Monday 9 November 2009

கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!

image

உன் கண்களில்

தெறிக்கும் மின்னலில்,

இன்று பெய்யவிருக்கும்

மழைக்கான குறிப்புகள்!

 

சாளரம் தாண்டி அடிக்கும்

கூதல் காற்றில்

வாடையில் கிளர்ந்தெழும்

உன் உடலின்

மணம்!

 

உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!

 

கூரையில் பெய்யும்

மழையின் சத்தத்தில்

நம் இதழ் சுரங்கள்

புணர்ந்து பிறக்கும்,

நமக்கு

மட்டுமேயான

உயிர் ராகம்!!

 

மறைந்தும் நிர்வாணமாயும்

மழையை

வரவேற்கும்

உன் உடல் பூமி.

 

ஓசை வலுத்த

ஒரு கணத்தில்

புதைந்து கிடந்த

ஆழங்களில் பெய்தது

சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை!!!

27 comments:

இளவட்டம் said...

என்னாச்சி...... டாக்டர்?

ம்ம்ம்.....

நல்லா இருக்கு டாக்டர்.

மேவி... said...

thala nalla irukku

S.A. நவாஸுதீன் said...

குளு குளுன்னு இருக்கு தேவா சார். அருமை

SUFFIX said...

மழை அடிச்சி கலக்குது டாக்டர், செமையா எழுதியிருக்கிங்க!!

வால்பையன் said...

//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

நாளைக்கு மழை வருமான்னு கொஞ்சம் கண்னை பார்த்து சொல்லுங்க தல!

சொல்லரசன் said...

//உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!//


இதைபற்றி பின்னுட்டம் பொழிய ஆசை,ஆனால் அது புயலாக உங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் தவிர்த்து விடுகிறேன்

Menaga Sathia said...

சூப்பரா எழுதிருக்கிங்க..

தேவன் மாயம் said...

இளவட்டம் said...
என்னாச்சி...... டாக்டர்?

ம்ம்ம்.....

நல்லா இருக்கு டாக்டர்///

இளவட்டம் நன்றி!!

தேவன் மாயம் said...

டம்பி மேவீ said...
thala nalla irukku

09 November 2009 03:04///

மேவி!!! ஓகேயா!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
குளு குளுன்னு இருக்கு தேவா சார். அருமை

09 November 2009 03:17//

தொடர்மழையில்ல!!

க.பாலாசி said...

//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் காற்றில்
வாடையில் கிளர்ந்தெழும்
உன் உடலின்
மணம்!//

மழையென நனையவிடும் கவிதையை ரசித்தேன்....

தேவன் மாயம் said...

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
மழை அடிச்சி கலக்குது டாக்டர், செமையா எழுதியிருக்கிங்க!!

09 November 2009 03:33///

நன்றி ஷஃபிக்ஸ்!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

நாளைக்கு மழை வருமான்னு கொஞ்சம் கண்னை பார்த்து சொல்லுங்க தல!

09 November 2009 03:36///

வீட்டுக்குப்போய் கண்ணைப்பாருங்க தெரியும்!!

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
//உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!//


இதைபற்றி பின்னுட்டம் பொழிய ஆசை,ஆனால் அது புயலாக உங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் தவிர்த்து விடுகிறேன்

09 November 2009 03:58///

எல்லோர் வீட்டிலும் பெய்யும் மழைதானே!!

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
சூப்பரா எழுதிருக்கிங்க..

09 November 2009 05:50///

அப்பாடி!! நன்றிங்க!!

தேவன் மாயம் said...

க.பாலாசி said...
//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் காற்றில்
வாடையில் கிளர்ந்தெழும்
உன் உடலின்
மணம்!//

மழையென நனையவிடும் கவிதையை ரசித்தேன்....

09 November 2009 05///

மழை ரசிப்புக்கு நன்றி!

மணிஜி said...

தலைவரே..மழையில் நனைஞ்சீங்களா?விக்ஸ்வேபராப் தடவிக்கங்க..கவிதை...ஓ.கே

அகல்விளக்கு said...

அய்யய்யோ......

யாராவது வாங்க...

டாக்டருக்கு ஏதோ ஆயிடுச்சு......

தேவன் மாயம் said...

[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...
-:)///

பித்தன் பேர் பெரிசாகிக்கிட்டே போகுதே!!

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
தலைவரே..மழையில் நனைஞ்சீங்களா?விக்ஸ்வேபராப் தடவிக்கங்க..கவிதை...ஓகே!!


இது சளிப்புடிக்காத மழைங்கோ!!!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
அய்யய்யோ......

யாராவது வாங்க...

டாக்டருக்கு ஏதோ ஆயிடுச்சு......

09 November 2009 06:39///

பித்தம் தெளிஞ்சு போச்சு!!

பாலகுமார் said...

//சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை! //

உங்கள் மழைக்காதல் போலவே, கவிதையும் அழகு.

cheena (சீனா) said...

ஆகா ஆகா - காதல் கவிதை அருமை - நண்பரே

மழை ஜோன்னு பெய்யற நேரத்துலே நீங்க வேற இப்படி எழுதினா ......

கூதல் காத்து - உடலின் மணம்

மோகச்சுரப்பி - மழை - மூழ்குதல்

இதழ் சுரங்கள் புணர்ந்து பிறக்கும் உயிர் ராகம்

மிக மிக ரசித்தேன் தேவா

நல்வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

படமும் வரிகளும் அழகு

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

”மறைந்தும் நிர்வாணமாயும்
மழையை
வரவேற்கும்
உன் உடல் பூமி.”

- அழகான கற்பனை. மழையில் நனையும் பெண்களை பார்க்கையில் இந்த வரிகள் நிச்சயம் நினைவு வரும்.. ஆம்மா.. பெண்களுக்கும் நனையும் ஆண்களை பார்க்கையில் இப்படி தோன்றுமா..!!

Pinnai Ilavazhuthi said...

//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

அற்புதமான உவமை
எதார்த்த எழுத்துக்களில்
எல்லாரது மனதையும்
ஏக்கப்பட வைத்துள்ளீர்!

வாழ்த்துக்கள்!...
தமிழன்புடன், இளவழுதி

Jerry Eshananda said...

நனைகிறேன் தேவா. கவிதை வியப்பின் உச்சம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory