Monday, 10 August 2009

பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !!

அன்பு நண்பர்களே!!

பன்றிக்காய்ச்சலில் உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. இந்தியாவிலும் இன்றைய தினமே இரண்டு இறப்புகள் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலிலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? என்பதே இப்போதைய முக்கியமான கேள்வி. அதைப் பற்றிப் பார்ப்போம்.

1.பன்றியிலிருந்து பரவுகிறதா? என்றால் இல்லை. இது நோய் தாக்கிய மனிதர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுகிறது.

2. எப்படிப் பரவுகிறது?

சாதாரண சளி பரவுவதுபோல்தான் இதுவும் பரவுகிறது.

         1.இருமல்

         2.தும்மல்

         3.இந்த வைரஸ் இருக்கும் பொருளின் மேல்         கையை வைத்துவிட்டு வாய்,மூக்கு ஆகிய பகுதிகளைக் கையால் தொட்டால்.

3.இதன் அறிகுறிகள் என்ன?

  காய்ச்சல்,சளி,இருமல்,தொண்டைக்கட்டு,மூக்கில் நீர் ஒழுகுதல், உடல்வலி, குளிர்நடுக்கம், களைப்பு.

சிகருக்கு வாந்தி,பேதி வரலாம்.  

4.நோயின் வீரியம் ?

நிறையப்பேருக்கு சாதாரண காய்ச்சல், சளிபோல் வந்து செல்லும்.

கீழ்க்கண்டோருக்கு நோய் எளிதில் தொற்றும்

அ. 65 வயதுக்கு மேற்பட்டோர்.

ஆ.5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்.

இ.கர்ப்பிணிகள்

ஈ.நீரிழிவு நோயாளிகள்

உ.இதய நோயாளிகள்

ஊ.ஆஸ்துமா

எ.சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

5.நோய் பரவும் காலம்?

நோய்வருவதற்கு முதல் நாளிலிருந்து, நோய் வந்த 5-7 நாட்கள் வரை. ஆயினும் குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புக்குறைபாடு உள்ளவர்களுக்கும் 7 நாள் ஆனபின்னும் நோயாளியிடமிருந்து தொற்றலாம்.

6.காத்துக்கொள்வது எப்படி?

அ. மூக்கு வாய் பகுதையை  இதற்கான முகமூடியால் மூடிக்கொள்ளவும்( மருந்துக்கடைகளில் கிடைக்கும்-விலை 5 ரூபாய்க்குள்) .

ஆ.அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக்கழுவவும்.

இ.கையால் கண்,மூக்கு, வாயைத் தொடாதீர்கள். 

ஈ.நோயாளியிடமிருந்து பாதுகாப்பாக விலகி இருக்கவும்.

உ.உங்கள் ஊரில் இந்நோய் உள்ளதா? நீங்கள் மேற்க்கண்டநோய்எளிதில் தொற்றும்   வகையினரா? அப்படியானால் மக்கள் கூட்டமாக உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம். பாதுகாப்பு முறைகளை மேற்கண்டவாறு கைகளைக் கழுவுதல், மாஸ்க் அணிதல் ஆகியவற்றைக் கடைப் பிடியுங்கள்.

ஊ.கைகளை சோப்பு&தண்ணீர் கொண்டு சோப்பு 15-20 நொடிகள்  கழுவவும்.

7.குழந்தைகளுக்கு இருந்தால் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் இருக்கும்:

அ.மூச்சு வேகமாகவும், மூச்சு விடுவதில் சிரமமும்

ஆ.தோல் ஊதா,சாம்பல் நிறமாகுதல்.

இ.நீர் அருந்தப் பிடிக்காமல் இருத்தல்.

உ.அதிக வாந்தி

ஊ.எழுந்து நடமாடாமல் இருப்பது

எ.குழந்தை எரிச்சலுடனும், தூக்கவிடாமலும் இருப்பது.

ஏ.ஃப்ளூப் போன்ற சளி குறைந்து இருமலும் காய்ச்சலும் வருவது.

8.வயதுவந்தவர்களில் கீழ்க்கண்ட நோய்க்குறிகள் காணப்படும்:

அ. மூச்சுவிடச்சிரமம்.

ஆ.நெஞ்சுவலி, நெஞ்சில் அழுத்தமாக உணருதல்

இ.திடீரென்ற கிறுகிறுப்பு, மயக்கம்

ஈ.நிற்காத வாந்தி

உ.சளி நின்று காய்ச்சலும் , இருமலும் அதிகரித்தல்

9.எவ்வளவு நேரம் வரை இக்கிருமி உயிருடன் இருக்கும்?

தும்மல்,இருமலிலிருந்து வெளிப்பட்டு பொருட்களின்மேல் படும் கிருமி 2-8 மணிநேரம் வரை தொற்றும் தன்மையுடன் இருக்கும். அந்த நேரத்தில்.

10.இந்த கிருமி எப்போது அழியும்?

75-100 டிகிரி வெப்பத்தில் இது செயலிழக்கும்.

மேலும் பெரும்பானமையான கைகழுவ, துடைக்க உபயோகிக்கும் கிருமிநாசினிகள் இதனை செயலிழக்கச்செய்யும்.

11. வீட்டில் என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்?

சாதாரண தரைகழுவும் பொருட்களால் அதில் குறிப்பிட்டபடி கழுவினால் போதும்.

12.குழாயில் வரும் நீரினால் பரவுமா?

குளோரினால் சுத்தப்படுத்தப்பட்ட கார்ப்பரேசன் தண்ணீரினால் பரவாது. இதுவரை நீரால் பரவியதாக தகவல் இல்லை.

13.நீச்சல் குளம், தண்ணீர் விளையாட்டுகள் ஆகியவற்றால் பரவுமா?

சரியாக குளோரினால் சுத்திரிக்கப்பட்ட தண்ணீரினால் பரவாது.

14.முடிவாக சில குறிப்புகள்

1.அடிக்கடி கைகளை சோப்புநீரால் கழுவவும்.

2.நன்கு 8 மணிநேரம் தூங்கவும்.

3.தண்ணீர் நிறைய அருந்தவும்.

4.காய்கறிகள், விட்டமின் சத்து மிக்க உணவை உண்ணவும்.

5.மது அருந்தவேண்டாம்.

6.உடற்பயிற்சி செய்யவும்.

7.கைகளைக் கழுவாமல் முகத்தருகில் கொண்டுசெல்லவேண்டாம்.

50 comments:

அத்திரி said...

நல்ல தகவல் டாக்டர்

’டொன்’ லீ said...

:-)
அவதானிப்புடன் நடக்க வேண்டும்..

டம்பி மேவீ said...

useful tips thala.....

romba hot yana area vil varaathu nnu sonnanga... aana chennaiyil niraiya case report aguthe ...enna vishyam doctor

கதிர் - ஈரோடு said...

நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே

துபாய் ராஜா said...

தற்போதைய காலத்திற்கேற்ற நல்லதொரு பதிவு.

மிகவும் நன்றி.

D.R.Ashok said...

I am taking printouts. Thankyou.

5. point drinks???? :)

தேவன் மாயம் said...

நன்றி
அத்திரி, டொன்லி..

தேவன் மாயம் said...

டம்பி மேவீ said...

useful tips thala.....

romba hot yana area vil varaathu nnu sonnanga... aana chennaiyil niraiya case report aguthe ...enna vishyam doctor//

இதற்கும் ஹாட்டுக்கும் சம்பந்தம் இல்லை!!

தேவன் மாயம் said...

Blogger கதிர் - ஈரோடு said...

நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே///

நன்றி கதிர்!!

தேவன் மாயம் said...

துபாய் ராஜா said...

தற்போதைய காலத்திற்கேற்ற நல்லதொரு பதிவு.

மிகவும் நன்றி.///

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

Blogger D.R.Ashok said...

I am taking printouts. Thankyou.

5. point drinks???? :)//

ஆம்!! மது நோய் எதிர்ப்புசக்தியைக் குறைப்பதால்!!

பிரியமுடன்.........வசந்த் said...

உபயோகமான பதிவு

ஒரே ஒரு டவுட் சார்

பறவைக்காய்ச்சல் மனுஷனுக்கு பரவுச்சு

பன்றிக்காய்ச்சலும் மனுஷனுக்கு பரவுச்சு

ஆனா மனுஷ காய்ச்சல் மிருகங்களுக்கு பரவுமா டாக்டர்?

Joe said...

Useful post,thanks!

தேவன் மாயம் said...

பிரியமுடன்.........வசந்த் said...

உபயோகமான பதிவு

ஒரே ஒரு டவுட் சார்

பறவைக்காய்ச்சல் மனுஷனுக்கு பரவுச்சு

பன்றிக்காய்ச்சலும் மனுஷனுக்கு பரவுச்சு

ஆனா மனுஷ காய்ச்சல் மிருகங்களுக்கு பரவுமா டாக்டர்?//

மியூட்டேஷன் எனப்படும் ஜீன் மாற்றம் ஏற்பட்டால் புதிய வைரசுகள் தோன்றி எப்படியும் பரவலாம்!1

பீர் | Peer said...

டாக்டர், என்னால் நூறு ஓட்டு போடமுடியும் என்றால், இந்த இடுகைக்கு அத்தனையும் போட்டுவிடுவேன்.

பலருக்கும் பகிரப்படவேண்டிய பயனுள்ள இடுகை.

Jeeves said...

Timely post. thank you

தருமி said...

மிக்க நன்றி

வால்பையன் said...

உலகையே பீதியடைய வைத்திருக்கும் பன்றி காய்ச்சல் நோய் பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிடுங்கள்!

தேவன் மாயம் said...

Delete
Blogger பீர் | Peer said...

டாக்டர், என்னால் நூறு ஓட்டு போடமுடியும் என்றால், இந்த இடுகைக்கு அத்தனையும் போட்டுவிடுவேன்.///
பலருக்கும் பகிரப்படவேண்டிய பயனுள்ள இடுகை.///
ஆகா இடுகையின் பயன் இதுவே!!!
---------------------------

10 August 2009 09:41
Delete
Blogger Jeeves said...

Timely post. thank you//

வாங்க நண்பரே!!
----------------------------

10 August 2009 09:43
Delete
Blogger தருமி said...

மிக்க நன்றி//

வருகையே போதும்!!!
----------------------------

10 August 2009 09:46
Delete
Blogger வால்பையன் said...

உலகையே பீதியடைய வைத்திருக்கும் பன்றி காய்ச்சல் நோய் பற்றிய செய்திகளை அடிக்கடி வெளியிடுங்கள்!
///
உங்கள் விருப்பம்போலவே........
------------------------------

அ.மு.செய்யது said...

பயனுள்ள தகவல் தேவா..பகிர்வுக்கு நன்றி !!!

பூனேவில் பன்றி காய்ச்சல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் இங்கு முகமூடி ஒன்றின் விலை
60 ரூபாய்க்கு மேல் தாண்டி விட்டது.இருந்தாலும் 90% மக்கள் மாஸ்க் அணிந்து தான் வெளியே வருகின்றனர்.

மேலும் அலுவலகத்தில் கை கழுவ ஸ்டெரில்லியம் திரவம் எல்லா இடங்களிலும் வைக்கப் பட்டுள்ளது.

J said...

நேரத்திற்கு ஏற்ற தகவல்கள்
டாக்டர் நன்றி

sakthi said...

அருமையான தகவல்களை உள்ளடக்கிய பதிவு தேவா சார்

அபுஅஃப்ஸர் said...

தேவையான பதிவு டாக்டர்

பன்றிக்காய்ச்சல் மனிதனுக்கு பரவியது என்று சொல்லப்படுகிறது, அதன் பிறப்பிடம் எது என்பதை தெளிவாக சொல்லமுடியுமா?

பன்றிக்கறி கட்டாயம் சாப்பிடக்கூடாது என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது, அதை மீறி சாப்பிடுவதால் இப்போது அந்த விடயம் உண்மை என்று நிரூபணமாகிறது..........

இதை தடுக்க அரசாங்கம் முழு தடுப்பு நடவடிக்கையை முடிக்கிவிடவேண்டும் என்பது எல்லோருடைய அவா..

சுசி said...

மிகவும் பயனுள்ள பதிவு டாக்டர் சார்...

நட்புடன் ஜமால் said...

நல்ல கருத்து பகிர்வு பதிவு


நன்றி தேவா!

T.V.Radhakrishnan said...

நல்ல தகவல்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தகவல் நன்றி டாக்டர்

ஆ.ஞானசேகரன் said...

கட்டுரைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்

Cable Sankar said...

mikka நன்றி டாக்டர்

மாசற்ற கொடி said...

Thanks Doctor. Pls. keep us updated if there is some other precation that we can take.

Anbudan
Masatra Kodi.

அமிர்தவர்ஷினி அம்மா said...

தகவலுக்கு நன்றி

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப தேவையான பதிவு தேவா சார். ரொம்ப நன்றி. இதன் தொடர்ச்சியாக கிடைக்கும் அணைத்து தகவல்களையும் உங்கள் பதிவில் வெளியிட்டால் ரொம்ப நல்லது

Suresh Kumar said...

நல்ல்ல தகவல்கள்

குடந்தை அன்புமணி said...

உபயோகமான தகவல்.

ஆகாய நதி said...

Thank u very much doctor:)

ஆகாய நதி said...

Thank u very much doctor:)

நிஜமா நல்லவன் said...

தகவல்களுக்கு நன்றி!

PPattian : புபட்டியன் said...

Thanks for the timely and awareness creating post..

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையான, நேரத்திற்கு ஏற்ற பதிவு

சி.கருணாகரசு said...

தேவையான நேரத்தில் பயனுள்ள பதிவு மருத்துவரே.

ஷ‌ஃபிக்ஸ் said...

நன்றி மருத்துவ நண்பரே!! இத்தனை நாள் ஆங்கிலத்தில் மட்டும் மின்னஞ்சலில் வந்து கொண்டு இருந்தது, தங்களின் முயற்சியால் அழகிய தமிழில் தந்து இருக்கின்றீர்கள், அனைவருடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்.

உமா said...

மிக அவசியமான பதிவு டாகடர். சென்னையில் இப்போது பரவிவருவதால் பயமாகத்தான் இருக்கிறது. இப்போது இங்கு climate change ஆகி வருவததால் சாதாரண throat infection அல்லது ஜுரம்வந்தால் எரித்திரோமிசின் குரோசின் போட்டுக்கொள்ளலாமா? அலலது எப்போதும் போல்டாக்டரரிடம் போவதே சரியா? [தானாக மருந்து சாப்பிடுதுதவறுதான். டாக்டரிடம்கூட்டமாகஇருப்பதால் பயமாகஉள்ளது.]

Thomas Ruban said...

உங்களுடைய சேவை தொடரட்டும்.

சொல்லரசன் said...

காலத்திற்கேற்ற அவசியமான பதிவு

தேவன் மாயம் said...

அன்பு நண்பர்களே !! நான் அரசு மருத்துவமனையில் 24 மணிநேர பணியில் இருப்பதால் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் எழுத நாளை காலை 10 மணிக்குத்தான் வருவேன்!

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்புகளுக்கு நன்றி தேவன்!

சுந்தர் said...

இதுக்கு தடுப்பு ஊசி இன்னும் வரலையா டாக்டர் ?

cheena (சீனா) said...

அன்பின் தேவா
உடனடித் தேவையான - அரிய - தகவல்களைப் பகிர்ந்தமை நன்று - நன்று.

நன்றி - நல்வாழ்த்துகள் நண்பா

மங்களூர் சிவா said...

அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு.

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...

Deva
//அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு//

yes....

Dyena

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory