Friday, 28 August 2009

அழகாக இருக்க!- 12 வழிகள்!

image

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும். 

50 comments:

நட்புடன் ஜமால் said...

வடை போச்சே

இப்படி 12 குறிப்புகள் போடாமல் நானும் இப்படியான வகையில் தானே ஒன்னும் எழுதிகிட்டு இருக்கேன் ....

--------------

இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் அளவுக்கு நமக்கு தெரியாது.

புதுகைத் தென்றல் said...

கலக்கல் தேவா,

அம்புட்டு பேரும் அழகாயிருக்க வழி சொல்லியிருக்கீங்க. நன்றி

டம்பி மேவீ said...

sir. arumaiyana pathivu innum detail ah dress code patri ellam eluthi irukkalam ... innum better ah vanthu irukkalame

டம்பி மேவீ said...

jamal vadai ungalukku than irukku


dont worry

நட்புடன் ஜமால் said...

அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்]]

இதுவே அழகு.

வானம்பாடிகள் said...

அருமையான அழகான ஆலோசனைகள். நன்றி ஐயா!

நட்புடன் ஜமால் said...

பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!]]


உண்மையோ உண்மை.

டக்ளஸ்... said...

நல்லாருக்கு டாக்டரே.

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

வடை போச்சே

இப்படி 12 குறிப்புகள் போடாமல் நானும் இப்படியான வகையில் தானே ஒன்னும் எழுதிகிட்டு இருக்கேன் ....

--------------

இருப்பினும் நீங்கள் சொல்லியிருக்கும் அளவுக்கு நமக்கு தெரியாது.///

அய்யய்யோ!!

தேவன் மாயம் said...

Blogger புதுகைத் தென்றல் said...

கலக்கல் தேவா,

அம்புட்டு பேரும் அழகாயிருக்க வழி சொல்லியிருக்கீங்க. நன்றி///

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி!!

தேவன் மாயம் said...

Delete
Blogger டம்பி மேவீ said...

sir. arumaiyana pathivu innum detail ah dress code patri ellam eluthi irukkalam ... innum better ah vanthu irukkalame

28 August 2009 00:59
Delete
Blogger டம்பி மேவீ said...

jamal vadai ungalukku than irukku


dont worry

28 August 2009 01:00///

ட்ரெஸ் கோட் தனி, அலங்காரமெல்லாம் நீங்கள் எழுதுங்க!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்]]

இதுவே அழகு.///

உங்களைப்போல!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!]]


உண்மையோ உண்மை///

பாராட்டும் பெரிய உள்ளம் வாழ்க!!

தேவன் மாயம் said...

டக்ளஸ்... said...

நல்லாருக்கு டாக்டரே.//

அழகரே நலமா!!

பிரியமுடன்...வசந்த் said...

அருமையா சொல்லியிருக்கீங்க தேவா சார்

அப்டியே அழகா இருக்குற பொண்ணுகள அசத்துறது எப்டின்னும் சொல்லிடுங்களேன்.......

சுபானு said...

அனைத்தும் உண்மை...

சூரியன் said...

அழகு

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
அருமையா சொல்லியிருக்கீங்க தேவா சார்

அப்டியே அழகா இருக்குற பொண்ணுகள அசத்துறது எப்டின்னும் சொல்லிடுங்களேன்......///

இது வசந்துக்கு கைவந்தகலையாச்சே!!

தேவன் மாயம் said...

சுபானு said...
அனைத்தும் உண்மை..//

உண்மையே!!!

தேவன் மாயம் said...

கருத்துக்கு நன்றி சூரியன்!!

K.USHA said...

ரொம்பவும் சிறப்பான பயனான கருத்துக்களை மிகவும் அழகாக எழுதியிருகிங்க...நன்றி நன்றி நன்றி...படித்த மனம் தெம்படைகிறது...

தேவன் மாயம் said...

K.USHA said...
ரொம்பவும் சிறப்பான பயனான கருத்துக்களை மிகவும் அழகாக எழுதியிருகிங்க...நன்றி நன்றி நன்றி...படித்த மனம் தெம்படைகிறது..//

அப்படியே செயல்படுத்துங்க!!

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள உளவியல்க் குறிப்புக்கள் மருத்துவரே...
நன்றாகவுள்ளது.!!!!!!!!!

கதிர் - ஈரோடு said...

சுயமுன்னேற்ற பயிலரங்கில் கலந்து கொண்ட உணர்வு...

கபிலன் said...

"உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்."

அருமை! அனைத்தும் உண்மை!

விக்னேஷ்வரி said...

அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும். //

ரொம்ப சரி.

ரொம்ப அழகான வழிகள் எல்லாமே.

D.R.Ashok said...

நல்லாயிருக்குங்க...

kavi said...

nijamave yella points me azhaga irukku

ஆ.ஞானசேகரன் said...

அழகு அத்தனையும் அழகு குறிப்புகள்

கார்ல்ஸ்பெர்க் said...

ரைட்டு.. அப்ப இனிமேல் நாங்களும் அழகாயிடுவோமே.. ஹையா!!!

ஸ்ரீ said...

மிக நல்ல பதிவு டாக்டர் .நன்றி.

Mrs.Faizakader said...

//நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!//எல்லாமே அழகான விஷயங்கள்

Anbu said...

நல்ல பதிவு சார்..

வால்பையன் said...

அழகாஇருக்க ஒரே வழி நான் சொல்றேன்!
யாரும் கண்ணாடி பார்க்காதிங்க!

krishna said...

super comment ... vall paiyan

சிங்கக்குட்டி said...

அருமை மற்றும் உண்மை :-))

Porkodi (பொற்கொடி) said...

apo naan perazhagi nu solringa..? nanni hai :)

மங்களூர் சிவா said...

அருமையான ஆலோசனைகள். மிக்க நன்றி.

Anonymous said...

28 August 2009 01:23
பிரியமுடன்...வசந்த் said...
அருமையா சொல்லியிருக்கீங்க தேவா சார்

அப்டியே அழகா இருக்குற பொண்ணுகள அசத்துறது எப்டின்னும் சொல்லிடுங்களேன்.......

அப்படியா சேதி இரு இதோ பிரியாக்கு போன் பண்றேன்...

Anonymous said...

உண்மை உண்மை உண்மை....ஒவ்வொரு கருத்தும் ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று... நானும் இப்படித்தான் இருக்கேன் சார் என்ன வெயிட் தான் 60ப்ளஸ் அப்பறம் மேக்கப் போடறதேயில்லை ஒரு வேளை ஓவர் கான்ஃபிடென்ஸோ.....ஹஹஹா..

சங்கா said...

சரியாத்தானிருக்கு. ஆனா, அந்த முதப் பாயிண்ட்டை நாம செய்யலாம், தங்கமணிங்க கேப்பாங்க?!

சுந்தர் said...

//நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!// பன்னிரெண்டில் முதன்மையானது இது ஒன்றே போதும்,

" உழவன் " " Uzhavan " said...

நல்ல யோசனைகள்

jerry eshananda. said...

டாக்டர், நெசமாவா சொல்றீங்க, ட்ரை பண்ணி பாக்குறேன்.
அன்புடன் ஜெரி.

S.A. நவாஸுதீன் said...

பல நல்ல விஷயங்கள் சொல்லி இருக்கீங்க தேவா சார்.

ஷ‌ஃபிக்ஸ் said...

உண்மை, உண்மையைத்தவிர வேறு இல்லை!! பண்பாடும், சுத்தமுமே அழகுன்னு அழகா சொல்லிட்டிங்க டாக்டர்.

உமா said...

டாக்டர் நீங்கள் உடலுக்குத்தான் மருந்தளிப்பீர்கள் என்றால் உள்ளத்துக்குமல்லவா கொடுத்திருக்கிறீர்கள். மிக அற்புதம். மிக அழகு.பாராட்டுகள்.

//அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும். 3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். //

இதைவிட என்ன வேண்டும். அற்புதமான பதிவு.

THANGA MANI said...

நன்று

ஸ்வர்ணரேக்கா said...

You have been tagged

http://swarnarekha-thegoldenline.blogspot.com/2009/08/tag.html

அபுஅஃப்ஸர் said...

WELL SAID

கடைப்பிடிக்கனும்....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory