Saturday, 30 May 2009

உதிர்ந்த மனம் !!

இடைவெளியின்

இருள் நீண்ட தடங்கள்

சுருங்கி

சூன்யத்தின் விளிம்பில்

நீங்களும் நானும்

சந்திக்கும் கணம்..

 

பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !

Friday, 29 May 2009

ஆண்களால் குழந்தைக்கு அமுதூட்ட முடியுமா?

மாறி வரும் அறிவியல் உலகம் ஆண் பெண் பாகுபாடுகளில் அதீத புரட்சிகளை செய்து வருகிறது. பெண்கள் தாங்கள் மட்டும் ஏன் குழந்தையைச் சுமக்கிறோம்? ஆண்களுக்கு சாதகமாக கடவுள் செயல்பட்டு விட்டார் என்று அலுத்துக் கொள்வதையும் நாம் பார்க்கிறோம்.

ஆண்கள் குழந்தைக்குப் பாலூட்ட முடியுமா? இந்த சிந்தனை நம்மில் பலருக்கு வந்திருக்காது.

அறிவியல் ரீதியாகப்பார்ப்போமா இதை. பால் சுரப்பதற்கு

1.மார்பகங்கள் தேவை. அந்த மார்பகங்களில் பால் சுரப்பிகள்(Mammary glands), சுரந்த பாலை கொண்டு செல்லும் குழாய்கள்(feeding ducts), மார்புக்காம்பு(Nipple) ஆகியவை தேவை. இவை பெண்களுக்கு முழு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

2.பிட்யூட்டரி சுரப்பி(pituitary gland) இந்த பிட்யூட்டரி சுரப்பிதான் பாலை சுரக்கத்தூண்டுகிறது. இதுவும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கிறது.

பாலூட்டவேண்டுமென்றால் மார்பகங்களுக்குத் தூண்டுதல் தேவை. பெண்களுக்கு இது கர்ப்பத்தின் போதே ஏற்பட்டுவிடுகிறது. அப்படி தூண்டப்படும்போது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி ப்ரொலாக்டின் என்ற ஹார்மோனை அதிக அளவில் சுரக்கிறது. அவைதான் மார்பகத்தில் பாலூறும் செயல்களை கவனிக்கின்றன.

ஆண்களுக்கு ப்ரொலாக்டின் குறைந்த அளவே சுரக்கும். உடல் உறவின் போது இவை வெளியிடப்படும் இவை திருப்தியையும், உடல் ரிலாக்ஸான நிலையையும் ஏற்படுத்துகின்றன.

ஆண்கள் பாலூட்டுவதுபற்றி நிறைய வரலாற்று சான்றுகள் உள்ளன.

1896 க்கு முன்பே கடல் மாலுமி குழந்தையின் தாயைப் பிரிந்த தன் குழந்தைக்கு பாலூட்டியதாகவும், ஒரு தென் அமெரிக்க உழவர் தன் மனைவி நோய்வாய்ப்பட்டிருந்தபோது பாலூட்டியதாகவும், சிப்பீவா(Chippewa) என்ற அமெரிக்க பழங்குடியின ஆண் தாய் இறந்த தன் குழந்தைக்கு குறைவில்லாமல் பாலூட்டியதாகவும் வரலாற்றில் காணப்படுகிறது.

 

மேலேயுள்ள படத்தில் உள்ள விஜெரட்னே (2002ல்)என்ற இலங்கைப் பிரஜை தன் மனைவி இறந்தவுடன் தன் குழந்தைக்கு பாலூட்டியுள்ளார். குழந்தைக்கு பால் மாவு ஒத்துக்கொள்ளாததால் வேறுவழியின்றி தன் மார்பைக் குழந்தை தேடியபோது கொடுத்ததாகவும் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பால் சுரந்ததாகவும் கூறியுள்ளார்.

குழந்தையில்லாத பெண்கள் பலர் தத்தெடுத்த குழந்தைகளுக்கு திடீரென பாலூட்ட இயலும் சம்பவங்களுக்கும் இதுதான் காரணம்.

எல்லா ஆண்களுக்கும் ப்ரொலாக்டின் குறைந்த அளவே இருக்கும். அதீத தேவைகளில் மூளை இதனை அதிகம் சுரக்க வைக்கும்.

எல்லாம் நம் மூளையில்தான் உள்ளது!!

 

பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டிடவும்!!

Wednesday, 27 May 2009

கவிதை எழுதவேண்டும்!!

ஒவ்வொரு முறையும்

இவர்கள் என்னைக்

கவிதை எழுதச்சொல்கிறார்கள்!!

 

இவர்கள் வர்ணம் பூசிய

என் கனவுகளைக்

கடைகளில் விற்பவர்கள்!

 

தலைப்போ,

கருவோ,

அவர்களின் விருப்பங்கள்-

மேசையெங்கும்

சிதறிக்கிடக்கின்றன!

 

என் பசிக்கான உணவு

நானிருக்கும் அறை,

அமர்ந்திருக்கும் நாற்காலி

எல்லாம் அவர்களே

தீர்மானிக்கிறார்கள்!

 

ஒத்துப்போகா சொற்களை

வலியப் புணரச்செய்து

எழுதப் படும்

ஒவ்வொரு வரியும்

அவர்களுக்காகவே

எழுதப்பட்டது!!

 

அங்கும் இங்கும்

திருத்தங்கள் சொல்லி

என் கவிதையில்

அவர்களின் முகங்களைத்

திணித்தார்கள்!!

 

ஒவ்வொரு முறையும்

அவர்களின்

கருத்துக்களுக்கு

நான் சேர்த்த வசீகரமான

சொற்கள் வலிமிகுந்த

ஒரு குறைப்பிரசவமாகவே

முடிகின்றன..

 

ஆயினும் அவர்களுக்கான

என் படைப்பை

உச்சிமோந்து

கொண்டாடுகிறார்கள்!

 

எழுதி முடித்த

பக்கங்களில் தேடுகிறேன்,

என் கவிதையும் நானும்

அங்கு இல்லை!

 

கொஞ்சம் பொறுங்கள்!!

அவர்கள் வருகிறார்கள்

நான் கவிதை எழுதவேண்டும்.

Tuesday, 26 May 2009

மனித தோல் சிற்பங்கள்!-தடை செய்ய வேண்டும்!!

 

அன்பு நண்பர்களே!

மேலேயுள்ள அமெரிக்கக் கொடி எதனால் செய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? தோலால்! அதுவும் மனிதத்தோலால்! கேட்கவே அதிர்ச்சியாக உள்ளதுதானே!!

Andrew Krasnow ஆன்ட்ரூ க்ராஸ்னோ என்ற அமெரிக்கக் கலைஞர்தான் இதைச் செய்தவர்.கடந்த 20 வருடங்களாக அவர் இறந்த தானம் செய்யப்பட்ட உடல்களிலிருந்து எடுக்கப்பட்ட தோல்களினால் அமெரிக்கக்கொடி,அமெரிக்க வரைபடம்,காலணி போன்ற தோல் வடிவங்களைச் செய்துவருகிறார்.

மனிதத்தோலினால் லாம்ப் ஷேட் வரிசை படைப்புகள் நாசிக்களின் கொடுமையில் முகாம்களில் கொலைசெய்யப்படவர்களை பிரதிபலிப்பதாக செய்துள்ளார்.

இதனை அமெரிக்காவின் உலகளாவிய போர் அடக்குமுறையை எதிர்த்து அவருடைய பதிவாக அவர் கருதுவதாகக் கூறுகிறார்!

இவருடைய படைப்புகளை பார்வைக்கு வைக்க இங்கிலாந்து அரசின் மனித திசுப் பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது!

உலக அளவில் கலை ஆர்வலர்கள் மனிதத்தோலை உபயோகிப்பதைக் கண்டனம் செய்துள்ளனர்.

மனிததோலால் கலைப்பொருள் செய்வது தவறு என்பது என் கருத்து, அது எத்தகைய காரணத்துக்காக இருந்தாலும்! ஏன் என்று கேட்கிறீர்களா?சற்று தீவிரமாக சிந்திப்போமானால் இதன் பின் விளைவுகள் கொடூரமாக இருப்பது தெரிய வரும்.

இன்று மனிதத்தோலால் செய்யும் இவர்கள் நாளை மனிதனின் வேறு உறுப்புகளையும் உபயோகிப்பார்கள்! தோலை அனுமதிக்கும் அரசு ஏன் உறுப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்று கேட்பர். இறந்த மனிதனின் தோல் கிடைக்காத பட்சத்தில் வேறு ஆபத்தான வழிகளுக்குச் செல்லும் வாய்ப்புகள்,இதற்கென ஏஜெண்டுகள் என்று ஒரு பெரிய சந்தையே உருவாகும். நிழல் உலகில் இந்தப் பொருட்கள் விற்பனையும் செய்ய ஆரம்பித்தால் அவ்வளவுதான்!!

விலங்குகள் போல எளிய மனிதர்களும் வெளியே தெரியாமல் வேட்டையாடப்படுவார்கள்!! இந்த விசயங்களை நீதித்துறை நீதிபதிகளும்,அரசு சட்ட வல்லுனர்களும் கவனத்தில் கொண்டு இதனை ஆரம்பத்திலேயே தடுக்கவேண்டும் என்பதே என் கருத்து!

இதையும் இங்கிலாந்து அரசு எப்படி அனுமதித்தது என்பது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது!

உங்களின் கருத்துக்களையும் பதியுங்கள் நண்பர்களே!!

பதிவு பிடித்திருந்தால் தமிலிஷிலும் தமிழ்மணத்திலும் போடுங்க ஓட்டு!!

Monday, 25 May 2009

மதுரையில் பாசக்கார பதிவர்கள்!!

அன்பின் வலை நண்பர்களே!!

மதுரையிலே பதிவர் கூட்டம் ஞாயிறு நேற்று நடந்தது. இப்பொழுதுதான் திருச்சியில் முடிந்த சந்திப்பு இன்னும் நினைவுகளை விட்டு நீங்காதிருக்கும்போதே அடுத்த சந்திப்பு.

என்னுடைய வேலைப் பளு என்னமோ நேற்று மிக அதிகம்!! காலையில் 6.00மணிக்கு ஒரு அறுவை சிகிச்சை! 10மணிக்கு என் நண்பர் டாக்டர் மணிராஜின் புதல்வி பூப்புனித விழா, திருச்சி சங்கீதா ஓட்டலில் மதிய சாப்பாடு!! முடித்து காரைக்குடி திரும்புகையில் நண்பரின் கார் மக்கர். காரை ஷெட்டில் விட்டு நண்பருடன் என் காரில் மதுரை சந்திப்பு!!! அதனால் கொஞ்சம் தாமதந்தான்!!!

சந்திப்பில் 14+2 பதிவர்கள் கலந்து கொண்டனர்!! 

1. டக்ளஸ்
2.தேனீ-சுந்தர்
3. அன்பு- சிவகாசி
4. பாலகுமார்
5. இளைய கவி கணேஷ் குமார்
6. ஜாலி ஜம்பர்
7. சூப்பர் சுப்ரா
8. வால்பையன்
9. கார்த்திகைப் பாண்டியன்
10. ஸ்ரீதர்
11. சில் பீர்
12. டாக். தேவமாயம்
13. அருண்
15. சீனா
14. தருமி
15. ராஜா
16. கார்த்திக்

இளைய கவியை நான் எதிபார்க்கவில்லை!! வந்திருந்தார்.

இருள் கவ்விய நேரத்தில் முன் முகம் தெரியா நண்பர்கள் நமக்காக ஆர்வத்துடன் அன்புக்கதைபேச காதலியிடம் பேசுவதைவிட இனிமையாக இருந்தது அந்த மாலை!

அறியா நண்பர்கள் நம் மீது அன்பு காட்ட சொல்ல முடியாத பாசமும், பற்றும் கரை புரண்டோடும் இந்த சந்திப்புகளை நான் சொன்னால் நீங்கள் உணரமுடியாது!

வணிக மயமான இந்த உலகில் புதிய நண்பர்கள் ஏற்படுவது அபூர்வம்! அதுவும் கவிதை கதை ,பதிவுலகம் ஏதும் அறியா இயந்திர மனிதர்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும் நாம்! இத்தனை மாதம் பதிவெழுதி ஒரு காரைக்குடி பதிவர்கூட என்னால் கண்டுபிடிக்கவில்லை!!

ஆனால் எங்கோ கனடாவில் இருக்கும் ”பழமைபேசியார்” என்னைத்தொடர்பு கொண்டு திருச்சி பதிவில் என் காணொளியைக்கண்டு உளம் பூரித்து தொலைபேசியில் அளவளாவியபோது......நான் அடைந்த இன்பம் ....வார்த்தைகளில் வராதது!! நான் பேசிய பேச்சில் என்னையும் அறியாமல் வந்த என் காரைக்குடி மண்ணின் தமிழ் அவரைக்கவர்ந்ததாம்!! அன்பு வலை நண்பர்களே நீங்கள் காட்டும் பாசம் அளவில்லாதது!!....அதற்கு நான் தலை வணங்குகிறேன்!!

பாசக்கார மக்களின் படங்களையும் பாருங்களேன்!!maduraibloggermeet 24-5-2009 001 maduraibloggermeet 24-5-2009 002 maduraibloggermeet 24-5-2009 003 maduraibloggermeet 24-5-2009 004திரு.சீனா. maduraibloggermeet 24-5-2009 005 maduraibloggermeet 24-5-2009 006 maduraibloggermeet 24-5-2009 007 maduraibloggermeet 24-5-2009 008 maduraibloggermeet 24-5-2009 009அன்பின் தருமி!! maduraibloggermeet 24-5-2009 010


வால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்

தேனீ-சுந்தர், கார்த்திக், சில்-பீர்

அருண், தேனீ-சுந்தர், சில்-பீர்

கணேஷ் குமார்


ஸ்ரீதர், வால்பையன்

டக்ளஸ்

ஸ்ரீதர்


சூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்

அன்பு, கார்த்திக்

சில்-பீர்

ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா

ஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்

அன்பு, கார்த்திகை

ஜாலி, ஸ்ரீதர், கார்த்திகை


பாசக்கார மக்களின் படங்களைப்பார்த்தீர்கள்!

போடுங்க ஓட்டு தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்!!

தேவா...

Friday, 22 May 2009

தாவணி

---------------------------------------------------

நண்பர்களே!! ஒரே அரசியல்,தேர்தல்

என்று ரொம்ப வறட்சியில்

பதிவுலகம்! சூடு தனிய மொக்கையா

ஒரு கவிதை! படித்து விட்டு ....

----------------------------------------------------

ன்னதான் மறைத்தாலும்

தாவணியின் பூக்களெல்லாம்

சொல்லுதே உன் காதலை!!

 

என்னிடம் காதலைச்

சொல்லத்துடிக்கும்

உன் மனதை

மறைக்கமுடியுமா.

தாவணிக்குள்!!

 

என்னைக்

கண்டவுடன்

வெட்கப்பட்டு ஒதுங்குகிறது

உன் தாவணியும்!!

 

4.உன் தாவணி ஓடும்

பால்வீதியில் மட்டும்

எப்படி

இரு நிலவுகள்?

 

எங்கிருந்து ஆரம்பித்தது

உன் தாவணி!

இடையின் முன்னிருந்தா

இல்லை

பின்னிருந்தா?

 

நெஞ்சில் எழுந்து

தோளில் தவழ்ந்து

முதுகில் விழும்

நீர்வீழ்ச்சி உன்

தாவணி!!

 

உன் வாசனையில்

கிறங்கிக்கிடக்கிறோம்

நானும்

உன் தாவணியும்!

 

ஒரு சந்தர்ப்பம் கொடு

உன் தாவணிபோல்

நானும் ஒரு

8 பொடுகிறேன்

உன் இடுப்பிலிருந்து

தொடங்கி !!!

 

தாவணி பிடித்திருந்தால் போடுங்க ஒட்டு தமிலிஷ்,தமிழ்மணத்தில்!!

Thursday, 21 May 2009

பதிவர் சந்திப்பு மதுரை!!

அன்பு வலை மக்களே!

நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!

திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..

இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

cheena (சீனா) ஐயா..

வால்பையன்.............

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

கார்த்திகை பாண்டியன் 

தேவா ஆகிய நான்!

முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!

போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...

தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

தேவா @ தேவன்மாயம்- 97512 99554..

ஓட்டைக்குத்துங்க!!

சிறு மாற்றம்:

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, 19 May 2009

எழுந்து வா பிரபாகரா!! நீ இறக்கவில்லை!!

 

பிரபாகரா!!

திறமயுள்ளோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர்.

அது போல் சென்ற நாட்டிலெல்லாம் தான் சிறந்ததோடு அல்லாமல் அந்நாட்டில் உள்ளோர் அனைவரையும் வாழ வைக்கும் உலகின் மிகச்சிறந்த தமிழ்க்குடியின் தன்னிகரற்ற தலைமகனே!!

புத்தியிலும் சக்தியிலும் யுக்தியிலும் யாருண்டு உனக்கு நிகர் இங்கே!! பஞ்சணையிலும்,பட்டாடைகளிலும் புரளும் வாய்ப்புகள் கோடி இருந்தும் காடுகளிலும் மலைகளிலும் கண்ணுறங்காமல் அலைந்த மாவீரனே!!

முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழ் இனத்துக்காக நீ அடைந்த இன்னலை எந்தத் தமிழ் நெஞ்சமும் மறக்காது!

இருக்கிறாரா? எம் தலைவர் உயிருடன் என்று கதறும் எங்கள் குரல் உன்னை அடைகிறதா!!

நீ இறந்திருக்க முடியாது!! எத்தனை துரோகிகள் காட்டிக்கொடுத்தாலும் விண்ணை யாரும் தொட்டுவிட முடியாது!!

எத்தனை புல்லுருவிகள் உன்தடம் சொன்னாலும் சூரியனே!! உன்னை யாரும் சுட்டுவிட முடியாது!!

உன் புகழ் எழுத எவரிடமும் சொற்கள் இல்லை!! உலக மொழிகளெல்லாம் போதாது உன் சரித்திரம் எழுத!!

நீ சுவாசித்த காற்றை சுவாசிக்கக்கூட இங்கு யாருக்கும் அருகதை இல்லை!!

பொய்யான உடல் சுமந்து, சிறுநெஞ்சில் வஞ்சம் சுமந்து வாழும் கயவர்கள் உனக்கு ஈடா?

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய் !! நாடு விட்டு நாடு ஓடி நாதியற்றுக் கதறும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! வீடிழந்து, உறவிழந்து ஈழத்தில் துயரப்படும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் நீ உயிருடனிருப்பாய்!!

பிரபாகரா!! நீ இறக்க மாட்டாய்!! தாயிழந்து, தந்தையற்று பயத்தாலும் பசியாலும் துடிக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிஞ்சுகளுக்காகவும் நீ உயிருடன் இருப்பாய்!!

எழுந்து வா பிரபாகரா!!!

உன்னைக் காணாது துடிக்கிறோம்!!

உன்னை யாரும் கொல்ல முடியாது !!

எழுந்து வா பிரபாகரா!!!

Saturday, 16 May 2009

தேர்தல் முடிவுகள்- சாட்டையடி-2 !!

இந்தத் தேர்தலின் முன் நடந்த கூத்துகளை நேரடியாகப் பார்த்துவிட்டு சும்மாதான் இருந்தேன். ஆயினும் எனக்குத்தோன்றிய சில விசயங்களை எழுதினால் என்ன என்று தோன்றியதால் எழுதுகிறேன். யார் மனதாவது புண்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள்!

1.மாயாவதி ஆட்சிக்கு வந்தபின் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். அரசியல் வாழ்வில் தன்னிகரற்று விளங்கிய கன்ஷிராமின் வாரிசாக மாயாவதி அரசியலுக்கு வந்தார்.1995ம் ஆண்டு சாதீய பிடிப்புகள் அதிகம் உள்ள உ.பி.யின் முதல்வர் அரியணையில் மாயாவதி அமர்ந்தார்..இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வரான முதல் தலித் இவர்தான். அதோடு மட்டுமில்லை... மிக இளம் வயதில் இந்தியாவில் முதல்வரானவரும் மாயாவதிதான். முதல்வர் நாற்காலியில் அமர்ந்தபோது அவருக்கு வயது 39.

தற்போது?..... கட்சியில் அடிப்படை உறுப்பினர்களுக்கு எந்த பயனும் முன்னுரிமையும் இல்லை!! பிற கட்சிகளைப்போல் தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது!! தலீத்துகளுக்கு செய்யவேண்டியது நிறைய இருக்கும் போதே அதை விடுத்து பிரதமராகும் கனவில் தன் கட்சியை தேசிய அளவில் பிரபலப்படுத்த முயன்றார். தலீத்துகளுக்கு எதிரான அமைப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜாதி வெறியர்கள் கூட அவர் கட்சியில் பொறுப்புகளை ஏற்றதுதான் மிகக்கொடுமை.

மாயாவதியின் தமிழக வருகையும் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கவே உதவும்..

2.உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் அதிக தொகுதிகளை கைப்பற்றி இந்தியஅரசியலில் ஆட்சியைக்கூட்டணியாக வெல்லலாம் என்று மனப்பால் குடித்தனர்.

காங்கிரசை கழற்றி விட்டு விட்டு லோக் ஜன சக்தி தலைவர் பஸ்வானை சேர்த்துக் கொண்டு 4-வது அணியை தொடங்கினார்கள்.

பீகாரில் லல்லு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 22 இடங்களில் 2004ல் வெற்றிபெற்றது.

இந்தத்தேர்தலில் கடைசி நேரத்தில் செய்த குழப்படியால் தோல்விமுகம் கண்டு நொந்து போயிருக்கிறார் லாலு.

அதைத் தற்போது தான் செய்த தவறு என்றும் ஒப்புக்கொள்கிறார்.

தேர்தலில் பிரதமராகலாம் என்று ஆசைப்பட்ட அனைவரும் மண்ணைக்கவ்வியுள்ளனர் இந்தத்தேர்தலில்!

அதே சமயம் பிரதமராக தானோ,தன் மகனோ பதவியேற்க முடியும் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோஹன் சிங்க்தான் என்று கூறியிருக்கும் காங்கிரஸ் தலைவரையும் பிரதமர் பதவியாசை பிடித்து அலைந்த இவர்களையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்க என் மனம் ஒப்பவில்லை!!! இந்திய மக்களும் அப்படித்தான்.

இதையே இந்ததேர்தல் தெளிவாக உணர்த்தியுள்ளது!

பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் ஓட்டிடுக.

தேர்தல் முடிவுகள்!! சாட்டையடி!!

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன! நான் எதிர்பார்த்தது போலவே இருந்தது முடிவுகள்!!

1. சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் வெளியேற்றப்பட்டு உள்ளது இந்தத்தேர்தலின் சிறப்பு. நான் எதிர்பார்த்தபடியே மருத்துவர் கட்சி எல்லா இடங்களிலும் தோல்வி!! இந்த முறை அவர் கணக்கு தப்பிவிட்டது..இந்த முடிவு சந்தர்ப்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு ஒரு பாடம்!!

2.ஆளும் பெரும்தலைகள் குறைந்த வித்தியாசத்தில் இழுபறி! பணம் இரண்டு பக்கமும் விளையாடியதில் மக்களுக்கு குழப்பம்.

ப.சிதம்பரம் தோற்பார் என்று எண்ணினர். ஆனாலும் எதிர் வேட்பாளரின் வேகம் மற்றும் இன்ன பிற சங்கதிகள் சிதம்பரத்துக்கு சரியான சவாலாக இருந்தன! கடைசிவரை தொடர்ந்த தோல்வி செய்திகள் கடைசியில் மாறிவிட்டன!! மறுவாக்கு எண்ணிக்கை கோரினார் கண்ணப்பன்!! கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிப்பு!!

ப.சிதம்பரம் தொகுதியை மறு ஆய்வு செய்து செய்யவேண்டியவைகளை தொகுதிக்கு செய்யவேண்டும்.

3.வைகோ எதிர்பார்த்தது போல் தோல்வி!! அவரே இதைத்தான் எதிர்பார்த்து இருப்பார். கூண்டுச் சிங்கம் கர்சித்ததை யாரும் ரசிக்கவில்லை!!  

4.சிதம்பரத்தில் திருமா வெற்றி! சிறு வித்தியாசத்தில் தோற்பார் என்று எதிர்பார்த்தேன். கடைசிவரை கூட்டணி மாறாமல் இருந்ததற்கு கிடைத்த பரிசு!!திருமாவுக்கு என்ன அமைச்சர் பதவி!! அன்புமணி இடம் கிட்டுமா?

5.மணிசங்கர்- புத்திசாலி வேட்பாளர். ஒருமுறை பெட்ரோலியம் சம்பந்தமாக வெளிநாடுகளில் அவர் பேசிய பேச்சு எல்லோராலும் பாராட்டப்பட்டது. எங்கே போனாலும் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை என்று பேசப்படுகிறது!! அதுதான் தோல்வியின் காரணமா?

6.ஈழத்தமிழர் பிரச்சினையில் நம் அரசியல்வாதிகளின் கூத்துக்கள் தேர்தலில் பிரதிபலித்தாற்போல் தெரியவில்லை.அப்படியே இருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் இருந்ததுபோல் தீவிரமான தாக்கம் அவர்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இதனாலேயே அறிவுசார் வாக்காளர்களின் எதிபர்ப்புகளுக்கு ஏற்ற முடிவுகள் பலசமயங்களில் வெகுஜன அரசியலில் கிடைப்பதில்லை.

மேலும் தீவிரமான அலைகள் எதுவும் வீசவில்லை இந்தத்தேர்தலில்... திடீர் தேர்தல் அறிக்கைகளும் ஸ்டண்டுகளும் பொய்த்துப்போனது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது!!

Thursday, 14 May 2009

திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!

பத்துவருடம் பழகுவதும் ஒன்னுதான் ஒரு பதிவர் சந்திப்பு போவதும் ஒன்னுதான்!!

clip_image001அவ்வளவு நெருக்கம் ஏற்படுதுங்க. பொய்யில்லை. உண்மை!!

clip_image002ஓரளவு சிந்தனை ஒரே மாதிரி இருப்பது காரணமா !! ஆமா அதுதான் காரணமாக இருக்கும்!!

அகநாழிகை: பொறுப்பான அப்பா மாதிரி தோற்றம்! ப்ளாக் படங்களப் பார்த்ததை விட இளமையா இருக்காரு. clip_image003 முக்கா டவுசருதான் போடுவாரம்!!!!போட்டிருந்தார். ரொம்பநாளா பத்திரிக்கைகளில் எழுதுறாராம். பத்திரிக்கை அரசியல் பற்றியும் நல்லா பேசினார்.

கார்த்திகை பாண்டியன்: clip_image004 கவர்ச்சியா இருக்கார். துடிப்பான இளைஞர். கண்களில் ஆர்வமும் அன்பும்... clip_image005ஆஹா எந்த மகராசி கொடுத்துவைத்தாளோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படும்! ஆமாங்க.இன்னும் கால்கட்டு இல்லை. பலகுரல் மன்னன்!!! அப்படியே விஜயகாந்தை வைச்சு ஒரு சின்ன நிகழ்ச்சியே நடத்தீட்டார்.

இளங்கவி: காராசாரமான பேச்சு, நிறைய டெக்னிக்கலாக ப்ளாக் பற்றிப் பேசினார். clip_image006 புதுத் திரட்டி போன்றவற்றில் ரொம்ப ஆர்வம்..அவரோடு பேசினீங்க நேரம் போவதே தெரியாது. கைவசம் நிறையக்கதை வச்சிருக்கார்..வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!

சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! clip_image007 திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

clip_image008ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு...

clip_image009சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். clip_image010 தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். clip_image011 இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு..

மெல்போர்ன் கமல்: ஆஸ்திரேலிய வானொலி பகுதிநேர

அறிவிப்பாளர். clip_image012” கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று

கல்யாணத்துக்கு வந்திருந்தார்.. ரொம்ப சாஃப்ட். மிகுந்த ஆர்வத்துடன்

இருந்தார்..

clip_image013அகநாழிகை:இள பின்க் நிற சட்டை,முக்கா பேண்ட்

மெல்போர்ன் கமல்:வெள்ளை ப்ளையின் சட்டை.

சொல்லரசன்:சந்தன சட்டை.

ஞானசேகரன்:கருஞ்சிவப்பு சட்டை

இளைய கவி:கண்ணாடி அணிந்திருப்பவர்!

கார்த்திகை பாண்டியன்:நீல பச்சைக் கோடுபோட்ட வெள்ளை பனியன்!

clip_image014படங்களை சுருக்கித்தந்துள்ளேன்!! மிச்சபடி படங்கள் அதனதன் இடத்தை அவையே தேர்ந்தெடுத்துக்கொண்டன!!! என் கண்ட்ரோலில் அவை இல்லை!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory