Thursday, 16 April 2009

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்!!

 

 

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!

நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.

ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!

நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!

சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?

பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!

1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே?  நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க  வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)

2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!

3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)

4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!

5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை  (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!!  சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!

6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)

7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!

8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)

9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!

10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!

என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!

குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!

81 comments:

cheena (சீனா) said...

அனுபவமா - தேவ்ன் - நல்ல யோசனையா இருக்கே

thevanmayam said...

அனுபவமா - தேவ்ன் - நல்ல யோசனையா இருக்கே//

அதெல்லாம் ரகசிய11

VIKNESHWARAN said...

எனக்கு லேபில் பிடிச்சிருக்கு...

துரை.ந.உ said...

உலகப் பிரச்சினைக்கு ஒரு பக்கதில் பதில் சொல்லிவிட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!!
(நடைமுறை சிக்கல் ஏதும் உண்டா?
எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்!!)

வேத்தியன் said...

முதலாவது ஐடியா பரவாயில்லை...
நமக்கு இன்னும் காலம் இருக்கில்ல...
:-)

thevanmayam said...

எனக்கு லேபில் பிடிச்சிருக்கு///

நன்றி விக்னேஷ்!!

வேத்தியன் said...

நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...//

ok ok...
:-)

thevanmayam said...

உலகப் பிரச்சினைக்கு ஒரு பக்கதில் பதில் சொல்லிவிட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!!
(நடைமுறை சிக்கல் ஏதும் உண்டா?
எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான்!!)//

நிறைய இருக்கும்!! அனுபவத்தில் அறிந்து கொள்க!!

வேத்தியன் said...

நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!//

நீங்க வேற...
அவங்க மறக்க நினைக்கிறத (நாமளும் தான்னு பல பேர் சொல்லுற‌து கேக்குது...)
ஞாபகப்படுத்திகிட்டு...
கோபம் தான் மிச்சமாகும்...
என்ன நான் சொல்றது???
:-)

thevanmayam said...

முதலாவது ஐடியா பரவாயில்லை...
நமக்கு இன்னும் காலம் இருக்கில்ல...
:-)///

இதை அப்படியே சேவ் பண்ணி வைங்க!!

வேத்தியன் said...

அந்த மூனாவது ஐடியா...
சாரே ஏன் இந்த கொலைவெறி??
பாவம் சார்..
இது வேணாமே...
:-)))

வேத்தியன் said...

நாலாவது ஐடியா ஓகே...
நமக்கு மேல சந்தேகமும் வராது..
அதோட பலனும் கிட்டும்...
:-)

வேத்தியன் said...

அந்த 5வது ஐடியா செம தூள்...
டயர் வந்தாலே சிக்கல் தான்...
:-)

நையாண்டி நைனா said...

வரேன்... வரேன்.... அப்புறமா வந்து பதில் சொல்றேன்.

வேத்தியன் said...

ஆறாவது சொல்லும் போது ஒருவித சந்தோஷம் தெரியுதே????
அனுபவமோ???
கோவிச்சுக்காதீங்க தல..
சும்மா தான்...
:-)

thevanmayam said...

நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!//

நீங்க வேற...
அவங்க மறக்க நினைக்கிறத (நாமளும் தான்னு பல பேர் சொல்லுற‌து கேக்குது...)
ஞாபகப்படுத்திகிட்டு...
கோபம் தான் மிச்சமாகும்...
என்ன நான் சொல்றது???
:-)//
கல்யாணமானவுடன் முயலவும்!!

வேத்தியன் said...

ஏழாவது சிக்கல் பாஸ்...
அவங்க எடை குறையனும்ன்னு நம்மல பட்டினியில விட்டுடுவீங்க போல???
:-)

thevanmayam said...

ஆறாவது சொல்லும் போது ஒருவித சந்தோஷம் தெரியுதே????
அனுபவமோ???
கோவிச்சுக்காதீங்க தல..
சும்மா தான்...
:-)///
உள்ளதை மனசில் பட்டதை சொல்லுங்கப்பு!!

வேத்தியன் said...

எட்டாவது ஐடியாவுக்கு எவ்வளவு சாப்பிட்டும் தனுஷ் மாதிரி இருக்கிறவங்க பாடு சிக்கல் தான் இல்ல...
:-)))

வேத்தியன் said...

பத்தாவது ஐடியா 1500, 2000 ரூபாய்க்கு ஆப்பு வைக்கிறா மாதிரி இருக்கே...
:-)

thevanmayam said...

ஏழாவது சிக்கல் பாஸ்...
அவங்க எடை குறையனும்ன்னு நம்மல பட்டினியில விட்டுடுவீங்க போல???
:-)///

அட நம்ம தொப்பையையும் கவனிக்கணுமில்ல!!

வேத்தியன் said...

என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!//

அய்யய்யோ ஏதாச்சும் விவகாரமா ஆயிடுச்சுன்னா சிக்கல் தான்...
:-)

thevanmayam said...

பத்தாவது ஐடியா 1500, 2000 ரூபாய்க்கு ஆப்பு வைக்கிறா மாதிரி இருக்கே...
:-)//
சும்மா சேலில் எடுங்கப்பா!

வேத்தியன் said...

குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!//

Done...

வேத்தியன் said...

தமிழ்மணத்துல ரொம்ப நாள் நிக்குற மாதிரி லேபிள் குடுத்திருக்கீங்களே...
எல்லோரையும் போய் சேர வேண்டிய விஷயம் தான்...
நல்ல சிந்தனை...
:-)

டக்ளஸ்....... said...

யேய்..என்னாய்யா நடக்குது இங்க..!
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலப்பா..
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
வர்ரட்டா...

தராசு said...

ஐடியா 3.

இத செஞ்சுபுட்டு, ஆஸ்பத்திரிக்கு யாரு அழுகறது,

ஐடியா குடுக்கறாங்களாம் ஐடியா

துளசி கோபால் said...

இந்த வம்பெல்லாம் வேணாமுன்னுதான் அப்போ இருந்து இப்போவரை அந்த எடை வித்தியாசம் 5 கிலோவை அப்படியே மெயிண்டைன் பண்ணிக்கிட்டு இருக்கேன்.:-))))


பழைய போட்டோவைப் பார்த்தால் 'நாலு' கண்களில் கண்ணீர்!!!!

பூங்குழலி said...

3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!(

உங்க வீட்டில எலும்பு உடஞ்சா நீங்க சரி பண்ணிடுவீங்க ..மத்தவங்க டாக்டருக்கு வேற காசு அழனுமா ?(இது எதுவும் தொழில் ரகசியமா ?)

வால்பையன் said...

//அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!!//

இதெல்லாம் ரொம்ப ஓவரு
சொல்லிபுட்டேன்!

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரே ஏன் இந்த கொலைவெறி...

மனுஷன் நல்லா இருப்பது புடிக்கலையா?

நல்லா யோசனை சொல்றாருப்பா...

இராகவன் நைஜிரியா said...

// நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!//

நீங்க குண்டாயிடக்கூடாது என்பதற்காகத்தான் அம்மணி எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு குண்டாயிடறாங்க

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க..

thevanmayam said...
This comment has been removed by the author.
தமிழ்நெஞ்சம் said...

சூப்பர்ங்கோ

ஹேமா said...

மருதுவ யோசனை...மருத்துவரின் யோசனை சூப்பரோ சூப்பர்.
பிரயோசனமானவை.

கிரி said...

:-)))

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு

tamil24.blogspot.com said...

மருத்துவர் அண்ணே உங்கள் ஆலோசனையை நம்பி அண்ணைமார் கனபேர் நிலை கவலைக்கிடமாகப் போகுது. பாவம் ஜனங்கள்.

பெண்களும் சரி ஆண்களும் சரி உடல் எடையைக்காப்பது முக்கியம். அனைவருக்கும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்.

சாந்தி.

SUREஷ் said...


ல்


யோ

னை

SUREஷ் said...

//கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!!//மு

ல்
ப்

போ
டு
ங்

குமரை நிலாவன் said...

:-)))

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு

Suresh said...

மச்சான் சூப்பர் எப்படி விட்டேன்

உன் பதிவு யூத்பூல் விகடனில் ...

//இடுப்பை (டயரை)//

ஹ ஹா

//புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)//

ஹ ஹ அப்புறம் அவங்க சொல்லுவாங்க

Suresh said...

//கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!! குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!//

ஹ ஹா ஹா இருடி குத்துவாங்க ஹாஹ சூப்பர் மச்சான்

ச்சின்னப் பையன் said...

super
:-))))))))))))))))

thevanmayam said...

//கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!! குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!//

ஹ ஹா ஹா இருடி குத்துவாங்க ஹாஹ சூப்பர் மச்சான்///

மாப்பிள்ளை! எப்படி பதிவு? தூளா! நாங்கல்லாம் குத்து வாங்கியாச்சு!! உனக்கு இருக்குடி... இனிமே!!

thevanmayam said...

super
:-))))))))))))))))///

நன்றி! சின்னப் பையன்!!

thevanmayam said...

:-)))

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு///

செயல்படுத்துங்க குமரை!!

thevanmayam said...

நன்றி சுரேசு!!
உடம்பையும் பாத்துக்கணுமல!!

thevanmayam said...

மருத்துவர் அண்ணே உங்கள் ஆலோசனையை நம்பி அண்ணைமார் கனபேர் நிலை கவலைக்கிடமாகப் போகுது. பாவம் ஜனங்கள்.

பெண்களும் சரி ஆண்களும் சரி உடல் எடையைக்காப்பது முக்கியம். அனைவருக்கும் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். ///

நல்லா சொன்னீங்க!!

thevanmayam said...

-)))

ஐடியா எல்லாம் நல்லா இருக்கு///

செயல்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்!!!

thevanmayam said...

மருதுவ யோசனை...மருத்துவரின் யோசனை சூப்பரோ சூப்பர்.
பிரயோசனமானவை.///

நீங்களே பாராட்டிட்டீங்க!!

thevanmayam said...

சூப்பர்ங்கோ///

தமிழ்நெஞ்சம் நன்றி!!

thevanmayam said...

இராகவன் அய்யா!!
நல்ல கருத்துக் குத்துக்கள்!!!

thevanmayam said...

//அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!!//

இதெல்லாம் ரொம்ப ஓவரு
சொல்லிபுட்டேன்!//

ஒத்துக்கிறேன்!!

thevanmayam said...

உங்க வீட்டில எலும்பு உடஞ்சா நீங்க சரி பண்ணிடுவீங்க ..மத்தவங்க டாக்டருக்கு வேற காசு அழனுமா ?(இது எதுவும் தொழில் ரகசியமா ?)///

இப்படி ஒரு கோணமா? நான் நினைக்கவேயில்லை!!

thevanmayam said...

இந்த வம்பெல்லாம் வேணாமுன்னுதான் அப்போ இருந்து இப்போவரை அந்த எடை வித்தியாசம் 5 கிலோவை அப்படியே மெயிண்டைன் பண்ணிக்கிட்டு இருக்கேன்.:-))))


பழைய போட்டோவைப் பார்த்தால் 'நாலு' கண்களில் கண்ணீர்!!!!///

நாலு கண்ணா? அவருதும் சேர்த்தா?

thevanmayam said...

ஐடியா 3.

இத செஞ்சுபுட்டு, ஆஸ்பத்திரிக்கு யாரு அழுகறது,

ஐடியா குடுக்கறாங்களாம் ஐடியா///

ஆமா!! நான் இதை யோசிக்கலை!!

thevanmayam said...

யேய்..என்னாய்யா நடக்குது இங்க..!
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலப்பா..
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
நான் யூத்து..!
வர்ரட்டா..///

எவ்வளவு நாள் ஓடமுடியும்?

MayVee said...

naan single thaan..
mind la vaichukkiren..
kalayanam ana pin use pannikkiren

goma said...

thevanmayam
இன்னொரு டிப்பு டிப்பட்டுமா?
வீட்டில் உள்ள கார்டுலஸ் ஃபோன்,செல் ஃபோன் ரெமோட் கண்ட்ரோல் எல்லாவற்றையும் ரிபேர் மாதிரி ஆக்கி விடுங்கள்,அம்மணி தரைமார்க்க ஃபோன் அடித்தால் ஒவ்வொரு ஹலோவுக்கும் நடக்கணும்,
அரசி,கோலங்கள்,மானாட ...என்று சேனல் மாற்ற நடையாய் நடக்கணும் 10த்தே நாளில் நல்ல ரிசல்ட் தெரியும்

பிரியமுடன் பிரபு said...

கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)
/////

முன் ஜாமினா ???

பிரியமுடன் பிரபு said...

////
அனுபவமா - தேவ்ன் - நல்ல யோசனையா இருக்கே
////

?
?
?
?

குடுகுடுப்பை said...

நல்ல ரோசனையா இருக்கே.நான் குண்டான் இருக்கிறதையும் இப்படி அவங்க செஞ்சு காமிச்சா நான் என்னா ஆவறது

பிரேம்குமார் said...

இந்த லேபில்கள் போதுமா, இல்லை இன்னும் ஏதேனும் பாக்கி இருக்கா தேவா? ;-)

பட்டாம்பூச்சி said...

நல்ல யோசனை :)

சுல்தான் said...

//5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!! சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!//
கொஞ்சம் பூசி மெழுகுன மாதிரி ஆன பின்னர்தான் எங்க வீட்டுக்காரருக்கு எப்போது பார்த்தாலும் என் மீது காதல் வருகிறது என்று தப்பாக நினைத்து விடப் போகிறார்கள். கவனமாக இருங்கப்பூ. சொல்லாமல் சொல்வதாக நினைத்து தப்பாக சொல்லி விடப் போறீங்க.

அபுஅஃப்ஸர் said...

நல்ல தகவல்தான்

ஆனாலும் வம்புலே மாட்டிவிடுறதுலே நீங்க படா கில்லாடிதான் போங்க‌

அபுஅஃப்ஸர் said...

ரெண்டுபேருமே குண்டா இருந்தா? அதுக்கு ஏதாவது

thevanmayam said...

naan single thaan..
mind la vaichukkiren..
kalayanam ana ///

it will help u a lot!

thevanmayam said...

thevanmayam
இன்னொரு டிப்பு டிப்பட்டுமா?
வீட்டில் உள்ள கார்டுலஸ் ஃபோன்,செல் ஃபோன் ரெமோட் கண்ட்ரோல் எல்லாவற்றையும் ரிபேர் மாதிரி ஆக்கி விடுங்கள்,அம்மணி தரைமார்க்க ஃபோன் அடித்தால் ஒவ்வொரு ஹலோவுக்கும் நடக்கணும்,
அரசி,கோலங்கள்,மானாட ...என்று சேனல் மாற்ற நடையாய் நடக்கணும் 10த்தே நாளில் நல்ல ரிசல்ட் தெரியும்?///

திறமைசாலிங்க போடுங்கப்பா பதிவு!!மக்கள் மனம் குளிர!!

thevanmayam said...

கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)
/////

முன் ஜாமீனா?//

ஆமா! நம்ம பக்கம் பாய்ந்துவிடக்கூடாது பாருங்கள்!!

thevanmayam said...

நல்ல ரோசனையா இருக்கே.நான் குண்டான் இருக்கிறதையும் இப்படி அவங்க செஞ்சு காமிச்சா நான் என்னா ஆவறது
///
பட்டுத்தான் ஆகனும்!!! விதி வலியது!!

thevanmayam said...

இந்த லேபில்கள் போதுமா, இல்லை இன்னும் ஏதேனும் பாக்கி இருக்கா தேவா? ;-)
ஏதோ ஞாபகத்தில் ! இஃகி!! இஃகி!!

thevanmayam said...

//5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!! சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!//
கொஞ்சம் பூசி மெழுகுன மாதிரி ஆன பின்னர்தான் எங்க வீட்டுக்காரருக்கு எப்போது பார்த்தாலும் என் மீது காதல் வருகிறது என்று தப்பாக நினைத்து விடப் போகிறார்கள். கவனமாக இருங்கப்பூ. சொல்லாமல் சொல்வதாக நினைத்து தப்பாக சொல்லி விடப் போறீங்க.

ஒஹோ!! இப்படியும் இருக்கா!!

thevanmayam said...

நல்ல யோசனை :)///

வருக பட்டாம்பூச்சி!!

thevanmayam said...

ரெண்டுபேருமே குண்டா இருந்தா? அதுக்கு?///

அங்கப்பிரதட்சினம் மாதிரி கட்டி உருளவேண்டியதுதான்!!!

Rajeswari said...

வீட்டுல ஃபாலோ பண்ணுரீங்கனு சொல்லுங்க..

Rajeswari said...

ஆண்கள் குண்டாவதை ,மனம் கோணாமல் தடுக்க 10 வேண்டாம்,5 வழிகள் சொல்லுங்கள்

thevanmayam said...

ஆண்கள் குண்டாவதை ,மனம் கோணாமல் தடுக்க 10 வேண்டாம்,5 வழிகள் சொல்லுங்கள்///

இதை நான் சொன்னா சங்கம் என்னை உதைக்கும்!!

ஊர் சுற்றி said...

என்னாப்பா? இந்த 10 பாயின்ட்ட விட மாட்டீங்களா?!! :)

Suresh said...

@ தேவன்

//
மாப்பிள்ளை! எப்படி பதிவு? தூளா! நாங்கல்லாம் குத்து வாங்கியாச்சு!! உனக்கு இருக்குடி... இனிமே!!//

சூப்பர் மச்சான் ;) வாங்கியாச்சா ஹா ஹா அப்புறம் இந்த ஸ்மால் பாய் அதான் பா சின்ன பையன் சும்மா :-) போட்டு தபாய்கிறாறு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory