Wednesday, 22 April 2009

காசநோய்-T.B.(Tuberculosis)

என் தம்பியின் நண்பன் அவர். வக்கீலுக்குப் படிக்கும் போதே எனக்குப்பழக்கம்! பைக்கில் ஸ்டெயிலாக சுத்துவார்.இதெல்லாம் 10 வருடம் முன்பு!திடீரென்று ஒரு நாள்என் நண்பர் ஒருவர், வக்கீல்ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை! உங்களிடம் அனுப்புகிறேன்! பாருங்கள் என்றார். பார்த்தேன்!எனக்குத்தெரியாத முகம்! என்னைத்தெரியுதா?நான் உங்கள் தம்பியின் வக்கீல் நண்பன் என்றார்! என்னால் நம்ப முடியவில்லை!!எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து,நடக்க முடியாமல் வீல் சேரில் அம்ர்ந்து இருந்தார்! சோதித்ததில் அவருக்கு டி.பி.இருந்ததும்,மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது!அவரின் அலட்சியப்போக்கால் வியாதி உடலெல்லாம் பரவி இருந்தது.தினமும் என்னைக்காப்பாற்றுங்கள் என்று கேட்பார்.தீவிர சிகிச்சை செய்தும் முடியாமல் 10 நாளில் இறந்தும் போனார்.படித்தவர்களே மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது கண் இருந்தும் குருடர் போன்றது.சரி T.B. பற்றி..

.

Mycobacterium tuberculosis-காச நோயை உண்டாக்கும் கிருமி!!

T.B. என்று நாம் அழைக்கும் காச நோய் நுரையீரல்களைத்தான் முதலில் தாக்கும்!இருமல்,சளி உடல் எடை குறைதல், பலகீனம் ஆகியவை இதில் வரும்! குழந்தைகளைத்தாக்கும் போது இதனைபிரைமரி காம்ப்ளக்ஸ் என்று சொல்வார்கள்.இது ஒரு நுண்கிருமியால் ஏற்படுகிறது! இது இருமும் போது நுண்சளித்திவலைகளால் பரவுகிறது!இந்த நோய் குழந்தைகள் நோய்தாக்கியவருடன் அருகில் இருக்கும்போதுஅவர்களின் இருமல்,தும்மல்,சளி,எச்சிலுடன் முத்தமிடுதல் ஆகியவற்றால் பரவுகிறது! இந்தியக்குழந்தைகளில் இது அதிகம்!

ஒருவர் தும்மும்போது தெறிக்கும் சளித்திவலைகள்!!

 

ராபர்ட் கோச்- காசநோய் கிருமியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி!!

நடுத்தர வயதினர்,முதியோரைத்தாக்கும் போது கடுமையான இருமல்,வேகமான எடை குறவு மூச்சு விட முடியாமை,மாலையில் காய்ச்சல் காணப்படும்!நெஞ்சு நுண்கதிர்ப்படம் எடுத்தால் நுரையீரல் பாதிப்பை அறியலாம்.சளி சோதனையிலும் கிருமியைக் கண்டுபிடிக்கலாம்! இதற்கு சிகிச்சை ஆறு மாதகாலம் என்னும்போது இந்த நோய் எவ்வளவு கொடியது என்று அறியலாம். ஒரு முறை மருந்தை ஆரம்பித்துவிட்டால் நடுவில் விடாமல் 6 மாதம் சாப்பிட்டு ஆக வேண்டும்! நடுவில் உடல் தேறி நன்றாக இருக்கிறதே என்று இளம் வயதினர்கூட விட்டுவிட்டால் திரும்ப வந்துவிடும்! மறுமுறை வரும் டி.பி. மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படாது! இறக்கும் நோயாளிகளும் அதிகம்! இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!

29 comments:

jackiesekar said...

என் பாட்டியை தாக்கிய இந்த நோய் அவிரை பார்த்துக்கொண்ட என் அம்மாவையும் தாக்கியது என் அம்மாவும் என் பாட்டியும் இந்த நோய்தாக்கி இறந்து போனார்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

ஆனந்த் said...

96 - ல் நான் TB யால் பாதிக்கப்பட்டேன், ஆறு மாதங்கள் தொடர்ந்து மருந்து உட்கொண்டபின் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டேன். அதற்குப் பிறகு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. முறையான சிகிச்சையினால் TB யை முற்றிலும் ஒழிக்க முடியும். மாதம் 600 ரூபாய் மருந்துக்கு செலவழித்ததாக நினைவிருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் இதற்கான மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். மக்களிடம் விழிப்புணர்வு தேவை.

iniya said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு !! பதிவு அனைவரையும் சென்றடையவேண்டும்!!

வால்பையன் said...

நன்றி!
வரும் முன் காப்பாற்றுவதற்கு!

வேத்தியன் said...

மிக நல்ல பதிவு...
நல்ல பகிர்வு...
வருமுன் காப்போம்...

இந்திய தொலைக்காட்சிகளில் நடிகர் சூர்யாவை வைத்து இது குறித்த விழிப்புணர்வு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படும் அல்லவா???
நல்ல விடயம்...

இராகவன் நைஜிரியா said...

அருமையான இடுகை.

காசநோய் என்று கண்டுபிடிக்கப் பட்ட உடன், மருத்துவர் போதும் என்று சொல்லும் வரை, மருந்து உட்கொண்டால் சரியாகி விடும்.

புகைப் பழக்கம், காச நோயை வேகமாக முற்றச் செய்யும் என்று சொல்லுகின்றனரே, அது சரியா?

thevanmayam said...

அருமையான இடுகை.

காசநோய் என்று கண்டுபிடிக்கப் பட்ட உடன், மருத்துவர் போதும் என்று சொல்லும் வரை, மருந்து உட்கொண்டால் சரியாகி விடும்.

புகைப் பழக்கம், காச நோயை வேகமாக முற்றச் செய்யும் என்று சொல்லுகின்றனரே, அது சரியா?///

உண்மைதானே!!

thevanmayam said...

மிக நல்ல பதிவு...
நல்ல பகிர்வு...
வருமுன் காப்போம்...

இந்திய தொலைக்காட்சிகளில் நடிகர் சூர்யாவை வைத்து இது குறித்த விழிப்புணர்வு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்படும் அல்லவா???
நல்ல விடயம்.///
நிறைய தெரிந்து வைத்துள்ளீர் வேத்தியன்!!!

thevanmayam said...

என் பாட்டியை தாக்கிய இந்த நோய் அவிரை பார்த்துக்கொண்ட என் அம்மாவையும் தாக்கியது என் அம்மாவும் என் பாட்டியும் இந்த நோய்தாக்கி இறந்து போனார்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்///

வாங்க ஜாக்கி!!
கொடுமைங்க !!!
இதெல்லாம் எப்போது?

thevanmayam said...

96 - ல் நான் TB யால் பாதிக்கப்பட்டேன், ஆறு மாதங்கள் தொடர்ந்து மருந்து உட்கொண்டபின் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விட்டேன். அதற்குப் பிறகு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. முறையான சிகிச்சையினால் TB யை முற்றிலும் ஒழிக்க முடியும். மாதம் 600 ரூபாய் மருந்துக்கு செலவழித்ததாக நினைவிருக்கிறது. அரசு மருத்துவ மனைகளில் இதற்கான மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது என்று கேள்விப்பட்டேன். மக்களிடம் விழிப்புணர்வு தேவை.///

நிச்சயமாக!! விழிப்புணர்வு இருந்தால் இந்நோயிலிருந்து தப்பிவிடலாம்!!

thevanmayam said...

நல்ல விழிப்புணர்வுப் பதிவு !! பதிவு அனைவரையும் சென்றடையவேண்டும்!!///

நன்றி!!

thevanmayam said...

நன்றி!
வரும் முன் காப்பாற்றுவதற்கு!//

ஆமா !! நன்றி !!

ராஜ நடராஜன் said...

வல்லரசு என்று சொல்லிக் கொள்ளும் நாடுகள் முதலில் சுகாதாரம்,போக்குவரத்து,மனித மேம்பாடு எல்லாம் செய்து விட்டு மிச்ச காசு மற்றதுக்கு செலவிடுகிறார்கள்.நாம் பாதி உழைப்பை பாகிஸ்தான்காரனுக்கு பயந்துகிட்டு குண்டு செய்துட்டு மீதிய லஞ்ச லாவண்யம் பண்ணிகிட்டு சுகாதாரம்ன்னா கிலோ எவ்வளவுன்னு கேட்டுகிட்டு இருக்கிறோம்.

கூடவே ஒரு சந்தேகம்.சமசீரான உணவு இன்மையும் இந்த நோய்க்கு காரணம் என நினைக்கிறேன்.நுரையீரலை தாக்கும் நோய் என்பதால் யோகா,உடற்பயிற்சி போன்றவைகளுக்கு இதனை எதிர்க்கும் குணம் உண்டா?

Sasirekha Ramachandran said...

இது மிகவும் நல்ல பதிவு!!!மிகவும் உபயோகமான விஷயம்....இது எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று!!!

அபுஅஃப்ஸர் said...

நல்ல பதிவு டி.பி. பற்றி

தெரியவைத்ததுக்கு நன்றி

குமரை நிலாவன் said...

நல்ல பதிவு டி.பி. பற்றி

shanevel said...

மருத்துவ விழிப்புணர்வு கட்டூரை -- காசநோய் பற்றி அறிந்தேன். படித்தவரே அலட்சியப்படுத்திவிட்டாரா?... தெரிந்திருந்தால், கூட இருந்தவர்களே ஆலோசனை சொல்லி அவரை காப்பாற்றி இருக்கலாமே?... அலட்சியம் ஆபத்தானது. அருமையான கட்டூரைக்கு நன்றி..!

VIKNESHWARAN said...

நல்ல பதிவு... புது விசயங்கள் தெரிந்து கொண்டேன்...

Anonymous said...

பயனுள்ள பதிவு பகிர்தமைக்கு நன்றி.... நான் அறிந்து கொள்ளவும் பிறர்க்கு தெளிவுபடுத்தவும் பயன்படும்... நல்ல முயற்சி....ஒரளவு மேலோட்டமாக மட்டுமே இதை பற்றி அறிந்து இருந்தேன் இப்போது தெளிவாக அறிந்தேன்.. நன்றி

cheena (சீனா) said...

நல்ல தகவல்கள் - அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல்கள். விழிப்புணர்வு - இன்றியமையாத இன்றையத் தேவை.

நல்வாழ்த்துகள் மருத்துவரே !

வழிப்போக்கன் said...

அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....
:(((

வழிப்போக்கன் said...

தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை இடுக...

malar said...

மிக நல்ல பதிவு...
நல்ல பகிர்வு...
வருமுன் காப்போம்...

Anonymous said...

I had TB on 94.That time i took tablets for 6 months.Then after 12 years i was suffered with TB.Doctor told that the reason for that is we should take 9 months treatment.So i took tablets for 9 months .So it will be good if we do regular checkups for this.

Devi

Anonymous said...

4 month before i got diagonised for TB. now i m taking treatment (AKT-4) for TB also. now i m not having any symptom. doctor said i have to take tablet for another 2 months. After 2 months how do i check that TB is completely cured or not? is there any procedure for it?

Rajeswari said...

பயனுள்ள மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதிவு..பகிர்ந்தமைக்கு நன்றி..எனது அத்தை காசநோயால் இறந்தவர்.எவ்வளவு கொடிய நோய் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.

Anonymous said...

I am slso affected by T.B. five year back after that i went to Tambaram sanitorium (Tamil nadu biggest hospital for TB), they give medicine for 6 months. and then it rectifed by immediately by continous tablet.

Anonymous said...

As per my knowledge we should take tablets for minimum 9 months.First 6 months for curing TB.And another 3 months for avoiding TB to reoccur.

ஜெயம் said...

இன்றைய காலத்தில்
இது போன்ற முன் எச்சரிக்கை பதிவுகள்
மிகவும் அவசியம் ....

தொடரட்டும் உங்கள் சேவை

வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் ....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory