Wednesday, 15 April 2009

விடை பெறுகிறேன்!! வணக்கம்!!

அன்பு வலை நண்பர்களே!

விளையாட்டுப்போல 22 நவம்பரில் ஆரம்பித்தது என் வலைப் பயணம்.

தமிழில் எழுதமுடியாமல் கஷ்டப்பட்டு, பல மென்பொருட்களை தரவிறக்கம் செய்து வலையில் தமிழ் எழுத போராடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்!!

அதே சமயம் தமிழ்மணத்தில் சேர்க்கமுடியாமல் கஷ்டபட்டது தனி கதை!! இப்போதும் என் டெம்ப்ளேட்டில் எதை அழித்தேன்! எதை சேர்த்தேன் என்று தெரியவில்லை!! என் எக்ஸ். எம். எல் கோடுகளில் நிறைய பிழைகள் உள்ளன!!

அதன் பின் அறைக்குள் வந்த( ஆப்பிரிக்க) வானம்(கவிதைத் தொகுதி),  போல் என் அறைக்குள்ளேயே என் படைப்புகளை வலையில் பிரசுரம் செய்ய முடிந்தது! கையில் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்க வேண்டும் என்றால் என்னால் எதுவுமே எழுதியிருக்க முடியாது!!உண்மை!!

எழுதியவற்றுக்கு கருத்துக்களும், பின்னூட்டங்களுமாய் வலையில் மேலும் மேலும் எழுதும் போதை ஏற்பட்டது!! உண்மையில் வலையில் பின்னூட்டமிடுபவர்கள் என்னை விட பரந்த மனம் கொண்டவர்கள்!! என் பின்னூட்டங்களாவது, கேலி, கிண்டல் என்று சிலரை காயப்படுத்தி இருக்கும், ஆனால் வலை நண்பர்கள் என்னைக் காயப்படுத்தியதே இல்லை!!

அதன் பின் என் பதிவை கெல்வி. நெட் டில் (TAMIL TOP BLOGS) இணைத்தேன்!! அப்போது ஆரம்பித்தது ஒரு ரேஸ்!! பதிவர்களில் யார் அதிகம் ஹிட் பெறுவது என்ற அது செம போதை தரும் ரேஸ்!! தினமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஹிட் எவ்வளவு என்று பதிவு போட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்!!

இதில் நான் பெற்றது நான்காவது இடம்!!

ஆனால் என் அன்றாட நடைமுறை மாற ஆரம்பித்தது.  பொன்னான நேரமெல்லாம் பதிவு போடுவது பற்றியே யோசித்து, சூடான இடுகையில் இவ்வளவு ஹிட் வாங்கியும் போடவில்லையே? ஏன்? என்று குழம்பி, தமிழிஷில் ஹிட் ஆகிவிட்டதா ? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு............ போதும்டா சாமி!!

அமைதியாக நம் நண்பர்களுடன், குடும்பத்தாருடன், எந்த டென்சனும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்!!!

ஆகையால் விலகுகிறேன்!!! ஆமாம் கெல்வி.நெட். தமிழ் டாப் பிளாகிலிருந்து விடை பெறுகிறேன்!!மனம் நிம்மதியாக உள்ளது!!

மேலே தமிழ் டாப் பிளாக் என்ற சொல் விடுபட்டுவிட்டது!! தமிழ் டாப் பிளாக் கிலிருந்து விலகுகிறேன் என்று படிக்கவும்!!( என்ன இருந்தாலும் நம்ம கிருத்துருவம் நம்மை விடாதே!!! இஃகி!! இஃகி!!!இஃகி!!)

தேவா..

42 comments:

நட்புடன் ஜமால் said...

ஒரு நாள் முந்திட்டீங்க

நாளை இதே தலைப்பில் தான் போட இருந்தேன்


ஹா ஹா ஹா

குசும்பு தூள்

thevanmayam said...

ஒரு நாள் முந்திட்டீங்க

நாளை இதே தலைப்பில் தான் போட இருந்தேன்


ஹா ஹா ஹா

குசும்பு தூள்///

மனசு சந்தோசமா இருக்கு ஜமால்!!
உண்மையாகவே!! உங்களுடன் பின்னூட்டத்தில் இணைகிறேன்!!

Rajeswari said...

தலைப்ப பாத்து அதிர்ந்துட்டேன்...என்ன சார் இது சின்ன புள்ள தனமா விளையாடிகிட்டு..

Rajeswari said...

// அமைதியாக நம் நண்பர்களுடன், குடும்பத்தாருடன், எந்த டென்சனும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்//

வாஸ்தவமான காரணம்..

thevanmayam said...

தலைப்ப பாத்து அதிர்ந்துட்டேன்...என்ன சார் இது சின்ன புள்ள தனமா விளையாடிகிட்டு..///

கூல் ராஜேஸ் !!
இன்னும் உங்கள் பதிவுகளை நிறைய படிப்பேன்!!ரேஸிலிருந்துதானே விலகுகிறேன். பதிவுகள் போடுவேன்!!

thevanmayam said...

// அமைதியாக நம் நண்பர்களுடன், குடும்பத்தாருடன், எந்த டென்சனும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும்//

வாஸ்தவமான காரணம்..//

இப்போதான் மனம் நிதானமாக இருக்கு!! சரிதானே!!

அபுஅஃப்ஸர் said...

தேவா சார் இன்னாது இப்படி

இந்த பிளாக் எழுதவருவதற்கு முன் நான் யோசித்ததுதான் இது நம்முடிய பொன்னான நேரத்தை கொன்றுவிடும் என்று அதனாலேதான் நேரம் கிடைக்கும்போது மட்டும் எழுதுறேன்....

நீங்களும் இப்போதான்........

இருந்தாலும் உங்களுடைய வலையெழுத்தை தொடரவும், நிறைய நிறைய புது வித்தியாசமான அனுபவமான பதிவுகள் உங்கள் வலைத்தலத்தில் கிடைக்கிறது

SUREஷ் said...

சரிதான் சார்....

எனக்கு இன்றுதான் பிரச்சனையில் சிக்கியிருந்த அகண்ட அலை மீண்டது.

மீண்டுவந்தவுடன் உங்களின் குண்டு..

கோவி.கண்ணன் said...

//ஆகையால் விலகுகிறேன்!!! ஆமாம் கெல்வி.நெட். தமிழ் டாப் பிளாகிலிருந்து விடை பெறுகிறேன்!!மனம் நிம்மதியாக உள்ளது!!//

எப்போதாவது அடக்க முடியாத கோபம் வந்தால் ப்ளாக்கில் எழுதி தீர்த்துக் கொள்ளுங்கள்.

வால்பையன் said...

ப்ளாக் என்பதை நாம் சதோசமாக இருக்க தேடி வந்தோம்! ஓஉவு நேரங்களை பயனுள்ள வழிகளில் செலவளிக்கவும்!

ஆனால் ப்ளாக் நம்மை ஆக்கிரமித்து விட்டது. கண்டிப்பாக தினமும் ஒரு பதிவிட்டே ஆகவேண்டும் என ஆளாய் பறப்பது! பதிவிற்கு கரு கிடைக்காமல் அலைவது! போன்று ஏகப்பட்ட மன உளைச்சல்கள்!

நமக்கு மகிழ்ச்சி தர தான் எதுவும்!
நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்க அல்ல!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

வால்பையன் said...

ப்ளாக் என்பதை நாம் சதோசமாக இருக்க தேடி வந்தோம்! ஓஉவு நேரங்களை பயனுள்ள வழிகளில் செலவளிக்கவும்!

ஆனால் ப்ளாக் நம்மை ஆக்கிரமித்து விட்டது. கண்டிப்பாக தினமும் ஒரு பதிவிட்டே ஆகவேண்டும் என ஆளாய் பறப்பது! பதிவிற்கு கரு கிடைக்காமல் அலைவது! போன்று ஏகப்பட்ட மன உளைச்சல்கள்!

நமக்கு மகிழ்ச்சி தர தான் எதுவும்!
நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்க அல்ல!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

விஷ்ணு. said...

தலைப்பு பார்த்து என்னமோ எதோ வந்தா தலையை சொறியவிட்டுடீங்களே!

பழமைபேசி said...

//நம்ம கிருத்துருவம் நம்மை விடாதே!!! இஃகி!! இஃகி!!!இஃகி!!)//

இஃகிஃகி!!

’டொன்’ லீ said...

ஆவ்...

thevanmayam said...

தேவா சார் இன்னாது இப்படி

இந்த பிளாக் எழுதவருவதற்கு முன் நான் யோசித்ததுதான் இது நம்முடிய பொன்னான நேரத்தை கொன்றுவிடும் என்று அதனாலேதான் நேரம் கிடைக்கும்போது மட்டும் எழுதுறேன்....

நீங்களும் இப்போதான்........

இருந்தாலும் உங்களுடைய வலையெழுத்தை தொடரவும், நிறைய நிறைய புது வித்தியாசமான அனுபவமான பதிவுகள் உங்கள் வலைத்தலத்தில் கிடைக்கிறது///

அப்படியா?
சரி! எழுதாமல் எங்கே போகப்போகிறேன்!

thevanmayam said...

சரிதான் சார்....

எனக்கு இன்றுதான் பிரச்சனையில் சிக்கியிருந்த அகண்ட அலை மீண்டது.

மீண்டுவந்தவுடன் உங்களின் குண்டு..////

சுரேஷ்!! என்ன பிரச்சினை? நலம்தானே இப்போது?

thevanmayam said...

/ஆகையால் விலகுகிறேன்!!! ஆமாம் கெல்வி.நெட். தமிழ் டாப் பிளாகிலிருந்து விடை பெறுகிறேன்!!மனம் நிம்மதியாக உள்ளது!!//

எப்போதாவது அடக்க முடியாத கோபம் வந்தால் ப்ளாக்கில் எழுதி தீர்த்துக் கொள்ளுங்கள்.////

ஆஹா!! நன்றி நண்பரே!!

thevanmayam said...

ப்ளாக் என்பதை நாம் சதோசமாக இருக்க தேடி வந்தோம்! ஓஉவு நேரங்களை பயனுள்ள வழிகளில் செலவளிக்கவும்!

ஆனால் ப்ளாக் நம்மை ஆக்கிரமித்து விட்டது. கண்டிப்பாக தினமும் ஒரு பதிவிட்டே ஆகவேண்டும் என ஆளாய் பறப்பது! பதிவிற்கு கரு கிடைக்காமல் அலைவது! போன்று ஏகப்பட்ட மன உளைச்சல்கள்!

நமக்கு மகிழ்ச்சி தர தான் எதுவும்!
நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்க அல்ல!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!///

சரிதான் அருண்!!! அமைதியாக தூங்கினேன்!!

thevanmayam said...

தலைப்பு பார்த்து என்னமோ எதோ வந்தா தலையை சொறியவிட்டுடீங்களே!//

என் பதிவு அனுபவம் புதியவர்களுக்கு உதவட்டுமே!!

thevanmayam said...

ஆவ்..//

டொன்லீ முகம் இளமையாய் மாறிக்கொண்டு உள்ளதே!

MayVee said...

correctyana mudivu....
app unga kitta irunthu pala ilakkiya padivugalai yethir parkkalamnnu sollunga

MayVee said...

then here afterwards u will be giving literature work ah????i was shocked when i saw the title...
he he

thevanmayam said...

correctyana mudivu....
app unga kitta irunthu pala ilakkiya padivugalai yethir parkkalamnnu sollunga////

இலக்கியமா? அய்யா விடமாட்டீங்க போல இருக்கே!!

வேத்தியன் said...

Correct Decision...
I have already decided to deactivate mu account there...

ராஜ நடராஜன் said...

நல்லா பயம் காட்டீறீங்க போங்க:)

ஆமா!ரேசா?நம்மளைப் பாருங்க அந்த டென்சன் எல்லாம் கிடையாது.பதிவு போடறதுக்கு மூளை குறு குறுன்னு ஏதாவது செய்யணும்.அப்ப மட்டுமே பதிவு.பின்னூட்டம்,ஹிட் கணக்கெல்லாம் கவலையே இல்லாத மனிதன்:)

அடிச்சு விளையாடுங்க.கூடவே நோயாளிகளையும் நல்லா கவனிங்க என்ன:)

வழிப்போக்கன் said...

பதிவர்களில் யார் அதிகம் ஹிட் பெறுவது என்ற அது செம போதை தரும் ரேஸ்!!//

இது தான் விஷயமே...

வழிப்போக்கன் said...

நல்ல முடிவு...

இந்த பிரச்சனையை நான் ஏற்கனவே அறிந்தமையால் தான் நான் அதில் இணையவே இல்லை...

dharshini said...

நானும் நேரம் கிடைக்கும் போதுதான் பதிவிடுவேன்... பதிவிடாமல் உள்ளது நிறையவே இருக்கு.உங்களின் நிலைமை புரிகிறது. தொடர்ந்து எழுதுவேன் என்பது ஆறுதலாக உள்ளது..

Suresh said...

//ஆனால் என் அன்றாட நடைமுறை மாற ஆரம்பித்தது. பொன்னான நேரமெல்லாம் பதிவு போடுவது பற்றியே யோசித்து, சூடான இடுகையில் இவ்வளவு ஹிட் வாங்கியும் போடவில்லையே? ஏன்? என்று குழம்பி, தமிழிஷில் ஹிட் ஆகிவிட்டதா ? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு............ போதும்டா சாமி!!/

100/100 உண்மை ஹா ஹா அதே தான் எனக்கும் சாமி முடியல ஆன அதையும் பதிவா போட்டு ஹிட் ஹா

Suresh said...

/ நட்புடன் ஜமால் said...

ஒரு நாள் முந்திட்டீங்க

நாளை இதே தலைப்பில் தான் போட இருந்தேன்//

அட பாவி எத்துனை பேரு கிளம்பிருக்கிங்க

புதுகைத் தென்றல் said...

நம்ம காரைக்குடி டாக்டர் ஏன் டாடா சொல்றாருன்னு?? யோசிச்சுகிட்டே வந்தேன்.

நீங்க சொல்லியிருப்பதும் சரிதான். ரேஸ் எல்லாம் வேணாம். பதிவு போடுங்க.

(அப்பப்ப டெர்ரர்ராக்கிடறீங்களே?? அவ்வ்வ்வ்)

நிலாவும் அம்மாவும் said...

அதானே பார்த்தேன்....எங்க கடனை வசூல் பண்ண முன்னாடி பெட்டியை கட்டுறீங்களேன்னு

குமரை நிலாவன் said...

ஒரு நாள் விட்டா கூட
நாலு அஞ்சு பதிவு சேர்ந்திடும்
எப்படிடா படிக்கிறதுன்னு யோசிப்பேன்

இனிமே கொஞ்சம் ரிலாக்சா படிக்கலாம்
இல்லையா தேவா சார் .

thevanmayam said...

Correct Decision...
I have already decided to deactivate mu account there.////
எனக்கு சொல்லக்கூடாதா?

thevanmayam said...

நல்லா பயம் காட்டீறீங்க போங்க:)

ஆமா!ரேசா?நம்மளைப் பாருங்க அந்த டென்சன் எல்லாம் கிடையாது.பதிவு போடறதுக்கு மூளை குறு குறுன்னு ஏதாவது செய்யணும்.அப்ப மட்டுமே பதிவு.பின்னூட்டம்,ஹிட் கணக்கெல்லாம் கவலையே இல்லாத மனிதன்:)

அடிச்சு விளையாடுங்க.கூடவே நோயாளிகளையும் நல்லா கவனிங்க என்ன:)////
அன்பான பதில்!! மிக்க நன்றி அடித்தே ஆடுவோம்!!

thevanmayam said...

பதிவர்களில் யார் அதிகம் ஹிட் பெறுவது என்ற அது செம போதை தரும் ரேஸ்!!//

இது தான் விஷயமே///

விசயமான ஆளப்பா நீ!!

thevanmayam said...

ஆனால் என் அன்றாட நடைமுறை மாற ஆரம்பித்தது. பொன்னான நேரமெல்லாம் பதிவு போடுவது பற்றியே யோசித்து, சூடான இடுகையில் இவ்வளவு ஹிட் வாங்கியும் போடவில்லையே? ஏன்? என்று குழம்பி, தமிழிஷில் ஹிட் ஆகிவிட்டதா ? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு............ போதும்டா சாமி!!/

100/100 உண்மை ஹா ஹா அதே தான் எனக்கும் சாமி முடியல ஆன அதையும் பதிவா போட்டு ஹிட் ஹா///

முட்டி மோதுங்க மாப்பிள்ளை!! தம் புடிச்சு ஆடுங்க!!!

thevanmayam said...

நம்ம காரைக்குடி டாக்டர் ஏன் டாடா சொல்றாருன்னு?? யோசிச்சுகிட்டே வந்தேன்.

நீங்க சொல்லியிருப்பதும் சரிதான். ரேஸ் எல்லாம் வேணாம். பதிவு போடுங்க.

(அப்பப்ப டெர்ரர்ராக்கிடறீங்களே?? அவ்வ்வ்வ்)///
ரேஸை விட்டு வந்து விட்டேன்!!பதிவு போடுவோம்!!

thevanmayam said...

//நம்ம கிருத்துருவம் நம்மை விடாதே!!! இஃகி!! இஃகி!!!இஃகி!!)//

இஃகிஃகி!!///

இஃகிஃகிஃகிஃகி!!! உங்க ப்ராண்ட் சிரிப்புதான்!!

thevanmayam said...

நானும் நேரம் கிடைக்கும் போதுதான் பதிவிடுவேன்... பதிவிடாமல் உள்ளது நிறையவே இருக்கு.உங்களின் நிலைமை புரிகிறது. தொடர்ந்து எழுதுவேன் என்பது ஆறுதலாக உள்ளது.///

பதிவிடாதது நெஞ்சுக்குள் அதிகம்!!

துளசி கோபால் said...

நிமிஷ நேரம் பயந்துட்டேன்.

பொழுதன்னிக்கும் இதே நினைப்புத்தான்.

இது(வும்) தியானம் தானே?

ராமலக்ஷ்மி said...

நல்ல பயனுள்ள பதிவுகளா தந்தபடி இருந்த உங்களுக்கு அட என்னாச்சோ ஏதாச்சோ எனப் பார்க்கத்தான் நானும் வந்தேன்:)!

பாருங்க என் பதிவுகளின் எண்ணிக்கையை. எப்பத் தோணுதோ அப்பதான் பதிவு. போடும் பதிவு நம்ம மனசுக்கு நிறைவானதா இருந்தா போதும். சொல்ல வரும் விஷயம் ஒரு நாலு பேரை யோசிக்க வச்சா போதும்.

ரொம்ப சரி மருத்துவரே, ரேஸ் எல்லாம் வேண்டாம். பேஸ் மட்டும் ஸ்ட்ராங்கா வச்சுக்கலாம்:))!

வால்பையன் சொன்னதையும் எல்லோரும் கவனிங்க:

//நமக்கு மகிழ்ச்சி தர தான் எதுவும்!
நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்க அல்ல!//

துளசி மேடம் சொன்ன மாதிரி தியானம் போலத்தான். செய்யும் போது முழு ஈடுபாட்டுடன் செய்து விட்டுப் பின்னர் நம் வேலையைப் பார்ப்போம்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory