Tuesday 22 September 2009

குழந்தைகள்-கவனம்!!

 

என்னால் என் குழந்தைகளை கவனிக்க இயலவில்லை. அவர்களுக்கு நேரமும் ஒதுக்கமுடியாத அளவுக்கு தற்போது வேலைப்பளு உள்ளது.

”அதனால் என்ன? நான் வார இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் போகிறேன். பிஸா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை என்று அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கிறேன். நானும் பிள்ளைகளும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்”.

இது பெரும்பாலும் தற்போது அனைத்துக் குடும்பங்க்ளிலும் காணும் நிலை. எண்ணிப் பார்த்தால் நம்மில் பலரும் இதைத்தான் செய்கிறோம்.

நம்மில் பலராலும் குழந்தைகளுடன் நம் நேரத்தைச் செலவிட முடியாததை அவர்களுக்குப் பிடித்தமான சாக்கலேட்டுகள், கேக்குகள் சிப்ஸுகள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வுடன் தின்பதைக் கண்டு மகிழ்கிறோம் என்று தோன்றுகிறது.

பொருளாதார நெருக்கடி நேரத்தில் இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், நிறைய அலுவலக வேலைச்சுமைகள் ஆகியவை நம்மால் நம் குழந்தைகளின்  உணவுப் பழக்கங்களை சீராக அமைக்க முடியாததற்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன.

பெருமான்மையான் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் பழக்கத்தை விட்டு டி.வி யிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுவதும், நொறுக்குத்தீனி அதிகம் உண்பதையும் பார்க்கிறோம்.

இதன் விளைவு என்ன?

கருத்துக் கணிப்பின்படி 2004 ல் 16% ஆக இருந்த உடல் பருமனான இளைஞர்களின் விகிதம் 2006லேயே 28% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாம் ஷாப்பிங் காம்ப்ளகஸ், ஏர்போர்ட் என்று எல்லா இடங்களிலும் குண்டான இளைஞர்கள், குழந்தைகளைக் காண்கிறோம். சற்று அந்தக் குழந்தைகளைப் பார்த்துப் பொறாமைப் பட்டு தன் குழந்தைகளைத் திட்டும் பெற்றோரும் உண்டு.  சில குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் குண்டாகவில்லையே என்ற வருத்தம்  உண்டு. 

குழந்தைகள்,இளைஞர்கள் குண்டாகுதல், உடல் எடை கூடுதல் மிக அதிகமாக வளர்ந்த நாடுகளிலும், சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் கவலை கொள்ளத்தக்க அளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 

இதன் விளைவுகள் என்ன?

1.ஆஸ்துமா- உடல் பருமனான குழந்தைகளுக்கு அதிகம் வருகிறது.

2.பித்தப் பைக்கல்-இதுவும் மேல்சொன்னபடியே!

3.இதய நோய்கள்- இது இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

4.இரத்தக் கொதிப்பு-இதுவும் குண்டான இலைஞர்களில் அதிகமாக உள்ளது.

5.ஈரல் நோய்கள்- ஈரல் அழற்சி ஏற்படுதல் அதிகம்.

6.மாதவிடாய்த் தொந்திரவுகள்-விரைவில் பூப்படைதல், பிற்காலத்தில் கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் கட்டிகள் வருதல், ஒழுங்கில்லாத மாதவிடாய்.

7.தூக்கக் குறைபாடுகள்- தூக்க பாதிப்பு, தூங்கும் போது  மூச்சு சரியாக விடமுடியாமை!

இவையனைத்தும் நம் குழந்தைகளின் உடல் நலனைப் பாதித்து அவர்கள் வாழ்வையும் கெடுக்கின்றன.

ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை குழந்தைகளுக்கு நடைமுறைப் படுத்துங்கள். இளம் வயதில் எதைச் சாப்பிடுகிறார்களோ அதுவே அவர்களுக்குப் பிடித்த உணவாக அமையும்!!

20 comments:

ஈரோடு கதிர் said...

பயனுள்ள இடுகை

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
பயனுள்ள இடுகை

22 September 2009 21:42//

நன்றி கதிர்!!

Anonymous said...

வழக்கம் போல நல் அறிவுரைகளும் பயனுள்ள பதிவும்...

வால்பையன் said...

மிக்க நன்றி டாக்டர்!
எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு!

Jerry Eshananda said...

டாக்டர் , ரெட்டை சுழிக்கும், பசங்க செய்யுற சேட்டைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா?
என் வீட்டுல மொத்தம் அஞ்சு,[பெரியவனுக்கு ரெண்டு, சின்னவனுக்கு மூணு.]

அமுதா கிருஷ்ணா said...

நிறைய பெற்றோர் இப்படிதான் இருக்கிறார்கள்.. உடம்பையும், மனசையும் கெடுக்கிறார்கள். குண்டான குழந்தைகள் அதிகம் பேசாமல் ஒரு வித தயக்கத்துடனே இருக்கிறார்கள்.(காம்ப்ளெக்ஸ்). ஏன் குண்டாகிறார்கள் என்பதை கவனிப்பதே இல்லை. தைராய்ட் பிரச்சனை பற்றி தெரிவியுங்கள்..நன்றி..

சொல்லரசன் said...

//பெருமான்மையான் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் பழக்கத்தை விட்டு டி.வி யிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுவதும்,//

கவலைகொள்ளவேண்டிய விசயம்.

மணிஜி said...

நான் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்டிருந்தேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

பயனுள்ள இடுகை டாக்டர்..:-)))

பாலகுமார் said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான்...

பயனுள்ள இடுகை !

நட்புடன் ஜமால் said...

நிறைய யோசிக்க வைக்கும் இடுக்கை.

இந்த காலத்து குழந்தைகள் இழந்தவை நிறைய ...

Unknown said...

Hello Chitra, Sorry for writing in tamil coz i can read tamil but i can't write.. I loved this post..u passed a very valuable advice to all hope all...Thank for sharing
From today i will be your regular reader....:)

Unknown said...

நெம்ப தேங்க்ஸ் டாக்டர்.... !!! இனிமேல் எங்க மம்மி ஷாப்பிங் கூட்டிகிட்டு போனா ... நோ பிஸா ... நோ ப்ரைடு ரைஸ்... சொல்லீடுறேன்..!! மம்.. மம்.. மட்டும் சமத்தா சாப்பிட்டுகிறேன் ...!!

venkat said...

nalla pathivu

வால்பையன் said...

//டாக்டர் , ரெட்டை சுழிக்கும், பசங்க செய்யுற சேட்டைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா?//

ரெட்டை வாலு என்று சொல்வதற்கும், நான் மட்டையாயி ரெண்டு ஆளா நிற்பதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?

T.V.ராதாகிருஷ்ணன் said...

பயனுள்ள இடுகை

Jaleela Kamal said...

சரியான தகவல், எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்

நாணல் said...

பயனுள்ள‌ பதிவு...

Unknown said...

வழக்கம் போல நல் அறிவுரைகளும் பயனுள்ள பதிவும்...

Nice Information to all brother............

மாதவராஜ் said...

நண்பரே! இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நீங்கள் சேர்த்துச் சொல்லியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கான உணவு நேரமும் முறையற்றதாக இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே முன்பே ஓட ஆரம்பித்து இருக்கிறார்கள். பள்ளியின், ஸ்பெஷல் வகுப்புகளின் இடையில் அவர்களுக்கு உணவுக்கான நேரங்கள் வந்து போகின்றன.இதுவும் ஒரு முக்கிய காரணம். செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்பட வேண்டும் என்பது?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory