Wednesday, 8 April 2009

மாரடைப்பைத்தடுக்க!

 

இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ பெண்களோ தங்கள்  இடுப்பளவைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும் சரியான பயிற்சி என்ன என்பது நிறைய பேருக்குத்தெரிவதில்லை.

இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்? இந்தக் கேள்வி சிலருக்குத்தோன்றலாம்.

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள்.

ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.

இடுப்பளவை எப்படிக்குறைக்கலாம் என்று பார்ப்போம்!!

1.ஹிந்து ஸ்குவாட்ஸ்-(சாதாரண ஸ்குவாட்ஸ்தான்)-இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.

நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல்  கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில் செய்ததுதானே!

100 தடவை வேகமாக 5 நிமிடத்திற்குள் செய்தால் நல்லது.

மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

2.மேடான பகுதியில் ஏறுதல்- மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில்10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத்தெரிகிறதா? செய்து பாருங்கள்!!!

3.இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15 லிருந்து 60 வினாடிவரை அவ்வாறு வைத்து இருக்கவும். சாதாரணமாகத்தெரிகிறதா?1.75 இன்சிலிருந்து 3 இன்ச்வரை  ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.

4. பக்கவாட்டில் --நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.

5.நேராக நிற்கவும் -- இடுப்பை இடது புறம் வளைக்கவும்(TWIST).முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.

மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.

தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்.

படித்துவிட்டீர்கள்!! இனியென்ன?

தமிலிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டைப்போடுங்க!!

34 comments:

ஆதவா said...

எனக்கு இதற்கும் சம்பந்தமில்லைங்கோ!!!!

நான் தான் முதல் பின்னூட்டமா?? ஹாட் திரிகளுக்கு வாழ்த்துக்கள் சார்

ஆதவா said...

சார், தொந்தி குறைக்க ஏதும் வழி, பயிற்சச இருந்தால் சொல்லுங்களேன்... கொஞ்சம் விரிவாக!!!!

(இதுவும் நமக்கில்லை!! தெரிந்தவருக்கு!)

குடந்தைஅன்புமணி said...

நம்மளை நாமலே பாதுகாத்துக் கொள்வதும் நல்லதுதான். நல்ல பதிவு தேவா சார்!

குடந்தைஅன்புமணி said...

//ஆதவா said...
சார், தொந்தி குறைக்க ஏதும் வழி, பயிற்சச இருந்தால் சொல்லுங்களேன்... கொஞ்சம் விரிவாக!!!!

(இதுவும் நமக்கில்லை!! தெரிந்தவருக்கு!)//

நம்பிட்டோம்... ஆதவா!

thevanmayam said...

எனக்கு இதற்கும் சம்பந்தமில்லைங்கோ!!!!

நான் தான் முதல் பின்னூட்டமா?? ஹாட் திரிகளுக்கு வாழ்த்துக்கள் சார்///

வருக!! ஆதவா!! பின்னாடி வரும்முன்!!

thevanmayam said...

நம்மளை நாமலே பாதுகாத்துக் கொள்வதும் நல்லதுதான். நல்ல பதிவு தேவா சார்!///

ஆமா மணி!!

வல்லிசிம்ஹன் said...

நல்ல அட்வைஸ் . முயற்சி செய்கிறேன்.

thevanmayam said...

சார், தொந்தி குறைக்க ஏதும் வழி, பயிற்சச இருந்தால் சொல்லுங்களேன்... கொஞ்சம் விரிவாக!!!!

(இதுவும் நமக்கில்லை!! தெரிந்தவருக்கு!)///

இதையே செய்யச்சொல்லுங்க.

VIKNESHWARAN said...

பயனான தகவல் டாக்டர். மிக்க நன்றி...

thevanmayam said...

நல்ல அட்வைஸ் . முயற்சி செய்கிறேன்.//

வருகைக்கு நன்றி

ilayadhasan said...

//மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

//

மறுபடியுமா ...விடு ஜூட் !

ராஜ நடராஜன் said...

மாரடைப்பா!அப்படின்னா என்ன?அதுதான் நீங்க சொல்றதெல்லாம் செய்யறேனே?ஆனால் நாள் முழுதும் உட்கார்ந்துகிட்டே இருக்குறவனப் பார்த்து 100 தோப்புக்கரணம் அதுவும் 5 நிமிசத்துல போடுன்னா இது ஆகிற காரியமா?

( போலிஸ்காரங்களையெல்லாம் விட்டுடுங்க.அப்பாவியா உட்கார்ந்துட்டு இருக்குற ஆளுகளை வந்து புடுச்சுக்குங்க:))

அபுஅஃப்ஸர் said...

மருத்துவரய்யா... நம்ம ஆட்கள் அதிமக் தொப்பையினால் அவதிப்படுகின்றார்கள்... எல்லம் சோறு திண்பதனால் வரும் மாயம்

அபுஅஃப்ஸர் said...

ஆதவா said...
சார், தொந்தி குறைக்க ஏதும் வழி, பயிற்சச இருந்தால் சொல்லுங்களேன்... கொஞ்சம் விரிவாக!!!!

(இதுவும் நமக்கில்லை!! தெரிந்தவருக்கு!)


Repeattttttt

அபுஅஃப்ஸர் said...

நல்ல பயனுள்ள பதிவு

அதிகமா உடற்பயிற்சி செய்தாலும் வாயைக்கட்டினால்தானே சரியாகும்

அபுஅஃப்ஸர் said...

ஓவரா தொப்பையை வளர்த்துக்கினு குறைக்க ரொம்ப கஷ்டப்படுபவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும்.....

அபுஅஃப்ஸர் said...

pathivu sarithaan... But Picture tooooooooo much hi hi hi

thevanmayam said...

//மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

//

மறுபடியுமா ...விடு ஜூட் !////

உடனே செய்ய வேண்டாம்!!

thevanmayam said...

மாரடைப்பா!அப்படின்னா என்ன?அதுதான் நீங்க சொல்றதெல்லாம் செய்யறேனே?ஆனால் நாள் முழுதும் உட்கார்ந்துகிட்டே இருக்குறவனப் பார்த்து 100 தோப்புக்கரணம் அதுவும் 5 நிமிசத்துல போடுன்னா இது ஆகிற காரியமா?

( போலிஸ்காரங்களையெல்லாம் விட்டுடுங்க.அப்பாவியா உட்கார்ந்துட்டு இருக்குற ஆளுகளை வந்து புடுச்சுக்குங்க:))///

நீங்க தைரியமா உக்கார்ந்து இருங்க! நான் பார்த்துக்கிறேன்!

thevanmayam said...

pathivu sarithaan... But Picture tooooooooo much hi hi hi///

அபு இருந்ததிலேயே கொஞ்சம் பரவாயில்லாம இருந்தது இதுதான்!!
இதை விட்டா போலீஸ்காரன் படம்தான்!!

இளமாயா said...

நல்ல உபயோகமான பகிர்வு.நன்றியிம் ,பாராட்டுக்களும்.

thevanmayam said...

நல்ல உபயோகமான பகிர்வு.நன்றியிம் ,பாராட்டுக்களும்.///

நன்றி இளமாயா!!

வால்பையன் said...

சராசரியாக ஒரு வாரத்துக்கு 8.6 பதிவுகள்!
விடுமுறை நாட்களை கழித்து பார்த்தால் நாளொன்றுக்கு 1.5 பதிவு!

உடம்ப பார்த்துக்கோங்க டாக்டர்!
எங்களையே கவனிச்சிகிட்டு இருந்தா எப்படி?

Anonymous said...

hi,

Really nice information, keep posting fitness related information.

அமுதா said...

பயனுள்ள விஷயம். படிக்க நல்லா தான் இருக்கு... செய்யறதை நினைச்சா ... ம்...

SUREஷ் said...

நீங்க போட்டிருக்கும் படத்துக்கே மாரடைப்பு வருமே...

நசரேயன் said...

எனக்கு இல்லை

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல பதிவு. ஆனால் எனக்கு இதையெல்லாம் செய்துபார்க்கத்தான் தொப்பை இல்லையே :(

ஹேமா said...

நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன்.இப்போதைக்கு எனக்குத் தேவையில்லை.ஆனாலும் தேவைப்படலாமே !

Subash said...

மிகவும் உபயோகமான பதிவு.
மிக்க நன்றிஇ
நண்பர்களே. இந்த முறைப்படி செய்து வந்தால் இடுப்பின் 2 பக்கங்களிலுமுள்ள சதை குறைந்துவிடும். ஜிம் மில் கூட இயந்திரங்களை பாவிக்காமல் இந்த முறையை பின்பற்றியே பயிற்சியளித்தார்கள். 2 மாதத்தில் பலன் சூப்பர்ப்.

மற்றும் பல வீடியோக்கள் யு டியுபில் இருக்கு. பயன்பெறவும்.
பதிவிற்கு நன்றி தமிழ்த்துளி

Joe said...

நல்ல பதிவு!
இதைப் படித்து பல பேர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் நல்லது.

உடற்பயிற்சி செய்வது நேர விரயம் என்றொரு அபத்தமான எண்ணம் நம்மவர்களிடம் உள்ளது.

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு!
இதைப் படித்து பல பேர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தால் நல்லது.

உடற்பயிற்சி செய்வது நேர விரயம் என்றொரு அபத்தமான எண்ணம் நம்மவர்களிடம் உள்ளது.//

இதற்கு ஒரு சின்ன டெக்னிக் இருக்குது.அதாவது காலைக்கடன்,பல்துலக்கி அடுத்த வேலை உடற்பயிற்சிதான் என்று சின்னவயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.நமக்கெல்லாம் சொல்லிக்கொடுக்காமல் விட்டதால் இனிமேல் கூட ஆரம்பிக்கலாம்.இந்த பழக்கம் பிடிச்சுகிட்டா அப்புறம் விடாது.

Rajeswari said...

பயனுள்ள பதிவு..இதைபற்றி
இன்னும் நிறைய சொல்லுங்க தேவன் சார்....

delphine said...

hmm. Excellent! really!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory