Tuesday, 11 August 2009

பன்றிக் காய்ச்சல்-2

நண்பர்களே! பன்றிக்காய்ச்சல் தற்போது முன்னைவிட தீவிரமாகப் பரவி வருகிறது.

 

இதிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? இதை வருமுன் தடுக்கமுடியுமா? போன்ற கேள்விகள் நிறைய எழுபியுள்ளன. முதல் பதிவில் உள்ளவற்றை நான் இங்கு எழுதவில்லை. மிகவும் சுருக்கமாகவே இப்பதிவை எழுதியுள்ளேன்.

பன்றிக்காய்ச்சல் முதல் பதிவை படிக்கவிரும்புவோர்
 
பன்றிக் காய்ச்சல்- காத்துக்கொள்ள-14 !! 

படிக்கவும்!!

முதல் பதிவின் பின்னூட்டத்தில் நம் நண்பர்கள் இது தொடர்பாக தொடர்ந்து செய்தி தரக்கோரி இருந்தனர் அவற்றுக்கான சில பதில்கள்:

Blogger 1.S.A. நவாஸுதீன் said...

ரொம்ப தேவையான பதிவு தேவா சார். ரொம்ப நன்றி. இதன் தொடர்ச்சியாக கிடைக்கும் அணைத்து தகவல்களையும் உங்கள் பதிவில் வெளியிட்டால் ரொம்ப நல்லது.///

நன்றி நண்பரே!! அதற்காகவே இச்சிறு பதிவு.

Blogger 2.மாசற்ற கொடி said...

Thanks Doctor. Pls. keep us updated if there is some other precation that we can take.
Anbudan
Masatra Kodi///

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!!1

Blogger 3.உமா said...

மிக அவசியமான பதிவு டாகடர். சென்னையில் இப்போது பரவிவருவதால் பயமாகத்தான் இருக்கிறது. இப்போது இங்கு climate change ஆகி வருவததால் சாதாரண throat infection அல்லது ஜுரம்வந்தால் எரித்திரோமிசின் குரோசின் போட்டுக்கொள்ளலாமா? அலலது எப்போதும் போல்டாக்டரரிடம் போவதே சரியா? [தானாக மருந்து சாப்பிடுதுதவறுதான். டாக்டரிடம்கூட்டமாகஇருப்பதால் பயமாகஉள்ளது.]///

நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. சரியாகவில்லையெனில் மருத்துவரிடம் செல்லலாம். கூட்டத்தில் இருப்பதைத்தவிர்ப்பதும் நல்லது.

Blogger 4.சுந்தர் said...

இதுக்கு தடுப்பு ஊசி இன்னும் வரலையா டாக்டர் ?///

மேலும் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!!

இது தொடர்பாக சில தகவல்களைப் பார்ப்போம். இவற்றைக் கேள்வி பதில் வடிவில் தந்துள்ளேன். மேலும் கேள்விகள் இருந்தால் கேட்கவும்.

1.இதிலிருந்து தப்ப தடுப்பூசி உள்ளதா?

தடுப்பூசி இல்லை.

2.யாருக்கு தடுப்பு முறைகள் அவசியம்?

அ.தற்போது நோய் கண்டவரின் குடும்பத்தினர்

ஆ.நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர்,பணியாளர்.

3.எப்போது நோய் பரவும்?

நோய் வருவதற்கு ஒரு நாள் முன்பிலிருந்து பாதித்த 7 நாட்கள்வரை பரவும்.

4.தடுப்பு மருந்து உள்ளதா?

நோயாளிகளுக்கு உபயோகிக்கும் டாமிஃப்ளூ TAMIFLU(oseltamivir) மருந்தே இதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

5.டாமிஃப்ளூ எவ்வாறு செயல்படுகிறது?

இது வைரஸின் பெருக்கத்தைத் தடுத்துவிடுகிறது. அதனால் வைரஸ் இனப்பெருக்கம் செய்யமுடியாது. உடலின் பல செல்களையும் பாதிக்க முடியாது.

6.டாமிஃப்ளூ எப்போது நன்கு செயல்படும்?

வைரஸ் உடலுக்குள் நுழைந்த 48 மணிநேரத்திற்குள் நன்கு செயல்படும். அதன் பின் உபயோகித்தால் வைரஸ் பல்கிப்பெருகி உடலின் பல செல்களைத்தாக்கி இருக்கும்.

7.மருந்தின் அளவு மற்றும் காலம் எவ்வளவு?

டாமிஃப்ளூ 75மிகி பத்து நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு உடல் எடையைப் பொறுத்து குறையும். 1 வயதுக்குக் கீழ் சாதாரணமாகக் கொடுப்பதில்லை. ஆயினும் நோயின் வீரியம் அதிகமானால் கொடுக்கப்படுகிறது.

8.டாமிஃப்ளூவின் பக்கவிளைவுகள் என்ன?

குமட்டல்,வாந்தி, பேதி,வயிற்றுவலி,தலைவலி, ஒவ்வாமை, மேலும் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்குள்ள அனைத்தும்.

இளைஞர்கள் மனநிலையில் விபரீதமான மாற்றங்களை விளைவிக்கலாம்.

9.இதுவரை டாமிஃப்ளூ எத்தனை பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது?

1999 லிருந்து 50 மில்லியன் மக்கள் உபயோகித்துள்ளனர்.

10.இந்தியாவில் மருந்து எங்கு கிடைக்கிறது?

அரசு மருத்துவமனைகளில்  கிடைக்கிறது. டாமிஃப்ளூ குறைந்த அளவே உள்ளது. 2 கோடி டாமி ஃப்ளூ மாத்திரைகளை கையிருப்பில் வைக்க அரசு முடிவு செய்துள்ளது.

---------------------------------------------------------------------------

அன்பு நண்பர்களே!!

நம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது!! யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்!!http://adiraijamal.blogspot.com/..

--------------------------------------------------------------------------

26 comments:

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி டாக்டர்.

துளசி இலைகளை தினமும் சாப்பிட்டால் சளி பிடிக்காது. அதனால் கட்டு படும் என்று ஒரு நேற்று மெயில் வந்தது. உண்மையா..? விளக்கவும்.

உமா said...

மிக்க நன்றி டக்டர்.

தேவன் மாயம் said...

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி டாக்டர்.

துளசி இலைகளை தினமும் சாப்பிட்டால் சளி பிடிக்காது. அதனால் கட்டு படும் என்று ஒரு நேற்று மெயில் வந்தது. உண்மையா..? விளக்கவும்.///

உண்மைதான் நண்பரே!!

தேவன் மாயம் said...

Blogger உமா said...

மிக்க நன்றி டக்டர்.//

வாங்க உமா!!

நட்புடன் ஜமால் said...

சரியான நேரத்தில் நல்ல பகிர்வு தேவா!

தொடரட்டும் தங்கள் பணி...

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு மருத்துவரே....
பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இப்பதிவு உள்ளது...
இன்னும் பல செய்திகள் வாயிலோக விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

S.A. நவாஸுதீன் said...

நன்றி தேவா சார். தெளிவான விளக்கம் தேவையான நேரத்தில்.

அன்பு நண்பர்களே!! நம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது!! யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்!!http://adiraijamal.blogspot.com/..

விஷயம் நண்பர்கள் ஏதாவது செய்யுங்களேன்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

சரியான நேரத்தில் நல்ல பகிர்வு தேவா!

தொடரட்டும் தங்கள் பணி...//

வாங்க ஜமால்!!

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு மருத்துவரே....
பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இப்பதிவு உள்ளது...
இன்னும் பல செய்திகள் வாயிலோக விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.//

மிக்க நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...

நன்றி தேவா சார். தெளிவான விளக்கம் தேவையான நேரத்தில்.

அன்பு நண்பர்களே!! நம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது!! யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்!!http://adiraijamal.blogspot.com/..

விஷயம் நண்பர்கள் ஏதாவது செய்யுங்களேன்!//
வாங்க நவாஸ்!!!
பிளாகரில் ஏன் அடிக்கடி இப்படி ஆகிறது?

அமுதா said...

நன்றி டாக்டர்

குழந்தைகளைத் தாக்கும் . Fatal -ஆகவும் மாறலாம் என்பதுதான் மிகுந்த கவலை அளிக்கிறது

கதிர் - ஈரோடு said...

பயனுள்ள தகவல்களைத் தருகிறீர்கள்
நன்றி நண்பரே

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி டாக்டர்

இரவுப்பறவை said...

மிகவும் பயனுள்ள பதிவு..
நன்றி மருத்துவர் அவர்களே

ராமலக்ஷ்மி said...

அவசியமான நேரத்தில் அனைவரின் சந்தேகங்களையும் உடன் தீர்த்து வைத்திருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

ஜமாலின் வலைப்பூவை மீட்டெடுக்க நண்பர்கள் உதவிடட்டும்.

அபுஅஃப்ஸர் said...

நல்ல பகிர்வு

மருந்து பற்றாக்குறை வந்துவிடுமோ என்றும் இதை பதுக்கு பிளாக் மார்கெட்லே விற்கவும் தயங்க மாட்டார்கள்.. அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜமாலின் பிளாக் ஹேக் செய்யப்பட்டது அதிர்ச்சி தரக்கூடிய விடயம்... ஒரு வேலை பிளாக்லேயும் ஸ்வின் ஃப்லூ தாக்கிருக்குமோ?????

வருந்தக்கூடிய விசயம், தெரிந்தவர்கள் பாதுகாக்கும் முறை பற்றி ஒரு பதிவிடலாம்

kumar said...

பயனுள்ள தகவல்களைத் சரியான நேரத்தில் தருகிறீர்கள் மிக்க நன்றி டக்டர்.

kumar said...

பயனுள்ள தகவல்களைத் சரியான நேரத்தில் தருகிறீர்கள் மிக்க நன்றி டக்டர்.

சுசி said...

பயுனுள்ள பதிவுக்கு மீண்டும் நன்றி டாக்டர்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிக்க நன்றி

Mrs.Menagasathia said...

மிக்க நன்றி மருத்துவரே!!

ராம் said...

தேவா அய்யா, இரண்டு பதிவுகளும் மிக்க அருமை!.

//அன்பு நண்பர்களே!! நம் நண்பர் ஜமாலின் வலைப்பூ திடீரென மறைந்து விட்டது!! யாருக்காவது கண்டு பிடிக்கும் வழி தெரிந்தால் சொல்லவும்!!http://adiraijamal.blogspot.com//

இந்த பிளக் அநேகமா அழிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது, இதன் பதிவுகளை இங்கே சொடுக்கவும்

Or Get Google support http://www.google.com/support/blogger/?hl=en

அ.மு.செய்யது said...

ஜமாலின் ப்ளாக் மாயம்..இப்போது தான் உங்கள் பக்கத்திலிருந்து அறிந்து கொள்கிறேன்.அதிர்ச்சி !!!

காலையில் என் வலையில் ஏற்பட்ட பிரச்சனை இப்போது தான் சரியானது.

என்ன‌மோ ந‌ட‌க்குது ?? ம‌ற்ற‌ ப‌திவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் ப‌திவுக‌ளை இப்போதே பேக் அப் எடுத்து வைத்து கொள்ளுத‌ல் ந‌ல‌ம்.

வால்பையன் said...

இதுவரை யாராவது குணமானதாக தகவல் வந்துள்ளதா டாக்டர்!

அல்லது படுக்கை தான் கடைசியா!?

Anonymous said...

அன்பு நண்பரே உங்களின்,பன்றி காய்ச்சல் பற்றிய விவரங்கள் மிகவும் அருமை.மேலும் அந்த வியாதிக்கு மாத்திரை கிடைக்க கூடிய
விவரம் http://oshowinsorpolivugal.blogspot.com/2009/08/blog-post.html

மங்களூர் சிவா said...

மிக்க நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory