Saturday 1 August 2009

கொஞ்சம் தேநீர்-பாசமும்..

பழைய ஓலை வீட்டின் முன்

போட்ட நாற்காலியில்

கருப்பு வெள்ளையில்

புன்னைகையுடன் என் அபிச்சி!

மகன் படமெடுக்கிறானாம்!!

 

”ஒரு படம் தான் இருக்கு”

என்று

படமாகப் பிடிக்கப்பட

அபிச்சி

பத்திரமாய் பெட்டிக்குள்!

 

ஐம்பதுக்கும் நூறுக்கும்

குறிபார்க்கும் அவனுக்குத்

தெரியுமா?

என் அப்பிச்சியின் பெருமை!!

 

”செத்தவர் படம்

மாட்டினால் ஆகாது”

சொல்லிவிட்டுச்

சென்று விட்டான்.

 

பத்திரமாய்ப் பெட்டியில்

பூட்டிவிட்டார்,

உயிராசையில்

பாசத்தை மறந்த

என் அப்பா!

30 comments:

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:(

*இயற்கை ராஜி* said...

arumai..:-((

☀நான் ஆதவன்☀ said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உயிராசையில் பாசத்தை மறந்த என் அப்பா!//

:((

ப்ரியமுடன் வசந்த் said...

//பத்திரமாய்ப் பெட்டியில்

பூட்டிவிட்டார்,

உயிராசையில்

பாசத்தை மறந்த

என் அப்பா!//

பாசமில்லாத மகனாக....

சூப்பர் சார்

தேவன் மாயம் said...

பித்தன் இயற்கை நன்றி!!

தேவன் மாயம் said...

☀நான் ஆதவன்☀ said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு.//

கவிதை மிக எளிமைதானே!!

தேவன் மாயம் said...

Blogger T.V.Radhakrishnan said...

//உயிராசையில் பாசத்தை மறந்த என் அப்பா!//

:((///

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

பிரியமுடன்.........வசந்த் said...

//பத்திரமாய்ப் பெட்டியில்

பூட்டிவிட்டார்,

உயிராசையில்

பாசத்தை மறந்த

என் அப்பா!//

பாசமில்லாத மகனாக....

சூப்பர் சார்//

வசந்த்!! சரியாகப் புரிந்து கொண்டீர்கள்!! நன்றி!!

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க..

அப்துல்மாலிக் said...

இந்த பாழாய்போன உயிரின்(உலகத்தின்) மீது பயம் மொத்த பாசத்தையும் மறக்கடிக்செய்தது, அருமை தேவா சார்

தேவன் மாயம் said...

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க..//

நன்றி சென்ஷி!!

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...

இந்த பாழாய்போன உயிரின்(உலகத்தின்) மீது பயம் மொத்த பாசத்தையும் மறக்கடிக்செய்தது, அருமை தேவா சார்///

வாங்க அபு!!

வழிப்போக்கன் said...

ரசிக்கும் படியாக இருந்தது...

Vidhoosh said...

தாத்தாக்களே அற்புதமான ஜீவன்கள் - அது பேரனோ பேத்தியோ. ஏனோ அதே உணர்வு அப்பா-மகன்/மகள் உறவில் தெரிவதில்லை. அதே அப்பா, தாத்தாவாகும் போதும் இப்படியே ஒரு மறுசுழற்சி.. காலச்சக்கரம். நல்ல கவனிப்பு, நல்ல கவிதை.

--வித்யா

நேசமித்ரன் said...

நல்லாயிருக்கு கவிதை

ஷங்கி said...

நல்லாருக்குங்க தேவன் மாயம்.

ஹேமா said...

தேவா,யாரோ எவனோ என்ன சொன்னால்தான் எங்களுக்கு என்ன.
அப்பா பாசம் எங்களுத்தானே
தெரியும்.

ஆ.ஞானசேகரன் said...

///”செத்தவர் படம்

மாட்டினால் ஆகாது”

சொல்லிவிட்டுச்

சென்று விட்டான்.



பத்திரமாய்ப் பெட்டியில்

பூட்டிவிட்டார்,

உயிராசையில்

பாசத்தை மறந்த

என் அப்பா!///


சாதகத்தின் பலன் சொல்லிக்கொடுத்த அப்பா மகனுக்கு பாசத்தை சொல்லாமல் சென்றுவிட்டாரோ!

சிங்கக்குட்டி said...

//உயிராசையில் பாசத்தை மறந்த என் அப்பா! // என்னுள் எங்கோ வலிக்கிறது நண்பா.

நட்புடன் ஜமால் said...

பாசமான பேரன் ...

முனைவர் இரா.குணசீலன் said...

வலியுணர்த்திச் சிந்திக்கத்தூண்டும் கவிதை.....

அத்திரி said...

நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

பாசத்தை மறந்த அப்பாவுக்கு மட்டுமல்ல மூட நம்பிக்கைக்கும் ஒரு சவுக்கடி.

அன்புடன் அருணா said...

அட!!! பூங்கொத்து!

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

vasu balaji said...

அருமை.

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

குறியை குறி பார்த்து தாக்கியிருக்கிறீர்கள். அருமையான கருத்தும் கவிதையும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory