மாறி வரும் உலகத்தில் கணவர்களாகிய நாம் நம் உரிமைக்குப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது யாரும் மறுக்கமுடியாத உண்மை.
மனைவியரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் சில உரிமைகளை நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!
1.கணவர்களாகிய எங்களுக்கு நண்பர்களைச் சந்திக்கும் உரிமை வேண்டும். வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் அவர்களுக்கு ஒரு டீயாவது கொடுக்கும் உரிமை வேண்டும்.( நீங்கள் போட வேண்டாம் ..எப்போதும் போல் நாங்களே போட்டுக் கொடுக்கிறோம்!!).
2.வாரம் ஒருமுறையாவது நண்பர்களுடன் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். ஒரு இரண்டுமணி நேரம் அவர்களுடன் பேச அனுமதி வேண்டும். வாரம் ஒருமுறை என்பது ரொம்ப அதிகமாகத்தெரிகிறதா?..! சரி பரவாயில்லை! மாதம் ஒருமுறையாவது அனுமதி அளிக்க வேண்டும்!!
3.எங்களுடைய சில பொருட்களையாவது வீட்டில் வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும். எங்களுடைய புத்தகங்களைப் பழைய பேப்பர்காரனுக்குப் போடும் முன் எங்களிடமும் ஒருவார்த்தை கேட்கலாமே!( ஒரு விண்ணப்பம்தான்!! கோபம் வேண்டாம்......).
4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.
5.எங்கள் அலுவலக நண்பர்கள் வரும்போது கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். அந்த நேரத்தில் பாத்திரங்கள்,பொருட்களின் மேல் வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது.( அதான் அவர்களை அனுப்பிவிட்டு நாங்கள் வந்தவுடன் உங்கள் வன்முறையை வழக்கம்போல் எங்கள் மீது.......................இஃகி..இஃகி).
6.எங்கள் நண்பர்கள் வரும்போது சமைக்கவோ, தண்ணீர் பிடித்துவரவோ, புடவை அயர்ன் பண்ணவோ சொல்லக்கூடாது.( அந்த வேலைகளை அவர்கள் வரும் முன்னாடியே செய்து வைக்க அனுமதி வேண்டும்).
7.மாத செல்போன் அலவன்ஸ் 100 ரூபாய் கூட்டித்தரவேண்டும். பாதி மாதத்தில் டாக்டைம் முடிந்து போய் ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது. சமூகம் இதைக் கருணை கூர்ந்து பரிசீலனை செய்யவும்.
இன்னும் நிறைய எழுதலாம். இந்தத் துறையில் அனுபவமிக்க நம் பதிவர்கள் தம் அனுபவங்களை பின்னூட்டங்களில் நிரப்புங்கள்!!
நமது சங்கத்தினரின் சந்தோசத்துக்காக சில அபூர்வமான படங்கள்:
1.நம்ம சகா என்ன ஜாலியா தம்மடித்துக்கொண்டு போகிறார் பருங்க!!! பின்னாட அவரின் தங்கமணி இஃகி இஃகி!!..
.2.இது எப்படி!!! சில பேர் எப்படியோ ஜாலியா இருக்கானுங்க!!!..
3.ஹை!! நல்லா பெண்டெடுக்கிறானே!!!..
4.எப்பிடிப்பு இப்பிடியெல்லாம்!!..
5.தங்கமணியை வெளியே தள்ளிவிட்டு சைக்கிள் பெருசாப் பூடுச்சா ஒனக்கு?..
சங்கத்தின் சட்டபூர்வ எச்சரிக்கை:
மேலேயுள்ள படங்கள் ஒரு சில இடங்களில் வெகு அரிதாக காணப்படுவது. இவற்றை நம் தங்கமணிகளிடம் பிரயோகித்து உடலைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டாம்..
தொடர்பதிவு போடுவோர் வரவேற்கப்படுகிறார்கள்!
48 comments:
என்ன கொடும சார் இது..!!!!!
படங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்...
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தேவைதான்..!
ஆபீஸ்ல சத்தம் போட்டு சிரிக்க முடியலயேன்னு வருத்தமா இருக்கே. சூப்பர்.
பாயிண்ட்ட சொல்லிகிட்டே பம்முறது தூள்
டாக்டரே, அணுபவப்பாடமா..?
அந்த போட்டோ சூப்பர் தலைவா..!
"ஏங்க அண்ணி. இதெல்லாம் கேக்கரதில்லையா? பதிவு எழுதரளவு வந்திருச்சே??"
--வித்யா
செம்ம காமெடி தல...அந்த படங்கள் டாப்பு ...!!!
4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.//
என்ன கொடுமை இது:))
நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!]]
இன்னா சங்கம்ப்பா இது ...
க் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.]]
ஹா ஹா ஹா
தேவா! என்னாச்சி
நெம்ப டேமேஜோ ...
8.பொது இடங்களிலாவது "கணவர்" என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
9.வெளியில் போகும் போது நீங்கள் பூசிய பின் கொஞ்சமாவது எங்களுக்கும் வாசனை பதார்த்தங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்( நிபந்தனைகள். விதித்தாலும்
பரவாயில்லை.)
10.பிள்ளைகளுக்கு முன் வைத்து நீங்கள் தருகின்ற தண்டனைகளை குறைத்து மறைவான இடங்களில் தண்டனைகளை வழங்க வேண்டும்.
..............................
...............................
............... cont'd
3. புத்தகத்தோட நம்ம துணிகளையும் சேர்த்துக்களாம்
:)
வணக்கம்.
ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு மனவல்லமை கொஞ்சம் அதிகம்னே நெனக்கறேன். பார்த்து. வீட்டுக்காரம்மாக்கு இந்த இடத்தை தெரியாமேதானே வெச்சிருக்கீங்க. கவனம். இல்லன்னா செலவு நமக்குத்தேன்.
என்னோட பதிவேடு ஆங்கிலம்.http://samuraiosho.blogspot.com
தொடர்பதிவிட முயற்சிக்கிறேன்.
தல ஏற்கனவே படித்த மாதிரி ஒரு நியாபகம்..
ஹீ..ஹீ, கோரிக்கைகளெல்லாம் ஓ.கே, இந்தப் இடுகையை போட நீங்க மேடத்திடம் அனுமதி வாங்கியதும் எங்களுக்குத் தெரியும்!! இதையும் பாருங்களேன்
ஒரு பிரதி எடுத்துவிட்டேன். என் தங்கமணியிடம் கொடுப்பதற்கு.
ஹி ஹி ஹி
பதிவும் படங்களும் கலக்கல்..
ஆரம்பத்திலில் போட்டுள்ள படமே அசர வைக்கிறது....
:)))
உங்களிடம் வைத்தியம் பார்க்க வந்த என்னை, உங்க சங்கத்தில சேரசொல்லி,
கையில கத்திய வச்சு மிரட்டுறது கொஞ்சம் கூட நியாயமில்ல டாக்டர்.
இப்படிக்கு
ஜெரி
வருத்த படாத வாலிபர் சங்கம்.
மாநில பொது செயலாளர்.-மதுரை
முனைவர்.இரா.குணசீலன் said...
என்ன கொடும சார் இது..!!!!!
படங்களைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன்...
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தேவைதான்..//
கொடுமை நடக்குதுங்க!!!!
S.A. நவாஸுதீன் said...
ஆபீஸ்ல சத்தம் போட்டு சிரிக்க முடியலயேன்னு வருத்தமா இருக்கே. சூப்பர்.
பாயிண்ட்ட சொல்லிகிட்டே பம்முறது தூள்///
நன்றி.. நண்பரே!!
டக்ளஸ்... said...
டாக்டரே, அணுபவப்பாடமா..?
அந்த போட்டோ சூப்பர் தலைவா..///
அனுபவமும்தான்.........
Vidhoosh said...
"ஏங்க அண்ணி. இதெல்லாம் கேக்கரதில்லையா? பதிவு எழுதரளவு வந்திருச்சே??"
--வித்யா
///
அவங்க ஆசீர்வாதத்துடன்தான் பதிவு...
அ.மு.செய்யது said...
செம்ம காமெடி தல...அந்த படங்கள் டாப்பு ...!!!
31 August 2009 02:12///
காமெடி நமக்கும் வருதா.. சரிதான்!
குசும்பன் said...
4.எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.//
என்ன கொடுமை இது:)///
சும்மா டமாஸூ!!
நட்புடன் ஜமால் said...
நமது சங்கத்தின் சார்பாக முன்வைக்கிறேன்!]]
இன்னா சங்கம்ப்பா இது ...
31 August 2009 02:23
நட்புடன் ஜமால் said...
க் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.]]
ஹா ஹா ஹா
தேவா! என்னாச்சி
நெம்ப டேமேஜோ ...///
பதிவு சாக்கில் நம்ப கோரிக்கையெல்லாம் சேர்த்துக் கொண்டேனுங்கோ!
பிரபா said...
8.பொது இடங்களிலாவது "கணவர்" என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
9.வெளியில் போகும் போது நீங்கள் பூசிய பின் கொஞ்சமாவது எங்களுக்கும் வாசனை பதார்த்தங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்( நிபந்தனைகள். விதித்தாலும்
பரவாயில்லை.)
10.பிள்ளைகளுக்கு முன் வைத்து நீங்கள் தருகின்ற தண்டனைகளை குறைத்து மறைவான இடங்களில் தண்டனைகளை வழங்க வேண்டும்.
..............................
...............................
............... cont'd///
பிரபா பின்னூட்டத்திலேயே தொடர்பதிவா...
நல்ல விசயம்..............
D.R.Ashok said...
3. புத்தகத்தோட நம்ம துணிகளையும் சேர்த்துக்களாம்
:)///
குசும்பன் கவனிக்கவும்!!
Sadagopal Muralidharan said...
வணக்கம்.
ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு மனவல்லமை கொஞ்சம் அதிகம்னே நெனக்கறேன். பார்த்து. வீட்டுக்காரம்மாக்கு இந்த இடத்தை தெரியாமேதானே வெச்சிருக்கீங்க. கவனம். இல்லன்னா செலவு நமக்குத்தேன்.
என்னோட பதிவேடு ஆங்கிலம்.http://samuraiosho.blogspot.com
தொடர்பதிவிட முயற்சிக்கிறேன்///
முதல் வருகைக்கு நன்றி...தொடர்பதிவிடும்
தைரியத்தைப்
பாராட்டுகிறேன்!!
ஆஹா நீங்களுமா,
வூட்டு அம்மணிக்கு தெரிஞ்சு இந்தப் பதிவ போட்டீங்களா? தெரியாம பதிவப்போட்டீங்களா அத்த மட்டும் சொல்லுங்க.
மத்ததை புதுகை பக்கம் வரும்போது நான் பாத்துக்கறேன்.
அட்டகாசம் டாக்டர்
//ரிசீவ்ட் கால் மட்டும் வைத்து ஓட்டுவது பெருங்கஷ்டமாக உள்ளது. //
ஓ நீங்கதான் மதியம் மிஸ்டு கால் கொடுத்ததா!!!???
டாக்டர்.... அங்கயுமா??? :(
//எங்களுடைய புத்தகங்களைக் கிழித்து கப்போர்டுகளுக்கு அடியில் போடுவதை,பீரொவில்,ஷெல்ஃபில் போடுவதைக் கண்டிக்..... இல்லை! இல்லை!... குறைத்துக்கொள்ள வேண்டும்.//
நல்ல அனுபவப்பட்டு எழுதியிருப்பீர்கள் போல...அப்படியா...
:) என்னுடைய இந்த வலை தளத்தில் நான் சொல்லும் பதிவுகளை மட்டுமே படிக்க வேண்டும். மீறி படித்தாலும் இந்த பதிவை கட்டாயம் படிக்கக் கூடாது!
ஹா ஹா ஹா
நல்லாருக்கு கோரிகைகள்!
இவ்வளவு தொல்லை இருக்கா இதுல? கிரேட் எஸ்கேப்.
மதுரையில் 4 வது புத்தக கண்காட்சி தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் சார்பாக நடைபெறுகிறது.மொத்தம் 227 அரங்கங்களும்,1 கோடி புத்தகங்களும் உள்ளது.செப்டம்பர் 9 ம் தேடி வரை நடைபெறுகிறது.
சென்ற ஞாயிறு அன்று சாரு,ராமகிருஷ்ணன்,மனுஷ்யபுத்திரன்,ரமேஷ் பிரபா போன்ற தலைகள் தென்பட்டது.
மதுரை, மதுரையை சுற்றியுள்ளவர்கள் அவசியம் போகவும்.
குறைந்த எடை கொண்ட மத்து, கரண்டி போன்றவற்றைதான் வீட்டில் உபயோகபடுத்த வேண்டும்.
:)
முதல்ல இருக்குற அனிமேசன் படம் பாத்ததும் குபுக்குன்னு சிரிப்பு வந்துடுச்சு சார்
இதுமாதிரி அனிமேசன் படம் எங்கே கிடைக்கிறது அதை எப்படி இடுகையில் இணைப்பது?
நம் ஆண்வர்க்கத்தையே இந்தளவிற்கு கேவலமாக சொன்ன இந்த பதிவை இந்த சங்கம் க்ண்டிக்......???
இதெல்லம் எந்தளவிற்கு உண்மை என்பது அனுபவப்பட்டவனுக்குதான் வெளிச்சம்
அடப்பாவமே... ஆழ்ந்த அனுதாபங்கள்...!
அருமை.......... கலக்கல்
//"ஏங்க அண்ணி. இதெல்லாம் கேக்கரதில்லையா? பதிவு எழுதரளவு வந்திருச்சே??"
--வித்யா//
அது தானே கேக்கரதில்லையா??????????
thala naan innum single thaan ...
time vantha parthu kollalam
சங்கத்தில் நம்மளையும் சேர்த்து கொள்ளுங்கள் டாக்டர்.
ஆனாலும் உங்களுக்கெல்லாம் அசாத்திய துணிச்சலப்பா! பார்த்து சகோதரா படுக்கை திண்ணைக்கு வந்திடப்போகுது! போறபோக்கில உங்களுக்கு முன்னே தங்கமணி பிரபு வந்திடப்போறார் திண்ணைக்கு! சங்கத்தின் சார்பா கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு கேட்டிக்கொள்கிறோம்.
your writing is so interest and loveable.
i like it very much sir.
ஹஹாஹஹா பதிவு எப்பவும் போல பயனுள்ள பதிவு தான் பின்ன பாதிக்கப்பட்டவங்க இவ்ளோ பேரா?
சிரிச்சி சிரிச்சி ஹைய்யோ முடியலைப்பா...அதுவும் அந்த அனிமேஷன் படம் ஹஹஹஹா
நிறைவேறாத (kanavugal) உரிமைகள்,:-((
எனவே நாம பிடுங்கறதேல்லாம் தேவை இல்லாத ஆணி தான் !!
Post a Comment