Sunday, 23 August 2009

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?-2

சக்கரை நோயாளிகள் பழம் சாப்பிடலாமா? என்ற இடுகையின் தொடர்ச்சியாக இதனை எழுதுகிறேன். முதல் இடுகையை கீழே தட்டி படிக்கலாம்.
 
சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.

வாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல, ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.

பப்பாளி: பப்பாளியில் விட்டமின் ’ஏ’ அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.

ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லி: விட்டமின் ‘சி’ இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும், அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.

ஜூஸ்:

சிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.

1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.

2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.

3.விட்டமின்களும் வீணாகின்றன.

சக்கரை சேர்க்காத பழரசங்கள்:

இவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்.

கர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.

மேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.

காலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.

நூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:

பழம் மாவுச்சத்து புரதம் நார்ச்சத்து கலோரி
ஆப்பிள் 19 கிராம் 0.36கிராம் 3.3 கிராம் 72
சாத்துக்குடி 7.06 0.47 1.9 20
பப்பாளி 13.7 0.85 2.5 55
தர்பூசணி 11.6 0.94 0.6 46
ஆரஞ்சு 15.4 1.23 3.1 62
மாதுளை 26 1.46 0.9 105
அன்னாசி 19.6 0.84 2.2 74
எலுமிச்சை 7.8 0.92 2.4 24

 

மதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.

இரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.

இப்படி உண்டால் மாவுசத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள்,தாது உப்புக்களும் கிடைக்கின்றன. வயிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.

உங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்.

20 comments:

அமர பாரதி said...

அருமையான கட்டுரை தேவா. நான் ஒரு ஜூவெனைல் டயாபெடிக், கடந்த 20 வருடமாக. நல்ல கட்டுரை. பொதுவாக வருடம் இரு முறை இரத்த பரிசோதனை, அதை வைத்து உணவு மற்றும் மருந்து அளவை சமன் செய்வது போன்றவை இன்றியமையாதது. அனைவரும் 35 வயதுக்கு மேல் வருடம் ஒரு முறையும் 45 வயதுக்கு மேல் வருடம் இரு முறையும் ரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கண் பரிசோதனை இரு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

முக்கியமாக இரவு உணவை 6 மணிக்குள் எடுத்துக்கொன்டு படுக்கப் போகும் முன் ஒரு துண்டு பழம் மற்றும் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட / குறைவான பால் எடுத்துக்கொள்வது மிகுந்த பயன் தரும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க.. அப்புறம் இந்த பேரிட்சை எப்படிங்க? அப்படியே ரத்த கொதிப்பு நோயாளிகள் சாப்பிட வேண்டியதையும் எழுதினா நல்லா இருக்கும்!!! எங்கப்பாவுக்கு உதவும்!!

jerry eshananda. said...

டாக்டர்,இனிப்பான பதிவு.அடுத்து "உயர் ரத்த அழுத்தம்" பற்றி பதிவு போடவும்.
அன்புடன் "ஜெரி".

இராகவன் நைஜிரியா said...

நன்றி மருத்துவரே..

பிரியமுடன்...வசந்த் said...

வலையுலக காக்கும் கடவுள் தேவா சார் வாழ்க வாழ்க.........

நிலாமதி said...

உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது பதிவுக்கு நன்றி ..............நிலாமதி

Anonymous said...

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல தகவல்கள் மருத்துவரே!

பயனுள்ள பதிவு!

ஆ.ஞானசேகரன் said...

நண்பரே உங்களுக்கான பரிசை எடுத்து செல்லுங்கள்...

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி.... நல்ல தகவல்கள்

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு தேவா!

மிக்க நன்றி.

S.A. நவாஸுதீன் said...

அருமை தேவா சார். மிகச் சிறந்த பணியை செய்து கொண்டிருக்கின்றீர்கள். ரொம்ப நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிகப் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி!

இல்யாஸ் said...

பேரீத்தம் பழம் சாப்பிடலாமா?

புதுப்பாலம் said...

சக்கரை வியாதி உள்ளவர்கள் திராட்சை பழம் சாப்பிடலமா?

சிங்கக்குட்டி said...

நல்ல கருத்துக்கள்.

வால்பையன் said...

ரொம்ப நன்றி டாக்டர்!

கிருஷ்ணமூர்த்தி said...

நல்ல தகவல்கள். அப்படியே, அனானியாக வந்து ஒண்ணு ரெண்டு மூணு நாலுன்னு 49 வரை இருக்கற பின்னூட்டத்தை டெலிட் பண்ணிடுங்க. அதுல ஒண்ணொண்ணும் ஒரு ஹைபர்லிங்க் எங்கேயோ ஹைஜாக் பண்ணும் விதத்தில் இருக்கிறது. கர்சரை நம்பர் மேல் வைத்துப் பார்த்தாலேயே தெரியும்!

சக்கரையை விட இது ஹை ரிஸ்க்!

Anonymous said...

பதிவிட்டு பாராட்ட படவேண்டியவர் நீங்கள்....பொது சேவை மாதிரி பயன் தரும் பதிவுகளே....ஒரே மாதிரி பாராட்டி அலுத்துப் போச்சுங்க உங்கள் பதிவுகளும் அதை பதிவிடும் நீங்களும் வாழ்க பல்லாண்டுகள் சார்..

இய‌ற்கை said...

பதிவு மிகவும் பயனுள்ளது

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory