Tuesday, 19 May 2009

எழுந்து வா பிரபாகரா!! நீ இறக்கவில்லை!!

 

பிரபாகரா!!

திறமயுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர்.

அது போல் சென்ற நாட்டிலெல்லாம் தான் சிறந்ததோடு அல்லாமல் அந்நாட்டில் உள்ளோர் அனைவரையும் வாழ வைக்கும் உலகின் மிகச்சிறந்த தமிழ்க்குடியின் தன்னிகரற்ற தலைமகனே!!

புத்தியிலும் சக்தியிலும் யுக்தியிலும் யாருண்டு உனக்கு நிகர் இங்கே!! பஞ்சணையிலும்,பட்டாடைகளிலும் புரளும் வாய்ப்புகள் கோடி இருந்தும் காடுகளிலும் மலைகளிலும் கண்ணுறங்காமல் அலைந்த மாவீரனே!!

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது!

இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!!

நீ இறந்திருக்க முடியாது!! எத்தனை துரோகிகள் காட்டிக்கொடுத்தாலும் விண்ணை யாரும் தொட்டுவிட முடியாது!!

எத்தனை புல்லுருவிகள் உன்தடம் சொன்னாலும் சூரியனே!! உன்னை யாரும் சுட்டுவிட முடியாது!!

உன் புகழ் எழுத எவரிடமும் சொற்கள் இல்லை!! உலக மொழிகளெல்லாம் போதாது உன் சரித்திரம் எழுத!!

நீ சுவாசித்த காற்றை சுவாசிக்கக்கூட இங்கு யாருக்கும் அருகதை இல்லை!!

பொய்யான உடல் சுமந்து, சிறுநெஞ்சில் வஞ்சம் சுமந்து வாழும் கயவர்கள் உனக்கு ஈடா?

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!

எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!

39 comments:

நட்புடன் ஜமால் said...

உணர்ச்சியுள்ள

உணர்வுகள்

ஒவ்வொரு வரியிலும் ...

தேவன் மாயம் said...

உணர்ச்சியுள்ள

உணர்வுகள்

ஒவ்வொரு வரியிலும் ...///

வாங்க ஜமால்!

யூர்கன் க்ருகியர் said...

இந்த உணர்வுகளுக்கு வணங்குகிறேன் !

தேவன் மாயம் said...

இந்த உணர்வுகளுக்கு வணங்குகிறேன் ///
வணக்கம் நண்பரே!!

சென்ஷி said...

நன்றி தோழரே!

மேவி... said...

உணர்ச்சிகள் /

மீண்டும் ஒரு தலைவன் உருவில் வருவார் நிச்சயம்...

Rajeswari said...

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது! இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!! நீ இறந்திருக்க முடியாது!! //

கண்டிப்பாக.நீ எங்கேயோ இருக்கிறாய் என்ற எண்ணம் எங்கள் அடி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது

Rajeswari said...

உணர்வுப்பூர்வமான வார்த்தைகளின் முன் உணர்ச்சியற்று உறைந்து போகிறேன்.

வால்பையன் said...

வேற எதாவது பதிவு போடுங்க!

இன்னைக்கு வரைக்கும் நூற்றுக்கு மேல பார்த்தாச்சு!

தேவன் மாயம் said...

நன்றி தோழரே!//

சென்ஷி மிக்க நன்றி

தேவன் மாயம் said...

உணர்ச்சிகள் /

மீண்டும் ஒரு தலைவன் உருவில் வருவார் நிச்சயம்..//

வரட்டும் வரவேண்டும்

தேவன் மாயம் said...

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது! இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!! நீ இறந்திருக்க முடியாது!! //

கண்டிப்பாக.நீ எங்கேயோ இருக்கிறாய் என்ற எண்ணம் எங்கள் அடி மனதில் இருந்து கொண்டே இருக்கிறது///

அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.

தேவன் மாயம் said...

உணர்வுப்பூர்வமான வார்த்தைகளின் முன் உணர்ச்சியற்று உறைந்து போகிறேன்.//

உண்மையான வார்த்தைகள் நெஞ்சில் தங்குவதில்லை!

தேவன் மாயம் said...

வேற எதாவது பதிவு போடுங்க!

இன்னைக்கு வரைக்கும் நூற்றுக்கு மேல பார்த்தாச்சு!//

போட்டு விடுவோம்!

ஆதவா said...

உணர்வுமிகுந்த வரிகள்!!! பிரபாகரன் வீழ்வதில்லை!!

Anonymous said...

தேவன்மயம் தான் தேவா வா!!!!!!
அப்பா........... கவிதை அல்ல இது உண்ர்ச்சி குவியல் உணர்வு பொங்க உயிர் துடித்து எழ எழுதப்பட்ட வரிகள்....வார்த்தைகளில் என்ன எழுச்சி கொண்டு வரமுடியும் என இருந்த என் அகக்கண்ணுக்கு இன்று இந்த கவிதை புறக்கண்ணால் கண்டு அகக்கண் திறக்கச்செய்தது...
பிரபாகரன்..... சகாப்தமாகாது இந்த சரித்திரம் சாகவும் செய்யாது....சாதிக்க மட்டுமே இதன் ஆதிக்கம்....ஆம் நீர் இறந்திருக்க முடியாது நீ வார்த்தெடுத்த நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வரை நீர் இறந்திருக்க முடியாது எங்களுல் வாழும் நீ உயிர் துறந்திருக்க முடியாது........

அப்துல்மாலிக் said...

எழுச்சிமிகு எழுத்து
உணர்ச்சிமிகுந்த எழுத்து

தேவா நிச்சயம் உங்க எழுத்துக்கு விடைஉண்டு,

வீழ்ந்தாலும் அவருடைய புரட்சி நிச்சயம் ஒரு விதி செய்யும்

தேவன் மாயம் said...

உணர்வுமிகுந்த வரிகள்!!! பிரபாகரன் வீழ்வதில்லை!!///

வணங்குகிறேன்!!

தேவன் மாயம் said...

தேவன்மயம் தான் தேவா வா!!!!!!
அப்பா........... கவிதை அல்ல இது உண்ர்ச்சி குவியல் உணர்வு பொங்க உயிர் துடித்து எழ எழுதப்பட்ட வரிகள்....வார்த்தைகளில் என்ன எழுச்சி கொண்டு வரமுடியும் என இருந்த என் அகக்கண்ணுக்கு இன்று இந்த கவிதை புறக்கண்ணால் கண்டு அகக்கண் திறக்கச்செய்தது...
பிரபாகரன்..... சகாப்தமாகாது இந்த சரித்திரம் சாகவும் செய்யாது....சாதிக்க மட்டுமே இதன் ஆதிக்கம்....ஆம் நீர் இறந்திருக்க முடியாது நீ வார்த்தெடுத்த நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வரை நீர் இறந்திருக்க முடியாது எங்களுல் வாழும் நீ உயிர் துறந்திருக்க முடியாது.......///

ஆம்!! தேவகுமார் என் பெயர். புகழ்ச்சி என்னை சந்தோசப்படுத்துகிறது!! பிரபாகரன் உயிருடன் இருப்பார். நம்புவோம்!

தேவன் மாயம் said...

எழுச்சிமிகு எழுத்து
உணர்ச்சிமிகுந்த எழுத்து

தேவா நிச்சயம் உங்க எழுத்துக்கு விடைஉண்டு,

வீழ்ந்தாலும் அவருடைய புரட்சி நிச்சயம் ஒரு விதி செய்யும்//

ஆம் அப்ஸர்!!

குடந்தை அன்புமணி said...

மீண்டும் வருவார் நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது. வரவேண்டும்!

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.
Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

"உழவன்" "Uzhavan" said...

எது உண்மை எது பொய்யினே தெரியல தலைவா..

குமரை நிலாவன் said...

நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!! பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!! பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!



அவர் கண்டிப்பாக எங்கயோ இருக்கிறார்
என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது
தேவா சார்

தமிழ் அமுதன் said...

////எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!///
......................................................

///எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!///
.................................................
///எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!////
......................................
//எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!///

ஆ.சுதா said...

உணர்வு மிக்க வரிகள்.

தேவன் மாயம் said...

நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!! பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!! பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!///அவர் கண்டிப்பாக எங்கயோ இருக்கிறார்
என்ற எண்ணம் என் மனதில் இருக்கிறது
தேவா சார்///

அவர் வரவேண்டும்!!

தேவன் மாயம் said...

மீண்டும் வருவார் நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது. வரவேண்டும்!//

வருவார் அன்புமணி!!

தேவன் மாயம் said...

எது உண்மை எது பொய்யினே தெரியல தலைவா..//

உண்மை வெளிவரும்!!

தேவன் மாயம் said...

ஜீவன்!! மீண்டும் மீண்டும் வருவார்!!

தேவன் மாயம் said...

உணர்வு மிக்க வரிகள்//

நன்றி முத்துராமலிங்கம் அவர்களே!!

சொல்லரசன் said...

//பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!//

இருக்கவேண்டும் என்பது ஆவா.
இதே போல் என்பதுகளின் இறுதியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிருடன் வந்தார்
என்பதை நினைவுபடுத்திகொள்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!//

ஆம் நீ இறக்க மாட்டாய்...

ஒவ்வொரு வரிகளிலும் தமிழனின் உணர்வு..........

சொல்லரசன் said...

//வேற எதாவது பதிவு போடுங்க!

இன்னைக்கு வரைக்கும் நூற்றுக்கு மேல பார்த்தாச்சு!//


உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் முன் எண்ணிக்கை பெரிதுயல்ல‌

நசரேயன் said...

நிச்சயம் வருவார்

அ.மு.செய்யது said...

இலங்கை ராணுவம் கொன்று புதைத்தது தமிழ் பிணங்கள் இல்லை.

ஆயிரமாயிரம் பிரபாகரன்களின் வித்துக்கள்.

மீண்டும் முளைத்து வருவார்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

உணர்வுமிகுந்த வரிகள்!!!

, துஷா said...

அண்ணா எங்கள் நம்பிக்கையும், கண்ணிரும், பிராத்தனைகளும் வீண் போகாது
எங்கள் தமிழின தலைவன் வருவார், வரவேண்டும்

Kiruthigan said...

யுத்தமா....? எங்கயய்யா அது நடந்தது..?
பிரபாகரனா..? யார் அது?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory