Sunday 16 August 2009

மூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்!!

 
15.8.2009 ஆக இருந்த மணற்கேணி 2009
 
போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...

Manarkeni 2009
சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது

மாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....
இது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்...

 

புதியவர்களுக்கு என் பழைய இடுகையில் போடப்பட்டிருந்த போட்டி குறித்த முழுத் தகவல்கள் கீழே:-

Wednesday, 1 July 2009

போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலகுக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றனர் மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றனர்.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் எழுதும் பலரும் மிகவும் சிறப்பான படைப்புகளைத் தருகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகளை பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம் …

கீழ்வரும் தலைப்புகளில் எழுதவேண்டும்...

போட்டித் தலைப்புகள்
பிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  politics@sgtamilbloggers.com

1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்
2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்
3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்
4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனம்
5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி
6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்
7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்
8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்
9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்
10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்
11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்
12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்
13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்
14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்
15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்

பிரிவு-2: தமிழ் அறிவியல் (அறி)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  science@sgtamilbloggers.com
1) இணையத்தில் தமிழ் - நேற்று, இன்று, நாளை
2) தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும்
3) தமிழ் கலைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொழில் நுட்பக் கட்டுரை (படைப்பாளிகள் எந்த துறை சார்ந்த தொழில் நுட்பக் கட்டுரையையும் அளிக்கலாம்)
4) இயற்கை வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் வாய்ப்பு வகைகள்
5) மின்னாற்றல் உற்பத்தியில் மாற்று வழிகள்
6) மென்பொருள் துறை தவிர இந்தியர்கள் கவனம் செலுத்தவேண்டிய துறைகள்

பிரிவு-3: தமிழ் மொழி / இலக்கியம் (இல)

இந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  literature@sgtamilbloggers.com
1) மொழி தரும் அடையாளங்கள் - மொழித்தூய்மையின் தேவை
2) மொழி/நிலம் சார்ந்த அறிவு
3) திணையும், நிலமும்
4) தமிழர் இசை
5) குறளில் மேலாண்மை
6) சங்கம் மருவிய காதல் இன்று
7) தமிழ் இலக்கியங்களில் பகுத்தறிவு

படைப்புகள் இந்தத் தலைப்புகளில் எழுதவேண்டும்!மேலும் அறிய மணற்கேணி

என்ன மக்களே சிங்கப்பூர் செல்ல தயாரா?

-----------------------------------------------------------------

என் பழைய கவிதை ஒன்று படிக்க

கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட

கோலம்!!

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!


தமிழ்த்துளி தேவா..

18 comments:

நட்புடன் ஜமால் said...

நீங்களும் வாங்க தேவா!

நட்புடன் ஜமால் said...

விளம்பரத்தியதற்கு நன்றி.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

நீங்களும் வாங்க தேவா!
16 August 2009 20:05
நட்புடன் ஜமால் said...

விளம்பரத்தியதற்கு நன்றி.
///
அன்புக்கு என் நன்றி!! வந்துவிடுகிறேன்!!

அகநாழிகை said...

தேவன் சார்,
தகவலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

தேவன் மாயம் said...

அகநாழிகை" said...

தேவன் சார்,
தகவலுக்கு நன்றி.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
////
நன்றி!!

சி தயாளன் said...

:-) நன்றி தேவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

தகவலுக்கு நன்றி தேவா சார்..:-))

S.A. நவாஸுதீன் said...

தகவலுக்கு நன்றி தேவா சார்

அறிவிலி said...

நன்றி டாக்டர்... நீங்க அனுப்பிட்டீங்களா?

SUFFIX said...

நன்றி நண்பரே!! கவிதையும் சூப்பரு, அந்த கடைசி வரி "கொஞ்சம் என்னைத் திரும்பிப்பாரேன், நான் சுவாசித்துக் கொள்கிறேன் உன் காதலை!"
கெஞ்சல் + கொஞ்சல் நல்லா இருக்கு.

வால்பையன் said...

சிங்கப்பூர் செல்ல இருக்கும் நண்பர்களும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

சிங்கபூர் உங்களை அன்புடன் அழைக்கின்றது. நீங்களும் வாருங்கள் தேவன் சார்.. மிக்க நன்றிங்க..

ஆ.ஞானசேகரன் said...

//கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!//

கவிதை அருமையா இருக்கு தேவன் சார்....

குமரை நிலாவன் said...

தகவலுக்கு நன்றி தேவா சார்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவிட்டதற்கு நன்றி தேவா!

வழிப்போக்கன் said...

அண்ணா நமக்கு இது ஒத்து வராது...
முடிஞ்சா கொழும்பு - சிஙப்பூர் டிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யுங்க...
:)))

மேவி... said...

:)

Ezhilan said...

இது போன்ற போட்டிகள் பலரையும் எழுத ஊக்கப்படுத்தும். பிளாக்கின் நிலை பற்றியும் விளக்கமாக சொல்லியிருப்பது நன்றாக இருந்தது.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory