Saturday, 15 August 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

In this photo taken Wednesday, July 22, 2009 released by China's Xinhua newsஇந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவில் 160 மில்லியன் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசிகள் அரசு அங்கீகாரம் பெற்று வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

அதே நேரம் அதிர்ச்சியூட்டும்  தகவல் ஒன்றும் இந்தத் தடுப்பூசி பற்றி வெளியாகியுள்ளது. இந்தத் தகவலின் தீவிரம் கருதியே இதனைப் பதிவிடுகிறேன்.

இந்தத் தடுப்பூசியானது குல்லன் பாரி சிண்ட்ரோம் Guillain-Barre Syndrome (GBS), என்ற கொடிய நரம்பு நோயை ஏற்படுத்தும் என்பதுதான் அது.

இந்த நோயானது நரம்புகளின் உறையைத் தாக்கி தசைகளை செயலிழக்கச்செய்து பின் நோயாளி மூச்சுவிடச் சிரமப்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும். இந்நோய் தாக்கியவர்களுக்கு முதலில் காலும், கையும் பாதிக்கப்படும்.பின்னர் மூச்சடைப்பு வந்து வெண்டிலேட்டரில் செயற்கை மூச்சு அளிக்கப்படும்.

இதே போன்ற தடுப்பூசி 1976 ல் உபயோகப்படுத்தப்பட்டபோது

1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

2.500 பேருக்கு GBS தாக்கியது.

3. GBS உருவாகுவது 8 மடங்கு அதிகரித்தது.

தற்போது இந்ததடுப்பூசியானது தேவையான அளவு சோதிக்கப்படவில்லை என்று தெரிகிறது, குறிப்பாகக் குழந்தைகளில்.

அதே நேரம் 13 மில்லியன் மக்களுக்கு  இந்த அக்டோபரில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிகிறது.The British Neurological Surveillance Unit (BNSU) என்ற நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.

மேலும் தற்போது இந்தத்தடுப்புமருந்தில் ஸ்குவாலின் என்ற நொதி சேர்க்கப்படுகிறது. அது என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை என்று ஒரு பிரபல தடுப்பூசி விஞ்ஞானி கூறியுள்ளார்.

இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.

ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில், ஊரில் தடுப்பூசி போட வருகிறார்கள் என்றாலே மக்கள் ஓடி ஒளிவார்கள். தற்போதும் அந்த நிலைதான் வந்துள்ளதா?

தமிழ்த்துளி தேவா.

37 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அண்ண்ண்ணாச்ச்ச்சி......,

தேவன் மாயம் said...

நமக்கு இப்போ போடமாடாங்க!!

பழமைபேசி said...

excuse me sir... Am I safe?

தேவன் மாயம் said...

You may be safe , if you run away when they come to jab you!

நட்புடன் ஜமால் said...

1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

இது என்னா கொடுமைங்க ...

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அதிகார பூர்வமான தகவலா இது

அரசு அறியாத செய்தியா இது

இருப்பினும் எச்சரிக்கையாக இருப்போம்

தகவலுக்கு நன்றி

சென்ஷி said...

:-(

டாக்டர் சார்! என்ன இப்படி பயமுறுத்தறீங்க.. அப்ப வெளிநாட்டுல ஃபெயிலியர் ஆன மருந்துன்னா உடனே விலையை குறைச்சு இந்தியாவுக்குள்ள இறக்குமதி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. உலகத்துல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவுல கிடைக்குறதா பல செய்திகள் இருக்குது. கொடுமைதான்.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

1. ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

இது என்னா கொடுமைங்க ...//

உண்மைதான் ஜமால்!!

தேவன் மாயம் said...

Blogger cheena (சீனா) said...

அன்பின் தேவா

அதிகார பூர்வமான தகவலா இது

அரசு அறியாத செய்தியா இது

இருப்பினும் எச்சரிக்கையாக இருப்போம்

தகவலுக்கு நன்றி//

உண்மைத் தகவல்தான்!!

தேவன் மாயம் said...

சென்ஷி said...

:-(

டாக்டர் சார்! என்ன இப்படி பயமுறுத்தறீங்க.. அப்ப வெளிநாட்டுல ஃபெயிலியர் ஆன மருந்துன்னா உடனே விலையை குறைச்சு இந்தியாவுக்குள்ள இறக்குமதி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. உலகத்துல தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவுல கிடைக்குறதா பல செய்திகள் இருக்குது. கொடுமைதான்.//

நாங்க எதுக்கு இருக்கோம்!! வலைநண்பர்களைக் காப்போம்!

மாதேவி said...

"என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை".

எங்களில்தான் ஆராட்சியா?

யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு மிக்க நன்றி சார்

na.jothi said...

டாக்டர் ஊசி பேர் என்னாங்க
கம்பெனிக்கு ஒரு பேர்ல வைக்கிறாங்க

ramesh sadasivam said...

தகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.

மங்களூர் சிவா said...

/
shri ramesh sadasivam said...

தகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.
/

correct!
:))

KarthigaVasudevan said...

தடுப்பு ஊசி போட வேண்டாம்னு சொல்றீங்களா ?

தருமி said...

அமெரிக்காவில எல்லாம் பாத்து செய்வாங்கன்னு சொல்லுவாங்களே .. அங்கயும் இப்படியா?

தேவன் மாயம் said...

மாதேவி said...

"என்ன விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று இதுவரை ஆராய்ச்சி செய்யப்படவில்லை".

எங்களில்தான் ஆராட்சியா?//

அப்படித்தான் தோன்றுகிறது!!

தேவன் மாயம் said...

யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு மிக்க நன்றி சார்//

நன்றி

தேவன் மாயம் said...

ஜோதி said...

டாக்டர் ஊசி பேர் என்னாங்க
கம்பெனிக்கு ஒரு பேர்ல வைக்கிறாங்க.///

பேர் பத்தி பிரச்சினையில்லை எல்லாம் ஒன்னுதான்

தேவன் மாயம் said...

shri ramesh sadasivam said...

தகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.//

உண்மை நண்பரே!!

தேவன் மாயம் said...

தகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.

15 August 2009 22:12
Delete
Blogger மங்களூர் சிவா said...

/
shri ramesh sadasivam said...

தகவலுக்கு நன்றி. தடுப்பூசியிலிருந்து முதலில் தப்புகிறோம். பிறகு காய்ச்சலை சமாளிக்கலாம்.
/

correct!
:))/

சரிதான்

தேவன் மாயம் said...

மிஸஸ்.தேவ் said...

தடுப்பு ஊசி போட வேண்டாம்னு சொல்றீங்களா ?/

அதேதான்!!

தேவன் மாயம் said...

தருமி said...

அமெரிக்காவில எல்லாம் பாத்து செய்வாங்கன்னு சொல்லுவாங்களே .. அங்கயும் இப்படியா?//

பழைய இறப்பு அங்கேதான்!! பணம் தந்து விடுவார்கள்!!

SUFFIX said...

மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏன் இப்படி?

☀நான் ஆதவன்☀ said...

அடக் கொடுமையே!

வழிப்போக்கன் said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...
:(((

தேவன் மாயம் said...

Blogger ஷ‌ஃபிக்ஸ் said...

மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏன் இப்படி?//

ஆரம்பம் அப்படித்தான்!!
-------------------------------

15 August 2009 22:53
Delete
Blogger ☀நான் ஆதவன்☀ said...

அடக் கொடுமையே!///

ஆமா
-----------------------------

15 August 2009 22:54
Delete
Blogger வழிப்போக்கன் said...

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...
:(((///

என்ன செய்வது
------------------------------

S.A. நவாஸுதீன் said...

ஃப்ளூவால் இறந்தோரைவிட தடுப்பூசியால் இறந்தோர் அதிகம்.

உலக்கை இடிக்கு பயந்து தலையைக் கொண்டு போயி கிரைண்டர்ல விட்ட மாதிரி இல்ல இருக்கு.

நாணல் said...

அடக் கடவுளே!... ஏன் இந்த சோதனை... :(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ரொம்ப கொடுமையான விசயமுங்க.. பயமாத்தான் இருக்குது

அப்துல்மாலிக் said...

தேவா சார் இந்த தடுப்பூச்சிக்கு அந்த ஸ்வின்ஃபுளுவே பரவாயில்லைனு தோணுது

//நரம்பியல் குழு நரம்புநோய் வருகிறதா என்று கண்காணிக்கும்.//

கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்???????

தடுப்பூசி போடலாமா? வேண்டாமா?

இராகவன் நைஜிரியா said...

இவ்வளவு பயங்கரமான விசயத்தை அரசு சரியாக கையாளும் என நினைக்கின்றேன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

Serious Issue.. !! should be taken care..

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

பீர் | Peer said...

ஐயா... என்ன சொல்ல்ல்ல்ல்றீங்க........

இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க?

ஆ.ஞானசேகரன் said...

//இந்த பன்றிக்காய்ச்சல் முன்னர் வந்ததுபோல் மிக பயங்கரமானது அல்ல. இதற்கு அனாவசியமாக தடுப்பூசி வராத எல்லோருக்கும் தேவையா என்பதே இப்போதைய கேள்வி.//

கண்ணுக்கு முன் பயம் வருகின்றதே

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory