Tuesday 14 April 2009

நானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14

நானும் என் நிழலும்

அமர்ந்திருந்தோம்

எதிரெதிரே,

 

மேசையின் மீதும்

என் பிம்ப முகத்திலும்

கழுவப்படாத கறைகள்!

 

ஒளியும் நேரமும்

கரைந்து கொண்டிருந்தன

எங்கே போனாய்

உனைதேடி

நானும் என் நிழலும்!!

 

மௌனம் கலைத்து

என்னைப்பற்றிய விசாரணைகளை

தொடங்கியது

என் நிழல்

 

நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!

 

தொடரும்

கேள்விகளின் உக்கிரம்

தாங்க முடியாமல் நான்,

காத்திருக்கிறேன்

ஒளியும் நேரமும்

கரைய!

 

பதிலளிக்க முடியாத

ஒரு கணத்தில்

ஒளியுடன் மறைந்தது

என் நிழல்!

 

தொடரும்

இரவில் நான் மட்டும்

தனியாக!! 

 

படித்து விட்டீர்கள்!

போடுங்க ஓட்டு தமிலிஷ்,

தமிழ்மணம்

இரண்டிலும்!!

 

 

21 comments:

நட்புடன் ஜமால் said...

\\நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!\\

மிக அருமை தேவா!

தேவன் மாயம் said...

\\நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!\\

மிக அருமை தேவா///

நன்றி ஜமால்!!

மேவி... said...

arumaiyana starting lines theva....

தேவன் மாயம் said...

arumaiyana starting lines theva.///

Thanks for your comment!!

நட்புடன் ஜமால் said...

நிழலை பிரித்து எதிரில் வைத்து

ஒரு வித்தியாசமான சிந்தனை தேவா



(அதிகம் தேநீர் தாருங்கள் தேவா- ஒரு இரசிகனின் வேண்டுகோள் அவ்வளவே)

வேத்தியன் said...

நிறைய நாளுக்குப் பிறகு தேநீர்...

வேத்தியன் said...

நானும் என் நிழலும்

அமர்ந்திருந்தோம்

எதிரெதிரே,//

அருமையான தொடக்கம்...

வேத்தியன் said...

ஒளியும் நேரமும்

கரைய!//

இது ரொம்ப நல்லா இருக்கு...
அருமையான கற்பனை...

வேத்தியன் said...

போடுங்க ஓட்டு தமிலிஷ்,

தமிழ்மணம்

இரண்டிலும்!!//

ok...
done...
:-)

வழிப்போக்கன் said...

என் நிழல் நிஜங்களை அறிந்த நிழலுக்கு சொல்லமுடியவில்லை எந்த பதிலும் என்னால்! //

அருமையான வரிகள்...

Suresh said...

//நானும் என் நிழலும் அமர்ந்திருந்தோம் எதிரெதிரே/

அருமையான் சிந்தனை தலைவா

//மேசையின் மீதும் என் பிம்ப முகத்திலும் கழுவப்படாத கறைகள்! /

வலிகள் தெரியுது

//நிஜங்களை அறிந்த நிழலுக்கு சொல்லமுடியவில்லை எந்த பதிலும் என்னால்!/

உணமை தலைவா

//உக்கிரம் தாங்க முடியாமல் நான், காத்திருக்கிறேன் ஒளியும் நேரமும் கரைய! பதிலளிக்க முடியாத ஒரு கணத்தில் ஒளியுடன் மறைந்தது என் நிழல்! /

பிண்ணிடிங்க


வோட்டு போட்டாச்சு

அப்துல்மாலிக் said...

அடிக்கிற வெயிலுக்கு நிழலாக வந்த இந்த வரிகள் சூப்பர்

புதியவன் said...

//பதிலளிக்க முடியாத

ஒரு கணத்தில்

ஒளியுடன் மறைந்தது

என் நிழல்!//

ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்...

சில இடங்களில் வியக்க வைத்தது ...அருமையான கவிதை தேவா...

ஆதவா said...

ரொம்ப அருமையா இருக்குங்க கவிதை. உங்க கற்பனையைக் கொட்டி நல்லா அமைச்சிருக்கீங்க.

நிழல்,நிஜம் - உரையாடல் அருமை!! ரொம்பவும் ரசித்தேன் தேநீரை

Rajeswari said...

நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!//

அருமையான வரிகள்

Rajeswari said...

நல்ல சிந்தனைகளோடு கூடிய வரிகள்.

கவிதை அருமை..

தேவன் மாயம் said...

நிழலை பிரித்து எதிரில் வைத்து

ஒரு வித்தியாசமான சிந்தனை தேவா



(அதிகம் தேநீர் தாருங்கள் தேவா- ஒரு இரசிகனின் வேண்டுகோள் அவ்வளவே)///
கண்டிப்பாக! நிறைய எழுதுகிறேன்!!

தேவன் மாயம் said...

நிறைய நாளுக்குப் பிறகு தேநீர்...//

வெத்தியன் சுவை எப்படி?

VIKNESHWARAN ADAKKALAM said...

புரியலையே... :(

ஹேமா said...

தேவா, பல நாடக்ளுக்குப் பிறகு இன்று காதல் தேநீர் சுவைத்தேன்.இனிப்பு அளவோடு நல்லாயிருக்கு.

குமரை நிலாவன் said...

நிஜங்களை அறிந்த நிழலுக்கு சொல்லமுடியவில்லை எந்த பதிலும் என்னால்!

அருமை தேவா சார்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory