Wednesday 5 August 2009

டயட் கோக், டயட் பெப்ஸி -ஆபத்தானவை?

வலை நண்பர்களே!!

நாம் விரும்பி அருந்தும் பானங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக அவசியம். பெரும்பாலும் கோக்,பெப்ஸி உடலுக்கு தீமை விளைவிக்கும் என்று பொதுவாகத்தான் தெரியும்.

ஆனால் அதில் என்னென்ன ஆபத்தான பொருட்கள் உள்ளன? என்று பெரும்பாலும் நமக்குத்தெரியாது.

இப்போது டயட் கோக், டயட் பெப்ஸி என்று கலோரி இல்லாத பானம் என்று விற்பனை செய்கிறார்கள். இவற்றில் இனிப்புக்கு சர்க்கரை சேர்ப்பதில்லை.

ஆதலால் இதைக் குடித்தால் உடலில் சர்க்கரை அளவு கூடாது, நல்லதுதான், ஆனால் சர்க்கரைக்குப் பதில் ASPARTAME  அஸ்பார்ட்டேம் என்ற செயற்கை இனிப்பூட்டும் பொருளைச் சேர்க்கிறார்கள்.

இந்த அஸ்பார்ட்டேம் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். அஸ்பார்ட்டேம் மூன்று பொருட்களால் ஆனது.1. அஸ்பார்டிக் அமிலம்,பினைல் அலனின், மெதனால்.

1.அஸ்பார்ட்டேம் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் உகந்ததல்ல!

2.டயட் பானங்களும், சூயிங் கம் களிலும் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

3.அஸ்பார்ட்டேம் பிறவிக்கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

4.குழந்தைகளுக்கு இனிப்பு நோய், வலிப்பு, வன்முறை எண்ணங்கள், புத்திக் குறைவு, மூளைக்கட்டிகள் போன்றவற்றை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

1981 ம் ஆண்டு அஸ்பார்ட்டேம் உணவுப் பொருட்களில் உபயோகப்படுத்தலாம் என்று அமெரிக்க உணவுக்கழகம் அறிவித்தது. ஆயினும் மரபணு நோயான ”பினைல் கீடனூரியா” உள்ளோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இது உகந்ததல்ல என்று குறிப்பிடக்கோரியுள்ளது.

A S C H  அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் என்ன கூறுகிறது என்றால்: உலகில் அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்ட பொருள் அஸ்பார்ட்டேம்( நல்ல பொருள் என்றால் இவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லையே!!!). இது மனிதருக்கு உகந்ததுதான். சிறு அளவு பினைல் கீடனூரியாப் பிரச்சினை உள்ளது உண்மைதான் என்று கூறுகிறது.

2005ல் ரமாஸ்ஸினி புற்றுநோய்க் கழகம் 1800 எலிகளில் மூண்ரு வருடம் தொடர் ஆராய்ச்சிக்குப்பின் லிம்போமா, லுகெமியா போன்ற வியாதிகள் வரும் வாய்ப்பிருப்பதைக் கண்டுபிடித்தது.

பார்மால்டிஹைட் என்ற இன்னொரு உப பொருள் அஸ்பார்ட்டேமால் உடலில் உண்டாகிறது. 14.5.2009 அன்று தேசிய புற்றுநோய்க் கழகத்தின் Laura E. Beane Freeman, Ph.D. லாரா என்ற ஆராய்ச்சியாளர் பார்மால்டிஹைடால் 37% புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம் என்று குறிப்பிடுகிறார். ஃபார்மால்டிஹைட் ஏன் புற்றுநோய் உண்டாக்குகிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. (http://dorway.com/dorwblog/?p=1943#more-1943).

டாக்டர்.ரஸ்ஸல், மிசிசிபி நரம்பியல் நிபுணர்-அஸ்பார்ட்டிக் அமிலம் தீவிரமான நரம்பியல் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என்கிறார்இந்தப்பக்கத்தில் படிக்கலாம்..இவற்றை உண்பதால் கீழ்க்கண்ட நோய்கள் வருகின்றன என்று கூறுகிறார்.

  • Multiple sclerosis (MS)
  • ALS
  • Memory loss
  • Hormonal problems
  • Hearing loss
  • Epilepsy
  • Alzheimer's disease
  • Parkinson's disease
  • Hypoglycemia
  • Dementia
  • Brain lesions
  • Neuroendocrine disorders

அஸ்பார்ட்டேம் அதிகரித்தால் வரும் நோய்கள்:

1.பிறவிக்குறைபாடுகள்-சாதாரண மூளை குறைபாடுகளிலிருந்து மூளைவளர்ச்சிக்குறைவுவரை..

2.மூளை புற்றுநோய்-1981ல் FDA புள்ளிவிபரம் அஸ்பார்ட்டேமால் மூளைப் புற்றுநோய் வருவது கவலை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறது.

3.நீரிழிவு நோய்- நோய்க்கட்டுப்பாடு குறைகிறது. கண் பார்வை இழத்தலை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டாக்குகிறது.

4.மன நிலை மாற்றங்கள்-அஸ்பார்ட்டேம் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, மாறும் மனநிலை ஆகியவை அஸ்பார்ட்டேம் உபயோகித்ததை நிறுத்தினால் குறைகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

5.வலிப்புநோய்-அஸ்பார்ட்டேம் வலிப்புநோயையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தோம். இதனை உட்கொண்ட விமான ஓட்டிகளுக்கு தலைவலி, வலிப்பு வந்ததாகவும் தெரிகிறது.

அஸ்பார்ட்டேம் வியாதி: இது அச்பார்ட்டேமால் ஏற்படும் நோய்க்குறிகளின் தொகுப்பாகும். தலைவலி, காதில் வித்தியாசமான சப்தங்கள் வருதல், பேச்சுக்குளறுதல், ஆகியவை இதில் அடங்கும்.

30 வருடங்களாக அஸ்பார்ட்டேம் ஒரு தீய பொருள் என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிட்டும், பலர் இதனால் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயிருந்தாலும் உலகின் பல சுகாதார அமைப்புக்கள் இதனைத் தடைசெய்யவில்லை.

ஆராய்ச்சியாளர் ரஸ்ஸல் (Russell Blaylock, M.D.) அஸ்பார்ட்டேம் உள்ள பானங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விஷபானங்கள் என்று குறிப்பிடுகிறார்.

மருத்துவ உலகைத் தொடர்ந்து கவனித்தால் மேற்கு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நல்ல மருந்துகள் அவர்களாலேயே தடை செய்யப்படுவதும், அதற்குப்பதில் வேறு புது மருந்துகள் வருவதும், அதற்கு ஆதாரமாக ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிடுவதும் சகஜமான ஒன்று.

இதில் உள்ள அரசியலுக்குள் நாம் போவதை விட நம்மைச் சேர்ந்தவர்களை காத்துக்கொள்வது தலையாய கடமையாகும். மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இந்தக்கட்டுரையையும் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் செலவு செய்து இதை நான் எழுதியுள்ளேன்.

நீங்களும் மேலும் படியுங்கள். எனக்குத் தெரியாததையும் சொல்லுங்கள். நாம் விழிப்புணர்வு பெறுவது அவசியம். நல்ல அடுத்த தலைமுறை மக்களை உருவாக்க நாம் செய்யும் கடைமையும் இதுவே!!  

42 comments:

சென்ஷி said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை டாக்டர்.

//மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.//

சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்!

தங்களின் விரிவான பகிர்வு மற்றும் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Aspartame is nothing but SUGAR FREE. It is used as sugar substitute, not just in diet drinks. Not safe for children & pregnant women, but others can take it.

தேவன் மாயம் said...

சென்ஷி said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் இடுகை டாக்டர்.

//மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.//

சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்!

தங்களின் விரிவான பகிர்வு மற்றும் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.
///
வாங்க நண்பரே!!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Iyappan Krishnan said...

இப்படியே சொல்லிட்டு இருந்தா எதைத்தான் சாபிடறது ?

( நான் செயற்கை பானங்கள் குடிப்பது இல்லை. :) )

நல்ல பதிவு. ஆனா ஏன் அரசாங்கம் இதை தடுக்க மறுக்கிறது ?

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் பதிவு தேவா!


குழந்தைகள் மட்டும் தானா

அல்லது நாமளுமா

நாம குடித்தால் என்ன வித சைட் எஃப்க்ட்ஸ் வரும்

---------------

இதெல்லாம் நான் குடிப்பதில்லை, தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.

---------------


மிக்க நன்றி.

தேவன் மாயம் said...

Anonymous Anonymous said...

Aspartame is nothing but SUGAR FREE. It is used as sugar substitute, not just in diet drinks. Not safe for children & pregnant women, but others can take it.///

Get the children away from it

Azhagi said...

Thanks for your message and we should convey this message to everybody.

தேவன் மாயம் said...

Anonymous Azhagi said...

Thanks for your message and we should convey this message to everybody.///

you can get lot of articles throughout the web!!

தேவன் மாயம் said...

Blogger Jeeves said...

இப்படியே சொல்லிட்டு இருந்தா எதைத்தான் சாபிடறது ?

( நான் செயற்கை பானங்கள் குடிப்பது இல்லை. :) )

நல்ல பதிவு. ஆனா ஏன் அரசாங்கம் இதை தடுக்க மறுக்கிறது ?///

குழந்தைகளை இதற்கு பழக்கப்படுத்த வேண்டாம்.

cheena (சீனா) said...

பல அரிய தகவல்களைத் தேடிப்பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி - ஆனால் பயமுறுத்தும் அளவுக்கு நமது நாட்டில் இவைகளை அருந்திக்கொண்டே இருக்கும் நமக்கு ஒன்றும் நேர்ந்ததாகத் தெரியவில்லையே

இருப்பினும் எச்சரிக்கையாக இருப்போம்

நன்றி நண்பா

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல் பதிவு தேவா!


குழந்தைகள் மட்டும் தானா

அல்லது நாமளுமா

நாம குடித்தால் என்ன வித சைட் எஃப்க்ட்ஸ் வரும்

---------------

இதெல்லாம் நான் குடிப்பதில்லை, தெரிந்து கொள்ளலாம் என்று தான் கேட்டேன்.

---------------


மிக்க நன்றி.
///
எல்லோருக்கும்தான்......

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...

பல அரிய தகவல்களைத் தேடிப்பிடித்து பகிர்ந்தமைக்கு நன்றி - ஆனால் பயமுறுத்தும் அளவுக்கு நமது நாட்டில் இவைகளை அருந்திக்கொண்டே இருக்கும் நமக்கு ஒன்றும் நேர்ந்ததாகத் தெரியவில்லையே

இருப்பினும் எச்சரிக்கையாக இருப்போம்

நன்றி நண்பா/

இப்போதே நிறையக் குழந்தைகள் பெப்ஸி குடிப்பதை நிறையக் காண்கிறேன்!!

ப்ரியமுடன் வசந்த் said...

தேவாசார் பதிவுலகத்துக்கு நீங்க ஒரு வரம் சார்.......

தேவன் மாயம் said...

பிரியமுடன்.........வசந்த் said...

தேவாசார் பதிவுலகத்துக்கு நீங்க ஒரு வரம் சார்.......
//

நன்றி வசந்த்............ தேவா.

பதி said...

இந்த இடுகைக்கு நன்றி....

நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளேன்....

Muniappan Pakkangal said...

Nice Dr,how abt soft drinks causing renal failure ?

முனைவர் இரா.குணசீலன் said...

3.அஸ்பார்ட்டேம் பிறவிக்கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது./

இன்று தான் அறிந்து கொண்டேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

விழிப்புணர்வு ஏற்படுத்திய கட்டுரை.......

சொல்லரசன் said...

//மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை//

சரியாக சொன்னீர்கள்,அவசியமான அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு டாக்டர்.

தேவன் மாயம் said...

Blogger பதி said...

இந்த இடுகைக்கு நன்றி....

நண்பர்கள் சிலருக்கு அனுப்பியுள்ளேன்..///

நன்றி பதி!!! இதுவே இந்தக் கட்டுரைக்குக் கிடைத்த சன்மானம்!

தேவன் மாயம் said...

Muniappan Pakkangal said...

Nice Dr,how abt soft drinks causing renal failure ?///

பிறிதொரு நேரம் எழுதுவோம் சார்!!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...

3.அஸ்பார்ட்டேம் பிறவிக்கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது./

இன்று தான் அறிந்து கொண்டேன்.///

வாங்க தோழர்!!!

தேவன் மாயம் said...

Blogger சொல்லரசன் said...

//மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை//

சரியாக சொன்னீர்கள்,அவசியமான அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு டாக்டர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லரசன்!!

S.A. நவாஸுதீன் said...

நான் பெப்சி / கோக் சாப்பிடறத நிறுத்தி பல மாதங்கள் ஆச்சு. தேவா சார், நல்ல பதிவுகள், உபயோகமான பதிவுகள் தொடர்ந்து தருவதற்கு ரொம்ப நன்றி.

S.A. நவாஸுதீன் said...

//அஸ்பார்ட்டேம் பிறவிக் கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக் குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.//

யம்மாடியோவ். அப்போ யாருமே குடிக்காதீங்கப்பா

வால்பையன் said...

இளநீர் மட்டுமே குடிக்க உகந்தது!

SUFFIX said...

நன்றிகள் நண்பரே!! நல்ல தகவல்கள் கொடுத்து இருக்கின்றீர்கள், நாங்கள் இருக்கும் பகுதிகளில் (Saudi Arabia)இந்த பெப்சி, கோலா, மோகம் மிக மிக அதிகம். இதனுடைய கேடுகளை அறிந்து கடந்த ஒரு வருடமாக எங்கள் வீட்டில் அனைவரும் இந்த பானங்களை தவிர்த்து விட்டோம்.

வழிப்போக்கன் said...

ரொம்ப பயனுள்ள தகவல்...
இனி எல்லாத்தயும் குறைக்கிறேன்..
நன்றி..

அத்திரி said...

டயட் மேட்டருல இவ்ளோ இருக்கா?

உஷாரத்தான் இருக்கனும்

பீர் | Peer said...

நல்ல இடுகை டாக்டர்,

(படத்து நடுவுல இருக்கிற ஏழு அப்பு ஃபிரீன்னா எனக்கும் ரெண்டு கேஸ் அனுப்பி வைங்க... )

Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள தகவல்கள். மிகவும் சிறப்பான கட்டுரை இது. விழிப்புணர்வு பெறுவோம். சங்கடங்கள் தவிர்ப்போம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தகவல்

அப்துல்மாலிக் said...

//ஆதலால் இதைக் குடித்தால் உடலில் சர்க்கரை அளவு கூடாது, நல்லதுதான், ஆனால் சர்க்கரைக்குப் பதில் ASPARTAME அஸ்பார்ட்டேம் என்ற செயற்கை இனிப்பூட்டும் பொருளைச் சேர்க்கிறார்கள்//

இதற்கான விடையைதான் நீண்டநாட்களாக தேடிக்கிட்டிருந்தேன்.. டயட் சாதாரணத்தைவிட இனிப்பாக இருக்கும், டேஸ்ட் பண்ணிருக்கேன்.

இதுலே இவ்வளவு விசயம் இருக்கா

அழகான பகிர்வு தேவாசார்.. நிச்சயம் தவிர்க்க முயற்சிக்கனும்

இரண்டுநாள் கஷடப்பட்டிருக்கீங்க அதற்கு எங்கள் நன்றிகள்

Anonymous said...

கொலைக்கார பாதகர்கள் பணத்துக்காக எதையும் செய்யும் எத்தர்கள்.. நன்றி சார் எச்சரிக்கை பதிவுக்கு....பலருக்கு பகிரவும் உதவும்....

Azhagan said...

A very much needed article. Thank you. You could have elaborated on Aspartame as a sugar substitute together with other substitutes like sucralose, etc. There is evidence to show that all the sugar substitutes have lot of side effects like carcinogenicity, but still FDA is not taking any action about it. It is all a corporate game where the common public are just innocent victims.
People think it is better to take so called "sugar free" food items/drinks thinking they are avoiding calories. The fact is they are inviting trouble by doing so. In my opinion, minimize the sugar intake and if at all you take some sweet, do enough exercise to burn it away. Don't get trapped by "SUGAR FREE".

Unknown said...

super!!!!

ஆ.ஞானசேகரன் said...

அய்யோ இத்தனை வியாதிகள் வருமா? என்ன செய்யலாம் பேசாம தவிற்துவிடலாமா டாக்டர்?

GEETHA ACHAL said...

மிகவும் பயனுள்ள தகவல்.

அன்புடன்,கீதா ஆச்சல்
http://geethaachalrecipe.blogspot.com/

kumar said...

இப்படியே சொல்லிட்டு இருந்தா எதைத்தான் சாபிடறது ?

( நான் செயற்கை பானங்கள் குடிப்பது இல்லை. :) )

நல்ல பதிவு. ஆனா ஏன் அரசாங்கம் இதை தடுக்க மறுக்கிறது ?///

05 August 2009 01:04

இளநீர் இருக்கு கம்பங்கூழ் இருக்கு ராகிகூழ் இருக்கு மோர் இருக்கு கோலி சோடா இருக்கு இதை விட வேற என்ன வேனும்??


நான் செயற்கை பானங்கள் குடிப்பது இல்லை

ந‌ல்வ‌ர‌வு

Unknown said...

என்ன இது,

அப்ப எதுவும் சாப்பிட கூடாது போல இருக்கு :(

மங்களூர் சிவா said...

:(((((((
நல்ல பதிவு. நன்றி.

prabhadamu said...

நன்றி தேவன் மாயம் நல்ல பதிவு.


இதனை என் தளத்தில் இடு உள்ளேன்.


http://azhkadalkalangiyam.blogspot.com/2010/09/blog-post_1982.html

உங்கள் தள்த்தில் இருந்து நல்ல தகவல்களை என் தளத்தில் இட உங்கள் அனுமதி எதிர்ப்பார்க்கிறேன்.


விருப்பம் இருந்தால் என் தளத்தில் வந்து பதில் அளிக்க முடியுமா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory