Thursday, 13 August 2009

இழந்த காதலை மீட்க 10 யோசனைகள்!!

அன்பு நண்பர்களே!!

clip_image002

காதல்! காதல்!! காதல்!!! இந்த மூன்றெழுத்துச் சொல் படுத்தும் பாடு இருக்கிறதே!! அதனை நாம் எழுத்தில் வடித்துவிட முடியாது.

அப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.

பிரிவுக்கு என்ன காரணம் என்று நிறைய நேரங்களில் இருவருக்குமே புரியாது. சூழ்நிலைகள் அதுபோல் அமைந்து இருக்கும்.  ஆயினும் உங்கள் மனமோ இன்னும் அவரை விரும்புகிறது. என்ன செய்வது? காதலில் பிரிவு நிரந்தரம் இல்லை. மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில வழிகள் உள்ளன. அவற்றைக் கவனமாக பயன்படுத்தவும்..

1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும்.

வாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது.

2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி? நலமா? என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது.

3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ  வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை  ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும்.  அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.

4.எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன? பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” என்ற செய்தியை உங்கள் வாழ்த்தும் செய்கைகளும் அவ்ளை உங்கள் வசம் திருப்பும்.

5.உங்கள் எக்ஸ் உண்மையில் காதலில் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளவும். அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும்.

6.நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள். அடுத்த நபர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆத்திரமாகத்தான் இருக்கும். மனதை அடக்குக.. உங்கள் பொறாமை வெளியே தெரியக்கூடாது.. பொறாமைப்படாதீர்கள்.

7.உங்கள் எக்ஸ் லவர் நட்பு வட்டத்தில் எப்படிப் பழகுகிறார்கள் என்று விசாரிக்கவும்..” அவள் உன்மேல் குறையில்லைன்னு சொல்றாளாம் மாப்ஸ்”- ஓகே!! இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு!!!!

அலட்சியமாகவும், எதிர்மறைப்பேச்சாகவும் இருந்தால் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். இப்போது நடவடிக்கை எதுவும் வேண்டாம்.

8.உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி ஆறுதல் பெற வேண்டாம். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். கொஞ்சம் பொறுமையாகவும் இருங்கள்.

9.உங்கள் எக்ஸ் மேல் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி பிரிவின் காரணம் அவர்தான் என்று பழிபோட வேண்டாம். அது அவர்களை மிகவும் காயப்படுத்திவிடும். மீண்டும் சேர வாய்ப்புகள் குறைந்துவிடும்.

10.உடைந்து போய் விட வேண்டாம். ஏற்கெனவே ஒருவரைக் கவர்ந்து விட்டீர்கள். ஆகையால் நீங்கள்  காதலில் பாஸ்தான். பிரிவு இயல்பாக வருவது. ஆகையால் தளர வேண்டாம். விளையாட்டு , உடற்பயிற்சி என்று இன்னும் கவர்ச்சிகரமாக மாறுங்கள். உங்கள் எக்ஸின் பார்வை கட்டாயம் உங்கள்மேல் திரும்பும்.

இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட அவரவற்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் உபயோகித்து வெற்றியடையுங்கள்!

தமிழ்த்துளி தேவா.

52 comments:

அத்திரி said...

டாக்டருக்கு காதலில் ஏகப்பட்ட அனுபவம் போல.............

எல்லாமே நல்ல யோசனைதான்

பீர் | Peer said...

நன்றி, இப்ப தேவையில்லை...

சென்ஷி said...

:)

தேவன் மாயம் said...

அத்திரி said...

டாக்டருக்கு காதலில் ஏகப்பட்ட அனுபவம் போல.............

எல்லாமே நல்ல யோசனைதான்
/

வாங்க அத்திரி!!! எல்லம் கடைச்சரக்கு!!

jerry eshananda. said...

டாக்டர் ஒரு சந்தேகம், யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா காதலியோட வீட்டுக்காரர் கோவிட்சுகிட்டா என்ன டாக்டர் பன்றது

krishna said...

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க.........,,,,

தேவன் மாயம் said...

Blogger jerry eshananda. said...

டாக்டர் ஒரு சந்தேகம், யோசனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா காதலியோட வீட்டுக்காரர் கோவிட்சுகிட்டா என்ன டாக்டர் பன்றது//

இதெல்லாம் பப்ளிக்கா கேட்கப்படாது...................

தேவன் மாயம் said...

krishna said...

மாமோய் நீங்க எங்க இருக்கீங்க.........,,,,

///

மாப்பிள்ளை!! சவுக்கியமா?

கத்துக்குட்டி said...

:)

sakthi said...

அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.

hahahaha

என்னமா டிப்ஸ் தர்றீங்க

அருமை

தேவன் மாயம் said...

Blogger sakthi said...

அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.

hahahaha

என்னமா டிப்ஸ் தர்றீங்க

அருமை//

என்ன சொல்வது சரிதானே!!

நட்புடன் ஜமால் said...

தேவா!

நீங்க நல்லவரா

அல்லது

ரொம்ப நல்லவரா

சொல்லரசன் said...

இந்த பதிவு டக்ளஸ்க்குதானே டாக்டர் சார்.

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

தேவா!

நீங்க நல்லவரா

அல்லது

ரொம்ப நல்லவரா//

நீங்கதான் ஜட்ஜ் !!!

கிறுக்கன் said...

கள்ளகாதல்....?

தேவன் மாயம் said...

கிறுக்கன் said...
கள்ளகாதல்...///
ஏப்பா! நல்ல காதலப்பா!!

Vidhoosh said...

முக்கியமான ஒன்றை மறந்துட்டீங்களே...
அவங்க இந்த பதிவை படிக்காம பாத்துக்க வேண்டாமா??

--வித்யா

அ.மு.செய்யது said...

ந‌ல்ல‌ யோச‌னைக‌ள் தேவா.

ப்ராக்டிக்க‌லாக‌ சில‌ விரிச‌ல்க‌ளை ஃபெவிகால் போட்டாலும் திரும்ப‌ ஒட்ட‌ வைக்க‌ முடியாது.

வால்பையன் said...

தல இப்போ எனக்கு கல்யாணம் ஆகிருச்சு!
இருந்தாலும் பழைய லவ்வர்கிட்ட இந்த மேட்டர் வொர்க் அவுட் ஆகுமா!?

ஹிஹிஹிஹி

:)

வால்பையன் said...

//சொல்லரசன் said...
இந்த பதிவு டக்ளஸ்க்குதானே டாக்டர் சார்.//

நாட்டில் பல டக்ளஸ்கள் உண்டு!

லவ்டேல் மேடி said...

// 1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும். ///
அடங்கொன்னியா... !! ஏதோ பழைய ஈயம்..பித்தாளைக்கு பேருச்சம்பழம்கிற ரேஞ்சுக்கு பேசுறீங்க.......

லவ்டேல் மேடி said...

// வாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது. //


ம்ம்க்க்ம்ம்.... இதுல லிமிட்டு வேற.....

லவ்டேல் மேடி said...

/ 2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி? நலமா? என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது. //
ஆமா... அதிகமா ஈ ( மொயலு ) முச்சுத்துனா நாறீடும் ... ( யடத்த சொன்னேன்... )

லவ்டேல் மேடி said...

// 3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ //

அடங்கொன்னியா... ஏதோ கொலகாரனுக்கு வலைவீச்சு ன்னு செய்தியில சொல்ற மாதிரி இருக்கு....

லவ்டேல் மேடி said...

// எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே!! //

ஓஓஒ.... இதுல சாப்ட்ட கடல... சாப்புடாத கடலையினு ரெண்டு இருக்கா....?

லவ்டேல் மேடி said...

// அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். //


எங்கீங்கோ தலைவரே.... மண்டமேலையா....??

லவ்டேல் மேடி said...

// எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன? //
என்னது......................?? ஓஓஒ...... எக்ஸ்'ஆ.........???

லவ்டேல் மேடி said...

// ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” //
" குப்பற படுக்க வெச்சு நாலு முதி முதுச்சாலும் நீங்கதானுங்கோ யென்ற அம்முனி .... "

லவ்டேல் மேடி said...

// அவ்ளை உங்கள் வசம் திருப்பும். //


அப்போ அந்தம்முனி என்னோ .. கீ குடுக்குற பொம்மையா...?

லவ்டேல் மேடி said...

// பல வழிகளில் தெரிந்து கொள்ளவும். //
ஆமாங்கோ ... பல வழியில தெருஞ்சுக்கொங்கோ....
( வயா ) கொத்த்வாசாவுடி....

( வயா ) கும்முடிபூண்டி....

( வயா ) மெர்ஸலு குப்பம்...

( வயா ) டகுலு குப்பம்.....

லவ்டேல் மேடி said...

// நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும். //


ஆமாங்கோவ்..... !! நடவடிக்கைய மாத்துங்கோவ்....


அம்முனிய கண்டா... மூன்றாம் பிறை கமலு மாதிரி ரோட்டுல குட்டிகரணம் போடுங்கோ... , ரோட்டுல ஒரு பயல உடாம தொரத்தி ... தொரத்தி புடுச்சு கடுச்சு வெயிங்கோவ்....!!

லவ்டேல் மேடி said...

// நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள். //


சனி திசை முடுஞ்சுதுன்னு .... கொளத்துலையோ... ஆத்துலயோ.... ஒரு முழுக்கு போட்டு எந்திரிங்கோவ்...!!!

லவ்டேல் மேடி said...

// ஏற்றாற்போல் உபயோகித்து வெற்றியடையுங்கள்! //
இப்படிக்கு தமிழ்துளி நோட்ஸ்.... ஆசிரியர் தேவா ...

கிடைக்கும் இடம்..... சொல்லமுடியாது ....

மங்களூர் சிவா said...

/
வால்பையன் said...

தல இப்போ எனக்கு கல்யாணம் ஆகிருச்சு!
இருந்தாலும் பழைய லவ்வர்கிட்ட இந்த மேட்டர் வொர்க் அவுட் ஆகுமா!?

ஹிஹிஹிஹி

:)
/

ரிப்பீட்டு
:)

கலை - இராகலை said...

ரொம்ப லேட்டாகிட்டேனுங்கோ!!

நாணல் said...

nalla tips.. :)

Anbu said...

எனக்கு இப்போதைக்கு தேவையில்லை சார்..

டக்ளஸ்... said...

\\சொல்லரசன் said...
இந்த பதிவு டக்ளஸ்க்குதானே டாக்டர் சார்.\\
ஹலோ..
உங்களையெல்லாம் ஏன்யா பன்றிக்காய்ச்சல் தூக்கல.
:)

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

பிரியமுடன்.........வசந்த் said...

//1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும்.

வாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது.//

பேசுனத அவங்க வீட்டுக்காரர் பாத்துட்டா?

பிரியமுடன்.........வசந்த் said...

//2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி? நலமா? என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது.//

சைபர் க்ரைம்ல கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டா?

பிரியமுடன்.........வசந்த் said...

//3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.//

ஒண்ணு பர்ச பதம் பாத்தது பத்தாதா?

பிரியமுடன்.........வசந்த் said...

//4.எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன? பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” என்ற செய்தியை உங்கள் வாழ்த்தும் செய்கைகளும் அவ்ளை உங்கள் வசம் திருப்பும்.//

எந்தப்பக்கம் திருப்பும்?

ஊர்சுற்றி said...

/
வால்பையன் said...

தல இப்போ எனக்கு கல்யாணம் ஆகிருச்சு!
இருந்தாலும் பழைய லவ்வர்கிட்ட இந்த மேட்டர் வொர்க் அவுட் ஆகுமா!?

ஹிஹிஹிஹி

:)
/

ரிப்பீட்டு
:)

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு....

பிரியமுடன்.........வசந்த் said...

//5.உங்கள் எக்ஸ் உண்மையில் காதலில் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளவும். அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும்.//

ஏற்கனவே மாத்துனதுக்கு?

அபுஅஃப்ஸர் said...

நாமக்கு தேவையில்லாத மேட்டரு

அது எப்படி சர்ர் எல்லா மேட்டரிலும் கலக்குறீங்க‌

துபாய் ராஜா said...

பத்தும் முத்து.

தேவன் மாயம் said...

லவ்டேல் மேடியும்
வசந்தும்
பின்னி பெடலெடுக்குறாங்க!!!
வாயடைச்சுப்போச்சு!!!

தேவன் மாயம் said...

ஊர்சுற்றி said...

/
வால்பையன் said...

தல இப்போ எனக்கு கல்யாணம் ஆகிருச்சு!
இருந்தாலும் பழைய லவ்வர்கிட்ட இந்த மேட்டர் வொர்க் அவுட் ஆகுமா!?

ஹிஹிஹிஹி

:)
/

ரிப்பீட்டு
:)

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு....///

எல்லோரும் சேர்ந்துட்டீங்களா? மீ எஸ்கேப்!!!...................

S.A. நவாஸுதீன் said...

இதையெல்லாம் இப்போ ட்ரை பண்ணினால் வீட்ல அடி விழுமே தலைவா.

ஷ‌ஃபிக்ஸ் said...

மருத்துவர் அய்யாவிடம் காதலர்களுக்கும் மருந்து இருக்கா! நடத்துங்கய்யா நடத்துங்க!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory