Thursday 24 September 2009

கொஞ்சம் தேநீர்- அன்புக் காதலிக்கு!!

என்றோ நான் எழுதிய கவிதை

என் மனப் பெட்டகத்திலிருந்து!!!

-------------------------------------------

 

 

இனிய காதலியே!

என் மனதில்

அன்புவிதைகளை

ஆழமாய்த் தூவியவளே!

 

மெல்லிய தென்றலாய்த்

தவழ்ந்து என் நெஞ்சில்

வண்ணமலர்களைப்

பூக்கச் செய்தவளே!

 

ஒரு மார்கழி மாதத்தில்

நீயும் நானும்

நடந்து சென்ற பாதைகள்!

 

அந்த சோலைவனக்

குயில்களின்

கீதத்தையும் மீறி

என்னைக் கிறங்கடிக்கச்செய்த

உன் பவளவாய் மொழிகள்!

 

மணலில் பதிந்த

உன் பாதச் சுவடுகளில்கூட

உன் காதலையே

நான் பார்த்த நாட்கள்!

 

இன்றும் நான்

அந்த வழியாகத்தான் செல்கிறேன்!

அன்றிருந்த

சோலைவனத்தை

இன்றிங்கே காணவில்லை,

 

குயிலின் மென் குரலைத்

தேடியலைகிறேன்,

குயிலையே காணவில்லை!

 

அந்த பரந்த

மணல் வெளியில்

உன் பாதச் சுவடுகளைக்

கூடக் காணவில்லை!

 

என் இதயக்கூட்டில்

சேமித்து வைத்த

எண்ண மணிகளெல்லாம்

என் முன்னே

சிதறிக் கிடக்கின்றன!

 

அன்புக் காதலியே!

இன்றும் நான்

அந்த வழியைத்தான்

கடந்து செல்கிறேன்!

 

முன்பிருந்த எதையும்

காணவில்லைதான்!

 

வரண்ட இந்தப்

பாதையிலும் கூட

உன் நினைவுகள்

என் நெஞ்சில்

நிழலாய்ப் படிகின்றன!!

37 comments:

நட்புடன் ஜமால் said...

குயிலின் மென் குரலைத் தேடியலைகிறேன், குயிலையே காணவில்லை! அந்த பரந்த மணல் வெளியில் உன் பாதச் சுவடுகளைக் கூடக் காணவில்லை! ]]

நல்ல தேடல்

நட்புடன் ஜமால் said...

வரண்ட இந்தப்

பாதையிலும் கூட

உன் நினைவுகள்

என் நெஞ்சில்

நிழலாய்ப் படிகின்றன!!
]]


காதல் காதல் ...

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

பாதச்சுவடுகளைத் தேடும் தேவன் மாயம் அவர்களே

அந்தப் பாதச் சுவடுகள் கண்ணூக்குத் தெரியாமல் மறைந்த மாயம் என்ன?


அன்புடன்
தமிழ்த்தேனீ

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
குயிலின் மென் குரலைத் தேடியலைகிறேன், குயிலையே காணவில்லை! அந்த பரந்த மணல் வெளியில் உன் பாதச் சுவடுகளைக் கூடக் காணவில்லை! ]]

நல்ல தேடல்

24 September 2009 0///

காதலே ஒரு தேடல்தானே!!

Krishnamachary Rangasamy தமிழ்த்தேனீ said...

பாதச்சுவடுகளை தேடும் தேவன் மாயம் அவர்களே

பாதச்சுவடுகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்த மாயம் என்ன?

அன்புடன்
தமிழ்த்தேனீ

பாலா said...

abirami abirami

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
வரண்ட இந்தப்

பாதையிலும் கூட

உன் நினைவுகள்

என் நெஞ்சில்

நிழலாய்ப் படிகின்றன!!
]]


காதல் காதல் ..//

காதல் காதல் ஆம் நண்பா!!

சென்ஷி said...

//இந்தப் பாதையிலும் கூட உன் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாய்ப் படிகின்றன!!//

இந்த வரிகள் எனக்குப் பிடிச்சுருக்கு டாக்டர்!

தேவன் மாயம் said...

Thamizth Thenee said...
பாதச்சுவடுகளைத் தேடும் தேவன் மாயம் அவர்களே

அந்தப் பாதச் சுவடுகள் கண்ணூக்குத் தெரியாமல் மறைந்த மாயம் என்ன?


அன்புடன்
தமிழ்த்தேனீ

24 September 2009 05:5///

எல்லாம் தங்களுக்குத் தெரிந்ததுதான்!!

தேவன் மாயம் said...

பாலா said...
abirami abirami

24 September 2009 06:12//

கன்னத்தில் போட்டுக்கங்க!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
//இந்தப் பாதையிலும் கூட உன் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாய்ப் படிகின்றன!!//

இந்த வரிகள் எனக்குப் பிடிச்சுருக்கு டாக்டர்///

சும்மா ஜாலியாப் போட்டேன்!!

அப்துல்மாலிக் said...

இங்கும் ஒரு ஏக்கம்... தேடல்...

அந்த மெல்லிய காலைப்பனி நேரம் வந்தாலே மனதிற்கு இதமான ஒரு தேடல் வந்துவிடுகிறது

அருமை தேவா

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
இங்கும் ஒரு ஏக்கம்... தேடல்...

அந்த மெல்லிய காலைப்பனி நேரம் வந்தாலே மனதிற்கு இதமான ஒரு தேடல் வந்துவிடுகிறது

அருமை தேவா

24 September 2009 06:23//

கல்லூரியில் எழுதியது!!! சும்மா போட்டேன்!!

மேவி... said...

sema romantic aa irukku thala

Jerry Eshananda said...

சத்தியமா இனி புத்தகம் தான். "கவிதை புத்தகம் ரிலீஸ் எப்போ"?

தேவன் மாயம் said...

டம்பி மேவீ said...
sema romantic aa irukku thala//

நன்றி மேவி!!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தா. said...
சத்தியமா இனி புத்தகம் தான். "கவிதை புத்தகம் ரிலீஸ் எப்போ"///


ஜெரி!!!

க.பாலாசி said...

//மணலில் பதிந்த உன் பாதச் சுவடுகளில்கூட உன் காதலையே நான் பார்த்த நாட்கள்!//

ஆகா அருமையான வரிகள்...

//இன்றும் நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன்! அன்றிருந்த சோலைவனத்தை இன்றிங்கே காணவில்லை//

திருமணமாகிவிட்டதாலோ?

ரசனை மிகுந்த கவிதை....

ஈரோடு கதிர் said...

//கல்லூரியில் எழுதியது!!! சும்மா போட்டேன்!!//

அதுதானே பார்த்தேன்

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
//மணலில் பதிந்த உன் பாதச் சுவடுகளில்கூட உன் காதலையே நான் பார்த்த நாட்கள்!//

ஆகா அருமையான வரிகள்...

//இன்றும் நான் அந்த வழியாகத்தான் செல்கிறேன்! அன்றிருந்த சோலைவனத்தை இன்றிங்கே காணவில்லை//

திருமணமாகிவிட்டதாலோ?

ரசனை மிகுந்த கவிதை....

24 September 2009 06:54 ///

ரசித்தமைக்கு நன்றி!!

சிங்கக்குட்டி said...

நல்ல கவிதை தேவா வாழ்த்துக்கள் :-)

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
நல்ல கவிதை தேவா வாழ்த்துக்கள் :-///

நன்றி நண்பரே!!

thiyaa said...

//
என் இதயக்கூட்டில்

சேமித்து வைத்த

எண்ண மணிகளெல்லாம்

என் முன்னே

சிதறிக் கிடக்கின்றன!
//

இந்த வரிகள் பிடிச்சிருக்கு

வால்பையன் said...

இன்னைக்கும் அந்த வழியில தான் போனிங்க போல!

தேவன் மாயம் said...

தியாவின் பேனா said...
//
என் இதயக்கூட்டில்

சேமித்து வைத்த

எண்ண மணிகளெல்லாம்

என் முன்னே

சிதறிக் கிடக்கின்றன!
//

இந்த வரிகள் பிடிச்சிருக்கு

24 September 2009 09:16///

தியாவின் பேனாவுக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
இன்னைக்கும் அந்த வழியில தான் போனிங்க போல!

24 September 2009 09:17///

ஹி!! ஹி!!

Unknown said...

// என் மனதில்
அன்புவிதைகளை
ஆழமாய்த் தூவியவளே! //


என்ன விதைங்க தலைவரே....? " ஐ.ஆர் 8 " ஆ...? "சம்பா"..வா...?




// வண்ணமலர்களைப்
பூக்கச் செய்தவளே! //


எப்ப ப்ளவர் ஷோ.......?




/// குயிலின் மென் குரலைத்
தேடியலைகிறேன்,
குயிலையே காணவில்லை! //



ஓஒ.... ஷாமியோவ்.......!! அத நாங்க நேத்தே சுட்டு ப்ரை பண்நீட்டோங்க... ஓஒ ஷாமியோவ்...!!!




// அந்த பரந்த
மணல் வெளியில்
உன் பாதச் சுவடுகளைக்
கூடக் காணவில்லை! //


இதெல்லாம் நெம்ப டூ மச்..... ஒரு வருஷம் கழுச்சு வந்து பாத்தா எப்புடி இருக்கும்...!!




// வரண்ட இந்தப்
பாதையிலும் கூட
உன் நினைவுகள்
என் நெஞ்சில்
நிழலாய்ப் படிகின்றன!! //

அப்போ காதல் பசுமையாத்தானே இருக்கு......!! மஜா மாடி குரு....!!




ஆஅவ்வ்வ்வ்....!! நெம்ப பீலிங் கவிதை.....!! நெம்ப நல்லாருக்குங்கோ டாக்டர் சார்..!!

Anonymous said...

//அன்புக் காதலியே! இன்றும் நான் அந்த வழியைத்தான் கடந்து செல்கிறேன்! முன்பிருந்த எதையும் காணவில்லைதான்! வரண்ட இந்தப் பாதையிலும் கூட உன் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாய்ப் படிகின்றன!!//


அன்றைய சுகமான நினைவுகளின் பாதை இன்று சூன்யமாய்.....

கவிதையில் ஏக்கம் தெரிகிறது....சுகமான நினைவுகள் என்றும் வாடுவதேயில்லை

முனைவர்.இரா.குணசீலன் said...

மனதில் நிழலாய் பதிந்தது கவிதை!!

Sinthu said...

உங்க நிலைமை யாருக்கும் வரக்க கூடாது தேவா அண்ணா...
கவிதை அருமை...

ப்ரியமுடன் வசந்த் said...

:((

அதெல்லாம் மறந்துடனும் சார் இல்லாட்டினா நம்மளையே அந்த ஞாபகமெல்லாம் கொன்னுடும்.....

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கவிதை தேவா சார்

யாரோ ஒருவர் said...

தேடல் என்றும் ஸுகம் தானே!

நாணல் said...

//வரண்ட இந்தப் பாதையிலும் கூட உன் நினைவுகள் என் நெஞ்சில் நிழலாய்ப் படிகின்றன!!//

இது ரொம்ப பிடிச்சிருக்கு சார்..

உமா said...

//என்றோ நான் எழுதிய கவிதை

என் மனப் பெட்டகத்திலிருந்து!!!//

இவ்வளவு அழகான பாதையைப் பார்த்ததும் தங்கள் மனப் பெட்டகம் திறந்துக்கொண்டதோ
நன்று.

Unknown said...

Hi anna..,Nice kavithai..,When will u going to release a book...

jeyamee said...

"என் இதயக்கூட்டில்
சேமித்து வைத்த
எண்ண மணிகளெல்லாம்
என் முன்னே
சிதறிக் கிடக்கின்றன!"
மிக அழகான கற்பனை
அழகான கவிதை.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory