தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன! நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது முடிவுகள்!!
1. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!! இந்த முறை அவர் கணக்கு தப்பிவிட்டது..இந்த முடிவு சந்தர்ப்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரு பாடம்!!
2.ஆளும் பெரும்தலைகள் குறைந்த வித்தியாசத்தில் இழுபறி! பணம் இரண்டு பக்கமும் விளையாடியதில் மக்களுக்கு குழப்பம்.
ப.சிதம்பரம் தோற்பார் என்று எண்ணினர். ஆனாலும் எதிர் வேட்பாளரின் வேகம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் சிதம்பரத்துக்கு சரியான சவாலாக இருந்தன! கடைசிவரை தொடர்ந்த தோல்வி செய்திகள் கடைசியில் மாறிவிட்டன!! மறுவாக்கு எண்ணிக்கை கோரினார் கண்ணப்பன்!! கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு!!
ப.சிதம்பரம் தொகுதியை மறு ஆய்வு செய்து செய்யவேண்டியவைகளை தொகுதிக்கு செய்யவேண்டும்.
3.வைகோ எதிர்பார்த்தது போல் தோல்வி!! அவரே இதைத்தான் எதிர்பார்த்து இருப்பார். கூண்டுச் சிங்கம் கர்சித்ததை யாரும் ரசிக்கவில்லை!!
4.சிதம்பரத்தில் திருமா வெற்றி! சிறு வித்தியாசத்தில் தோற்பார் என்று எதிர்பார்த்தேன். கடைசிவரை கூட்டணி மாறாமல் இருந்ததற்கு கிடைத்த பரிசு!!திருமாவுக்கு என்ன அமைச்சர் பதவி!! அன்புமணி இடம் கிட்டுமா?
5.மணிசங்கர்- புத்திசாலி வேட்பாளர். ஒருமுறை பெட்ரோலியம் சம்பந்தமாக வெளிநாடுகளில் அவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எங்கே போனாலும் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று பேசப்படுகிறது!! அதுதான் தோல்வியின் காரணமா?
6.ஈழத்தமிழர் பிரச்சினையில் நம் அரசியல்வாதிகளின் கூத்துக்கள் தேர்தலில் பிரதிபலித்தாற்போல் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் இருந்ததுபோல் தீவிரமான தாக்கம் அவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இதனாலேயே அறிவுசார் வாக்காளர்களின் எதிபர்ப்புகளுக்கு ஏற்ற முடிவுகள் பலசமயங்களில் வெகுஜன அரசியலில் கிடைப்பதில்லை.
மேலும் தீவிரமான அலைகள் எதுவும் வீசவில்லை இந்தத்தேர்தலில்... திடீர் தேர்தல் அறிக்கைகளும் ஸ்டண்டுகளும் பொய்த்துப்போனது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!!
31 comments:
உங்களுக்காகவே கண்டமனூர் இளவல் வென்றுவிட்டார்... வாழ்த்துகள்!
ஆலங்குளத்துக்கு ஒரு நன்றி சொல்லிடுங்க!!
உங்களுக்காகவே கண்டமனூர் இளவல் வென்றுவிட்டார்... வாழ்த்துகள்!
ஆலங்குளத்துக்கு ஒரு நன்றி சொல்லிடுங்க!!//
வாங்க! சாட்டிங் பின்னீட்டிங்க காலையில்!!
நன்று நன்று - பதிவு நன்று
முடிவுகள் எதிர் பாரா வண்ணம் தான் இருக்கின்றன
//நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!!//
மக்களையும்,உண்மைதொண்டர்களையும் மடையர்கள் என நினைத்த மருத்துவர்க்கு மக்கள் கொடுத்தசவுக்கடி.
நல்ல அலசல் டாக்டர்!
நன்று நன்று - பதிவு நன்று
முடிவுகள் எதிர் பாரா வண்ணம் தான் இருக்கின்றன//
ஆம்! நண்பரே!!
/நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!!//
மக்களையும்,உண்மைதொண்டர்களையும் மடையர்கள் என நினைத்த மருத்துவர்க்கு மக்கள் கொடுத்தசவுக்கடி.//
சொல்லரசன்!! பிறந்தநாள் கொண்டாடிவிட்டீர்கள்!! பதிவர் சந்திப்பில் படம் எதுவும் எடுத்தீர்களா?
பதிவு எதுவும் போட்டீர்களா?
நல்ல அலசல் டாக்டர்!//
வாங்க! அபி அப்பா!!
நல்ல அலசல்...
தங்களுக்கு நல்ல "சீஸ்" கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் இலங்கை தமிழர்களும் சாமான்ய மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது....
நல்ல அலசல்...
தங்களுக்கு நல்ல "சீஸ்" கிடைக்காதா என்று ஏங்கி நிற்கும் இலங்கை தமிழர்களும் சாமான்ய மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும் என்று தோன்றுகிறது///
இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் வழிகிட்டும் என நம்புகிறேன்!!
பா.ம.க எதுக்காக அ.தி.மு.க வந்துச்சு??? பாவம் சார்!!! ஹிஹி..
மக்கள் டி.வி தன்னோட நல்ல பேரை கெடுத்துக்கிச்சு. நல்ல ஸ்திரமான முடிவு...
பா.ம.க எதுக்காக அ.தி.மு.க வந்துச்சு??? பாவம் சார்!!! ஹிஹி..
மக்கள் டி.வி தன்னோட நல்ல பேரை கெடுத்துக்கிச்சு. நல்ல ஸ்திரமான முடிவு..//
கணக்கு தப்பிப்போச்சு ஆதவா!!!
கொலைகாரன் கருணாநிதி மாபெரும் வெற்றி
கொலைகாரன் கருணாநிதி மாபெரும் வெற்றி///
வாங்க! அனானி!!
உள்ளேன் ஐயா
சார் இந்த இடுகைக்கு கமெண்ட் மாடரேஷன் வைங்க
SUREஷ் said...
சார் இந்த இடுகைக்கு கமெண்ட் மாடரேஷன் வைங்க
போடா வெண்ண
ஆதரிச்சி எழுதுனாதான் விடுவீங்களோ!
தேர்தலுக்கு சில நாட்கள் முன் உண்ணாவிரதம் இருந்தது சந்தர்ப்ப வாதம் இல்லையா?
மேலும், இன்னும் இலங்கையில் போர் நிறுத்தப்படாத நிலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க கருணாநிதி முயல்வாரா?
எந்த சந்தர்ப்பவாதம் வென்றால் என்ன? தோற்கப்போவது மக்கள்.
பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நம் தமிழக அரசியல் வியாதிகள் நிரூபித்துவிட்டார்கள் .
கொங்கு மண்டலம் ( கோவை , திருப்பூர் , ஈரோடு , பொள்ளாச்சி , கரூர் ) முழுவதும் அ.இ.அ.தி.மு.க கூட்டணி அதிர்வலைகள்.
Someitmes we think something, but another thing will happen. u r really amazing, because it has happened what u think..
Great..
சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி
இதேயேதான் என் நண்பரும் சொல்லி சந்தோசப் பட்டுக் கொண்டார்
சார் இந்த இடுகைக்கு கமெண்ட் மாடரேஷன் வைங்க///
சுரேஷ்!! அதுக்கு முன்னாடியே நான் வீடு சென்று விட்டேன்!
தேர்தலுக்கு சில நாட்கள் முன் உண்ணாவிரதம் இருந்தது சந்தர்ப்ப வாதம் இல்லையா?
மேலும், இன்னும் இலங்கையில் போர் நிறுத்தப்படாத நிலையில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க கருணாநிதி முயல்வாரா?
எந்த சந்தர்ப்பவாதம் வென்றால் என்ன? தோற்கப்போவது மக்கள்.///
நண்பரே!! உண்மையைச்சொன்னீங்க!!
பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நம் தமிழக அரசியல் வியாதிகள் நிரூபித்துவிட்டார்கள் .
கொங்கு மண்டலம் ( கோவை , திருப்பூர் , ஈரோடு , பொள்ளாச்சி , கரூர் ) முழுவதும் அ.இ.அ.தி.மு.க கூட்டணி அதிர்வலைகள்///
மேடி!! ரொம்ப வெளிப்படையாக!1
Someitmes we think something, but another thing will happen. u r really amazing, because it has happened what u think..
Great.//
thank u !!
சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி
இதேயேதான் என் நண்பரும் சொல்லி சந்தோசப் பட்டுக் கொண்டார்///
இது ஒரு பொதுவான கருத்துதான்!!
நல்ல அலசல்
நன்று நன்று - பதிவு நன்று
முடிவுகள் எதிர் பாரா வண்ணம் தான் இருக்கின்றன
Post a Comment