Friday, 7 August 2009

புற்று நோய் தடுக்க ஒரே ஒரு ஊசி!!

நவீன மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. வியாதிகளும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் நாம் அறிந்தால் நிச்சயம் நாம் அவற்றில் பாதியையாவது நாம் தடுக்க முடியும். இந்த ஊசியைப்போட்டு இருந்தால் எனக்கு இந்தப் புற்றுநோய் வந்து இருக்காதே என்று வருந்தும் நிலை யாருக்கும் வரக்கூடாது.

புற்றுநோயைத் தடுக்கும் ஊசி இருக்கிறதா? என்று கேட்கிறீர்களா? ஆம் உள்ளது.

பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.

ஆண்டுதோரும் 74000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.

இந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர்.இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.

இதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் Pap Smear பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.

நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.

H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.

இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.

இதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.

------------------------------------------------------------------------------

விஜய், அஜீத் கண்டுபிடியுங்கள்!

போன இடுகையின் அனைத்துப் படத்தையும் சரியாகக் கண்டு பிடித்து சொன்னவர்:

1.S.A. நவாஸுதீன்.

இரண்டாவது 7 கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொன்னவர்:

2.தமிழரசி

நவாஸுதீனுக்கும் தமிழரசிக்கும் வாழ்த்துக்கள்!!

முடிவுகள்:

1 . சூர்யாimage 2.பிரபுதேவாimage 3.அஸின்image
4.விஜய்image


5.மாதவன்image 6.அஜீத்image
7.விஷால்image 8.சரத்image 9.விக்ரம்
image

10.ஐஸ்வர்யாimage 11.த்ரிஷா
image

 

----------------------------------------------

 

தமிழ்த்துளி தேவா..

___________________

28 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

டாக்டர் சார் அவசியமான இடுகை

நேற்று நான் லீவுனால நவாசும் தமிழரசியும் ஜெயிச்சுட்டாங்க.....

வாழ்த்துக்கள்

Balaji said...

Dear Dr
thanks for good useful article.

Came to know about this thro our kids dr. My wife plan to take the dose. Read the pamphlet, it says only 50 % chance to prevention,if it taken at latter stage(my wife age is 39) Pl advice us can we go ahead .. We are sure to put the injuction for our daughters

VS Balajee

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

டாக்டர் சார் அவசியமான இடுகை

நேற்று நான் லீவுனால நவாசும் தமிழரசியும் ஜெயிச்சுட்டாங்க.....

வாழ்த்துக்கள்///

ரொம்ப எதிர்பார்த்தேன் வசந்த்!!! சரி ஓகே!!!

முனைவர்.இரா.குணசீலன் said...

அரிய செய்தியை அறிந்து கொண்டேன்...
விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை......

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

நன்றி தேவா

சொல்லரசன் said...

அனைவரும் அறிந்து செயல்படுத்தவேண்டியவிசயம்

//இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.//

இந்தியாவில் தொடங்கபடவேண்டும்

டக்ளஸ்... said...

\\இதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.\\

அவசியம்தான் ஸார்.

Vidhoosh said...

நல்ல பதிவு. நன்றி.

--வித்யா

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள செய்தி. நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை. மிக்க நன்றி.

பழமைபேசி said...

விழிப்புணர்வுத் திலகம் வாழ்க!

அபுஅஃப்ஸர் said...

ஹெச். பி. வி. இந்த வைரஸ் பற்றி அறிந்த டாக்டர்கள் ஏன் மஞ்சள் காமாலை, பெரியம்மை வைரஸ் தடுப்பூசி மாதிரி இதையும் போட சொல்லி கட்டாயப்படுத்தவில்லை.. இதெல்லாம் தேவையில்லை என்று அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லியா...??? இனிமேலாவது இதை செய்வார்களா

நவாஸுக்கும், தமிழரசிக்கும் வாழ்த்துக்கள்.. (நல்லா கண்டுபுடிக்கிறாங்கையா)

வால்பையன் said...

நல்ல செய்தி!

பன்றி காய்ச்சலுக்கும் சீக்கிரம் மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என நம்புவோம்!

நாஞ்சில் நாதம் said...

அவசியமான இடுகை. படிச்சாச்சு

வழிப்போக்கன் said...

பயனுள்ள தகவல்...
நன்றி..

மங்களூர் சிவா said...

நல்ல தகவல், தடுப்பூசி 26 வயதுக்கு மேல போடக்கூடாதா??

சிங்கக்குட்டி said...

நல்ல பதிவு ..தகவலுக்கு நன்றி :-))

சூரியன் said...

தகவலுக்கு நன்றி டாக்டர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

H I V மட்டுமே தெரிந்த நான் உங்களால் H P V பத்தி தெரிந்து கொண்டேன் .


துப்பறிந்தவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

sakthi said...

உபயோகமுள்ள தகவல்

Mojo Arasu said...

உடல் நலம் தொடர்பான நன்கு பயன் படக் கூடிய கருத்துகளைத் தருவதற்கு நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி டாக்டர்...

இந்தியாவில் இந்த ஊசி போட ஆகும் செலவு என்ன?

26 வயது மேல் உள்ளவர்கள் போட முடியாதா?

இதன் விழிப்புணர்வு இந்தியாவில் ஏன் இல்லை?

இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா??

Anonymous said...

சார் பழைய வசனம் தான் உபயோகமான பதிவு...விஞ்ஞான வளர்ச்சி வியக்கத்தக்கதும் வரவேற்கத்தக்கதுமாகும்..தொடரட்டும் உங்கள் நற்பணி..

( சார் பரிசை எப்படி நாங்கள் இரண்டு பேரும் சரிபாதியா பிரிச்சிக்கவா? )

S.A. நவாஸுதீன் said...

நல்ல பல தகவல்கள், அருமையான பதிவு. நன்றி தேவா சார்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

ஷ‌ஃபிக்ஸ் said...

நல்ல பதிவு நண்பரே!!

ஷ‌ஃபிக்ஸ் said...

//தமிழரசி said...
/

( சார் பரிசை எப்படி நாங்கள் இரண்டு பேரும் சரிபாதியா பிரிச்சிக்கவா? )//

பஞ்சாயத்துக்கு நான் ரெடி சார்

துபாய் ராஜா said...

நல்லதோரு தகவல்.

துபாய் ராஜா said...

//H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம்.ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.//

//இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.//

நல்லதொரு தகவல்.நம்நாட்டில் இந்த தடுப்பு ஊசி கிடைக்கிறதா ??!!


//இதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.//

நமது மத்திய,மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கைகள் ஏதும் எடுத்துள்ளனவா ??!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory