Monday 6 July 2009

பெண்கள் ஆண்களிடம் விரும்பாதவை!!-6.

பெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும்!!!

அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக்க வேண்டும்! அவர்கள் விரும்பாத மாதிரிதான் நம் நடவடிக்கைகள் இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம்.

பெண்கள் ஆண்களிடம் விரும்பாதவை என்ன என்று தெரிந்துகொண்டால் அவர்கள் விரும்புவது என்ன என்று எளிமையாகக் கண்டுபிடித்துவிடலாம். எப்படி!! சுருக்கு வழியாக இருக்கிறது அல்லவா? பார்ப்போமே..

1. நேரத்தை எப்படி சரியாக கணக்கிட்டு அந்த நேர வேலைகளை சரியாக முடிக்கவேண்டும்!! அப்படியில்லாமல் உங்கள் மனம் கவர்ந்த பெண்ணை எப்போதும் காக்க வைக்கிறீர்களா? நிச்சயம் இது சந்தோசத்தைத் தராது..அதன் பின் கேள்விகளும்.. விளக்கங்களும் ...சண்டைகளும்.. சரியா வராது. நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. இதுக்குப் பிறகு நாம என்னத்தை சந்தோசமாக இருப்பது?

இதே பிரச்சினை அலுவலகத்தில்,நண்பர்களிடம் என்று பரவினால் எந்த இடத்திலும் நல்லபடியா சந்தோசமா இருக்கமுடியாது. மொத்த விசயங்களும் கொலாப்ஸ் ஆகி விடும்.

2.சும்மா சாக்குப் போக்கு சொல்லியே காலத்தை ஓட்டுபவரா.. ஒரு வேலையைச் செய்யாமல் ”மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். சின்னச்சின்ன விசயங்களில் ஆரம்பிக்கும் மறதி மிகப்பெரிய பிரச்சினைகளில் உங்களை மாட்டிவைக்கும்.  சிலபேர் அவர்கள் வேலைகளை மறக்காமல் செய்துவிட்டு மனைவியுடன் சினிமா செல்ல வேண்டியதையோ அல்லது மனைவி சம்பந்தமான முக்கிய விசயங்களையோ மறந்துவிடுவார்கள். இது அவர்கள் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையின்மை, அலட்சியப்போக்கு என்றே கருதப்படும்!!

உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!

3.சூழ்நிலைக்கேற்றவாறு இருக்கவேண்டும். காதலியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த பொழுதை மிகுந்த சந்தோசத்துடன் கழிக்கவேண்டும்! பிரச்சினைகள் எல்லோருக்கும் உள்ளதுதான். இது பெண்களுக்கும் தெரியும். ஆனாலும் சந்தோசமான, மகிழ்ச்சியான தருணங்களையே அவர்கள் விரும்புவார்கள். அதுவும் முன்னேற்பாடுடன் ஜோக்குகள், விளையாட்டுக்கள் என்று அசத்தினீர்களென்றால் அவ்வளவுதான். ஆள் ஃபிளாட் ஆகிவிடுவார்கள்!!

4.உடை அணிவது முடிஅலங்காரம் ஆகியவற்றில் நாம் அக்கறையுடன்இருக்கவேண்டும். காதலியின் தாத்தாவின் பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம். அப்போதும்  அவருக்கு ஒரு பரிசு வாங்கிச்செல்வது, (முடிந்தால் உங்க ஆளுக்கும் ஒன்று.. சும்மா ஒரு சாக்குத்தானே...) நல்ல உடை அணிந்து செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். தாத்தாதானே என்று ஏனோதானோ என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. அது அங்குள்ளோர்களுக்கு முக்கியமாக உங்கள் காதலிக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரும்!! நீங்கள் உங்கள் காதலியால் பெரிதும் ரசிக்கப்படும் முக்கிய நபர் என்பதை மறக்கவேண்டாம்.

5.விசயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும்  பிரச்சினையை உண்டு பண்ணும். உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது. நீங்கள் நிறைய விசயங்களை மறைத்துவைத்தால் ஒன்றன் பின் ஒன்றாக நம் சொந்தக்காரர்கள்( கோள் சொல்வதற்கென்றே இதில் சிலர் இருப்பர்) , நண்பர்கள் மூலம் தெரியும்போது நீங்கள் எந்தச்சமாதானமும் சொல்ல முடியாது. முழுப்பொய்யராகக் காட்சியளிக்கும் நிலைக்குத் தள்ளப் படுவீர்கள்!! அப்புறம் நாம் சொல்லும் சமாதானங்கள் எடுபடுமா என்ன!!” நீங்கள் அவ்வளவு பெரிய விசயத்தையே மறத்தவர்... உங்களை எப்படி நம்புவது?” என்றுதான் கேட்பார்கள்.

6.மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோ, பின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் காதலி/மனைவி அதைத் தவறாக( மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்... அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!..ஹி.. ஹி...ஹி..இதை உடனே சொல்ல மாட்டர்கள். கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ருசுவானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். ”ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க.. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!! 

பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால்  சங்குதான்.........  

---------------------------------------------------------------

______________________________________________________

தமிழ்த்துளி. தேவா..

___________________

43 comments:

நட்புடன் ஜமால் said...

ஆறாம் பகுதியா

அல்லது ஆறு ஆறா சொல்லுறியளா

அல்லது

ஆறு மட்டும் தான் இருக்குதா

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

ஆறாம் பகுதியா

அல்லது ஆறு ஆறா சொல்லுறியளா

அல்லது

ஆறு மட்டும் தான் இருக்குதா///

ஆறுமனமே ஆறு!! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!!

நட்புடன் ஜமால் said...

ஐயா! நீங்க சொன்ன 5 விடயங்கள் எல்லோருக்குமே பொருந்தும்

6ல் மட்டும் ஜாக்கிரதையா இருக்கனும் போல ...

தேவன் மாயம் said...

Blogger நட்புடன் ஜமால் said...

ஐயா! நீங்க சொன்ன 5 விடயங்கள் எல்லோருக்குமே பொருந்தும்

6ல் மட்டும் ஜாக்கிரதையா இருக்கனும் போல ...///

ஆமா ஜமால் !!

பாலா said...

ungalukku malai katti podanunga

enna maa aarassi paneerukeenga

anupavam athigam pola

ஆ.ஞானசேகரன் said...

//அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!! //

ஐயோ! கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்...

மேவி... said...

mind lA vaichukkiren ...

வால்பையன் said...

/உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!//

டாக்டருக்கு நிறைய அனுபவம் போலயே!

மேவி... said...

ennai madiri pala figure maintain pannuravangalukku ethavathu sollunga boss....

he he he he

மேவி... said...

மனைவி ; காதலி என்று இரண்டு பேர் இருந்தால் என்ன செய்வது ...........

குடந்தை அன்புமணி said...

ஆறும் அசத்தலாகத்தான் இருக்கு. எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க முடியாமத்தான் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்குது. குறிப்பா ஆறாவது...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

மிக நல்ல அறிவுரைகள்.நோட் பண்ணுங்கப்பா,நோட் பண்ணுங்கப்பா.

S.A. நவாஸுதீன் said...

6/6 Formula - படிச்சிட்டு வர்றேன்

Unknown said...

// நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. //


நீங்க எப்புடி போனாளுமும் இந்த கேள்வி உண்டு....!!


சொன்ன நேரத்துக்கு முன்னாடியே போனால் :

ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க...!! வேல எதுவும் இல்லியா.... !! அப்போ சரி இந்த வெங்காயம் , தக்காளிய மட்டும் கட பண்ணு குடுங்க....


சொன்ன நேரத்துக்கு காண கட்சிதமாக போனால் :

ஏன் .. சொன்னா சொன்ன நேரத்துக்குத்தான் வரணுமா... கொஞ்சம் முன்னாடியே வந்தா என்னவாம்....!!!


சொன்ன நேரத்துக்கு அப்புறம் லேட்டா போனால் :


அப்புடி என்ன ஆபீசுல வெட்டி முரிக்குற வேல......!! என்னவிட அந்த வேல அவ்வளோ முக்கியமா போச்சா உங்குளுக்கு ?


எப்புடி பிட்ட போட்டாலும் ... மடக்க ரெடியா இருப்பாங்க அம்முனிங்க ......// ஒரு வேலையைச் செய்யாமல் ”மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். ///

ஆமா... ஆமா..... , இது சொன்னீங்களே ... நெம்ப கரெக்ட்டு.... இல்லைனா... ஒரு தடவ மறந்ததா..... ஒரு மாசத்துக்கு ... அந்த மேட்டரையே அவிங்க அம்மா ... அக்கா ... தங்கிச்சி.... சித்தி .. பெரியம்மான்னு ஒருத்துகிட்ட உடாம டப்பா தாட்டீருவாங்க .....!! அது மட்டுமில்லாம ஒரு மாசத்துக்கு அதையவே திரும்பத் திரும்ப சொல்லி நம்மள வெருப்பேத்துறது ....!!!!

// காதலியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த பொழுதை மிகுந்த சந்தோசத்துடன் கழிக்கவேண்டும்! //
அப்புறம் பீச்சுல கடிவாளம் போட்ட குதரையாட்டோ அவ மூஞ்சியவே பாக்கணும்... !! மவனே கொஞ்சம் திரும்பி அங்க , இங்கனு பாத்த.... முடுஞ்ச....!!!!!// என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. //
ஆமாங்கோவ்.....!! முடுஞ்சா... அந்த அப்புச்சிக்கு ஒரு பல் செத்தாவது வாங்கீட்டு போயிருங்கோவ்....!! அதுக்குன்னு உங்க ஆளுக்கும் பல் செட்டு வாங்கி குடுத்துறாதீங்க...!!! அப்புறம் கைமாதான்.....!!!!

// விசயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். //இது நெம்ப கஷ்டம்..... முயச்சி செய்யலாம்......!!!

கஷ்ட்ட காலத்தில் ,

லவ்டேல் மேடி.......

Prapa said...

எப்பிடி ஐயா உங்களால இப்பிடியெல்லாம் முடியுது.

தேவன் மாயம் said...

Blogger பாலா said...
----------------
ungalukku malai katti podanunga

enna maa aarassi paneerukeenga

anupavam athigam pola///

எல்லாம் உங்களுக்காகத்தான்!!
-___________________________________

06 July 2009 21:12
Delete
Blogger ஆ.ஞானசேகரன் said...

//அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!! //

ஐயோ! கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்...///

நண்பரே ஜாக்கிரதை!
___________________________________

06 July 2009 21:17
Blogger MayVee said...
---------------
mind lA vaichukkiren ...///

ஒகே
____________________________________

06 July 2009 21:39
Delete
Blogger வால்பையன் said...

/உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!//

டாக்டருக்கு நிறைய அனுபவம் போலயே!///

அய்யய்ய!!! இதெல்லாம் நமக்கு ஆவுறதில்லை!!
__________________________________
06 July 2009 21:42
Delete
Blogger MayVee said...

ennai madiri pala figure maintain pannuravangalukku ethavathu sollunga boss....

he he he he///

அடி வாங்க ரெடியா!!
___________________________________

______

தேவன் மாயம் said...

06 July 2009 21:43
Delete
Blogger MayVee said...

மனைவி ; காதலி என்று இரண்டு பேர் இருந்தால் என்ன செய்வது .....//

முதுகில் ரெண்டு டின் கட்டிக்க வேண்டியதுதான்!!
___________________________________......

06 July 2009 21:44
Delete
Blogger குடந்தை அன்புமணி said...

ஆறும் அசத்தலாகத்தான் இருக்கு. எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க முடியாமத்தான் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியதா இருக்குது. குறிப்பா ஆறாவது...
அய்யா! அது ரொம்ப ஆபத்து!!
_______________________________
06 July 2009 22:15
Delete
Blogger ஸ்ரீதர் said...

மிக நல்ல அறிவுரைகள்.நோட் பண்ணுங்கப்பா,நோட் பண்ணுங்கப்பா.///

சரிதான்!!
______________________________________

06 July 2009 22:28
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...

6/6 Formula - படிச்சிட்டு வர்றேன்//

ஓகே!!
__________________________________

06 July 2009 23:08
Delete
Blogger லவ்டேல் மேடி said...

// நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா? என்று அம்மணி கேட்க .. //


நீங்க எப்புடி போனாளுமும் இந்த கேள்வி உண்டு....!!


சொன்ன நேரத்துக்கு முன்னாடியே போனால் :

ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க...!! வேல எதுவும் இல்லியா.... !! அப்போ சரி இந்த வெங்காயம் , தக்காளிய மட்டும் கட பண்ணு குடுங்க....


சொன்ன நேரத்துக்கு காண கட்சிதமாக போனால் :

ஏன் .. சொன்னா சொன்ன நேரத்துக்குத்தான் வரணுமா... கொஞ்சம் முன்னாடியே வந்தா என்னவாம்....!!!


சொன்ன நேரத்துக்கு அப்புறம் லேட்டா போனால் :


அப்புடி என்ன ஆபீசுல வெட்டி முரிக்குற வேல......!! என்னவிட அந்த வேல அவ்வளோ முக்கியமா போச்சா உங்குளுக்கு ?


எப்புடி பிட்ட போட்டாலும் ... மடக்க ரெடியா இருப்பாங்க அம்முனிங்க ......// ஒரு வேலையைச் செய்யாமல் ”மறந்து விட்டேன்” என்று நிற்பவரா? கட்டாயம் மாற்றிக்கொள்ளவேண்டும். ///

ஆமா... ஆமா..... , இது சொன்னீங்களே ... நெம்ப கரெக்ட்டு.... இல்லைனா... ஒரு தடவ மறந்ததா..... ஒரு மாசத்துக்கு ... அந்த மேட்டரையே அவிங்க அம்மா ... அக்கா ... தங்கிச்சி.... சித்தி .. பெரியம்மான்னு ஒருத்துகிட்ட உடாம டப்பா தாட்டீருவாங்க .....!! அது மட்டுமில்லாம ஒரு மாசத்துக்கு அதையவே திரும்பத் திரும்ப சொல்லி நம்மள வெருப்பேத்துறது ....!!!!

// காதலியுடன் கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் அந்த பொழுதை மிகுந்த சந்தோசத்துடன் கழிக்கவேண்டும்! //
அப்புறம் பீச்சுல கடிவாளம் போட்ட குதரையாட்டோ அவ மூஞ்சியவே பாக்கணும்... !! மவனே கொஞ்சம் திரும்பி அங்க , இங்கனு பாத்த.... முடுஞ்ச....!!!!!// என்று உடையணிந்தோ, பரிசுப்பொருள் இல்லாமலோ செல்லக்கூடாது. //
ஆமாங்கோவ்.....!! முடுஞ்சா... அந்த அப்புச்சிக்கு ஒரு பல் செத்தாவது வாங்கீட்டு போயிருங்கோவ்....!! அதுக்குன்னு உங்க ஆளுக்கும் பல் செட்டு வாங்கி குடுத்துறாதீங்க...!!! அப்புறம் கைமாதான்.....!!!!

// விசயங்களை அனாவசியமாக மறைப்பது, அப்போதைக்கப்போது சொல்லாமல் மறைப்பது மிகவும் பிரச்சினையை உண்டு பண்ணும். //இது நெம்ப கஷ்டம்..... முயச்சி செய்யலாம்......!!!

கஷ்ட்ட காலத்தில் ,

லவ்டேல் மேடி......///

மேடி பின்னூட்டத்தில் ஒரு பதிவே இருக்கே!!! இதையே ஒரு பதிவா போடலாம். அசத்தல்!!
__________________________________.

06 July 2009 23:13
Delete
Blogger பிரபா said...

எப்பிடி ஐயா உங்களால இப்பிடியெல்லாம் முடியுது.//

கஷ்டம்தான்!
_____________________________

Rajeswari said...

ஒரு ஆராய்ச்சி படிப்பு நீங்க செய்யலாம் என்பது வேண்டுகோள்.! எப்படி இப்படி கரெக்டா சொல்லுறீங்க!
அதுவும் முதல் பாயிண்ட் ரொம்ப ரொம்ப கரெக்ட்!

சொல்லரசன் said...

Rajeswari said...
//ஒரு ஆராய்ச்சி படிப்பு நீங்க செய்யலாம் என்பது வேண்டுகோள்.! எப்படி இப்படி கரெக்டா சொல்லுறீங்க!//


தினம் தினம் ஏற்படும் அனுபவத்தை விட டாக்டருக்கு ஆராய்ச்சி படிப்பு பயன்தருமா

Suresh Kumar said...

பார்ப்பதற்கே இப்படியென்றால் பிற பெண்களைப் பாராட்டிப் பேசினீர்களென்றால் சங்குதான்......... //////////////////////

அப்படியே அனுபவத்தை புட்டு புட்டு வைக்கிறீங்க

முனைவர் இரா.குணசீலன் said...

எப்படி மருத்துவரே...
எல்லாத் துறைகளிலும் இடுகையிடுகிறீர்கள்........
ம்....
நன்றாகவுள்ளது.

அப்துல்மாலிக் said...

//ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க.. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!!
//

இஃகி இஃகி என்றுதான் சிரித்து சமாளிக்கனும், இல்லேனா உன்னைவிட அவள் அழகா என்று பார்த்தேன் அப்படினு சொல்லி சமாளீக்கலாம்

அப்துல்மாலிக் said...

///உங்கள் மனைவி காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!////

ஆமாம் ஆமாம் மன்னிப்பே கிடையாது அதுக்கு எத்தனை கரணங்கள் சொன்னாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும் சொல்லிக்காண்பிப்பார்கள்

விக்னேஷ்வரி said...

நல்லாருக்கு உங்க டிப்ஸ். :)

♫சோம்பேறி♫ said...

ஐடியா குடுக்குறது ரொம்ப ஈஸி.. ஆனா அதை ஃபாலோ பண்றது ரொம்ப கஷ்டம். அவ்வ்வ்வ்..

கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார்..நீங்க எங்கயோ போய்ட்டீங்க..

S.A. நவாஸுதீன் said...

ஆருக்கு ஆறும் நூத்துக்கு நூறு. எல்லா விஷயங்களையும் மெஷின் மாதிரி கடை பிடிக்கிறது கஷ்டம்னாலும், சில விஷயங்கள் கண்டிப்பா கடைபிடித்தே ஆகவேண்டும். கடைசி மேட்டர் ரொம்ப கஷ்டம்.

பழமைபேசி said...

ஆமா... ஆமா....இஃகிஃகி!

Jackiesekar said...

6.மிக முக்கியமானது. நாம் நமது பக்கவாட்டிலோ, பின்புறமோ ஒரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு. ஆனால் காதலி/மனைவி அதைத் தவறாக( மிகப்பெரிய தவறாகக்) கருதுகிறார்கள்... அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!..ஹி.. ஹி...ஹி..இதை உடனே சொல்ல மாட்டர்கள். கவனித்துக்கொண்டே இருப்பார்கள். நல்லா ருசுவானவுடன் கேட்பார்கள். நாம முழிக்கவேண்டியதுதான். ”ஒரு பொண்ணைக்கூட விடாம சைட் அடிக்கிறீங்க.. அதுவும் நான் பக்கத்தில் இருக்கும்போதே...” என்று கேட்கும் கேள்விக்கு நாம் ஒரு பதிலும் சொல்ல முடியாது. அதுவும் காதலியென்றால் .... அவ்வளவுதான்!!! //

எல்லா பெண்களும் இப்படித்தான் போல...எனக்கு கிள்ளு வாங்கி அளுத்துபோச்சி...

நசரேயன் said...

குறித்துக்கொண்டேன்

Anonymous said...

ஐ நோட்டட் டவுன் யுவர் பாயின்ட் ஹானர்.

Menaga Sathia said...

உங்களின் எல்லா பதிவுகளும் ரொம்ப நல்லாயிருக்கு,வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

ஆகா ஆகா நல்லாவே இருக்கு அறிவுரைகள் - கடைப்பிடிக்கனூமா

ப்ரியமுடன் வசந்த் said...

சார் நீங்க சைக்காலஜிஸ்ட் டாக்டரா?

புட்டு புட்டு வச்சுட்டீங்களே சார்

அன்புடன் அருணா said...

நிறைய கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் போலிருக்கு!

அன்புடன் அருணா said...

நிறைய கஷ்டப் பட்டிருக்கிறீர்கள் போலிருக்கு!

saravana bhavan said...

அய்யா நல்ல அனுபவம் போல. ஆனால் பாராட்ட பட வேண்டிய விஷயம் என்ன என்றால் யாவரும் பயன் அடைய வேண்டும் என்று நீங்கள் இந்த கட்டுரையை எழுதி இருப்பது.

saravana bhavan said...

அய்யா நல்ல அனுபவம் போல. ஆனால் பாராட்ட பட வேண்டிய விஷயம் என்ன என்றால் யாவரும் பயன் அடைய வேண்டும் என்று நீங்கள் இந்த கட்டுரையை எழுதி இருப்பது. நாம் எல்லாம் தெரிந்தவர் என்று நம்மை அதிகமாக எடை போட்டு கொள்கிறோம். ஆனால் சின்ன சின்ன விஷயம் கூட நாம் கவனித்து செய்வதில்லை. இதனால் தான் தொல்லை ஏற்படுகிறது. இந்த சின்ன விஷயங்கள் பின்னால் எவ்வளவு பெரிய கஷ்டங்களை கொடுக்கும் என்று நமக்கு தெரிவதில்லை. கற்றது கை மண் அளவு என்று நாம் சின்ன வயதில் படித்தாலும் அதை பல நேரம் மறந்து விடுகிறோம்.

priyamudanprabu said...

///
ரு பொருள் அசைந்தால்கூட சட்டெனத் திரும்பிப் பார்ப்போம். அவ்வளவு கூரிய திறன் நமக்கு
////

ஆமாங்க
எப்படி கண்டுபிடிச்சீங்க??

sakthi said...

அந்த அசையும் ஆசாமி நிறைய நேரங்களில் ஒரு பெண்ணாக அமைந்து விடுவதால்!!!..ஹி.. ஹி...ஹி..இதை உடனே சொல்ல மாட்டர்கள். கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.


இவ்ளோ கரீக்டா சொல்றீயளே

sakthi said...

நீங்கள் ஏதோ முக்கிய வேலையைக் காரணமாகச் சொல்ல என்னைவிட அது முக்கியமா?

அடிக்கடி நான் சொல்ற
அதே வார்த்தைகள்...

sakthi said...

உங்கள் காதலியின் பிறந்த நாளை மறப்பது போன்றவை மன்னிக்க முடியாத குற்றங்கள்!!

பின்னே...

Anonymous said...

mmmm எல்லாம் இன்பமயமுன்னு சொல்வாங்க

இங்க எல்லாம் தேவன்மயம்முன்னு சொல்லனும் போல..

எப்படி இது நீங்க மருத்துவரா மனோதத்துவரா?

எப்படி கடலை விட ஆழமான பெண்ணின் மனதை இப்படி புட்டு புட்டு .....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory