Saturday 4 April 2009

பதிவரின் வீட்டை சூறையாடிய போலீஸ்!

அன்புள்ள வலைமக்களே!!

பதிவு என்றால் நாம் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது போல. பத்திரிக்கை சுதந்திரம் என்று ஒன்று இருந்தாலும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் பார்க்கிறோம். அதையும் மீறி செய்திகளை சேகரித்துப்போடும் பத்திரிக்கை நிருபர்கள் உண்மையில் போற்றத் தகுந்தவர்கள்தான்! மக்களுக்காக எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கு சரியான மரியாதை அங்கீகாரம் மக்களால் வழங்கப்படவில்லையோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் வருவதில் வியப்பேதும் இல்லை!!!

இங்குதான் பத்திரிக்கை சுதந்திரம் இப்படியென்றால் மேலைநாட்டிலும் அப்படியே இருப்பது ஆச்சரியம்.

அதுவும் ஒரு ப்ளாகரை போலீஸ் தாக்குகிறது என்பது பதிவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பத்தான் செய்யும்.

அமெரிக்க ஃபோனிக்ஸ் போலீஸை கண்டித்து ”பேட் ஃபோனிக்ஸ் காப்ஸ்” என்று வலைத்தளம் ஏற்படுத்தி எழுதியவரின் வீட்டை அந்நகர காவல் துறை சூறையாடியது!

அந்த வீட்டில் இருந்த மூன்று கணினிகள்,மோடெம்கள்,ரூட்டர்,வன் தட்டுக்கள்,மெமரி கார்ட் மற்றும் அனைத்து பிளாக் பொரொட்களையும் தூக்கிச்சென்றது காவல் துறை!

கம்ப்யூட்டர் மென்பொருள் பொறியாளரான அவர் தன்னுடைய அனைத்து கோப்புக்களையும் இழந்துவிட்டதாகக் கூறி வேதனைப்பட்டு உள்ளார்.

எனக்குத்தெரிந்து பதிவர் மேல் நடவடிக்கை என்பது வெகு அரிதாகத்தான் உள்ளது!

ஒருவரின் வீட்டை ரெய்டு செய்ய நீதிபதியின் உத்தரவு வேண்டும்! அந்தப் புண்ணியவானும் கையெழுத்துப்போட்டு இருக்கிறார். என்ன சொல்வது?

இப்படி காவல் துறையும் நீதித்துறையும் கைகோர்த்துக்கொண்டு பத்திரிக்கை ஆசிரியர்கள், பதிவர்கள் மேல் அத்துமீறல்களில் ஈடுபட்டால் பதிவர்களோ என்ன செய்யமுடியும்!

இவர் இர்ண்டு வருடங்களுக்கு முன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருக்கிறார். ஆயினும் அவருடைய முன்னாள் மனைவி கோபத்தில் என்னை அடித்தார் என்று பொய்யான மனுக்களை போலீஸ் துறைக்கு அனுப்பியுள்ளார். அதைவைத்து போலீஸ் இவரை குற்றவாளிபோல் நடத்தியுள்ளது!

இவரும் இவருடைய நண்பர்களும் போலீஸிலிருந்து ஓய்வு பெற்ற 100 போலீஸாரின் உதவியுடன் இவருடைய கேஸுக்கு ஆதரவாகவும் , போலீசின் தவறுகளையும் பதிவிட ஆரம்பித்தனர்.

அந்த வலைத்தளத்தைப் பார்க்கவும்..போலீஸ்!!

இதுபோல் டோக்கியோ போலீஸ் ஸ்லாண்டர் என்பவர்மீது அவர் போட்ட பதிவுகளுக்காக வழக்குப் பதிவு செய்து உள்ளது!

நம் இந்தியாவில் என்ன நிலை என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உச்ச நீதிமன்றம் ஒருவரின் மீது அவதூறு பழி சுமத்துவது மற்றும் பல அவதூறான நடவடிக்கைகளின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பதிவர் மீது  மட்டுமல்ல! அவதூறான பின்னூட்டம் போடுவோரின் மேலும்தான்!!!

21 comments:

குடந்தை அன்புமணி said...

நான்தான் முதல் ஆளு! படிச்சிட்டு வர்றேன்!

குடந்தை அன்புமணி said...

காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கதுதான்.

//பதிவர் மீது மட்டுமல்ல! அவதூறான பின்னூட்டம் போடுவோரின் மேலும்தான்!!!//

நீங்கள் சொன்ன இந்த விசயத்தை உடனடியாக செயல்படுத்தினால் நல்லது.

இராகவன் நைஜிரியா said...

// பதிவர் மீது மட்டுமல்ல! அவதூறான பின்னூட்டம் போடுவோரின் மேலும்தான்!! //

இதைச் செய்தால் மிகச் சந்தோஷம் படும் முதல் நாள் நானாகத்தான் இருப்பேன்.

அவதூறான பின்னூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கின்றது.

இந்த வார்த்திகள் தான் உபயோகப் படுத்துவது என்று இல்லை.. மிக மட்டமான வார்த்தைகள்..

நல்லது நடக்கும் என்று நம்புவோமாக..

இராகவன் நைஜிரியா said...

// குடந்தைஅன்புமணி said...

நான்தான் முதல் ஆளு! படிச்சிட்டு வர்றேன்! //

வாழ்த்துகள்.

ஊர்சுற்றி said...

அப்படீங்களா?!!!

Tech Shankar said...

உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

இங்கே இந்தியாவிலும் இப்படி நடப்பது உண்டு.



வலைப்பதிவர்கள் கவனத்திற்கு:-
இவர் வலையுலகில் எழுதிய வாலிபர்.தொடர்ந்து இங்கே படிக்கவும்.

அ.மு.செய்யது said...

நமக்கு தெரிஞ்ச பதிவரோ நு பயந்துட்டேன்.

வேத்தியன் said...

ஆஹா...
நான் இனி கொஞ்சம் கவனமா எழுதனும்..
ஏற்கனவே விஜய் ரசிகர்கள் என் மேல் கோபமா இருக்கிறாங்கன்னு கேள்வி...
:-)

Arasi Raj said...

ஒருவரின் வீட்டை ரெய்டு செய்ய நீதிபதியின் உத்தரவு வேண்டும்! அந்தப் புண்ணியவானும் கையெழுத்துப்போட்டு இருக்கிறார்///

மாட்டேன்னா சொல்ல முடியும்..

இதுக்கு தான் நம்மளை மாதிரி மொக்கை மட்டும் எழுதனும்குறது

அப்துல்மாலிக் said...

கொடுமையானதுதான் கேள்விப்படும்போது

அப்போ காவல்துறையின் அட்டகாசத்தை வெட்டவெளிச்சம் போட்டுக்காண்பிக்கப்போவது யாரு?

நானும் தெரிஞ்ச பதிவரோனு நினைத்து குழம்பிவிட்டேன்

david santos said...

Really great work and very nice picture!
Happy day!

பழமைபேசி said...

//பதிவர் மீது மட்டுமல்ல! அவதூறான பின்னூட்டம் போடுவோரின் மேலும்தான்!!!
//

இதான் முத்தாய்ப்பு!!!

pudugaithendral said...

இராகவனின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த வழிமொழிதல்.

அருமையான தகவல்களுக்கு நன்றி தேவா

மேவி... said...

nalla karuthu

ச.பிரேம்குமார் said...

நானும் ஏதோ தமிழ் பதிவரோன்னு நினைச்சுட்டேன் :)

Suresh said...

arumai konjam osichu than eluthanum hmm tamilishlum tamil manathulayum vottum pottachu .. :-) vlathukkal thalai

தேவன் மாயம் said...

arumai konjam osichu than eluthanum hmm tamilishlum tamil manathulayum vottum pottachu .. :-) vlathukkal thalai///

மிக்க நன்றி!!

தேவன் மாயம் said...

நானும் ஏதோ தமிழ் பதிவரோன்னு நினைச்சுட்டேன் :)///

நாமும் உஷாரா இருக்கணும்!

தேவன் மாயம் said...

உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

இங்கே இந்தியாவிலும் இப்படி நடப்பது உண்டு///

ஆமாங்கோ/

கிரி said...

//பதிவர் மீது மட்டுமல்ல! அவதூறான பின்னூட்டம் போடுவோரின் மேலும்தான்!!!//

பின்னாளில் இவை சைபர் கிரைம் ல் தினமும் நடக்கும் வழக்காக மாற வாய்ப்புண்டு

Rajeswari said...

நல்ல நடவடிக்கைதான்..
//அபுஅஃப்ஸர் said...
கொடுமையானதுதான் கேள்விப்படும்போது

அப்போ காவல்துறையின் அட்டகாசத்தை வெட்டவெளிச்சம் போட்டுக்காண்பிக்கப்போவது யாரு?//

தேவன் சார் மாதிரியான் ஆட்கள்தான்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory