Wednesday, 27 May 2009

கவிதை எழுதவேண்டும்!!

ஒவ்வொரு முறையும்

இவர்கள் என்னைக்

கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!

 

இவர்கள் வர்ணம் பூசிய

என் கனவுகளைக்

கடைகளில் விற்பவர்கள்!

 

தலைப்போ,

கருவோ,

அவர்களின் விருப்பங்கள்-

மேசையெங்கும்

சிதறிக்கிடக்கின்றன!

 

என் பசிக்கான உணவு

நானிருக்கும் அறை,

அமர்ந்திருக்கும் நாற்காலி

எல்லாம் அவர்களே

தீர்மானிக்கிறார்கள்!

 

ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!

 

அங்கும் இங்கும்

திருத்தங்கள் சொல்லி

என் கவிதையில்

அவர்களின் முகங்களைத்

திணித்தார்கள்!!

 

ஒவ்வொரு முறையும்

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன..

 

ஆயினும் அவர்களுக்கான

என் படைப்பை

உச்சிமோந்து

கொண்டாடுகிறார்கள்!

 

எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!

 

கொஞ்சம் பொறுங்கள்!!

அவர்கள் வருகிறார்கள்

நான் கவிதை எழுதவேண்டும்.

56 comments:

யூர்கன் க்ருகியர் said...

ஆழம் மிகுந்த வரிகளை கொண்டிருக்கிறது உங்கள் கவிதை.
பகிர்வுக்கு நன்றி

வேத்தியன் said...

நான் தான் மொதோ...

வேத்தியன் said...

ஜஸ்டு மிஸ்...

வேத்தியன் said...

இவர்கள் வர்ணம் பூசிய

என் கனவுகளைக்

கடைகளில் விற்பவர்கள்!//

அழகான வரிகள்...

வேத்தியன் said...

ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!//

உணர்வுகள் வெளிப்படையாக இருக்கிறது..
ரசித்தேன்...

வேத்தியன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

நல்ல பகிர்வு...

சுந்தர் said...

அடடா ,இப்போதான தெரியுது, டாக்டர் ஏன் தாவணி கவிதை எழுதினார்னு ?

Rajeswari said...

வாவ்.கவிதை அழகா இருக்கு.அதிலும்
” எழுதி முடித்த பக்கங்களில் தேடுகிறேன், என் கவிதையும் நானும் அங்கு இல்லை! ” இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.வாழ்த்துக்கள்.!

Suresh Kumar said...

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன..////////////


கலக்கல் வரிகள் அருமையாக இருக்கிறது

ஆ.ஞானசேகரன் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை//

நல்லா இருக்கு தேவன் சார்

குடந்தை அன்புமணி said...

நல்லா இருக்கு தேவா சார்...!
அதிலும்,

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை.//

சூப்பர்!

அ.மு.செய்யது said...

என்ன ஆச்சு தேவா ???

ஏதோ ஒரு மிகப் பெரும் கவிஞரின் கவிதையை படித்த மாதிரி ஒரு உணர்வு.

இவ்ளோ சூப்பரா கவிதை எழுதுறீங்க...

ஏன் அடிக்கடி எழுதுவதில்லை.

geevanathy said...

///எழுதி முடித்த
பக்கங்களில் தேடுகிறேன்,
என் கவிதையும் நானும்
அங்கு இல்லை!///


நிதர்சனமான வரிகள்

நட்புடன் ஜமால் said...

\\ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து\\

அருமை தேவா!

நட்புடன் ஜமால் said...

\\எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை.\\

ரொம்ப நல்லாயிருக்கு

தேவன் மாயம் said...

ஆழம் மிகுந்த வரிகளை கொண்டிருக்கிறது உங்கள் கவிதை.
பகிர்வுக்கு நன்றி//

நன்றி ஜூர்கேன்!!

தேவன் மாயம் said...

ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!//

உணர்வுகள் வெளிப்படையாக இருக்கிறது..
ரசித்தேன்...///

வேத்தியன்!! பகுதி பகுதியா ஆராய்ந்து விட்டீர்கள்!!

தேவன் மாயம் said...

அடடா ,இப்போதான தெரியுது, டாக்டர் ஏன் தாவணி கவிதை எழுதினார்னு ?//

ஹி! ஹி! ஹி!

தேவன் மாயம் said...

வாவ்.கவிதை அழகா இருக்கு.அதிலும்
” எழுதி முடித்த பக்கங்களில் தேடுகிறேன், என் கவிதையும் நானும் அங்கு இல்லை! ” இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.வாழ்த்துக்கள்.!///

வாங்க ராஜேஸ்!!

தேவன் மாயம் said...

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன..////////////


கலக்கல் வரிகள் அருமையாக இருக்கிறது///

சுரெஷ் குமார் ரசிப்புக்கு நன்றி!!

தேவன் மாயம் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை//

நல்லா இருக்கு தேவன் சார்///

ஞான்ஸ்! நலமா!!

தேவன் மாயம் said...

நல்லா இருக்கு தேவா சார்...!
அதிலும்,

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை.//

சூப்பர்!//

பதிவர் சந்திப்பில் மும்முரமா!!

புதியவன் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!//

ரொம்ப நல்லா இருக்கு தேவா இந்த வரிகள்...

தேவன் மாயம் said...

என்ன ஆச்சு தேவா ???

ஏதோ ஒரு மிகப் பெரும் கவிஞரின் கவிதையை படித்த மாதிரி ஒரு உணர்வு.

இவ்ளோ சூப்பரா கவிதை எழுதுறீங்க...

ஏன் அடிக்கடி எழுதுவதில்லை.///

செய்யது!! கவிதை எழுதவேண்டும் என்று நான் அமர்வதில்லை!!

தேவன் மாயம் said...

///எழுதி முடித்த
பக்கங்களில் தேடுகிறேன்,
என் கவிதையும் நானும்
அங்கு இல்லை!///


நிதர்சனமான வரிகள்///

ஜீவராஜ் நன்றி!!

தேவன் மாயம் said...

\\ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து\\

அருமை தேவா!//

வாங்க ஜமால்!!

தேவன் மாயம் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!//

ரொம்ப நல்லா இருக்கு தேவா இந்த வரிகள்.///

புதியவன் ! நன்றி

தருமி said...

//இவர்கள் என்னைக்
கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!//

யாருங்க அவங்க எல்லாம் ...?

மேவி... said...

"ஒவ்வொரு முறையும்

இவர்கள் என்னைக்

கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!"

ஆஹா ..... தேவ.
ஸ்டார்டிங் யே கவிதையாய் இருக்கே



"இவர்கள் வர்ணம் பூசிய

என் கனவுகளைக்

கடைகளில் விற்பவர்கள்!"

லாபமாக சந்தோசம் வருகிறதா????



"தலைப்போ,

கருவோ,

அவர்களின் விருப்பங்கள்-

மேசையெங்கும்

சிதறிக்கிடக்கின்றன!"

கற்பனை என்னும் கடலில் முத்து எடுப்பதும் போலவா???



"என் பசிக்கான உணவு

நானிருக்கும் அறை,

அமர்ந்திருக்கும் நாற்காலி

எல்லாம் அவர்களே

தீர்மானிக்கிறார்கள்!"

அது உங்கள் தேடல???




"ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!"

ஆமாங்க... எனக்கும் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது



"அங்கும் இங்கும்

திருத்தங்கள் சொல்லி

என் கவிதையில்

அவர்களின் முகங்களைத்

திணித்தார்கள்!!"

அது பின்னோட்டமாக இருக்க போகிறது.....



"ஒவ்வொரு முறையும்

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன.."

incubator இருக்கே டாக்டர் சார் ......




"ஆயினும் அவர்களுக்கான

என் படைப்பை

உச்சிமோந்து

கொண்டாடுகிறார்கள்!"

ஆனந்தத்தின் உச்சி....



"எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!"

எழுத்தாணி யிலே மை போட்டிர்கள ???



"கொஞ்சம் பொறுங்கள்!!

அவர்கள் வருகிறார்கள்

நான் கவிதை எழுதவேண்டும். "

எழுதுங்க பாஸ் ......


தேவமாயம் ....அருமையான பதிவு.
அப்படியே சொருகி போயிட்டேன்

sakthi said...

ஒவ்வொரு முறையும் இவர்கள் என்னைக் கவிதை எழுதச்சொல்கிறார்கள்!! இவர்கள் வர்ணம் பூசிய என் கனவுகளைக் கடைகளில் விற்பவர்கள்! தலைப்போ, கருவோ, அவர்களின் விருப்பங்கள்- மேசையெங்கும் சிதறிக்கிடக்கின்றன!

அருமையான தொடக்கம்

sakthi said...

அங்கும் இங்கும் திருத்தங்கள் சொல்லி என் கவிதையில் அவர்களின் முகங்களைத் திணித்தார்கள்!! ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன..

அற்புதமான வரிகள்

அப்துல்மாலிக் said...

தேவா சார்

இந்தை கவிதை எதையோ யாரையோ சொல்றாமாதிரிலே இருக்கு

கவிதைக்கான சூழ்நிலை போய்.... சூழ்நிலைக்கான கவிதை(பாட்டு) எழுத சொல்லி வலியுறுத்தும் டைரக்டர்......

கவிதையின் உள்ளர்த்தம் புரியுது

நல்லாயிருக்கு வரிகள்

sakthi said...

என் கவிதையும் நானும் அங்கு இல்லை! கொஞ்சம் பொறுங்கள்!! அவர்கள் வருகிறார்கள் நான் கவிதை எழுதவேண்டும்.

வற்புறுத்தி எழுதப்படும் கவிதை
மனதில் நிற்காது தான்

அருமையான கவிதை

தாங்கள் எத்தனை
பெரிய கவிஞர்
என்பதை இப்பொழுது புரிந்துகொண்டேன்

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

அந்த வுங்க இங்கே பின்னூட்டம் போடுறவங்க தானே!

தேவன் மாயம் said...

//இவர்கள் என்னைக்
கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!//

யாருங்க அவங்க எல்லாம் .///

அவர்கள்... ??/

தேவன் மாயம் said...

மேவி!! பிரிச்சு விளையாடீட்டிங்க கவிதையை!!

தேவன் மாயம் said...

தேவா சார்

இந்தை கவிதை எதையோ யாரையோ சொல்றாமாதிரிலே இருக்கு

கவிதைக்கான சூழ்நிலை போய்.... சூழ்நிலைக்கான கவிதை(பாட்டு) எழுத சொல்லி வலியுறுத்தும் டைரக்டர்......

கவிதையின் உள்ளர்த்தம் புரியுது

நல்லாயிருக்கு வரிகள்///

அபு சரியா சொல்லி விட்டீர்கள்!!

தேவன் மாயம் said...

என் கவிதையும் நானும் அங்கு இல்லை! கொஞ்சம் பொறுங்கள்!! அவர்கள் வருகிறார்கள் நான் கவிதை எழுதவேண்டும்.

வற்புறுத்தி எழுதப்படும் கவிதை
மனதில் நிற்காது தான்

அருமையான கவிதை

தாங்கள் எத்தனை
பெரிய கவிஞர்
என்பதை இப்பொழுது புரிந்துகொண்டேன்

வாழ்த்துக்கள்///

கவிதையை ரசித்ததற்கு நன்றி!! நான் எப்போதாவது எழுதும் மனிதன்!!

தேவன் மாயம் said...

அந்த வுங்க இங்கே பின்னூட்டம் போடுறவங்க தானே!//

அபுவின் பின்னூட்டம் பாருங்க வால்!!

Anonymous said...

வால்பையன் said...
அந்த வுங்க இங்கே பின்னூட்டம் போடுறவங்க தானே!

வந்த இடத்திலும் சிண்டுமுடியனுமா?

Anonymous said...

யாருங்க அந்த அவங்க?
எப்படிங்க ஏதோ கருத்தை சொல்ல வர மாதிரி இப்படி ஒரு கவிதை
எனக்குள்ள நான் எழுதரப்பவும் தோனும் இதிலுள்ள சில தொனி...


””ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன.. ””

இது ஒத்துக்கொள்ளமாட்டோம்..உங்க தன்னடக்கமா வேனாயிருக்கலாம்...வெகு அழகு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கவிதையே

விதையாய்..,

ஒரு வேண்டுகோள்

அசத்துங்க சார்..,

குமரை நிலாவன் said...

ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன..


எழுதி முடித்த பக்கங்களில் தேடுகிறேன், என் கவிதையும் நானும் அங்கு இல்லை!


மிகவும் ரசித்தேன்
தேவா சார்

கவிதை அருமை

வெற்றி-[க்]-கதிரவன் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!

//

என்ன சொல்ல.... நல்லாருக்கு

தேவன் மாயம் said...

யாருங்க அந்த அவங்க?
எப்படிங்க ஏதோ கருத்தை சொல்ல வர மாதிரி இப்படி ஒரு கவிதை
எனக்குள்ள நான் எழுதரப்பவும் தோனும் இதிலுள்ள சில தொனி...


””ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன.. ””

இது ஒத்துக்கொள்ளமாட்டோம்..உங்க தன்னடக்கமா வேனாயிருக்கலாம்...வெகு அழகு///

வஞ்சிப்பது போல் புகழ்கிறீர்கள் தமிழரசி!!நல்ல விமரிசனம்!!

தேவன் மாயம் said...

கவிதையே

விதையாய்..,

ஒரு வேண்டுகோள்

அசத்துங்க சார்.//

சுரேஷ் நீங்க ரெண்டு வரி கவிதை போடுங்க!!

தேவன் மாயம் said...

ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன..


எழுதி முடித்த பக்கங்களில் தேடுகிறேன், என் கவிதையும் நானும் அங்கு இல்லை!


மிகவும் ரசித்தேன்
தேவா சார்

கவிதை அருமை//

குமரை நிலவன் !! நன்றி!!

தேவன் மாயம் said...

//எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!

//

என்ன சொல்ல.... நல்லாருக்கு//

நன்றி பித்தன்!!

ஆதவா said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் நர்த்தனமிடுகின்றன சார். அற்புதமாக இருக்கிறது,. ஆழமாகவும் இருக்கிறது... உங்களின் கவிதைகளே தனி ரகம்... தொடர்ந்து எழுதுங்களேன்.. எங்களுக்காகவேனும்!!

உமா said...

அழகான கவிதை, வாழ்த்துகள்.

வழிப்போக்கன் said...

இந்த முறையும் அசத்தி இருக்கீங்க...
சீக்கிரம் எழுதி முடீங்க..
:)))

ப்ரியமுடன் வசந்த் said...

கவித கவித

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன//

குறைப்பிரசவமாயினும் அதை சுமந்த வலி ஒன்றுதானே

வடிவங்கள் வேறாயிருக்கலாமேயொழிய

தங்கள் கவித சூப்பர்

தேவன் மாயம் said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் நர்த்தனமிடுகின்றன சார். அற்புதமாக இருக்கிறது,. ஆழமாகவும் இருக்கிறது... உங்களின் கவிதைகளே தனி ரகம்... தொடர்ந்து எழுதுங்களேன்.. எங்களுக்காகவேனும்!!///

தினமும் சிந்திக்க நேரம் ஒதுக்கிப் பார்க்கிறேன் ஆதவா!!

தேவன் மாயம் said...

நன்றி வழிப்போக்கன் , உமா !!!

சீக்கிரம் எழுதுகிறேன் -- புதியது!!

தேவன் மாயம் said...

//ஒவ்வொரு முறையும் அவர்களின் கருத்துக்களுக்கு நான் சேர்த்த வசீகரமான சொற்கள் வலிமிகுந்த ஒரு குறைப்பிரசவமாகவே முடிகின்றன//

குறைப்பிரசவமாயினும் அதை சுமந்த வலி ஒன்றுதானே

வடிவங்கள் வேறாயிருக்கலாமேயொழிய

தங்கள் கவித சூப்பர்///

எழுதிமுடித்த கவிஞனுக்கு உங்கள் கருத்து உற்சாகம் அளிக்கிறது!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory