Monday, 3 August 2009

மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!- கேள்விகளும் பதிலும்!

அன்பு நண்பர்களே!!

என்னுடைய மாரடைப்பு வருமா?-ஒரே ஒரு சோதனை! பதிவில் நண்பர்கள் சில கேள்விகள் கேட்டிருந்தனர். அவற்றிற்கு என் பதில்களைத் தந்துள்ளேன்.

மாரடைப்பு வருமா? என்ற பதிவை நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்த இடத்தில் படிக்கவும்! - மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!

Blogger

கீழே கேள்விகள் உள்ளன, பதிலும் தந்துள்ளேன். பதில்களை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறவும்!

1.Suresh Kumar said...

சார் நல்ல தகவல் சொன்னீங்க கொழுப்பு கூடுதலா இருப்பவர்கள் எதையெல்லாம் சாப்பிடலாம் எதையெல்லாம் சாப்பிட கூடாது என்று சொன்னாலும் நல்லா இருக்கும்

31 July 2009 22:01///

கொழுப்பைக்குறைக்க கீழ்க்கண்டவற்றைத் தவிர்க்கவும்: வெண்ணெய்,சீஸ்,கொழுப்பு நீக்காத பால்,ஐஸ்கிரீம், மாமிச வகைகள்(மீன் தவிர).தேங்காய், பனை எண்ணை,தாவர எண்ணை வகைகளில் சில. வறுத்த உணவுகள்,பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்படும் உணவுகள்.

இவற்றை சேர்க்கலாம்: மீன்,சஃப்ஃபிளவர் ,சூரியகாந்தி, கார்ன்,சோயா எண்ணைகள், முழுதானிய உணவுகள்,பழங்கள்,காய்கறிகள்,ஓட்ஸ்,பீன்ஸ்,காய்ந்த கடலை, அரிசி,தானியங்கள், கொழுப்பு நீக்கிய பால் பொருட்கள், தோல் நீக்கிய கோழி .

Blogger2.அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவசியமான தகவல்கள்...
பதிவு பயனுள்ளது...
பதிவர்களுக்கென்று ஏதாவது டயட் அல்லது எக்ஷ்சசைஸ் புதிதாக வந்திருக்கிறதா?
அதாவது கணினி பெண்ணை கண்ணாலம் கட்டிக்கிட்டவங்களுக்கு..///

இல்லை! பொதுவான எல்லோருக்கும் சொல்லியிருக்கும் உணவுகளும் உடற்பயிற்சியும்தான்!! உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........!(கணினி!!!)

.31 July 2009 23:51

Blogger 3.அபுஅஃப்ஸர் said...

தகவல் பெட்டகம் தேவாசார் நீங்க‌
இதற்கான பரிசோதனை செய்வார்களா, அப்படி குறைவாக இருப்பதற்கு அறிவுரை மற்றும் அதற்கான மெடிசின் கிடைக்குமா///

குறைப்பதற்கு அறிவுரைகள் மேலே சொல்லியதுடன் உடற்பயிற்சி..

குறைப்பதற்கு நிறைய மருந்துகள் வந்துள்ளன.

1.ஸ்டாடின்கள்(statins)

2. ஒமேகா 3 மீன் எண்ணை மாத்திரைகள்( Omega-3's from fish oil,)

3.நியாசின் என்ற விட்டமின் (niacin)

01 August 2009 01:02

Blogger 4.பாஸ்கர் said...

LDL க்கும் LDL - p க்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
மிக நல்ல தகவல் நிறைந்த பதிவு//

எல்.டி.எல்லைச் சுற்றி பொட்டலம் கட்டியதுபோல் இருக்கும் படலம்தான் L D L-P.

.Blogger5.தமிழ் பிரியன் said...

நல்ல தகவல். LDL-P என்பது என்ன? அதை அதிகரிக்க என்ன செய்யலாம்?//

இதற்கான பதிலை பதிவிலேயே சேர்த்துவிட்டேன். சுட்டி மேலே. எல்.டி.எல்-பி யைக்குறைக்கத்தான் வேண்டும். அதற்கு உணவுமுறையும், உடற்பயிற்சியும், மருந்துகளும்தான். அனைத்தையும் மேலே சொல்லியுள்ளேன்.

31 July 2009 09:39

Blogger6.cheena (சீனா) said...

அரிய தகவலுக்கு நன்றி நண்பரே
ஆனால் பம்பாய் அனுப்ப வேண்டுமா - பண விரைஅய்ம் ஆயிற்றே - சென்னை யில் கூட இல்லையா///

நிறைய பரிசோதனைகள் உலகத்தரத்தில் மும்பையில் செய்கிறார்கள். பணம் குறைவுதான். குரியரில் போய் பதில் ஈ.மெயிலில் வந்துவிடும். நேர விரயம் இல்லை.

31 July 2009 09:39

.

Blogger 7.சொல்லரசன் said...

இந்த சோதனையை எல்லா மருத்துவமனைகளிலும் செய்யலாமா டாக்டர்///

இது மிகப்புதிய பரிசோதனை. பெரிய மருத்துவமனைகளில் செய்வார்கள். தைரோகேர் என்ற சோதனைச் சாலையில் செய்கிறார்கள். எல்லா ஊரிலும் தைரோகேர் உள்ளது.

31 July 2009 08:4

மிக்க நன்றி நண்பர்களே!! உங்கள் கேள்விகள் என்னை மீண்டும் மீண்டும் நல்ல பதிவுகள் எழுதத் தூண்டுகின்றன. நன்றி.

தமிழ்த்துளி தேவா.

34 comments:

cheena (சீனா) said...

பதிவர்களின் ஐயங்களைத் தீர்த்து வைக்க ஒரு இடுகை இட்ட மருத்துவரே - வாழ்க உமது பணி - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

சீனா ஐயா வாங்க!!

பழமைபேசி said...

நல்ல வேலை செய்யுறீங்க... தொடரவும்...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மாரடைப்பு, மற்றும் கொழுப்பு உணவு சம்பந்தமான உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.

வால்பையன் said...

தகவல்களுக்கு நன்றி தல!

அபுஅஃப்ஸர் said...

படித்துவிட்டு பின்னூட்டம் மூலம் கேட்ட கேள்விகளை தொகுத்து அழகான பதில் எழுதி பதிவுபோட்டுவிட்டீர்கள், இதற்காக அநத் பதிவுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை

தொடருங்கள்

தருமி said...

கொஞ்சம் இதையும் பாருங்க ..!

பல விஷயம் சொல்றீங்க. ஆனா ஒருதடவை நாலைந்து heart-cases சேர்ந்த் college canteen-ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதில் சிலர் 'தம்' கேசுகள்; சில தண்ணி கேசுகள்; சில எதுவும் இல்லாத 'பரிசுத்த' கேசுகள். இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு வழியில் இருந்தும் மாரடைப்பு மட்டும் எப்ப்டி ஒண்ணா வந்துச்சி அப்டின்னு ஒரு கேள்வி ஒருவர் கேட்க இன்னொரு பேராசிரியர் - heartன்னு ஒண்ணு இருந்தா heart attack அப்டின்னு ஒண்ணு வரும்; அம்புடுதான் என்றார்!!

:)

கிரி said...

Excellent Deva!

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி தேவன் சார்

sakthi said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

பதில்கள் பின்னூட்டாமல் பதிவாக்கியிருப்பது நலம்.

தகவல்களுக்கு நன்றி தேவா!

ஜெட்லி said...

thanks

தேவன் மாயம் said...

பழமைபேசி said...
நல்ல வேலை செய்யுறீங்க... தொடரவும்.///

நன்றி.

தேவன் மாயம் said...

Dr.எம்.கே.முருகானந்தன் said...
மாரடைப்பு, மற்றும் கொழுப்பு உணவு சம்பந்தமான உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை.

03 August 2009 09:58///

நன்றி ஐயா!!

தேவன் மாயம் said...

வால்பையன் said...
தகவல்களுக்கு நன்றி தல!

03 August 2009 10:06///

வாங்க!!

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
படித்துவிட்டு பின்னூட்டம் மூலம் கேட்ட கேள்விகளை தொகுத்து அழகான பதில் எழுதி பதிவுபோட்டுவிட்டீர்கள், இதற்காக அநத் பதிவுக்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை

தொடருங்க///

உங்கள் கருத்துக்கு நன்றி

தேவன் மாயம் said...

தருமி said...
கொஞ்சம் இதையும் பாருங்க ..!

பல விஷயம் சொல்றீங்க. ஆனா ஒருதடவை நாலைந்து heart-cases சேர்ந்த் college canteen-ல உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதில் சிலர் 'தம்' கேசுகள்; சில தண்ணி கேசுகள்; சில எதுவும் இல்லாத 'பரிசுத்த' கேசுகள். இப்படி எல்லாரும் ஆளுக்கு ஒரு வழியில் இருந்தும் மாரடைப்பு மட்டும் எப்ப்டி ஒண்ணா வந்துச்சி அப்டின்னு ஒரு கேள்வி ஒருவர் கேட்க இன்னொரு பேராசிரியர் - heartன்னு ஒண்ணு இருந்தா heart attack அப்டின்னு ஒண்ணு வரும்; அம்புடுதான் என்றார்!!

:)///

படித்தேன் அபாரம்!!!

தேவன் மாயம் said...

கிரி said...
Excellent Deva!

03 August 2009 11:18///

நன்றி

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
மிக்க நன்றி தேவன் சார்

03 August 2009 11:42//

வாங்க நண்பரே!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
பதில்கள் பின்னூட்டாமல் பதிவாக்கியிருப்பது நலம்.

தகவல்களுக்கு நன்றி தேவா!//

ஜமால் நன்றி

தேவன் மாயம் said...

ஜெட்லிக்கு நன்றி

’டொன்’ லீ said...

நல்ல தகவல்கள் தேவா..;-)

டக்ளஸ்... said...

Super Doctoree..!

Suresh Kumar said...

நல்ல தகவல்கள் டாக்டர் ஐயா நன்றி

தண்டோரா said...

very usefull Dr.thanks.

சுந்தர் said...

//உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........!(கணினி//

இதுதான் தேவா டச் ...., சூப்பர் இடுகை சூப்பர் ..., சூப்பர் பின்னூட்டம் சூப்பர் .......

சென்ஷி said...

எளிமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள். தங்களின் சிறப்பான பணியை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நன்றிகள் மாத்திரம் என்றும் உண்டு. நன்றி மருத்துவரே!

S.A. நவாஸுதீன் said...

பல ஐயங்களைத் தீர்த்து தெளிவான பதிலைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி தேவா சார்.

தேவன் மாயம் said...

’டொன்’ லீ said...
நல்ல தகவல்கள் தேவா..;-)///

நன்றி லீ!!!

-------------------------------

03 August 2009 20:29

டக்ளஸ்... said...
Super Doctoree..!///

வாங்க!!
------------------------------

03 August 2009 20:40

Suresh Kumar said...
நல்ல தகவல்கள் டாக்டர் ஐயா நன்றி///

வருகைக்கு நன்றி!!

-----------------------------

03 August 2009 20:48

தண்டோரா said...
very usefull Dr.thanks.///

அது... சரி
----------------------------------

03 August 2009 21:03

சுந்தர் said...
//உங்கள் மனைவியைக் கேட்டாலே சொல்வாரே..........!(கணினி//

இதுதான் தேவா டச் ...., சூப்பர் இடுகை சூப்பர் ..., சூப்பர் பின்னூட்டம் சூப்பர் .......///

பயனிருந்தால் சரிதான்!!

------------------------------

03 August 2009 22:05

சென்ஷி said...
எளிமையான விளக்கங்களுடன் கூடிய பதில்கள். தங்களின் சிறப்பான பணியை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நன்றிகள் மாத்திரம் என்றும் உண்டு. நன்றி மருத்துவரே!////

ரொம்ப புகழ்கிறீர்கள்!!

-----------------------------

03 August 2009 23:34

S.A. நவாஸுதீன் said...
பல ஐயங்களைத் தீர்த்து தெளிவான பதிலைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி தேவா சார்.///

வாங்க நவாஸ்!!

------------------------------

Mrs.Menagasathia said...

தகவலுக்கு நன்றி மருத்துவரே!!

" உழவன் " " Uzhavan " said...

இப்படியொரு மருத்துவர் ஐயா நமக்குக் கிடைத்தது பதிவுலகத்திற்கே பெருமையும் மகிழ்ச்சியும் :-) நன்றி

பாஸ்கர் said...

மிக்க நன்றி சார்

த.ஜீவராஜ் said...

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் நண்பரே

மங்களூர் சிவா said...

மிக்க நன்றி.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory