Monday 14 September 2009

ஹைட்ரோசீல்(Hydrocele )-7 கேள்விகள்!

ஹைட்ரோசீல் என்று பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்! விரை வீக்கம் என்று அழைக்கப்படும் ஹைட்ரோசீல் பற்றிப் பார்ப்போம்!

1.ஹைட்ரோசீல் என்றால் அர்த்தம் என்ன?

ஹைட்ரோ என்றால் நீர்.

சீல் என்றால் தேங்கியிருத்தல்.

 

2.ஹைட்ரோசீல் எங்கு ஏற்படுகிறது?

ஹைட்ரோசீல் விரையைச்சுற்றியுள்ள உறையில் ஏற்படுகிறது.

 

 

 

மேலேயுள்ள படத்தில்

       1.Testicle- என்பது விரை Hydrocele என்று குறிப்பிட்டுள்ள அரக்கு நிறப் பகுதியில்தான் நீர் தங்குகிறது.

3.ஹைட்ரோசீல் ஏன் ஏற்படுகிறது?

ஹைட்ரோசீல் விரையில் அடிபடுதல், விரையில் கட்டி, விரைவில் வேறு வியாதிகள் ஆகியவற்றால் உண்டாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விரையின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும். 

4.விரையில் அடிபட்டால் வரும் விரைவீக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

விரையில் அடிபட்டால் உடனே வீக்கம் பெரிதாகி வலி வந்தால் உடனே அறுவை சிகிச்சை மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏனெனில் இரத்தக்கசிவாக இருக்கலாம். இதை உடனடியாக சரிசெய்யவில்லையென்றால் விரை செயலிழந்துவிடும்.

5.விரையின் இருபுறமும் வருமா? 

விரையின் ஒரு புறம் அல்லது இரண்டு புறமும் வரலாம்! 

6.இதற்கு பழைய சிகிச்சை என்ன?

இதற்கு முன்காலத்தில் விரைப்பையில் ஓட்டை போட்டு நீர் எடுப்பார்கள். இவ்வாறு செய்வதால் இது குணமடையாது. மீண்டும் நீர் சேரும். மேலும் நோய்தொற்றும் அபாயம் உண்டு. இன்னமும் அறுவை சிகிச்சையில்லாமல் அண்டகோசத்தை சரிசெய்கிறேன் என்று போலி வைத்தியர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள். அவர்கள் செய்யும் முறையும் இதுதான்!

7.இதற்கு நிரந்தர தீர்வு?

அறுவை சிகிச்சை செய்து நீரை அகற்றி , பெரிதாக படந்திருக்கும் விரை உறையைச் சின்னதாகக் கத்தரித்து, அறுவை சிகிச்சை செய்தால் நிரந்தரமாக திரும்ப வராது.

8.கட்டி புற்றுநோய் போன்றவற்றால் விரைவீக்கம் வந்தால் என்ன செய்வது?

உடன் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் பரவாமல் குணப்படுத்திவிடலாம்!!

25 comments:

சொல்லரசன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சுந்தர் said...

தமிழ் அருவி, தமிழ் கடலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

கிரி said...

//இன்னமும் அறுவை சிகிச்சையில்லாமல் அண்டகோசத்தை சரிசெய்கிறேன் என்று போலி வைத்தியர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள். அவர்கள் செய்யும் முறையும் இதுதான்!//

இவர்கள் தான் இதை பிரபல படுத்தியது..

இவர்கள் விளம்பரத்தை பார்க்காதவர்கள் எவருமே இருக்க முடியாது என்று நினைக்கிறேன் :-)

விளக்கத்திற்கு நன்றி

இளவட்டம் said...

அருமையான விளக்கங்கள் சார்.மிகவும் உபயோகமுள்ள தகவல்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

நல்ல தகவல்கள் தேவா சார்.

//சொல்லரசன் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//

சொல்லவே இல்லை... வையகம் புகழ வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்...

குடந்தை அன்புமணி said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கு.http://anbuvanam.blogspot.com/2009/09/blog-post_14.html#links

க.பாலாசி said...

நல்ல தகவல் அன்பரே...

//விரைவில் வேறு வியாதிகள் ஆகியவற்றால் உண்டாகிறது.//

வேறுவியாதிகள் எவ்வாறு ஏற்படும், அப்படி ஏற்படாமல் இருக்க என்னன்ன வழிமுறைகளை பின்பற்றவேண்டும் போன்றவையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்... (voted 3/3)

ஹேமா said...

மருத்துவத் தகவலுக்கு நன்றி சொல்லியபடி இனிய பிறந்த நாள் வாழ்த்தும் கூட.ஏன் இண்ணைக்குத் தேநீர் தரல.

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

எளிதாகவும் தெளிவாகவும் நோய்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகளைப் பற்றியும் சொல்கிறீர்கள். பதிவர்களின் அன்பும் நன்றியும் என்றும் உங்களுக்கு உண்டு.

S.A. நவாஸுதீன் said...

ஹைட்ரோசீல் பற்றிய விரிவான, தெளிவான விவரங்கள் கொடுத்திருக்கின்றீர்கள் தேவா சார். இதைப்பற்றிய ஐயமுள்ளவர்களுக்கு இதைவிட தெளிவாக விளக்க முடியாது. வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மருதநாயகம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் டாக்டர்

பாலா said...

piranthanaala sollave illaye
vazhththukal doctor sir

வழிப்போக்கன் said...

மீண்டும் பயனுள்ள பதிவு......

நீங்க பேசாம ஒரு “ நோய்கள் தொடர்பான சந்தேகம் கேற்கும் மையமே அமைக்கலாம்”...

:)))

Kanchana Radhakrishnan said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

Menaga Sathia said...

பிறந்தநாள் வாழ்த்துகள்!!

Anonymous said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY SIR..............

சிங்கக்குட்டி said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

அருமையான விளக்கத்திற்கு நன்றி.

மங்களூர் சிவா said...

விளக்கத்திற்கு நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

அப்துல்மாலிக் said...

உடலவிலான நிறைய குறைபாடுகள் அதை நிவர்த்தி செய்வது பற்றிய தாங்களின் விளக்கம் அருமை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Dr.ராம் said...

வணக்கம் சார்.. many mor happy returns of the day..

எளிய முறையில் மருத்துவ விளக்கங்களை அற்புதமாக தருகிறீர்கள்..

கொஞ்சம் எனது வலைப்பூவுக்கும் வந்து உங்கள் கருத்துக்களை இட்டால் மகிழ்ச்சி அடைவேன்..http://sakalakaladr.blogspot.com/

தங்கராசு நாகேந்திரன் said...

அருமையான விளக்கம் ஐயா
கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்களும்

வெற்றி-[க்]-கதிரவன் said...

nalla pathivu

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory