Saturday, 29 August 2009

கொஞ்சம் தேநீர்-மரணத்தைத் தூக்கிலிட்டேன்!

image

அன்று மரணம்

வந்திருந்தது!

யாருமற்ற மாலையில்

என் புலன்களின்

முடிச்சுகளை

மெதுவாக அவிழ்த்து

பரவிப் படர்ந்தது!

 

இருளைப் போர்த்தி

இருந்த அதன்

நிர்வாணம் கிளர்ச்சியூட்டுவதாக

இருந்தது!

 

களவின் சுவையைக்

காற்றில் பரப்பி

உடலெங்கும் வியாபித்த

அதன் வெம்மையின் பிடி

இறுகத்தொடங்கியது.

 

துணையற்ற இரவில்

கிளைத்த என்

உணர்வுகளின் வேகம்

பரவிப்படர்ந்தது

மெதுவாக

மரணத்தை நோக்கி!

 

ஒரு கணத்தின் முடிவில்

சிதறிக்கிடந்த

என் புலன்களைச்

சேகரித்து

உருவம் திரும்பினேன்.

 

மீதமிருந்த என்

உயிர் திரட்டி

தூக்கிலிட்டேன் மரணத்தை!

---------------------------------------------------

படமும் படைப்பும்,

தமிழ்த்துளி தேவா.

----------------------------------------------------

41 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாயிருக்குசார்

கவிதையிலும் கலக்குறீங்க......

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...

நல்லாயிருக்குசார்

கவிதையிலும் கலக்குறீங்க.....//

வருகைக்கு நன்றி வசந்த்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//படமும் படைப்பும்,//

அசத்தல்

பழமைபேசி said...

கவிதை அபாரம்....

ஆனா நீங்க, தமிழ்த்துளி Terror தேவா! இஃகிஃகி!!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//படமும் படைப்பும்,//

அசத்தல்///

நன்றி சுரேஷ்!!

ஆ.ஞானசேகரன் said...

//மீதமிருந்த என்

உயிர் திரட்டி

தூக்கிலிட்டேன் மரணத்தை!

---------------------------------------------------

படமும் படைப்பும்,

தமிழ்த்துளி தேவா.//

படமும் படைப்பும் மிக அருமை..
பயம் பற்றிய அச்சம் நல்ல வெளிப்பாடாக சொல்லியிருக்கீங்க அருமை

தேவன் மாயம் said...

பழமைபேசி said...

கவிதை அபாரம்....

ஆனா நீங்க, தமிழ்த்துளி Terror தேவா! இஃகிஃகி!!///

நன்றி !! உங்கள் தமிழும் அழகுதானே!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ம்ம்ம்!

நன்று!

கவிதையிலும் கலக்குறீங்க....!

Kavinaya said...

//மீதமிருந்த என்
உயிர் திரட்டி
தூக்கிலிட்டேன் மரணத்தை!//

ரசித்தேன்!

பாலா said...
This comment has been removed by the author.
பாலா said...

தற்கொலைக்கும் எண்ணம் சில தனிமை இரவுகளில் மகிழ்ச்சியிலோ ,வருத்தத்திலோ மேலோங்குவதை
தவிர்க்க இயலாததாய் ஆகிறது .

அருமை சார் ரசித்தேன்

தேவன் மாயம் said...

கவிநயா said...
//மீதமிருந்த என்
உயிர் திரட்டி
தூக்கிலிட்டேன் மரணத்தை!//

ரசித்தேன்!

29 August 2009 20:15 //

கவிநயா, உங்கள் ரசனை என்னை உற்சாகப்படுத்துகிறது.....

தேவன் மாயம் said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ம்ம்ம்!

நன்று!

கவிதையிலும் கலக்குறீங்க....///

ஏதோ சும்மாங்க!

தேவன் மாயம் said...

பாலா said...
தற்கொலைக்கும் எண்ணம் சில தனிமை இரவுகளில் மகிழ்ச்சியிலோ ,வருத்தத்திலோ மேலோங்குவதை
தவிர்க்க இயலாததாய் ஆகிறது .

அருமை சார் ரசித்தேன்//

பல கருத்துக்களைக் கவிதை தூண்டுவது சந்தோசமாக இருக்கிறது...

நட்புடன் ஜமால் said...

கவிதை வழமை போல நலம்

படம்

புது முயற்சி - அழகு

அன்புடன் அருணா said...

நல்லாயிருக்குங்க!

Anonymous said...

மரணத்தை தூக்கிலிட்ட மாவீரனா மருத்துவரா?

கவிதையை தேனீராக சுவைத்து படித்தேன்.... நற்சுவை உடலெங்கும் வியாபிக்க புத்துணர்ச்சியோடு இதோ புறப்படுகிறேன்....

மாதவராஜ் said...

கவிதை நன்றாக வந்திருக்கு.
//ஒரு கணத்தின் முடிவில்

சிதறிக்கிடந்த

என் புலன்களைச்

சேகரித்து

உருவம் திரும்பினேன்.//
ரசித்தேன்.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
கவிதை வழமை போல நலம்

படம்

புது முயற்சி - அழகு

29 August 2009 21:31 ///

நன்றி கவிஞர் ஜமால்...

தேவன் மாயம் said...

அன்புடன் அருணா said...
நல்லாயிருக்குங்க///

குறையேதுமில்லையே...

தேவன் மாயம் said...

தமிழரசி said...
மரணத்தை தூக்கிலிட்ட மாவீரனா மருத்துவரா?

கவிதையை தேனீராக சுவைத்து படித்தேன்.... நற்சுவை உடலெங்கும் வியாபிக்க புத்துணர்ச்சியோடு இதோ புறப்படுகிறேன்.///

கவிதை மழை பொழியட்டும்.........

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
nice//

நன்றி .. சிவா..

தேவன் மாயம் said...

கவிதை நன்றாக வந்திருக்கு.
//ஒரு கணத்தின் முடிவில்

சிதறிக்கிடந்த

என் புலன்களைச்

சேகரித்து

உருவம் திரும்பினேன்.//
ரசித்தேன்.

29 August 2009 21:54//

நன்றிங்க ராஜ்//////

வெற்றி-[க்]-கதிரவன் said...

கவிதை எழுதுறப்ப எழுத்துக்களை சாய்வா போடுங்க... -:)

கவிதை சூப்பர்

தேவன் மாயம் said...

[பி]-[த்]-[த]-[ன்] said...
கவிதை எழுதுறப்ப எழுத்துக்களை சாய்வா போடுங்க... -:)

கவிதை சூப்பர்!!

அப்படியா!!

ஹேமா said...

தேவா,தேநீர் வித்தியாசமான சுவையோடு இயல்பாய் அழகான வசன நடையோடு அருமையாய் இருக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

ஒரு கணத்தின் முடிவில் சிதறிக்கிடந்த என் புலன்களைச் சேகரித்து உருவம் திரும்பினேன். மீதமிருந்த என் உயிர் திரட்டி தூக்கிலிட்டேன் மரணத்தை!

அருமை தேவா சார்

Ashok D said...

யாருப்பா அது.. கவித எல்லாம் எழுதி கலக்கறது..

முத ரெண்டு பத்தி வேறு அர்த்தமும் கொடுக்கறது தேவன் :)

அ.மு.செய்யது said...

க‌விதை அழ‌கா ..இல்லை அந்த‌ ஓவிய‌ம் அழ‌கா என்று என்னால் பிரித்துண‌ர‌ முடிய‌வில்லை.

ரெண்டுமே தேவா வின் கைவ‌ண்ண‌த்தில்....உங்க‌ளுக்குள் இருக்கும் ஓவிய‌னை வெளிக்காட்டிய‌த‌ற்கு ந‌ன்றி !!

SUFFIX said...

கவிதையும், ஓவியமும் சேர்ந்து ஒரு காவியம். நல்லா இருக்குங்க டாக்டர்.

SUFFIX said...
This comment has been removed by the author.
பழூர் கார்த்தி said...

நன்று..

sakthi said...

மீதமிருந்த என் உயிர் திரட்டி தூக்கிலிட்டேன் மரணத்தை

வாவ் அருமை தேவா சார்

Unknown said...

நல்லாயிருக்குங்க.

ஷங்கி said...

அமுக்குவான் வரும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு உணர்வு வருவதை இதைப் படித்தவுடன் உணர முடிகிறது.
நல்லாருக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க தேவன்.உள்ளுக்குள்ளயே புரண்டுகொண்டிருக்கும் வெகு நாளுக்கு-வரிகள்.

குடந்தை அன்புமணி said...

//படமும் படைப்பும், தமிழ்த்துளி தேவா.//

கலகலா வல்லவர்னு மீண்டும் நிரூபிக்கிறீங்க... கலக்குங்க தேவா சார்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

படமும் படைப்பும்,அருமை.

வால்பையன் said...

//இருளைப் போர்த்தி
இருந்த அதன்
நிர்வாணம் கிளர்ச்சியூட்டுவதாக
இருந்தது!//

என்னமா யோசிக்கிறாங்கப்பா!

உமா said...

வாவ்... அருமை.

"உழவன்" "Uzhavan" said...

தன்னம்பிக்கை ஒளிரும் வார்த்தைகள் அருமை

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory