா சார். எனக்கும் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Admin said...

உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்..

பாலா said...

vazhththukal vazhakiyamaikkum petramaikkum

Menaga Sathia said...

தேவா ப்ரதர் என் பதிவைப்போட்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல.சந்தோஷமா இருக்கு.வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

//பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன்.!!! இஃகி!! இஃகி!!// ஹா ஹா.எங்க வீட்டுக்கு வாங்க செய்து தரேன் உங்களுக்கு..

இஃகி இஃகி என்றால் என்ன ப்ரதர்?

Ashok D said...

ஹேமாவின் பிளாக்கை தெரிந்துக்கொண்டேன். நன்றி

க.பாலாசி said...

சாஷிகாவின் சமையலும், சிந்துவின் பணம் பற்றிய சிந்தனையும் அருமை.

உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

இந்த விருதினை எனக்கும் பகிர்தளித்தமைக்கு எனது நன்றிகள்.

என்னுடன் இந்த விருதினை பகிரும் அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

Sinthu said...
நன்றி தேவா அண்ணா... இப்படி அசத்துவீங்க என்றெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை..

நான் சொன்ன அதே பணத்துக்கு உங்கள் விமர்சனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாமே.......தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்............. கலந்து கொள்க...

19 September 2009 ///

தொடர் பதிவா? இதோ வருகிறேன்!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
விருதுக்கு வாழ்த்துக்கள் தேவா சார். எனக்கும் தந்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

19 September 2009 01///

கலக்குங்க நவாஸ்!

தேவன் மாயம் said...

சந்ரு said...
உங்களுக்கும் உங்கள் மூலம் விருது பெறுவோருக்கும் வாழ்த்துக்கள்..

19 September 200///

மிக்க நன்றி சந்ரு!

தேவன் மாயம் said...

பாலா said...
vazhththukal vazhakiyamaikkum petramaikkum//

நன்றி பாலா!

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
தேவா ப்ரதர் என் பதிவைப்போட்டு என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துவீங்கன்னு எதிர்ப்பார்க்கல.சந்தோஷமா இருக்கு.வாழ்த்துக்கள்!!

19 September 2009 03:09///

இது ஒரு சிறிய அன்பின் வெளிப்பாடுதான்!

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
//பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும். இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன்.!!! இஃகி!! இஃகி!!// ஹா ஹா.எங்க வீட்டுக்கு வாங்க செய்து தரேன் உங்களுக்கு..

இஃகி இஃகி என்றால் என்ன ப்ரதர்?

19 September 2009 03:11//

இஃகி!! இஃகி!!என்றால் ஹா ஹா தான்!

தேவன் மாயம் said...

D.R.Ashok said...
ஹேமாவின் பிளாக்கை தெரிந்துக்கொண்டேன். நன்றி

19 September 2009 03:1//
நன்றி அசோக்!

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
சாஷிகாவின் சமையலும், சிந்துவின் பணம் பற்றிய சிந்தனையும் அருமை.

உங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

இந்த விருதினை எனக்கும் பகிர்தளித்தமைக்கு எனது நன்றிகள்.

என்னுடன் இந்த விருதினை பகிரும் அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்...

19 September 2009 04:48//


விருதினைப் பகிர்ந்து உங்கள்

மகிழ்ச்சியைப் பகிருங்கள்!

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு நன்றி தேவா.
உங்கள் விருப்படி நிச்சியம் இது பத்து மக்களுக்கு சென்று அடையும் விரைவில்.

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள் உங்களுக்கும் , பெற்றவர்களுக்கும்...

இறால் தொக்கு!!.//

சாரி அண்ணா நான் வெஜ்டேரியன்..
:)))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும்.

JACK and JILLU said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள், விருது தந்தமையோடு அவர்களது நல்ல ஒரு பதிவையும் வெளியிட்ட விதம் அருமை

மங்களூர் சிவா said...

/
இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன்.!!! இஃகி!! இஃகி!!
/

இம்புட்டு லேட்டாவா சொல்றது
:))))))))))))

வாழ்த்துக்கள் தேவா சார்.

ஷங்கி said...

உங்களுக்கும் உங்களவர்களுக்கும் வாழ்த்துகள்!

ப்ரியமுடன் வசந்த் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஹேமா said...

நன்றி தேவா.

இண்ணைக்கும் பண்ணினேன் றால் தொக்கும் ரொட்டியும்.

Anonymous said...

விருது பெற்றவர்களுக்கும் வழங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...சார் விருது தான் தரலை இறால் தொக்காவது பார்சல் அனுப்புங்க....

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory