Saturday, 8 August 2009

சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!

அன்பு நண்பர்களே!!!

எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல்  நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.

2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.

3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள்  வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.

4.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு  சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)

5.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.

6.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.

7.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.

8.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.

9.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.

10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.

      நிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

தமிழ்த்துளி தேவா.     

43 comments:

தமிழ் காதலன் said...

nice ideas.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

காதலிக்கும் பெண்ணின் (மனைவி அல்ல) கண்பார்வையில் இருந்தால் மதிப்பினைக் காப்பாற்றிக் கொள்ள சிகரெட் பிடிப்பது தள்ளிப் போடப் படும்.

எனவே செல்லும் இடமெல்லாம் காதலித்தல் சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும்

தேவன் மாயம் said...

Blogger தமிழ் காதலன் said...

nice ideas.///

உங்கள் வலை திருடப்பட்டதா?

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

காதலிக்கும் பெண்ணின் (மனைவி அல்ல) கண்பார்வையில் இருந்தால் மதிப்பினைக் காப்பாற்றிக் கொள்ள சிகரெட் பிடிப்பது தள்ளிப் போடப் படும்.

எனவே செல்லும் இடமெல்லாம் காதலித்தல் சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும்///

ஐயா!!
விபரீதமான ஐடியாவா இருக்கே!!!
ஏன் இந்த வெறி.

நட்புடன் ஜமால் said...

நல்ல விடயங்கள் பல சொல்லி குடுக்குறீங்க தேவா!


இங்கேயும் பாருங்கள்.

சென்ஷி said...

மிகவும் தேவையான வழிகள்.. :-(

மங்களூர் சிவா said...

/

எனவே செல்லும் இடமெல்லாம் காதலித்தல் சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும்
/

ஹா ஹா
:))

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.

S.A. நவாஸுதீன் said...

கடந்த ஒரு மாதத்தில் உருப்படியா ஒரு "பத்து" வந்திருக்குன்னா அது இதுதான். நல்ல பல யோசனைகளை கொடுத்தமைக்கு நன்றி தேவா சார். வெளிநாட்டில், தனிமையில் வேலை முடிந்ததும் தனி அறையில் அடைந்து கிடப்பவர்களுக்கு இந்த பழக்கம் இருந்தால், அவர்களுக்கு இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்றாலும் விடாது கருப்பாய் பிடித்து ஆட்டுகிறது.

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

நல்ல விடயங்கள் பல சொல்லி குடுக்குறீங்க தேவா!


இங்கேயும் பாருங்கள்.
///
நன்றி ஜமால்!! ஜீவன் பதிவு அருமை!!
-----------------------
08 August 2009 22:34
Delete
Blogger சென்ஷி said...

மிகவும் தேவையான வழிகள்.. :-(//
நன்றி சென்ஷி!!
--------------------------

08 August 2009 22:56
Delete

தேவன் மாயம் said...

Blogger மங்களூர் சிவா said...

/

எனவே செல்லும் இடமெல்லாம் காதலித்தல் சிகரெட் பிடிப்பதை நிறுத்த உதவும்
/

ஹா ஹா
:))///
நல்ல சிந்தனை!!!!!!!!!!!!!!!!!!!!?

08 August 2009 23:15
Delete
Blogger மங்களூர் சிவா said...

நல்ல பதிவு.
நன்றி சிவா!
08 August 2009 23:16

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...

கடந்த ஒரு மாதத்தில் உருப்படியா ஒரு "பத்து" வந்திருக்குன்னா அது இதுதான். நல்ல பல யோசனைகளை கொடுத்தமைக்கு நன்றி தேவா சார். வெளிநாட்டில், தனிமையில் வேலை முடிந்ததும் தனி அறையில் அடைந்து கிடப்பவர்களுக்கு இந்த பழக்கம் இருந்தால், அவர்களுக்கு இந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்றாலும் விடாது கருப்பாய் பிடித்து ஆட்டுகிறது.//

விட முயலுங்கள் !! முடியாதது இல்லை!!

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு தேவன்! பழக்கத்தை விட நினைப்பவர்கள் நிச்சயம் பயனுறுவார்கள்! வாழ்த்துக்கள்!

என் கவிதை: 'புகைச்சல்'
இப்பதிவுக்கு வருபவர்கள் நேரமிருந்தால் இதையும் படிக்கட்டுமே!

த.ஜீவராஜ் said...

///சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை. //

நடைமுறை உண்மை

பயனுள்ள பதிவு நண்பரே

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு தேவன்! பழக்கத்தை விட நினைப்பவர்கள் நிச்சயம் பயனுறுவார்கள்! வாழ்த்துக்கள்!

என் கவிதை: 'புகைச்சல்'
இப்பதிவுக்கு வருபவர்கள் நேரமிருந்தால் இதையும் படிக்கட்டுமே!//

நன்றாகப் படிக்கலாம்! மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

த.ஜீவராஜ் said...

///சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை. //

நடைமுறை உண்மை

பயனுள்ள பதிவு நண்பரே///

நன்றி ஜீவராஜ்!

[பி]-[த்]-[த]-[ன்] said...

மனஉறுதி இருந்தா "திஸ் இஸ் மை லாஸ்ட் சிகரெட்" அப்படின்னு சொல்லி தூக்கி போட்டுட்டா போதும்.. அப்பறம் அடிக்கமாடோம் -:)

தருமி said...

18 வருஷம் 8 மாசம் சரியா முடிஞ்சி போச்சு. ஆனா ஆசை இன்னும் உடலை .... :(

ஷ‌ஃபிக்ஸ் said...

ஆச்சர்யம், ஆனால் உண்மை, எத்தனையோ விந்தைகளை படைக்கும் மனிதன் இந்த ஒரு சிறிய சிகரெட் துண்டிற்க்கு அடிமையாவது. இங்கு ஒரு விளம்பரம் பார்த்தேன் ஒரு பச்சிளங்குழந்தை தனது தந்தையிடம் கெஞ்சுகிறமாதிரி "அப்பா போதும் இந்த சிகரெட் பழக்கம், விட்டுவிடுங்களேன்". பயனுள்ள தகவல்கள் மருத்துவ நண்பரே!!

கிளியனூர் இஸ்மத் said...

திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....
பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது....

நல்ல ஆலோசனைதாங்க...முயற்சிக்கலாம்...!

sakthi said...

மிக நல்ல பதிவு

பாலா said...

சிகரெட்டை விட மொக்கை வழிகள் பத்து
* முதலில் சிகரெட்டை கையால் தொடுவதை முடிந்த வரை தவிக்கவும் ( கடைகாரராய் இருப்பின் கிளவுஸ் போட்டுக்கொள்ளவும் )
* சிகறேட்டேன்ற வார்த்தையை பயன்படுத்தவதை தவிர்க்கவும் ( அப்படியும் பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பின் கோல்டு பிளேக் , சிசொர் பில்டேர் , கிங்க்ஸ் போன்ற கம்பெனி பெயரை உபயகப்படுத்தவும் )
மீதி எட்டு வழிகளை நண்பர் ஜமால் சொல்வார்

Suresh Kumar said...

நல்ல பதிவு
சிகரெட் எல்லா கடைகளிலும் இருக்கும் விலை குறைவு இப்படி பட்ட காரணங்களால் மனம் எளிதில் தடுமாறி விடுகிறது

அபி அப்பா said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

கிழிஞ்சுது போங்க டாக்டர் கமெண்ட்ட் மாரரேஷன் இல்லியா??


எனக்கு மெயில் அமுப்புங்க இல்லாட்டி உங்க மெயில் கொடுங்க

jerry eshananda. said...

ஆரோக்கியமான பதிவு தேவா.
பதிவை படித்துவிட்டு ஒரு பத்துபேர் திருந்தினாலும் உங்கள் எழுத்துக்கு
பெருமை.உங்களுக்கு புண்ணியம்.
"ஜெரி ஈசானந்தா" - மதுரை.

அபுஅஃப்ஸர் said...

இந்த தொல்லைக்களுக்குதாங்க நான் மருந்துக்கு கூட தொட்டது(புகைத்தது) கிடையாது

காச கரியாக்காதீங்கப்பா, தூக்கி கடாசுங்கப்பா....

ஆ.ஞானசேகரன் said...

1ம் 2ம் சரியான வழிகள் மிக்க நன்றி...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தமிழ்த்துளி..

தேவையான பதிவு..

எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை.. விட்டுத் தொலைத்தால் அவருக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்தினருக்கும் நல்லது..

sarath said...

என நணபர தான் புகைப் பிடிப்பதை நிறுத்திய சமயத்தில் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு ஆரஞ்சு பழம் எடுத்து தோல் உரித்து இரு மாதங்கள் சாப்பிட்டார்.

இப்போது அறவே இல்லை.

அத்திரி said...

//தருமி said...
18 வருஷம் 8 மாசம் சரியா முடிஞ்சி போச்சு. ஆனா ஆசை இன்னும் உடலை .... :(//

ஹாஹாஹா..............நான் அந்த நல்ல பழக்கத்தை விட்டு இன்னையோட 162நாட்கள் ஆகுது

பிரியமுடன்.........வசந்த் said...

நீங்க என்னவேணுனாலும் நினைச்சுக்கோங்க சார் உண்மையிலே இந்த பதிவ உங்கள போடச்சொல்லாம்ன்னு மெயில் பண்ணலாம்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்கிடுவீங்களோன்னு தான் சொல்லல. ரொம்ப நாளா நானும் ட்ரைப் பண்றேன் சார் என்னால சிகரெட் விடமுடியல இந்தவாட்டியாவது முயற்ச்சிக்கிறேன் சார் ரொம்ப நன்றி தேவா சார்.

குடுகுடுப்பை said...

சனியனை விட்டு ஆறு /ஏழு வருசம் ஆச்சு சார்

இளையராஜா said...

surely i will try this sir

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...
இந்த தொல்லைக்களுக்குதாங்க நான் மருந்துக்கு கூட தொட்டது(புகைத்தது) கிடையாது

காச கரியாக்காதீங்கப்பா, தூக்கி கடாசுங்கப்பா....

எங்க அபுவாச்சே..... நல்ல தங்கமான புள்ள...சமத்து

Anonymous said...

பிரியமுடன்.........வசந்த் said...
நீங்க என்னவேணுனாலும் நினைச்சுக்கோங்க சார் உண்மையிலே இந்த பதிவ உங்கள போடச்சொல்லாம்ன்னு மெயில் பண்ணலாம்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்கிடுவீங்களோன்னு தான் சொல்லல. ரொம்ப நாளா நானும் ட்ரைப் பண்றேன் சார் என்னால சிகரெட் விடமுடியல இந்தவாட்டியாவது முயற்ச்சிக்கிறேன் சார் ரொம்ப நன்றி தேவா சார்.

இன்னும் முயற்சியில் தானா?

Anonymous said...

ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் பெற்று விட்டீர்கள் இந்த மாதிரி உபயோகமான பதிவுகள் தந்து வேணாம் என்றால் விட மாட்டார்கள் என்று அதனால் வரும் விளைவுகளையும் சுட்டிக்காட்டி பதிவிடும் உங்களுக்கு இறைவன் எல்லா நல்லறுளும் வழங்குவான்....வாழ்க உங்கள் நல்ல மனம்..

வால்பையன் said...

//ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் பெற்று விட்டீர்கள் //

என்ன கொடும சார் இது!
இவரு ஏற்கனவே டாக்டர் தாங்க!

வால்பையன் said...

எனக்கு பொதுவாக சிகரெட் ஞாபகம் வருவதில்லை!
யாராவது பிடிப்பதை பார்த்தால் எனக்கும் குடிக்கனும் போல இருக்கும்!

ஆடுமாடு said...

//நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!//

பலவாட்டி இந்த கூத்து நடந்து, கடைசியில நானும் விட்டபாடில்லை. நண்பர்களும் கிண்டலை விட்டபாடில்லை. சூடு, சொரணைக்கெல்லாம் மயங்க மாட்டேங்குது நிக்கோடின்.

5 நாள் கண்ணை மூடிட்டு விட்டிருந்தா, ஆறாவது நாள் உங்களால இருக்க முடியாது. சனியனை குடிக்க வச்சிருக்கும். இதுக்கு மருத்துவ ரீதியா ஒரு கணக்கு இருக்கு.

சிகரெட்டை விட்டுவிட்டு ஒரு வாரம், மூன்று மாதம், 8 மாதம், 14வது மாதம்,18வது மாதம்... இவற்றை கடந்தால்தான் சுத்தமாக விடமுடியும். இதில் ஏதாவது ஒரு மாதத்தில் மீண்டு புகைக்க ஆரம்பித்தால் அதை எப்போதும் விடமுடியாதாம். எப்பூடி?

வானம்பாடிகள் said...

நல்ல ஆலோசனை.

குடந்தை அன்புமணி said...

எனக்கு இந்தப் பழக்கம் இல்லை அதனால் கவலை இல்லை. இந்த இடுகையை அண்ணா... நீங்க படிச்சீங்களான்னு தேடிப்பார்த்தேன். பின்னூட்டத்தில் காணோமே...

வழிப்போக்கன் said...

தொடர்ந்து நல்ல பயனுள்ள பதிவுகளாக போடுகிறீர்கள்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory