Saturday 15 August 2009

கொஞ்சம் தேநீர்-உனக்காக!

கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!

 

விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!

 

உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்!!

 

கண்ணீரின் கடைசித்துளியும்

மோதி உடைந்து

சிதறும் ஆழ் மன

விளிம்பில்

பரவிப் படரும்

உன் நினைவுகள்

விருட்சமாய் !

21 comments:

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நன்றாய் இருக்கிறது - காதலியிடம் கெஞ்சுவது ....

என்ன செய்வது ....

கவிதை அருமை - கருத்தும் அருமை

நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...

அன்பின் தேவா

நன்றாய் இருக்கிறது - காதலியிடம் கெஞ்சுவது ....

என்ன செய்வது ....

கவிதை அருமை - கருத்தும் அருமை

நல்வாழ்த்துகள்//

வணங்கிப் பெறுகிறேன் வாழ்த்துக்களை!!

பீர் | Peer said...

நல்லாயிருக்கு சார்,

ப்ரியமுடன் வசந்த் said...

//கருமை வழிந்து பரவும்

இருளில் என்

சொற்கள் உதிர்ந்து

கல்லறைக்குள்

புதைக்கப்பட்ட

சடலங்களாய்!!//

ஃபர்ஸ்ட் கிளாஸ்.....

ப்ரியமுடன் வசந்த் said...

//விழி திறந்து

மவுனக்கதவுகள் உடைத்து

நீ சொல்லும்

ஒரே வார்த்தைக்காய்

கரைந்து கொண்டிருக்கும்

என் யுகம்!//

டிஸ்டிங்சன்.......

பழமைபேசி said...

கடந்த கால எச்சங்களா அல்லது தற்கால வெளிப்பாடுகளா??

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் மூச்சுக்காற்றின்

வெம்மைக்காய்

உயிரின் வழியெங்கும்

உறைந்து கிடக்கும்

என் ஆன்மாவின் உதிரங்கள்//

ஃபர்ஸ்ட் கிளாஸ் வித் டிஸ்ட்ங்சன்

தேவாசார் எல்லாமே மிக அற்புதமான வரிகள் புதுமையான வரிகள்

தேவன் மாயம் said...

வசந்த்!! முதல் வகுப்பில் பாஸாக்கிவிட்டீங்க!!!

தேவன் மாயம் said...

பழமையாரே!!
மாட்டிவிடுவதில் ஒரு இன்பமா?

நட்புடன் ஜமால் said...

என் சொற்கள் உதிர்ந்து கல்லறைக்குள் புதைக்கப்பட்ட சடலங்களாய்!!]]

மவுனக்கதவுகள் உடைத்து நீ சொல்லும் ஒரே வார்த்தைக்காய் கரைந்து ]]

கண்ணீரின் கடைசித்துளியும் மோதி உடைந்து சிதறும் ஆழ் மன விளிம்பில்]]


அருமை தேவா!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

என் சொற்கள் உதிர்ந்து கல்லறைக்குள் புதைக்கப்பட்ட சடலங்களாய்!!]]

மவுனக்கதவுகள் உடைத்து நீ சொல்லும் ஒரே வார்த்தைக்காய் கரைந்து ]]

கண்ணீரின் கடைசித்துளியும் மோதி உடைந்து சிதறும் ஆழ் மன விளிம்பில்]]


அருமை தேவா!///

ஜமால் !!! நன்றி!!

துபாய் ராஜா said...

//உன் மூச்சுக்காற்றின்
வெம்மைக்காய்
உயிரின் வழியெங்கும்
உறைந்து கிடக்கும்
என் ஆன்மாவின் உதிரங்கள்//



//கண்ணீரின் கடைசித்துளியும்
மோதி உடைந்து
சிதறும் ஆழ் மன
விளிம்பில்
பரவிப் படரும்
உன் நினைவுகள்
விருட்சமாய்//

சாரே!ஒண்ணாம் கிளாசாணும்.

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...

//உன் மூச்சுக்காற்றின்
வெம்மைக்காய்
உயிரின் வழியெங்கும்
உறைந்து கிடக்கும்
என் ஆன்மாவின் உதிரங்கள்//



//கண்ணீரின் கடைசித்துளியும்
மோதி உடைந்து
சிதறும் ஆழ் மன
விளிம்பில்
பரவிப் படரும்
உன் நினைவுகள்
விருட்சமாய்//

சாரே!ஒண்ணாம் கிளாசாணும்.///

இவ்வளவு பிடித்தற்கு நன்றி!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை

மங்களூர் சிவா said...

ஒரு ஸ்மால் -உனக்காக!
ஒரு கட்டிங் -உனக்காக!
ஒரு கோட்டர் -உனக்காக!

எப்பிடி தலைப்பு வெச்சி படிச்சாலும் கலக்கலா இருக்கு டாக்டர்!
:))))

cheena (சீனா) said...

சிவா

தேனீர்ல ஸ்மால் கட்டிங்க் குவார்ட்டர் வேணுமா - புஃல்லாவே தராறே - குடிக்க வேண்டியது தானே - சைடு டிஷ் மொக்கை மெயிலு இருக்கு

SUFFIX said...

சொல்லாமலே......!!
நல்லா இருக்கு நண்பரே.

S.A. நவாஸுதீன் said...

கருமை வழிந்து பரவும் இருளில் என் சொற்கள் உதிர்ந்து கல்லறைக்குள் புதைக்கப்பட்ட சடலங்களாய்!!

தேவா சார், கலக்குறீங்களே
******************************
விழி திறந்து மவுனக்கதவுகள் உடைத்து நீ சொல்லும் ஒரே வார்த்தைக்காய் கரைந்து கொண்டிருக்கும் என் யுகம்!

அம்மணி படிச்சாங்கன்னா நோ அப்பீல். ஃபலாட் தான்
******************************
ஆழ் மன விளிம்பில் பரவிப் படரும் உன் நினைவுகள் விருட்சமாய்!

கவிஞர் தேவா - நீங்களும் ஒரு தசாவதாரம் தான் போங்க

அப்துல்மாலிக் said...

இந்த தேனீரில் நிறைய தேன் கலந்து இருக்கிறது

நல்லாயிருந்தது

ஆ.ஞானசேகரன் said...

அழகு..... நன்றாக இருக்கு

Vidhoosh said...

தேன் நீர் போல சுவைக்கிறது.
--வித்யா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory