மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.
ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.
அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு
1.மார்பகங்கள் தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.
2.பிட்யூட்டரி சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.
பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.
ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.
ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.
1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது.
மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.
குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.
எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.
எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!
பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டிடவும்!!
33 comments:
ஓஒ இது சாத்தியமா - தகவலுக்கு நன்றி
நல்ல அறிவியல் பதிவு...
அப்ப இனி நம்ம பசங்களும் ஆரம்பிக்க வேண்டியது தான்...
:)))
புது விசயம். இத்தனை நாள் இது சாத்தியமில்லை என்றுதான் நினைத்து இருந்தேன்.
பகிர்தலுக்கு மிக்க நன்றி.
என்ன ஒரு நெகிழ்வான விசயம்!
இதை தான் தாயுமானவன்னு சொல்றாங்களோ!
-:)
அறிவியல் செய்தி எனக்கு புதிதுதான்.
நல்ல விளக்கத்தோடு கூரியதில் புறிந்துக் கொண்டேன்.
முடியாதது என்ற செயலை முடியும் என்று விஞ்ஞானபூர்வமாக, சான்றுடன்,
சொல்லிய அருமையான பதிவு
ஓட்டுப் போட்டுவிட்டேன்.
என்னை விட்டுருங்க மருத்துவரே!வலை பதியும் புது மாப்பிள்ளைக யாராவது மாட்டுனா பதிவின் கருத்து சரியா தவறான்னு ஆராய்ந்து பார்த்துடலாம்.
ஓட்டு போட்டாச்சு
சும்மாவே எங்களுக்கு 50% உங்களுக்கு50% அப்பிடின்றாய்ங்க,,,,,,,,
இதுல இது வேறயா?
ஆனாலும் பெருமையா இருக்குங்க,,,,
டாக்டர் சார், இப்படி விடயங்களை அவிட்டு விடுங்கோ. எல்லோருக்கும் பொது அறிவு வளரட்டும்.
நெகிழ்வான விஷயம் டாக்டர்..
அறிவியல் ரீதியாக விளக்கி இருப்பது அருமை !
நன்றிங்க!
நல்ல பதிவு....!!!! அருமை...!!!
சில நாட்களுக்கு முன்னர், எனக்கு ஒரு செய்தி வந்தது.. ஒரு ஆண், குழந்தையை பெற்றெடுக்க, கருவை வயிற்றில் சுமந்திருப்பதாக..... அது உண்மையா என்று தெரியவில்லை அப்போதுதான் யோசித்தேன். எப்படி பால் தரவியலும்..?? நண்பன் சொன்னான்.," ஃபீடிங் பாட்டிலை மார்பகமா செட் பண்ணி ட்ராமா பண்ணுவாய்ங்கடா...."
இப்படியும் முடியுமா? தேவன் சார். நல்ல தகவல் மிக்க நன்றி... அதிலும் படத்துடன் செய்து பாராட்டத்தக்கது...
நிசமாலுமே நம்ப முடியாத விஷயம்ங்க
அரிய தகவல்
அறிவியலால் முழுமையாக அறியப்படாத பகுதி மூளை...
எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!
என்பது உண்மைதான்..
அருமையான பதிவு டாக்டர்
Prolactin - பால் சுரக்கத் தூண்டும்...
Oxytocin - பால் வெளியேற்றலைத் தூண்டும்...
இதில் மேட்டர் என்னான்னா Prolactin & Oxytocin ஆண்களிடமும் உண்டு.
ஆனால் ஒடுக்கப்பட்ட அளவில் உண்டுல்ல..
பயனில்லை..
ஆக ஊட்டுவதற்கு Prolactin மட்டும் காணாது..
Oxytocinஉம் தேவை...
Oxytocin பற்றி சொல்லுங்களேன்...
நல்ல பகிர்வு...
நன்றி...
எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!//
கரெக்ட்...
அது தான் Head Office...
அட..இதென்ன புதுவிசயமா இருக்கே...
//ஆதவா said...
சில நாட்களுக்கு முன்னர், எனக்கு ஒரு செய்தி வந்தது.. ஒரு ஆண், குழந்தையை பெற்றெடுக்க, கருவை வயிற்றில் சுமந்திருப்பதாக..... அது உண்மையா என்று தெரியவில்லை//
எனக்கும் இந்த சந்தேகம் இன்னும் தீரவில்ல்லை..அதற்குள் நீங்கள் ஒரு செய்தியை கூறியிருக்கிறீர்கள்..
மானுட வளர்ச்சியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
//எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!//
இது வரை இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. அது சரி எல்லாம் நம் மூளையில்தான் உள்ளதுன்னா நானும் வாலும் என்ன செய்யறது தல ???
\\\இளைய கவி said...
//எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!//
இது வரை இந்த விஷயம் எனக்கு தெரியாம போச்சே.. அது சரி எல்லாம் நம் மூளையில்தான் உள்ளதுன்னா நானும் வாலும் என்ன செய்யறது தல ???\\\
சும்மா இருக்கலாம்
நல்ல பதிவு அண்ணா
அறிவியல் ரீதியான நல்ல பதிவு தேவா சார்..
இது சாத்தியமா தேவா
நாங்களே சுமக்குரோம், நீங்களும் கொஞ்சம் குழந்தையை சுமந்துப்பாருங்க அப்போதான் அதன் சுமை தெரியும்னு சொல்லக்கேட்டிருக்கேன், இப்போ இதுக்கும் ஆண்களிடமே கொடுத்துவிட்டு ஹாயா சுத்துவாங்கனு நினைக்கிறேன்...
நல்ல பகிர்வு தேவா
இதை பற்றி நானும் படித்திருக்கேன்....
நல்ல தகவல் தந்து இருக்கீங்க ......
அனா... இதெல்லாம் சற்றி மிகை படுத்திய உண்மை என்றும் ஒரு வர பத்திரிக்கை ல படித்தேன். நீங்க இப்படி சொல்லுரிங்க????
இன்னும் விளக்கமாய் தெரிந்து கொள்ள ஒரு வலைத்தளத்திற்கு வழி காட்டுங்க...
டாக்டர் சார் .....
ஆண்களுக்கு செயற்கை மார்பகம் பொறுத்த வேண்டுமா இவ்வாறு செய்வதற்கு?????
(ஆண்களுக்கு செயற்கை மார்பகம் பொறுத்த முடியுமா????)
ஆனாலும் எங்கேயோ / என்னமோ ஒதைக்குதே?
ஆதவா said...
சில நாட்களுக்கு முன்னர், எனக்கு ஒரு செய்தி வந்தது.. ஒரு ஆண், குழந்தையை பெற்றெடுக்க, கருவை வயிற்றில் சுமந்திருப்பதாக.....//
ஆதவா நானும் அப்படி ஒரு செய்தி படித்தேன் நீங்கள் படித்ததும் நான் படித்ததும் ஒன்றாக இருந்தால் அது ஒரு பென்னாக இருந்து ஆணாக மாறியவர்.
பல பதிவுகளை படித்து இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான பதிவு, ஆனால இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் என்றால இதுவரை நான் கேள்விப்படாத விசயமாக இருக்கிறது. சிங்கக்குட்டி
வலைச்சரத்தின் மூலம் வந்து வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன், இனி அடிக்கடி வருவேன்.
Post a Comment