Saturday 9 May 2009

கேள்வியும் பதிலும்!

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் குமரை நிலவன் !

மனம் பேசிய மௌனங்கள் என்ற பிரபலமான தளத்தின் சொந்தக்காரர்!! 

http://nilaaavan.blogspot.com/

இந்த தொடர் பதிவை ஆரம்பித்தது

நிலாவும் அம்மாவும் அவர்கள் தற்போது இந்தியா வந்து இருக்கிறார்கள்!! அவர்களுக்கு என் நன்றிகள். அதன் பின்  தொடர்ந்தவர்கள்

ரவீ

அத்திரி

கடையம் ஆனந்த்

கார்த்திகை பாண்டியன்

நண்பர் 32 கேள்விகள் கேட்டு இருக்கார்! இந்தப் பதிவை நிலாவும் அம்மாவுமில் படிக்கும்போதே இந்த ஏவுகணைகள் நம்மைத்தாக்கக்கூடாது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்!! தாக்கிவிட்டது!! நியூட்டனின் 3 வது விதிப்படி பதில் கொடுத்துத்தானே ஆக வேண்டும்!!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப்பெயர் ”தேவன் மாயம்” என்பது என் இயற்பெயரல்ல! தேவன் --தாத்தா பெயர்!! மாயம் --- அப்பா பெயர்!! என் இயற்பெயர் வேறு!! பேர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்பார்கள்!! அப்பா பெயருடன் அப்பச்சி பெயரையும் சொல்லட்டுமே !!! என்றுதான் இந்தப்பெயர்!!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?   

பாசமலர் படத்தில் பாடல் ஓடிக்கொண்டு இருந்தது! எந்தப்பாடல்? உங்களுக்குத்தான் தெரியுமே!!  காரைக்குடி கண்ணதாசனின் ”மலர்ந்தும் மலராத பாதி மலர்பொல” பாடல்தான்!! உலகமே அழும் இந்தப்பாடலுக்கு!! 

என்ன? நீங்க அழவில்லையா? இல்லை பார்க்கவில்லையா? ஒரு முறை போட்டுப் பார்த்து அழுதுவிடுங்கள்!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?முன்பு குமுதத்தில் கையெழுத்துப்போட்டி நடக்கும்! நான் 8 வது படித்து வந்தேன்! அப்போது பரிசுபெற்ற கையெழுத்தை பிரசுரித்து இருந்தார்கள்!! அதைப்பார்த்துவிட்டு என் அப்பா ”8வது படிக்கும் என் மகன் இதைவிட அழகாக எழுதுவான்” என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.  இப்போது மருத்துவரான பின்................? மருத்துவர் கையெழுத்தாகிவிட்டது!

4.பிடித்த மதிய உணவு என்ன?

நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு  ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உண்மையைச்சொன்னால் எனக்கு நட்பைப் தேடிப்பெறத்தெரியாது! தற்போது நட்பைத்தொடரவும் இயலவில்லை!!பழைய நண்பர்கள் அப்படியே இருக்கிறார்கள்!!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடலில்தான்!! கடலின் பிரம்மாண்டம் அசத்தும்!! பயத்தோடு குளிக்கும் த்ரில் தனிதான்!!......

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தையும்,முடியையும் !!

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது: நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம்!! எதிலும் பாதிதான் தெரியும் என்று ஒத்துக்கொள்ளாத என் மனம்!!

பிடிக்காதது : எதில் ஈடுபட்டாலும் பரிசு பாராட்டு பெறவேண்டும் என்று நினைப்பது!! இல்லாவிட்டால் அந்தப்போட்டியில் கலக்க மாட்டேன்!http://kelvi.net/topblogs/லிருந்து வெளிவந்ததே அதனால்தான்!!

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: நேர்மை,உண்மை  பிடிக்காதது: இல்லை!.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அம்மா,அப்பா

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

கருநீல ஜீன்ஸ். மஞ்சள் சட்டை!!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எதையும் இல்லை!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

சிகப்பு, மயில் கழுத்து நிறம்!

14.பிடித்த மணம்?

ப்ரூட் டியோட்ரண்ட் மணம்! பவழ மல்லிகை மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. வேத்தியன் --- பழக இனியவர்! நல்ல அறிவியல் பதிவுகள் போடுபவர்! இவரின் பல அறிவியல் பதிவுகள் அமைதியாக சூடான இடுகையில் வந்துள்ளன!! பதிவுகளில் தன்னைப்பற்றி எதுவும் எழுதிக்கொள்ளாதவர்!!

2.ரசனைக்காரி --- பெயருக்கு ஏற்றார்ப்போல் ரசித்து எழுதுகிறார். பருத்திப்பால்,பணியாரம் என்று நம் மணம் பேசுபவர்!!

3.முனைவர் இரா.குணசீலன் --- தமிழ் ஆர்வலர்!! தமிழ் வளர்த்த சான்றோர்பற்றி தொடர்ந்து எழுதுபவர்! தினகரன்,திண்ணை ஆகியவற்றில் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன!!

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அவரது இந்தக்கவிதை

பொருளாதாரத்தை தேடிச் சென்ற

நீ

எங்கே என்னை தொலைத்து விடுவாயோ

என்ற பயத்தோடு காத்திருக்கிறேன்

சீக்கிரம் வந்துவிடு

தனிமை என்னை தனிமைப்

படுத்தும் முன்

என் எதிர்பார்ப்புகளும்

வற்றிவிடும் முன்

அதைவிட

எந்தவொரு காரணமும் கூறி

தவிர்க்க முடியாமல்

உன்னையொத்த ஒருவன்

என்னை பெண் பார்க்க வரும்முன்
வந்துவிடு சீக்கிரம்

.

17. பிடித்த விளையாட்டு?

பட்டம் விடுதல்,கில்லி,கோலி,கிரிக்கெட்,பேட்மிட்டன்

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, அடிக்கடி கண்ணாடி பார்ப்பவர்!!

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

உண்மையைச்சொல்லும் படங்கள்!! நிகழ்காலத்தை வரும் சந்ததியினர் புரிந்துகொள்ள உதவும் படங்கள்!!

20.கடைசியாகப் பார்த்த படம்?

தங்கை குடும்பம் லீவில் வந்ததால் திரை அரங்கு சென்று பார்த்தது -- யாவரும் நலம்.

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

தமிழ் கம்ப்யூட்டர்!!

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பவும் நான் மாற்றுவதில்லை!!

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்? புல்லாங்குழலின் ஒலி

பேருந்தின் ஏர் ஹார்ன்!!

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

900 கிலோமீட்டர்!!

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமை இல்லாதோர் உண்டா? ரங்கோலி,கோலம் புதிதாய்ப் போடுதல்!! எப்போதாவது வரைதல், கல்லூரியில் சோப்பு சிற்பத்தில் தாகூர்,லெனின் செய்து பரிசுபெற்றது!! 

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஆராயாமல் சிந்திக்காமல் அடுத்தவர் மேல் பழிபோடுவது!!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

எல்லாவற்றையும் தள்ளிப்போடும் சாத்தான்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி!!

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாக இருக்க ஆசை!! பெற்றோருக்கு பாசமான மகனாக, மனைவிக்கு சிறந்த கணவனாக!!

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நண்பர்களுடன் சுற்றுதல்!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இடைவிடாத ஆன்ம வெளியின் ஒரு இழை!!

 

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நபர்கள்

1.வேத்தியன்http://jsprasu.blogspot.com/

2.ரசனைக்காரிhttp://moodupani.blogspot.com/

3.முனைவர்.இரா.குணசீலன்!!http://gunathamizh.blogspot.com/

வந்து கலக்குங்க!!

என் நேற்றைய பதிவு யூத்ஃபுல்லில் வந்து உள்ளது!!

நன்றி யூத்விகடன்!!மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5) முக்கிய வழிகள்!!http://youthful.vikatan.com/youth/index.asp

பதில்கள் பிடித்தால் ஓட்டு தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் குத்துங்க!

39 comments:

Sinthu said...

அருமையான பதிவு.. திஒடர் பதிவு ஆனாலும், இலகுவான கேள்விகளாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றன..
உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் வந்தது...

தேவன் மாயம் said...

அருமையான பதிவு.. திஒடர் பதிவு ஆனாலும், இலகுவான கேள்விகளாகவும், உண்மையானதாகவும் இருக்கின்றன..
உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பும் வந்தது...////

ஆமா! இந்த பதிவு எழுத உன்னையும் அழைத்துள்ளார்கள்!

Thamiz Priyan said...

அழகா எழுதி இருக்கீங்க டாக்டர்!

தேவன் மாயம் said...

அழகா எழுதி இருக்கீங்க டாக்டர்!///

முடிந்தவரை!!

வேத்தியன் said...

வந்தேன்...

வேத்தியன் said...

என்ன? நீங்க அழவில்லையா? இல்லை பார்க்கவில்லையா? ஒரு முறை போட்டுப் பார்த்து அழுதுவிடுங்கள்!!//

நீங்க சொன்னா செய்யாம இருக்கு முடியுமா???
செஞ்சுடறேன்...

வேத்தியன் said...

நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!!//

பெரிய ஆளு தான் நீங்க...

வானத்துல பறக்குற விமானம், கடல்ல போற கப்பல் தவிர எல்லாம் உள்ள போகும் போல...

நான் வெஜி..

வேத்தியன் said...

பிடிச்சது: நமக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம்!! எதிலும் பாதிதான் தெரியும் என்று ஒத்துக்கொள்ளாத என் மனம்!! //

இந்த அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு...

வேத்தியன் said...

பிடித்தது: நேர்மை,உண்மை பிடிக்காதது: இல்லை!./

அருமை..
வாழ்த்துகள்...

வேத்தியன் said...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

900 கிலோமீட்டர்!!//

:-)
கேள்விக்கு இது தான் சரியான பதில்...

வேத்தியன் said...

ரங்கோலி,கோலம் புதிதாய்ப் போடுதல்!! எப்போதாவது வரைதல், கல்லூரியில் சோப்பு சிற்பத்தில் தாகூர்,லெனின் செய்து பரிசுபெற்றது!!//

சவர்க்காரத்தில் சிற்பம் செய்வதென்பது எல்லொருக்கும் இயலாத காரியம்...
தனித்திறமை...
அருமை...

வேத்தியன் said...

இடைவிடாத ஆன்ம வெளியின் ஒரு இழை!!//

கலக்கல்...

வேத்தியன் said...

கண்டிப்பா எழுதுறேன்...

ராஜேஸ்வரி அக்காவிற்கும், முனைவர்.இரா.குணசீலனுக்கும் வாழ்த்துகள்...

வேத்தியன் said...

இளமை விகடனில் பதிவு வந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி...

வேத்தியன் said...

ஓட்டு போட்டாச்சு...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.பிடித்த மதிய உணவு என்ன?

நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!! //

எலும்பு சேர்த்தா,,, எலும்பு சேர்த்தாமல தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?//

இந்தக் கேள்வி எப்படி தல உங்களுக்கு தோன்றியது?

குமரை நிலாவன் said...

பதில்கள் அழகாக இருந்தது
தேவா சார் .

//ரங்கோலி,கோலம் புதிதாய்ப் போடுதல்!! எப்போதாவது வரைதல், கல்லூரியில் சோப்பு சிற்பத்தில் தாகூர்,லெனின் செய்து பரிசுபெற்றது!!//

தனித்திறமை அருமை தேவா சார் .

தேவன் மாயம் said...

என்ன? நீங்க அழவில்லையா? இல்லை பார்க்கவில்லையா? ஒரு முறை போட்டுப் பார்த்து அழுதுவிடுங்கள்!!//

நீங்க சொன்னா செய்யாம இருக்கு முடியுமா???
செஞ்சுடறேன்..//

வேத்தியன் அவசியம் பார்க்கவும்!!

தேவன் மாயம் said...

நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!!//

பெரிய ஆளு தான் நீங்க...

வானத்துல பறக்குற விமானம், கடல்ல போற கப்பல் தவிர எல்லாம் உள்ள போகும் போல...

நான் வெஜி..//

நானும் ”நான்வெஜி”

தேவன் மாயம் said...

//.பிடித்த மதிய உணவு என்ன?

நண்டுக்குழம்பு,கோழிக்குழம்பு ,ரசம் ,மோர்,பட்டாணி,உருளைக்கிழங்கு பொரியல், மீன் வறுவல்!! //

எலும்பு சேர்த்தா,,, எலும்பு சேர்த்தாமல தல///

எலும்பைக்கடிக்காம விடுவோமா?

குடந்தை அன்புமணி said...

தொடர் பதிவிலேயே இந்தப் பதிவுதான் சுவராஸ்யமாக இருக்கிறது. பதிவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடிகிறதே! பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது தோழரே!

குடந்தை அன்புமணி said...

//3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?முன்பு குமுதத்தில் கையெழுத்துப்போட்டி நடக்கும்! நான் 8 வது படித்து வந்தேன்! அப்போது பரிசுபெற்ற கையெழுத்தை பிரசுரித்து இருந்தார்கள்!! அதைப்பார்த்துவிட்டு என் அப்பா ”8வது படிக்கும் என் மகன் இதைவிட அழகாக எழுதுவான்” என்று பதில் கடிதம் எழுதியிருந்தார். இப்போது மருத்துவரான பின்................? மருத்துவர் கையெழுத்தாகிவிட்டது! //

இல்லன்னா டாக்டருக்கு அழகா என்ன? (சும்மா... ஹி ஹி)

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
தேவன் மாயம் said...

தொடர் பதிவிலேயே இந்தப் பதிவுதான் சுவராஸ்யமாக இருக்கிறது. பதிவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள முடிகிறதே! பதில்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது தோழரே!//

என்ன அன்பு நீண்ட நாள் ஆனதுபோல் உள்ளது!!

தேவன் மாயம் said...

//3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?முன்பு குமுதத்தில் கையெழுத்துப்போட்டி நடக்கும்! நான் 8 வது படித்து வந்தேன்! அப்போது பரிசுபெற்ற கையெழுத்தை பிரசுரித்து இருந்தார்கள்!! அதைப்பார்த்துவிட்டு என் அப்பா ”8வது படிக்கும் என் மகன் இதைவிட அழகாக எழுதுவான்” என்று பதில் கடிதம் எழுதியிருந்தார். இப்போது மருத்துவரான பின்................? மருத்துவர் கையெழுத்தாகிவிட்டது! //

இல்லன்னா டாக்டருக்கு அழகா என்ன? (சும்மா... ஹி ஹி)//

உண்மைதான் அன்பு!!

இது நம்ம ஆளு said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்

Anonymous said...

2,3,8,15,16,26,27,30,32இக்கேள்விகளுக்கான பதில்கள் சுவையாக இருந்தது ...........மற்ற பதில்கள் கேள்விக்கு ஏற்றவாறு இருந்தது ...............

அப்துல்மாலிக் said...

கலக்கல் தேவா சார்
வித்தியாசமான முயற்சி, செல்ஃப் இன்ட்ரொடுசிங்

உண்மயான பதில்கள்..

எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறேன்

வேத்தியன், ரசனைக்காரி, குணசீலன்


வித்தியாசமான பதிலுடன்

தேவன் மாயம் said...

2,3,8,15,16,26,27,30,32இக்கேள்விகளுக்கான பதில்கள் சுவையாக இருந்தது ...........மற்ற பதில்கள் கேள்விக்கு ஏற்றவாறு இருந்தது ...............///

தங்கள் ரசிப்பு அருமை!!!

தேவன் மாயம் said...

கலக்கல் தேவா சார்
வித்தியாசமான முயற்சி, செல்ஃப் இன்ட்ரொடுசிங்

உண்மயான பதில்கள்..

எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறேன்

வேத்தியன், ரசனைக்காரி, குணசீலன்


வித்தியாசமான பதிலுடன்///

ரசனைக்காரிக்கு ஆளனுப்புங்க !!

வழிப்போக்கன் said...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தையும்,முடியையும் !!//

முகத்த ஓகே..அதென்ன முடிய???
:)))

வழிப்போக்கன் said...

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை, அடிக்கடி கண்ணாடி பார்ப்பவர்!!//

நல்ல பதில்...

வழிப்போக்கன் said...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

உண்மையைச்சொல்லும் படங்கள்!! நிகழ்காலத்தை வரும் சந்ததியினர் புரிந்துகொள்ள உதவும் படங்கள்!!//

உண்மைய சொல்லும் பட்ங்கள் இப்போ வாரது ரொம்ப குறையவே???

வழிப்போக்கன் said...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பவும் நான் மாற்றுவதில்லை!!//

என்ன படம் இருக்கு???
:)))

வழிப்போக்கன் said...

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித்திறமை இல்லாதோர் உண்டா? ரங்கோலி,கோலம் புதிதாய்ப் போடுதல்!! எப்போதாவது வரைதல், கல்லூரியில் சோப்பு சிற்பத்தில் தாகூர்,லெனின் செய்து பரிசுபெற்றது!! //

வாழ்த்துகள்...

Rajeswari said...

முதலில் விகடனுக்கு தங்களது பதிவு சென்றதிற்காக வாழ்த்துக்கள்..

கொஞ்சம்..சாரி கொஞசம் என்ன நிறையவே ஆணி ..அப்பப்பா தாங்கமுடியல..அதான் வர தாமதம் ஆகிடுச்சு..

எப்படியோ என்னையும் மாட்டிவிட்டுட்டீங்கள்ல..

மொக்கை ராஜா said...

அழகா எழுதி இருக்கீங்க

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory