அன்பால் இணைந்த பதிவர்கள்!
http://abidheva.blogspot.com/2010/06/blog-post_04.html
சிங்கம்டா!!
http://abidheva.blogspot.com/2010/05/blog-post_31.html
அன்பால் இணைந்த பதிவர்கள்-2
http://abidheva.blogspot.com/2010/06/2.html
மணற்கேணி அமைப்பு சிங்கப்பூரில் உள்ள தமிழ் நண்பர்களால் தமிழ் வளர்க்கும் நோக்குடன் தொடங்கப்பட்டது. அரசியல், மொழி போன்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப் போட்டிகள் அதில் வருடா வருடம் நடத்தப்படுகின்றன். அவற்றில் வெற்றி பெறும் மூன்று கட்டுரையாளர்களுக்கு ஒரு வாரம் சிங்கப்பூர் சென்று வரும் வசதியை அவர்கள் செய்து தருகிறார்கள்.
விமானப்பயணம் பல முறை சந்தர்ப்பம் இருந்தாலும் பல்வேறு காரணங்களால செல்ல இயலாமல் இருந்த்து. அன்பான, துடிப்பன மணற்கேணி இளைஞர்களால் என் கனவு நனவானது. நன்றி மணற்கேணி.
லிட்டில் இந்தியா: சிங்கப்பூர் சென்றவுடன் நம்மைக் கவர்ந்திழுப்பது லிட்டில் இந்தியா பகுதிதான். லிட்டில் இந்தியா என்று பெயர் இருந்தாலும் தமிழர்கள்தான் இங்கு அதிகம் . தென்இந்திய உணவுகளுக்குப் பிரபலமான ‘முருகன் இட்லிக்கடை’. கோமள விலாஸ், சகுந்தலா. அஞ்சப்பர், ஆச்சி ஆகிய உணவகங்கள் இங்குதான் உள்ளன.
காலை உணவு முருகன் இட்லிக்கடையில் சிறப்பாக இருந்தது. காபி நம் ஊரில் போல் இங்கு அளவுடன் தருகிறார்கள். சிங்கையில் பல உணவகங்களில் ஒரு காபி வேண்டும் என்று கேட்டால் ஒரு பெரிய குவளை நிறையத் தந்துவிடுவார்கள். ஆகையினால் இரண்டு நபர்கள் செல்லும்போது ஒரு காபி கேட்டு அளவைப்பார்த்து விட்டு தேவையைச் சொல்லுவதே நல்லது.
மதிய உணவு சகுந்தலா, ஆச்சி ஆகியவற்றில் சாப்பிட்டால் நம் ஊரில் சாப்பிடுவது போல் இருக்கும்.
சாப்பாடு கோழிசாப்பாடு, கறி சாப்பாடு. மீன் சாப்பாடு,இறால் சாப்பாடு என்று தருகிறார்கள். இறால் சாப்பாடு 7 சிங்கை டாலர்கள். இறால் நம் விருப்பம்போல் இறால் வறுவல் அல்லது இறால் தொக்கு என்று வாங்கிக்கொள்ளலாம். சாப்பாடு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
எங்களுக்கு அருகில் அமர்ந்து மூன்று தமிழ் இளைஞர்கள் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மூன்று பேரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ’வேறு எதுவும் வேண்டுமா?’ என்று அந்த பணியாள் கேட்டு விட்டு பில்லைக் கொடுத்தான். மூவரில் ஒருவன் “ இப்பத்தான் சாப்பிட ஆரம்பித்துள்ளேன். போய் பிரியாணி கொண்டுவாப்பா” என்றான். மறுபடியும் பிரியாணி பாத்திரத்திலிருந்து எடுத்துப் பரிமாறினார்கள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அங்கு பிரியாணியும் அன்லிமிட். கிட்டத்தட்ட மூன்று பிளேட் பிரியாணியை முடித்தான் அந்த அன்புத் தமிழன்.( அவ்வளவு நேரம் நீ என்ன செய்தாய் என்றெல்லாம் கேட்கக்கூடாது...இஃகி! இஃகி!!)
அங்கிருந்த ஒவ்வொரு நாளும்
குழலிhttp://kuzhali.blogspot.com/,
கோவி.கண்ணன்http://govikannan.blogspot.com/
போன்றோரின் கவனிப்பும் அன்பும் சிறப்பாக இருந்தன. பொதுவகவே சிங்கையில் பணியாற்றும் தமிழ் நண்பர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நமக்கு இருப்பது போல் மருத்துவ விடுப்புகள் அதிகம் அங்கு இல்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் போனால் மருத்துவ விடுப்புக்கு சம்பளம் இல்லையாம். மேலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் அவர்களால் அலுவலக நேரத்தில் மட்டம் போட இயலவில்லை. நமக்காக ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு எடுத்து கவனித்தது மிகவும் மனம் நெகிழ வைத்தது.
அறைக்கு வந்து அங்கிருந்த் வசதிகளைப்பார்த்து, நமக்கு என்ன வேண்டும் என்று விசாரித்து, கூடவே உணவகத்துக்கு அழைத்துச்சென்று மீண்டும் அறையில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்ற விருந்தோம்பல் தமிழர் என்கிருந்தாலும் தன் வேர்களைத் துண்டித்துக் கொள்வதில்லை, மாறாக த்மிழ்த்தாய் என்னும் ஆலமரத்துக்கு பலம் சேர்க்கும் ஒரு விழுதாகவே சிங்கப்பூரில் செயல்பட்டு வருகிறார்கள் எனறால் அது மிகையில்லை!!
(இன்னும் வரும்- அடுத்த மணற்கேணி அறிவிப்பு வரும் வரை எழுதிக்கிட்டே இருப்போம்ல!!!- அதையும் தாண்டி எழுதுவேன் என்கிறீர்களா?, அதுவும் சரிதான்!!)
தமிழ்த்துளி தேவா.