Thursday, 2 April 2009

பதிவர் என்றால் இளப்பமா?

 

சொல்லாமலே யார் பார்த்தது!! சொல்லத்தான் நினைக்கிறேன்!!!

என்ன பாட்டா கிளப்பறேன்னு பார்க்கிறீர்களா? என்ன செய்வது?

”இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாயோ?”- என்பது போல சொல்லவந்ததைச் சொல்லி விடுகிறேன்!

பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்” எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வது? பதிலும் கேள்வியும் தகவல்களும் உலகம் முழுக்க வலை முழுக்க பரவிக்கிடக்கின்றன!!

தேவையானதை பதிவர் தொகுக்கிறோம்!! கடை போலத்தான்!!  தேவையானவர் ருசிக்கிறார்.

அவ்வளவுதான்!

ஆனந்தவிகடன் நான் விரும்பிப் படிக்கும் இதழ்களில் ஒன்று!! எல்லோருக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன்!! குமுதம், விகடனில் எழுத என் அப்பாவுக்கு ரொம்ப ஆவல்!! நிறைய எழுதியிருக்கிறார்!!

அப்பொழுதிலிருந்தே எழுத்துமேல் எனக்கு ஆசை!! ஆனால் தொடக்கம் ஒன்று வேண்டுமே!

கல்லூரி மலரில் என் கவிதைகள், ஓவியங்கள் வந்துள்ளது!! 

அதன் பின் எழுதும் ஆர்வம் இல்லை!! ப்ளாக் தான் நான் எழுத வாய்ப்பாக அமைந்தது!!

எழுத வந்தவுடன் ஆதரவளித்த பதிவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!!

அதன் பிறகு வலைச்சர ஆசிரியர்!!  எழுதும் ஆவலைத் தூண்ட இவை போதாதா?

இன்று யூத் விகடன்!!! யூத் விகடனில் முதல் பதிவை கண்ட  நம் பதிவர்கள் சந்தோசத்தில் குளித்தார்கள்!!வலையுலகமே திருவிழாக்கொண்டு கொண்டாடிமகிழ்ந்தது!! அது புதிய பதிவர்களுக்கு தரமான பதிவுகள் எழுத யூத் விகடன் தந்த உற்சாக மருந்து!!

அதுவே பதிவர்களுக்கு சந்தோசத்தை அள்ளி அள்ளித் தந்தது!! தந்து கொண்டு இருக்கிறது! ஊக்கம் இருந்தாத்தானே எழுத ஒரு ஆர்வம் வரும்!!

அந்த விதத்தில் யூத் விகடனுக்கு நன்றி! நன்றி நன்றி!!

நானும் இப்பப் போடுவோம், அப்பப்போடுவோம் என்று காலம் கடத்திவிட்டேன்.. இப்போதுதான் நேரம் வந்தது!!

லேட்டா எழுதினாலும் லேட்டஸ்டும் சேர்த்து எழுதுவோம்!! என்ன நான் சொல்வது?

யூத் விகடனில் என் பதிவுகள் இதுவரை 9 ஒன்பது வந்து உள்ளது!!

எனக்கு மகிழ்ச்சிதான்!! அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!

1.இந்தியா அமெரிக்காவை முந்துகிறது! ----http://youthful.vikatan.com/youth/bcorner2.asp

2.தலை நிமிர வைத்த இந்தியன் ------http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
3.தண்ணீர் தண்ணிர் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
4.இளைஞர்களும் தவறுகள் 10 ம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp
5.மரம் ஒரு அதிசயம் ---http://youthful.vikatan.com/youth/bcorner3.asp 6.மரியாதைக் கொலையும் மடியும் மங்கையரும்!
7.வன்முறை இளைஞர்களும் நாமும் ---http://youthful.vikatan.com/youth/bcorner.asp

8.மனைவியை மயக்கும் மந்திரங்கள்--http://youthful.vikatan.com/youth/devanmayamstory23032009.asp

9.சினேகிதியை வசீகரிக்க உங்கள் அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்!http://youthful.vikatan.com/youth/dhevanmayamstory02042009.asp

என் பதிவுகளை வெளியிட்ட யூத் விகடனுக்கு நன்றிகள் பல!!!

தமிழ் இதழ்களில் வருவதைவிட சிறப்பான ,தரமான பதிவுகளை நம் வலையுலக அன்பர்கள் தந்துகொண்டு இருக்கிறார்கள்!! என்பது இன்றைய தமிழ் இதழ்களைப் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்!!

பதிவர்கள் தரமான பதிவுகள் நிறையத்தருகிறார்கள்!!திறமை மிகுந்தவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை!

நான் பொறாமைப்படும் பதிவர்கள் நிறய இருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து நான் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! ஏகப்பட்ட துரோணர்களுக்கு

 ”நான் கட்டைவிரல் கொடுக்காத ஏகலைவன்!”

39 comments:

thevanmayam said...

அன்பு நண்பர்களே! பிடித்து இருந்தால் ஓட்டுப்போடவும்!!
தவ்று இருந்தால் பின்னூட்டமிடவும்!!

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் தேவா - இளமை விகடனில் 9 முறை வந்ததற்கு

அனுஜன்யா said...

வாழ்த்துகள் தேவன். இன்னும் பெரிய எழுத்தாளராக வாழ்த்துகள்.

அனுஜன்யா

thevanmayam said...

நல்வாழ்த்துகள் தேவா - இளமை விகடனில் 9 முறை வந்ததற்கு///

மிக்க நன்றி !!!அடிக்கடி வந்து கவனிங்க, எங்களையும்!!

thevanmayam said...

வாழ்த்துகள் தேவன். இன்னும் பெரிய எழுத்தாளராக வாழ்த்துகள்.

அனுஜன்யா///

மிக்க நன்றி கவிஞரே!!
கவிதை எழுத சொல்லித்தாங்களேன்!!

வேத்தியன் said...

வாழ்த்துகள் தேவா அண்ணே...
தொடர்ந்து எழுதுங்க...

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள் தேவா

அபுஅஃப்ஸர் said...

//ப்ளாக் தான் நான் எழுத வாய்ப்பாக அமைந்தது!! எழுத வந்தவுடன் ஆதரவளித்த பதிவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!! //

ஆமாம் உண்மைதான் இது ஒரு வடிகால் மனதில் உள்ளதை வெளிக்கொணர‌

அபுஅஃப்ஸர் said...

//thevanmayam said...
அன்பு நண்பர்களே! பிடித்து இருந்தால் ஓட்டுப்போடவும்!!
தவ்று இருந்தால் பின்னூட்டமிடவும்!!
//

என்னா தேவா இப்படி சொல்லிட்டீங்க, நீங்க எழுதிற எதுவுமே சோடைபோகாது, யாருக்கு பிடிக்காமல் இருக்கும்

Sinthu said...

அண்ணா வாழ்த்துக்கள்.. நல்ல முன்னேற்றம் தான்.. உங்கள் பெருந்தன்மையை நினைத்து சந்தோசமாக இருக்கு,,,,

அபுஅஃப்ஸர் said...

மேலும் மேலும் உங்கள் பதிவுகள் அனைத்தும் தமிழின் தலைசிறந்த வார இதழில் வெளிவர வாழ்த்துக்கள்

thevanmayam said...

வாழ்த்துகள் தேவா அண்ணே...
தொடர்ந்து எழுதுங்க...///
தொட்டாச்சு!!

thevanmayam said...

//ப்ளாக் தான் நான் எழுத வாய்ப்பாக அமைந்தது!! எழுத வந்தவுடன் ஆதரவளித்த பதிவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்!! //

ஆமாம் உண்மைதான் இது ஒரு வடிகால் மனதில் உள்ளதை வெளிக்கொணர‌///

அபுவுக்கு ஸ்பெஷல் நன்றி!

thevanmayam said...

அண்ணா வாழ்த்துக்கள்.. நல்ல முன்னேற்றம் தான்.. உங்கள் பெருந்தன்மையை நினைத்து சந்தோசமாக இருக்கு,,,,/

ரொம்ப புகழாதம்மா!!

MayVee said...

valthukkal tholare

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த லொள்ளு எல்லார்கிட்டயும் இருக்கு நண்பா.. பதிவிடுவதின் சுகமும், அதனால கிடைக்கும் நட்பும் அனுபவிச்சாத்தான் தெரியும்.. உங்களோட இத்தனை பதிவுகள் விகடன்ல வந்திருக்கா.. வாழ்த்துக்கள்..

அறிவே தெய்வம் said...

\\பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்” எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார்.\\

நமக்கு நாமே சொல்லிக் கொள்வதற்காக...

நம்மை பல விசயங்களில் தெளிவுபடுத்திக்கொள்ள...

சரியா.....

வாழ்த்துக்கள்

thevanmayam said...

இந்த லொள்ளு எல்லார்கிட்டயும் இருக்கு நண்பா.. பதிவிடுவதின் சுகமும், அதனால கிடைக்கும் நட்பும் அனுபவிச்சாத்தான் தெரியும்.. உங்களோட இத்தனை பதிவுகள் விகடன்ல வந்திருக்கா.. வாழ்த்துக்கள்.///

பதிவு சுகமும் போதையும்,
ஒரு கவிதை போல்!

thevanmayam said...

valthukkal tholare///

மிக்க நன்றி.

thevanmayam said...

\பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்” எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார்.\\

நமக்கு நாமே சொல்லிக் கொள்வதற்காக...

நம்மை பல விசயங்களில் தெளிவுபடுத்திக்கொள்ள...

சரியா.....

வாழ்த்துக்கள்///

மிகச்சரிதான் நண்பரே!!

நட்புடன் ஜமால் said...

நல் வாழ்த்துகள் தேவா!

ரொம்ப சந்தோஷமாயிருக்கு


(ஓட்டியாச்சுங்கோ )

கலை - இராகலை said...

///எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார். இதற்கு என்ன பதில் சொல்வது? பதிலும் கேள்வியும் தகவல்களும் உலகம் முழுக்க வலை முழுக்க பரவிக்கிடக்கின்றன!!///

சரியான பதிலை கொடுத்திங்க‌

வாழ்த்துக்கள் சார்

ஆதவா said...

நான் மிகவும் மதிக்கும், தவறாமல் படிக்கும் பதிவருள் நீங்களும் ஒருவர். (சிலசமயம் ஒருநாளைக்கு இரண்டு பதிவுகள் போடுவதாலும் நான் வருவதற்குத் தாமதமாகிறதாலும் தவறவிட்ட [எழுதாமல் விட்ட] பதிவுகள் நிறைய) உங்களது ஒன்பது பதிவுகள் யூத்ஃபுல் விகடனில் வந்திருக்கிறது என்றால், உங்கள் எழுத்தில் உள்ள தரமே காரணம்!!!

தொடர்ந்து எழுதுங்க தேவன் சார்!!

புருனோ Bruno said...

// யூத் விகடனில் என் பதிவுகள் இதுவரை 9 ஒன்பது வந்து உள்ளது!!//

வாழ்த்துக்கள் சார்

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam said...

அன்பு நண்பர்களே! பிடித்து இருந்தால் ஓட்டுப்போடவும்!!
தவ்று இருந்தால் பின்னூட்டமிடவும்!! //

அப்ப பிடிச்சு இருந்தா பின்னூட்டம் போட வேண்டாமா?

இராகவன் நைஜிரியா said...

இளமை விக்டனில் 9 முறை வந்து நீங்கள் இன்றும் இளைமையானவர் என்று நிரூபித்துவிட்டீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

// பதிவரா வந்து என்ன சாதித்தோம்?சாட்டில் ஒரு நண்பர் கேட்டார்” எதுக்காக ப்ளாக் எழுதுகிறீர்கள் ? என்ன யூஸ்?” என்றார். //

அதைப் பற்றி தெரிஞ்சுக்கணும் என்றால் பதிவைப் படிக்க சொல்லுங்க... கூடவே பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லுங்க...

இராகவன் நைஜிரியா said...

// யூத் விகடனில் என் பதிவுகள் இதுவரை 9 ஒன்பது வந்து உள்ளது!! //

வாழ்த்துகள் தேவா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கண்ணா.. தூள்.. தூள். தூள்..

அபாரம்..

9 பதிவுகள் தேர்வு எனில் தங்களின் எழுத்து வன்மை புரிகிறது..

வலையுலகம் பெருமையடைகிறது தங்களின் இருப்பினால்..

வாழ்க வளமுடன்

அகநாழிகை said...

தேவன்மயம்,
தாமதமாக வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. இனி தொடர்கிறேன்.
உங்கள் எழுத்துக்களை வாசித்துவிட்டு வருகிறேன்.

Rajeswari said...

வாழ்த்துக்கள் தேவன் சார்...

Rajeswari said...

கண்டிப்பா என் ஓட்டு உங்களுக்குதான்..இதோ போட்டுறேன்..

வால்பையன் said...

என்னடா இவன் எப்பவுமே எதிமறையா பேசுறான்னேன்னு தப்பா நினைக்காதிங்க!

யூத்ஃபில் விகடன் ஒரு இணையத்தளம், நாமும் இணையத்தில் தான் இருக்கிறோம். நம்முடய பதிவுகளை தமிழ்மணம் மற்றும் தமிழ்ஷில் இணைத்து பல பேர் படித்து கடுப்பாக அனுப்புகிறோம், சில திரட்டிகள் தாமாகவே தமது பதிவை திரட்டுகின்றன.

அதில் திரட்டி, தமிழ்கணிமை போன்றவை முக்கியமானவை!.

இருப்பினும் பாருங்கள் இன்று திரட்டியில் இணைப்பது எதோ ஆரம்பத்தில் செய்து கொண்டிருந்தோம் என்பதற்காக மறுபடி மறுபடி செய்து கொண்இருக்கிறோம். ஆனால் நமது நண்பர்கள் புக்மார்க்கிலோ அல்லது ரீடரிலோ வைத்து தான் நம்மை படிக்கிறார்கள்.

ஆக திரட்டிக்கு வேலையே இல்லை!

நான் சொல்லவருவது இது உங்கள் எல்லை இல்லை, நீங்கள் காகிதத்தில் அச்சேற வேண்டும் என்பது எனது ஆசை.

thevanmayam said...

நல் வாழ்த்துகள் தேவா!

ரொம்ப சந்தோஷமாயிருக்கு(ஓட்டியாச்சுங்கோ )

சந்தொச்ம் ஜமால்

குடந்தைஅன்புமணி said...

மேன்மேலும் பல வெற்றிகள் உங்களை வந்து சேர...வாழ்த்துகள் தேவா சார்!

குடந்தைஅன்புமணி said...

தமிழ்மணம்,தமிழிஸ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு!

நிலாவன் said...

//இந்த லொள்ளு எல்லார்கிட்டயும் இருக்கு நண்பா.. பதிவிடுவதின் சுகமும், அதனால கிடைக்கும் நட்பும் அனுபவிச்சாத்தான் தெரியும்.. உங்களோட இத்தனை பதிவுகள் விகடன்ல வந்திருக்கா.. வாழ்த்துக்கள்//

உண்மை கா.பா. அவர்களே .

வாழ்த்துக்கள் தேவா சார் .

நிலாவன் said...

நான் பொறாமைப்படும் பதிவர்கள் நிறய இருக்கிறார்கள்! அவர்களிடமிருந்து நான் தினமும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்! ஏகப்பட்ட துரோணர்களுக்கு
”நான் கட்டைவிரல் கொடுக்காத
ஏகலைவன்!”

நானும் கற்றுக்கொண்டிருக்கிறேன்
தேவா சார் .

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory