Wednesday 2 September 2009

18+8 !!

அன்பு நண்பர்களே!

 

பூசலம்பு..ஸ்வர்ணரேக்கா

 

பெண்களின் கண்களை போரிடும் அம்புகள் என்று சொல்கிறான் கம்பன்... ஆனால் இங்கு யாருடனும் போரிடுவது என் நோக்கமல்ல... கருத்துக்களை பதிவதற்கு மட்டும்...ஸ்வர்ணரேக்கா

 

என்னை ஒரு அருமையான  தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார். அந்தத் தொடர்பதிவு ஆங்கில எழுத்துக்களுக்கு, 26 எழுத்துக்கும் ஒரு பதில் தருவது. சுவாரசியம்தானே!!

இதன் விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

................

இதோ ஆரம்பிப்போமா!!

1. A – Avatar (Blogger) Name / Original Name : /தேவன்மாயம், தே. மா. தேவகுமார்.

2. B – Best friend? : ஆபத்தில் உதவுபவன் - இடுக்கண் களைவதாம் நட்பு. 

3. C – Cake or Pie? : இரண்டுமல்ல!

4. D – Drink of choice? பாதாம் கீர்.

5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்!

6. F – Favorite color? Light green ரோஸ்!

7. G – Gummy Bears Or Worms : !!!!

8. H – Hometown? -காரைக்குடி

9. I – Indulgence? : எதைச் சொல்ல!!எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம்!

10. J – January or February? -பிப்ரவரி, சீக்கிரம் முடிந்துவிடும்.

11. K – Kids & their names? புறாவுக்காகத் தொடைக்கறியை அறுத்துத் தராசில் வைத்த மன்னனின் பெயர்- என் மகன் பெயர்!

என் மகள் பெயரின் அர்த்தம்- பொன்மானைப் போன்றவள்,   இலக்குமியின் மூன்றெழுத்துப்பெயர். முதல் இரண்டெழுத்து பெருமாளைக் குறிக்கும். முதல் எழுத்து ’ஹ.’

12. L – Life is incomplete without? திருப்தி.....

எவ்வளவு இருந்தும் பத்தாமல் திருப்தி இல்லாமல்,  சொந்த விசய்ங்களில் உழன்று உறவினர்க்கும், சமுதாயத்துக்கும் பயன்படாமல் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு கடைசியில் இறக்கும்வரை திருப்தியில்லாமல்  இறக்கும் மனிதர் பற்றி பாரதியின்  வரிகள் கீழே

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுளன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

13. M – Marriage date?-மன விலங்குக்குள் சிக்கும் இனிய நாள், நம் வாழ்வுக்கும் அர்த்தம் இருப்பதை அறியும் நாள்! உங்களைச் சுற்றி ஒரு உலகம் உருவாகும் நாள்! 

14. N – Number of siblings? படுக்கை வசமானால் பட்டை! குறுக்கு வசமானால் நாமம்!!

15. O – Oranges or Apples?இரண்டையும் பெருக்கினால் முப்பது.!

16. P – Phobias/Fears? உண்டு. மேடையில் நன்றாகப் பேச முடியாதோ என்று பயம். வைத்தியம் செய்யும்போது மிக மோசமான நோயாளியைக் காப்பாற்ற முடியாதோ என்ற பயம். 

17. Q – Quote for today? இன்று, இப்பொழுது, சந்தோசமாக இரு!

18. R – Reason to smile?  என் பதிவில் இதற்கான பதில்!http://abidheva.blogspot.com/2009/08/12.html

19. S – Season? மழைக்காலம்!

"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான். "

20. T – Tag 4 People?- தண்டோரா, வேத்தியன், ஜெர்ரி ஈஷானந்தா, , அம்மா அப்பா. 

21. U – Unknown fact about me? நான் சிலரால் வெறுக்கப்படுபவன்,சிலரால் விரும்பப்படுபவன், ஒருவரால் கண்காணிக்கப்படுபவன். 

22. V – Vegetable you don't like? கசக்கும் காய்.

23. W – Worst habit?  ஞாபகமில்லை.. இஃகி.. இஃகி..

24. X – X-rays you've had? நெஞ்சுப்படம்! அப்போதுதான் தெரிந்தது எனக்கும் இதயம் இருப்பது. என்  இதயம் துடிப்பதை நானே  ஃப்ளூரசண்ட் ஸ்கிரீன் எக்ஸ்ரேயில் நேரடியாகப் பார்த்தேன்.

25. Y – Your favorite food? தண்ணீரில் ஊறிய சோறு, அரைக்கப்பட்ட பருப்பு. உப்பில் ஊறிய மாங்காய்த்துண்டு.

26. Z – Zodiac sign? தமிழில் ஆடு, ஆங்கிலத்தில் இளம்பெண்!

43 comments:

நட்புடன் ஜமால் said...

5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்!]]


ஹா ஹா ஹா

உங்க நேர்மை ...

பாஸ் சூப்பரு ...

karthick said...

நட்புடன் ஜமால் said...
5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்!]]


ஹா ஹா ஹா

உங்க நேர்மை ...

பாஸ் சூப்பரு ..///

உண்மைதானே ஜமால்!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்!]]


ஹா ஹா ஹா

உங்க நேர்மை ...

பாஸ் சூப்பரு ..///

நன்றி ஜமால்!

ஈரோடு கதிர் said...

அருமை

எல்லாத்தையும் விட
//அரைக்கப்பட்ட பருப்பு. உப்பில் ஊறிய மாங்காய்த்துண்டு//

எச்சில் ஊறுகிறது.

தேவன் மாயம் said...

karthick said...
நட்புடன் ஜமால் said...
5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்!]]


ஹா ஹா ஹா

உங்க நேர்மை ...

பாஸ் சூப்பரு ..///

உண்மைதானே ஜமால்!///


முதல் வருகைக்கு நன்றி கார்த்திக்!

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
அருமை

எல்லாத்தையும் விட
//அரைக்கப்பட்ட பருப்பு. உப்பில் ஊறிய மாங்காய்த்துண்டு//

எச்சில் ஊறுகிறது///

இது நிஜந்தானே நண்பா!

நட்புடன் ஜமால் said...

22. V – Vegetable you don't like? கசக்கும் காய்]]

பாகற்காயையா சொல்றீங்க

மருத்துவ குணம் அதிகம் உள்ளதையா


ஆச்சர்யமா இருக்கே ...

நட்புடன் ஜமால் said...

உண்மைதானே ஜமால்!!\\

நானும் அதைத்தானே நண்பரே சொன்னேன்.

நட்புடன் ஜமால் said...

ஃப்ளூரசண்ட் ஸ்கிரீன் எக்ஸ்ரே]]


ஒரு பதிவிட்டு சொல்லுங்க பாஸ்

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
22. V – Vegetable you don't like? கசக்கும் காய்]]

பாகற்காயையா சொல்றீங்க

மருத்துவ குணம் அதிகம் உள்ளதையா


ஆச்சர்யமா இருக்கே ..///

இருந்தாலும் உண்மையைத்தானே சொல்லணும்!

நட்புடன் ஜமால் said...

இருந்தாலும் உண்மையைத்தானே சொல்லணும்!]]


ஆஹா! இன்றைக்கு கவுண்டர் அட்டாக் ஜாஸ்த்தியா இருக்கே

நீங்க சொன்ன உண்மை தான் பாஸ் ஆச்சர்யம்.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
இருந்தாலும் உண்மையைத்தானே சொல்லணும்!]]


ஆஹா! இன்றைக்கு கவுண்டர் அட்டாக் ஜாஸ்த்தியா இருக்கே

நீங்க சொன்ன உண்மை தான் பாஸ் ஆச்சர்யம்///

செல்லமான கவுண்டர்தானே ஜமால்!

Porkodi (பொற்கொடி) said...

ennanga ipo thaan a, b, c, d padikkaringa? :P

Porkodi (பொற்கொடி) said...

azhaga irundhadhu padhivu! ponnu peru enaku puriyaliye? :-/

சதங்கா (Sathanga) said...

தலைப்பு சூப்பர். :))

a,b,c,d,... விளக்கங்கள் அருமை.

அப்துல்மாலிக் said...

32 போய் இப்போ 26 வந்திருக்கா...

வித்தியாசமான முறையில் பதிகள் தொட்டும் தொடாமலும்

ப்ரியமுடன் வசந்த் said...

//17. Q – Quote for today? இன்று, இப்பொழுது, சந்தோசமாக இரு!//

உண்மையான வார்த்தைகள் சார்

எல்லாபதில்களும் ரசித்து படித்தேன்

இராகவன் நைஜிரியா said...

ஆஹா மருத்துவரே அருமை.

// 10. J – January or February? -பிப்ரவரி, சீக்கிரம் முடிந்துவிடும். //

இது கூட நல்லா இருக்கே. சரியாச் சொன்னீங்க. ஆனா இதுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து ஜூலை, ஆகஸ்ட் அப்படின்னு இரண்டு மாசம் 31 நாள் வருதே?

// 16. P – Phobias/Fears? உண்டு. மேடையில் நன்றாகப் பேச முடியாதோ என்று பயம். வைத்தியம் செய்யும்போது மிக மோசமான நோயாளியைக் காப்பாற்ற முடியாதோ என்ற பயம். //

தொழி பக்தி இருப்பதால் தான் காப்பாற்ற முடியுமா என்ற பயம் வருகின்றது.

அகல்விளக்கு said...

//நான் சிலரால் வெறுக்கப்படுபவன்,சிலரால் விரும்பப்படுபவன், ஒருவரால் கண்காணிக்கப்படுபவன்.//

I know that person...

All of the above knows that....

:-)

தேவன் மாயம் said...

Porkodi (பொற்கொடி) said...
ennanga ipo thaan a, b, c, d padikkaringa? :???


தெரிந்திருந்தா உங்களையும் படிக்க வைத்திருக்கலாம்!!

தேவன் மாயம் said...

Porkodi (பொற்கொடி) said...
azhaga irundhadhu padhivu! ponnu peru enaku puriyaliye? :-//

பொண்ணுபேர் ஹரிணி!!
என்னுடன் சாட்டில் பேசும்போது சரியாகக் கண்டுபிடித்துச்சொன்னது பதிவர் பித்தன்!!

தேவன் மாயம் said...

சதங்கா (Sathanga) said...
தலைப்பு சூப்பர். :))

a,b,c,d,... விளக்கங்கள் அருமை///


சதங்கா!! ரொம்ப ஓவரா பதில்கள் இருந்ததோன்னு நினைத்தேன்...

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
32 போய் இப்போ 26 வந்திருக்கா...

வித்தியாசமான முறையில் பதிகள் தொட்டும் தொடாமலும்///

26 ஓகேதானே!!1

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
//17. Q – Quote for today? இன்று, இப்பொழுது, சந்தோசமாக இரு!//

உண்மையான வார்த்தைகள் சார்

எல்லாபதில்களும் ரசித்து படித்தேன்///

வசந்த்! நீங்க இன்னும் போடலியா!!

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
ஆஹா மருத்துவரே அருமை.

// 10. J – January or February? -பிப்ரவரி, சீக்கிரம் முடிந்துவிடும். //

இது கூட நல்லா இருக்கே. சரியாச் சொன்னீங்க. ஆனா இதுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து ஜூலை, ஆகஸ்ட் அப்படின்னு இரண்டு மாசம் 31 நாள் வருதே?

// 16. P – Phobias/Fears? உண்டு. மேடையில் நன்றாகப் பேச முடியாதோ என்று பயம். வைத்தியம் செய்யும்போது மிக மோசமான நோயாளியைக் காப்பாற்ற முடியாதோ என்ற பயம். //

தொழி பக்தி இருப்பதால் தான் காப்பாற்ற முடியுமா என்ற பயம் வருகின்றது.

02 September 2009 12:40////

இன்னும் நிறைய உண்டு, எல்லாவற்றையும் பதிவில் சொல்லமுடியாதுதானே!!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
//நான் சிலரால் வெறுக்கப்படுபவன்,சிலரால் விரும்பப்படுபவன், ஒருவரால் கண்காணிக்கப்படுபவன்.//

I know that person...

All of the above knows that....

:-)///

ஆம் ! கண்டுபிடித்துவிட்டீர்களா!!

ஆ.ஞானசேகரன் said...

//5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்! //

வாழ்த்துகள்..

Anonymous said...

மருத்துவருக்கு பதில் சொல்லவா தெரியாது...சமத்தா தான் சொல்லியிருக்கார்....

மணிஜி said...

மாட்டி விட்டீர்களே மருத்துவரே...
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்..

மகிழ்நன் said...

http://periyaryouth.blogspot.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
//5. E – Essential item you use every day? ஸ்டெதஸ்கோப்! //

வாழ்த்துகள்.///

உங்களையும் அழைத்துள்ளேன் தொடர்பதிவுக்கு!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
மருத்துவருக்கு பதில் சொல்லவா தெரியாது...சமத்தா தான் சொல்லியிருக்கார்...///

சமத்தாயிட்டேனா நான்!!!

தேவன் மாயம் said...

தண்டோரா ...... said...
மாட்டி விட்டீர்களே மருத்துவரே...
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.///


உக்காந்து யோசிங்க!!

தேவன் மாயம் said...

மகிழ்நன் said...
http://periyaryouth.blogspot.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com///

பார்க்கிறேன் நண்பரே!!

Unknown said...

//L – Life is incomplete without? //திருப்தி.....// விளக்கம் மிகவும் அருமை

தேவன் மாயம் said...

Mrs.Faizakader said...
//L – Life is incomplete without? //திருப்தி.....// விளக்கம் மிகவும் அருமை!!

ரொம்ப் ஓவரா எழுதிவிட்டோமோ என்று எண்ணினேன் !!!!

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் தேவா சார், எல்லா பதில்களும் நகைச்சுவை உணர்வோடு பகிர்ந்து இருக்கின்றீர்கள். உங்களுக்கு கொஞ்சம் விசுத்தனம் ஜாஸ்திதான் போங்க.

தினேஷ் said...

/ படுக்கை வசமானால் பட்டை! குறுக்கு வசமானால் நாமம்!//

சூப்பரு ....

தினேஷ் said...

செல்லமான கவுண்டர்தானே ஜமால்!

ஜமால் எப்படிங்க கவுண்டர் ஆவாரு

அதிரை அபூபக்கர் said...

Y – Your favorite food? தண்ணீரில் ஊறிய சோறு, அரைக்கப்பட்ட பருப்பு. உப்பில் ஊறிய மாங்காய்த்துண்டு.//

அருமையான சாப்பாடு..

SUFFIX said...

நகைச்சுவையுடன் கலந்த நல்ல பதில்கள் டாக்டர்!!

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா மருத்துவரே அருமை.

// 10. J – January or February? -பிப்ரவரி, சீக்கிரம் முடிந்துவிடும். //

இது கூட நல்லா இருக்கே. சரியாச் சொன்னீங்க. ஆனா இதுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து ஜூலை, ஆகஸ்ட் அப்படின்னு இரண்டு மாசம் 31 நாள் வருதே?//

டாகடருடன் கூடிய சைன்ட்டிஸ்ட் பார்வை..ஹி ஹி!!

வேத்தியன் said...

தேவா சாரே...

என்னையும் அழைத்தமைக்கு நன்றிகள்...

இந்த வாரம் கல்லூரியில் பரீட்சைகள் இருக்கின்றது.
so அடுத்த வாரம் கண்டிப்பாக எழுதுகிறேன்...
:-)

cheena (சீனா) said...

ஆகா ஆகா - தொடர் பதிவுகள் தொடர்கிறதா - நன்று நன்று

நல்லாருக்கு பதில்கள்

ஹரிணிக்கும் சிபிக்கும் நல்வாழ்த்துகள்

மூன்றாவது ......

நல்வாழ்த்துகள் டாக்டர்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory