Saturday, 25 April 2009

பொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்!!

அன்பின் வலை மக்களே!! ஏதோ ஐ.பி.எல் புண்ணியத்தில் உற்சாகமூட்டும் கன்னிகளால் விளையாட்டு மைதானத்தில் உள்ள ரசிகர்கள் சோர்வு அடையாமல் (?) விளையாட்டை ரசிக்கிறார்கள்!!

இதற்கு முன் அமெரிக்கன் விளையாட்டுத்திடல்களில் இவர்களைப் பார்த்து இருப்போம்!!

விளையாட்டு வீரர்களை பாராட்டி பதிவுகள் சரமாறியாக வந்து கொண்டுள்ளன!!

அதே நேரம் உடலை வருத்தி நடனம் புரியும் மங்கைகளை மறக்கலாகுமா?

அவர்களுக்காகவே இந்த பதிவு!!

வரலாறு!!!!! :  1967 ல் ஏழு இளம் பெண்கள் ஆரம்பித்ததுதான் முதல்! அடுத்த வருடம் லாஸ் ஏஞ்செல்சில் நடந்த கால்பந்து இறுதிப்போட்டியிலும் பயன்படுத்தப்பட்டனர்!! அதன் பிறகு அமெரிக்கா ஐரோப்பாவின் பல நாடுகளிலும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன!!

வருடா வருடம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதற்கு விருதும் வழங்கப்படுகிறது!!

நமது ஐ.பி.எல். போட்டிகளிலும் உற்சாக மங்கை குழுக்கள் இடம் பெறுகிறார்கள்!! ராஜஸ்தான் ராயல் அணியை சில்பா செட்டியின் கோடீசுவர ஆண் நண்பர் ராஜ் குந்த்ரா ஏலத்தில் எடுத்து உள்ளார்!இந்த அணியின் அழகிகளைத் தேர்வு செய்து,ஆடை அமைப்புகள் அனைத்தையும் சில்பாதான் செய்து உள்ளார்! அந்த செய்தியை விரிவாகப் படிக்க கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

http://www.bollywoodz.net/shilpa-wants-best-cheerleaders-for-rajasthan-royals/

இப்போது சில முக்கிய விபரங்களைப் பார்ப்போம்!

சில சிறந்த உற்சாக குழு மற்றும் பெண்களின் படங்கள் கீழே!!

கெண்டகி பல்கலைக்கழக அணி!! University of Kentucky Cheerleaders !

லூசியானா பல்கலைக்கழக அணி!!

லூசியானா அணியின் படத்தை நன்றாகப் பார்க்கவும்!! பார்த்து இதில் உள்ள சிறப்புகளைப் பின்னூட்டமிடவும்!!

க்லெம்ஸன் அணி!! இத்தகைய அணிகள் வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறது!! இதில் சில அணிகளில் இந்திய மங்கைகளும் உள்ளனர்!! 

அணிகளில் சிலவற்றைப் பார்த்தோம்!! பெண்கள் மட்டும்தான் இதில் உள்ளனரா? என்றால் இல்லை ஆண்களும் உள்ளனர்!!ஆண்கள் அணி பெண்கள் விளையாட்டுக்குப் போகுமா என்று தெரியவில்லை!! அதெல்லாம் நமக்கெதுக்கு என்கிறீர்களா? சரிதான்.

பயிற்சிகள்: இந்த குழுவினர் சும்மா கையைக்காலை ஆட்ட முடியாது. இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் உள்ளன. இல்லாவிடில் இவர்கள் இவ்வளவு அழகாக உடலை வளைத்து களைப்பு இல்லாமல் ஆட முடியாது.பயிற்சிகள் சில கீழே:

உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் பயிற்சிகள்,ஓட்டம்,இதயத்துக்கான பயிற்சிகள்,ஏரோபிக் பயிற்சி, கிக் பாக்ஸிங் பயிற்சி,பளு தூக்கும் பயிற்சி ஆகியவை இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றன!

உணவு முறை,எளிதில் சோர்வடையாத வகையில் தசைகளுக்கு தெம்பூட்டும் உணவுகள் பட்டியலின் படி வழங்கப்படுகின்றன!! கீழெ உள்ளது ஒரு உடற்பயிற்சி அட்டவணை!! படித்துப் பாருங்கள்!! எவ்வளவு கடினமாக செய்கிறார்கள் என்று!!

ஆச்சரியமாக உள்ளது!! மேலும் படிக்க

உடற்பயிற்சி முறைகள்!!  இந்த சுட்டியை தட்டி படிக்கவும்!!!

This workout is to be done EVERYDAY we do not have cheer practice!!!!! During every exercise please keep your abs, bum and lower back tight and your toes pointed (when possible), we are cheerleaders not bodybuilders! Remember to breathe and drink lots of water. Please take the time to stretch before and after so we donÂ’t have any injuries! Thanks luv ya!

 • 50 V-Snaps NO STOPPING!
 • 2 x 30 SquatsÂ…all the way to sitting position and a jump at the top
 • 30 Rocks each way - ten second hold after each setÂ….tight bums and abs
 • 50 Toe raises all the way up and down SLOWLY
 • 30 Second CORE HOLD! No cheatingÂ…as low as you can goÂ…no elbows down

(I will be able to tell if you arenÂ’t doing this one!)

 • 2 x 10 Kicks each way both legs with 10 sec hold above hip
 • 30 Leg lifts from ground up to 90 degrees slowlyÂ…feel the burn!!!!
 • 30 sec pike and straddle holds on the floor (the one none of you can do) I will know if you arenÂ’t doing this one too!
 • 2 x 30 Mountain climbers
 • 2 x 10 Push ups one with arms in normal support, one with your elbows tucked in
 • 4 lines tight bounces across floor (youÂ’ll have to do it in the school gym or your backyard) NO bending knees, no touching heels on ground, tight bum, abs, calves! Tight little bounces!
 • 2 x one-minute handstand against wall. Those who cannot do a handstand practice practice practice. This is another dead give away if you donÂ’t practice.
 • 2 lines inchworms with no front roll, all the way down and up No bending knees or arms. Again in your hallway or school gym.
 • 50 handstand bounces with tight shoulders, abs, lower back. Control on the way down
 • 10 press to handstands (do your best)
 • TOPS! Toe crunches two lines of your hallway or whatever(the equivalent of 2 lines of the wrestling mats)

முழுவதும் படிக்க முடியாதுதான். சில அழகிய உற்சாக நங்கைகளின் படங்கள் கீழே; சுட்டியை தட்டி பார்க்கலாம்.

1.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d809b99b9_gallery_600.jpg

2.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c1f_gallery_600.jpg

3.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69bbb_gallery_600.jpg

4.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c0c_gallery_600.jpg

5.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c3c_gallery_600.jpg

6.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80a71164_gallery_600.jpg

7.http://www.nfl.com/photo/photo-gallery?chronicleId=09000d5d80c68c20

படங்களையும் பார்த்துவிட்டீர்களா?

உற்சாக மங்கை என்றால் சாதரண விசயம் இல்லை என்று புரிந்ததா! ஒவ்வொரு விசயமும் சிரமம் உழைப்பு இல்லாமல் இல்லை!!இந்த பதிவுக்கு நான் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பேன்!!

அதற்காகவாவது,

போடுங்க ஓட்டு தமிலிஷ், தமிழ்மணத்தில்!!

Friday, 24 April 2009

இங்கு பிறந்த எனக்கு இந்த ஊர் போதும்-இளையராஜா!!

 

 

இளையராஜாவின் இசையில்தான் நாம் மயங்கி இருக்கிறோம். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞனின் முகத்தை வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கப்போகிறது!!

 

அவரது கோடானு கோடி ரசிகர்களுக்கும் இது இன்பச்செய்தியாக இருக்கும்!!

அழகர்மலை என்ற படத்தில் இயக்குனர் ராஜ்குமார் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்!!

சங்கிலிமுருகன் இப்படத்தின் தயாரிப்பாளர்!!

””உலகம் இப்போ”  என்ற பாடலைப் பாடி அந்தப் பாடலுக்கு அவரெ நடித்து உள்ளார்.ராஜா பிறந்து, வளர்ந்த இடங்களில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜாவுக்கு‌ப் பிடித்தமான திருவண்ணாமலை ரமண‌ர் ஆஸ்ரமத்திலும் பாடலை எடுத்திருக்கிறார்கள்.

பாடல் வரிகள்:

உலகம் இப்போ எங்கே போகுது

எனக்கு இந்த அன்னை பூமி போதும்

இங்கு பிறந்தவரும் எங்கோ போகிறார்

எனக்கு இந்த சொந்த நாடு போதும்

இந்த மண்ணை விட்டு நான் எங்கே செல்வேன்?”

பாடல் வரிகள் ஏதோ சொல்கிறதோ?

இந்தப்பாடலில் அவர் அன்னையின் சமாதி, அவர் மனைவியுடன் விளையாடிய ஆலமரம், மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆகிய இடங்களும் இடம்பெறுகின்றனவாம்!!

Wednesday, 22 April 2009

காசநோய்-T.B.(Tuberculosis)

என் தம்பியின் நண்பன் அவர். வக்கீலுக்குப் படிக்கும் போதே எனக்குப்பழக்கம்! பைக்கில் ஸ்டெயிலாக சுத்துவார்.இதெல்லாம் 10 வருடம் முன்பு!திடீரென்று ஒரு நாள்என் நண்பர் ஒருவர், வக்கீல்ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை! உங்களிடம் அனுப்புகிறேன்! பாருங்கள் என்றார். பார்த்தேன்!எனக்குத்தெரியாத முகம்! என்னைத்தெரியுதா?நான் உங்கள் தம்பியின் வக்கீல் நண்பன் என்றார்! என்னால் நம்ப முடியவில்லை!!எலும்பும் தோலுமாக உடல் மெலிந்து,நடக்க முடியாமல் வீல் சேரில் அம்ர்ந்து இருந்தார்! சோதித்ததில் அவருக்கு டி.பி.இருந்ததும்,மருந்துகளை சரியாக உட்கொள்ளவில்லை என்பதும் தெரிந்தது!அவரின் அலட்சியப்போக்கால் வியாதி உடலெல்லாம் பரவி இருந்தது.தினமும் என்னைக்காப்பாற்றுங்கள் என்று கேட்பார்.தீவிர சிகிச்சை செய்தும் முடியாமல் 10 நாளில் இறந்தும் போனார்.படித்தவர்களே மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் இருப்பது கண் இருந்தும் குருடர் போன்றது.சரி T.B. பற்றி..

.

Mycobacterium tuberculosis-காச நோயை உண்டாக்கும் கிருமி!!

T.B. என்று நாம் அழைக்கும் காச நோய் நுரையீரல்களைத்தான் முதலில் தாக்கும்!இருமல்,சளி உடல் எடை குறைதல், பலகீனம் ஆகியவை இதில் வரும்! குழந்தைகளைத்தாக்கும் போது இதனைபிரைமரி காம்ப்ளக்ஸ் என்று சொல்வார்கள்.இது ஒரு நுண்கிருமியால் ஏற்படுகிறது! இது இருமும் போது நுண்சளித்திவலைகளால் பரவுகிறது!இந்த நோய் குழந்தைகள் நோய்தாக்கியவருடன் அருகில் இருக்கும்போதுஅவர்களின் இருமல்,தும்மல்,சளி,எச்சிலுடன் முத்தமிடுதல் ஆகியவற்றால் பரவுகிறது! இந்தியக்குழந்தைகளில் இது அதிகம்!

ஒருவர் தும்மும்போது தெறிக்கும் சளித்திவலைகள்!!

 

ராபர்ட் கோச்- காசநோய் கிருமியைக் கண்டுபிடித்த விஞ்ஞானி!!

நடுத்தர வயதினர்,முதியோரைத்தாக்கும் போது கடுமையான இருமல்,வேகமான எடை குறவு மூச்சு விட முடியாமை,மாலையில் காய்ச்சல் காணப்படும்!நெஞ்சு நுண்கதிர்ப்படம் எடுத்தால் நுரையீரல் பாதிப்பை அறியலாம்.சளி சோதனையிலும் கிருமியைக் கண்டுபிடிக்கலாம்! இதற்கு சிகிச்சை ஆறு மாதகாலம் என்னும்போது இந்த நோய் எவ்வளவு கொடியது என்று அறியலாம். ஒரு முறை மருந்தை ஆரம்பித்துவிட்டால் நடுவில் விடாமல் 6 மாதம் சாப்பிட்டு ஆக வேண்டும்! நடுவில் உடல் தேறி நன்றாக இருக்கிறதே என்று இளம் வயதினர்கூட விட்டுவிட்டால் திரும்ப வந்துவிடும்! மறுமுறை வரும் டி.பி. மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படாது! இறக்கும் நோயாளிகளும் அதிகம்! இதற்கு சரியான மருந்து கண்டு பிடிக்காத காலத்தில் நோய் தாக்கி இறந்தவர் --கணிதமேதை ராமானுஜம்!!

Tuesday, 21 April 2009

கலைஞரே! ஒபாமாவே!! -போரை நிறுத்துக!!

ஈழத்தமிழர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தமிழர்கள் தினமும் கொல்லப்பட்டு வருவதும் தினமும் நூற்றுக்கணக்கில் மடிவதும் நமக்கு சொல்லொனாத் துயரத்தை ஏற்படுத்துகிறது.

ஈழத்தமிழ் பற்றி பேசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஈழத்தமிழர் பற்றியும் சண்டை பற்றியும் இன்று பேசாதவர் இல்லை.

தேர்தல் நேரத்தில் இதனை தூக்கி ஓரத்தில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணிய நேரத்தில் முழு போர் நிறுத்தம் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது!!

நாளை இதற்காக பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது அரசியலோ, இல்லை ஓட்டு வாங்கும் யுக்தியோ எதுவாக இருப்பினும் அனைவரும் அனைத்துக்கட்சியும் கலந்து கொண்டு தங்கள் நிலையை உலகுக்கு மத்திய அரசுக்கு உரைக்கும் நேரமிது!!

 

அதே நேரம் அமெரிக்க அதிபர் இலங்கையில் ராணுவம் தமிழர்களைக் கொல்லுவதை நிறுத்தக்கோரியுள்ளார்.

வரவேற்கத்தக்கது. புஷ் இருந்தபோது ஒரே நாளில் பாகிஸ்தானில் முஷரஃபை பதவி விலக ஆணையிட்டார்.

அதே அதிகாரத்துடன் ஒபாமா ராஜபக்‌ஷேவுக்கு உத்தரவிடலாம்..

1.கலைஞர் நெருக்கடி கொடுத்தால் அத்துடன் அனைத்துக்கட்சித்தலைவர்களும் நிர்பந்த்தித்தால் இந்திய அரசு மிரட்டினால் உடனே இலங்கை பணியும்!!

2.ஒபாமா உத்தரவிட்டால் உடனே போர் நிறுத்தம் ஏற்படும்! இதற்கு.இந்தியா,நார்வே, இங்கிலாந்து அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

நடக்குமா?

தமிலிஷ்,தமிழ்மணம்!!

கொஞ்சம் தேநீர்-15 -நிழல்!!

வலை நண்பர்களே!! இதற்கு முன் கொஞ்சம்

தேநீர்-14- நானும் என் நிழலும்

எழுதி இருந்தேன்!! ரசித்தவர் பலர்!!

சிலர் புரியவில்லை என்றனர்!

அந்தக் கவிதை இளமை விகடனில்

வெளியாயிற்று!!

http://youthful.vikatan.com/youth/thevanmayampoem16042009.asp

தற்போது அதே நிழலின் தாக்கத்தில்

ஒரு சிறிய சிந்தனை!!

-------------------------------------------------------------------------------

கொஞ்சம் தேநீர்-15-நிழல்!

கொஞ்சிப் பாலூட்டுகையில்

அன்னையின் மடியில்

மறைந்திருந்தது

என் நிழல்!

 

கைபிடித்து

கடைவீதி நடக்கையில்

தெரியவில்லை என் நிழல்!

என் அப்பாவின்

நிழலில் மறைந்திருந்து,

 

கவிதைப் போட்டியில்

பரிசு பெற்ற பாடலின்

வரிகளின் ஊடே

பொதிந்து கிடந்தது

தமிழ் ஐயாவின் நிழல்!

 

கல்லூரியில்

ஆய்வுக்கட்டுரையின்

அறிவியலின்

விரிவுகளில்

மறைந்து கிடந்தது

என் பேராசிரியரின் நிழல்!

 

தயங்கியும் மயங்கியும்

தள்ளாடிய

என் வாலிபம்

தஞ்சம் புகுந்தது

என் மனைவியின் நிழலில்!!

 

இன்னும் காத்திருக்கும்

வாழ்வின் வழிநெடுக

எண்ணிலடங்கா

நிழல்கள்!!

 

நிழல்கள்

இல்லாமல்

நிங்களோ நானோ

யாருமில்லை!!

-------------------------------------

 

பிடித்திருந்தால் தமிலிஷிலும்

தமிழ்மணத்திலும் தட்டுங்க!

Sunday, 19 April 2009

ஸ்லம் டாக் நட்சத்திரம்!! விற்பனைக்கு!!

 

நான் முந்தைய பதிவுகளில் ஸ்லம்டாக் குழந்தைகள் ஏமாற்றப்பட்டனரா? என்று எழுதினேன்!!

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்த ரூபினாவை விற்க முயற்சி நடக்கிறது. ஆம்! நம்ப முடியாத உண்மை!!

என்னதான் படங்கள் எடுத்தாலும் இந்திய மக்களில் பலரின் வாழ்க்கை வறுமைக் கோட்டைத் தாண்ட முடியாமல் தத்தளிப்பது உண்மை!!

இந்தியாவின் வறுமை படங்களிலும் கதைகளிலும் விருதுகளுக்கும் விற்பனைக்கும் உபயோகப் படுவதாக எழும் குற்றச்சாட்டு உண்மைதான்!

பணத்துக்காக மக்களில் சிலர் பண்பைத்தொலைக்கும் கதை உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!!

ஒன்பது வயதே நிரம்பிய ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!! துபாயில் உள்ள ஒரு குடும்பத்தின் மூலம் இந்த ஏற்பாடு ரகசியமாக நடந்து உள்ளது!!

ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!

Saturday, 18 April 2009

இறந்த மகன் வேண்டும் !!


  அன்பு என்பது மிகச்சிறந்த விசயம்!! அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது!! ஈடு இணை இல்லாதது!!

நம் நாட்டில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படித்தான்!!

மகன் இறந்து விட்டான். ஆனால் இறந்த அந்த வாலிபனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை!! அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான்!! அவனுக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்றும் அவர்களுக்கு ஹண்டர்,வான்,டாட் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் தன் தாயுடன் பேசும் பல சமயங்களில் சொல்லி இருக்கிறான்!

இறந்த நிக்கோலஸ் ஈவான்ஸ்!!

எதிர்பாராத ஒரு நிகழ்வில் அவனுக்கு  தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது!!

கோமா நிலையில் இருக்கிறான்!! ”ப்ரெய்ன் டெத்” என்போமே அதுபோல!

அம்மா தன் மகன் பிழைக்கமாட்டான் என்பது தெரிந்தவுடன் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிக்க்கிறார்..

ஆனாலும் மகன் மேல் கொள்ளை ஆசை அவருக்கு! அந்த மகன் எந்த ரூபத்திலாவது வேண்டும் என்று ஆசைப் படுகிறார்!!

பல உறுப்புகளை இவர் சம்மத்தித்து தானம் செய்வது போல் தனக்கு தன் மகனின் விந்துஅணு தேவை!! அதை வைத்து செயற்கைக் கரு உண்டாக்கி ஏதாவது வாடகைத்தாயின் வயிற்றில் தன் மகனின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார்!!

இப்படி ஒரு விநோதமான நிகழ்ச்சி டெக்சாஸ்,அமெரிக்காவில்  !! ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இதற்கு முன் இப்படி ஒரு பிரச்சினையை சட்டத்துறைகூட சந்தித்ததில்லையாம்!!

ஆகவே உயிர் அணுக்களை பெற்றோரிடம் கொடுக்கலாமா கூடாதா என்று சட்டத்துறை நிபுணர்கள் ஆராய்ந்தனர்!!அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்!! அதை எடுக்கும் வரை குறிப்பிட்ட நபரின் உடல் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்

மகனின் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய பெற்ற தாய்க்கு உரிமை இருக்கும்போது அவருடைய உணர்ச்சிகளை மதிக்கவேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தாத போது அவருடைய தாய்மை உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய மகனின் உயிர் அணுக்களை கொடுப்பது தவறில்லை என்று நீதிபதியால் முடிவு செய்யப்பட்டது!!

எவ்வளவு மனிதாபிமானத்துடன் நீதிபதி உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் பாருங்கள்!!!

ஒரு தாயின் பாசம் இறுதியில் வென்றது!! அறிவியல் முன்னேற்றம் அன்புக்காக நல்ல வழியில் பயன்படுத்தப் படுவது சந்தோசம்தான்!!!

பிடித்திருந்தால் போடுக வாக்குகளை தமிலிஷ்,தமிழ்மணம் இரண்டிலும்!!

Thursday, 16 April 2009

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்!!

 

 

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!

நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.

ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!

நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!

சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?

பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!

1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே?  நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க  வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)

2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!

3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)

4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!

5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை  (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!!  சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!

6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)

7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!

8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)

9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!

10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!

என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!

குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!

Wednesday, 15 April 2009

விடை பெறுகிறேன்!! வணக்கம்!!

அன்பு வலை நண்பர்களே!

விளையாட்டுப்போல 22 நவம்பரில் ஆரம்பித்தது என் வலைப் பயணம்.

தமிழில் எழுதமுடியாமல் கஷ்டப்பட்டு, பல மென்பொருட்களை தரவிறக்கம் செய்து வலையில் தமிழ் எழுத போராடியது ஒரு மறக்க முடியாத அனுபவம்!!

அதே சமயம் தமிழ்மணத்தில் சேர்க்கமுடியாமல் கஷ்டபட்டது தனி கதை!! இப்போதும் என் டெம்ப்ளேட்டில் எதை அழித்தேன்! எதை சேர்த்தேன் என்று தெரியவில்லை!! என் எக்ஸ். எம். எல் கோடுகளில் நிறைய பிழைகள் உள்ளன!!

அதன் பின் அறைக்குள் வந்த( ஆப்பிரிக்க) வானம்(கவிதைத் தொகுதி),  போல் என் அறைக்குள்ளேயே என் படைப்புகளை வலையில் பிரசுரம் செய்ய முடிந்தது! கையில் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி பிரசுரிக்க வேண்டும் என்றால் என்னால் எதுவுமே எழுதியிருக்க முடியாது!!உண்மை!!

எழுதியவற்றுக்கு கருத்துக்களும், பின்னூட்டங்களுமாய் வலையில் மேலும் மேலும் எழுதும் போதை ஏற்பட்டது!! உண்மையில் வலையில் பின்னூட்டமிடுபவர்கள் என்னை விட பரந்த மனம் கொண்டவர்கள்!! என் பின்னூட்டங்களாவது, கேலி, கிண்டல் என்று சிலரை காயப்படுத்தி இருக்கும், ஆனால் வலை நண்பர்கள் என்னைக் காயப்படுத்தியதே இல்லை!!

அதன் பின் என் பதிவை கெல்வி. நெட் டில் (TAMIL TOP BLOGS) இணைத்தேன்!! அப்போது ஆரம்பித்தது ஒரு ரேஸ்!! பதிவர்களில் யார் அதிகம் ஹிட் பெறுவது என்ற அது செம போதை தரும் ரேஸ்!! தினமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! ஹிட் எவ்வளவு என்று பதிவு போட்டுவிட்டுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்!!

இதில் நான் பெற்றது நான்காவது இடம்!!

ஆனால் என் அன்றாட நடைமுறை மாற ஆரம்பித்தது.  பொன்னான நேரமெல்லாம் பதிவு போடுவது பற்றியே யோசித்து, சூடான இடுகையில் இவ்வளவு ஹிட் வாங்கியும் போடவில்லையே? ஏன்? என்று குழம்பி, தமிழிஷில் ஹிட் ஆகிவிட்டதா ? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு............ போதும்டா சாமி!!

அமைதியாக நம் நண்பர்களுடன், குடும்பத்தாருடன், எந்த டென்சனும் இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்!!!

ஆகையால் விலகுகிறேன்!!! ஆமாம் கெல்வி.நெட். தமிழ் டாப் பிளாகிலிருந்து விடை பெறுகிறேன்!!மனம் நிம்மதியாக உள்ளது!!

மேலே தமிழ் டாப் பிளாக் என்ற சொல் விடுபட்டுவிட்டது!! தமிழ் டாப் பிளாக் கிலிருந்து விலகுகிறேன் என்று படிக்கவும்!!( என்ன இருந்தாலும் நம்ம கிருத்துருவம் நம்மை விடாதே!!! இஃகி!! இஃகி!!!இஃகி!!)

தேவா..

Tuesday, 14 April 2009

நானும் என் நிழலும்-கொஞ்சம் தேநீர்-14

நானும் என் நிழலும்

அமர்ந்திருந்தோம்

எதிரெதிரே,

 

மேசையின் மீதும்

என் பிம்ப முகத்திலும்

கழுவப்படாத கறைகள்!

 

ஒளியும் நேரமும்

கரைந்து கொண்டிருந்தன

எங்கே போனாய்

உனைதேடி

நானும் என் நிழலும்!!

 

மௌனம் கலைத்து

என்னைப்பற்றிய விசாரணைகளை

தொடங்கியது

என் நிழல்

 

நிஜங்களை

அறிந்த நிழலுக்கு

சொல்லமுடியவில்லை

எந்த பதிலும்

என்னால்!

 

தொடரும்

கேள்விகளின் உக்கிரம்

தாங்க முடியாமல் நான்,

காத்திருக்கிறேன்

ஒளியும் நேரமும்

கரைய!

 

பதிலளிக்க முடியாத

ஒரு கணத்தில்

ஒளியுடன் மறைந்தது

என் நிழல்!

 

தொடரும்

இரவில் நான் மட்டும்

தனியாக!! 

 

படித்து விட்டீர்கள்!

போடுங்க ஓட்டு தமிலிஷ்,

தமிழ்மணம்

இரண்டிலும்!!

 

 

Monday, 13 April 2009

அழகான விளையாட்டு வீராங்கனைகள்!!

திறமையும் அழகும் ஒன்று சேராது என்று சொல்வார்கள்!!

பழமொழிகள் மாறும் காலமிது!!

திறமை, அழகு மட்டுமின்று பணமும் ஒன்று சேரும் காலம் இது!!

அத்தகைய விளையாட்டு நட்சத்திரங்களைப் பார்ப்போம்!!

1.அலெக்ஸாண்ட்ரோ ஆர்லண்டோ- கனடா

கனடா நாட்டில் பிறந்து வளர்ண்டவர் இவர். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை!! டொரொண்டொ பல்கலைக்க்ழகத்தில் பொருளியல் படிக்கிறார்.

2.மரியா ஷரபோவா- ரஷ்யா

இவரைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? அனைவரும் அறிந்த இந்தப் டென்னிஸ் புயல் உருவானது ரஷியாவில்.

 

3.ரீடா (Rita Dravucz – Hungary)

நீரில் விளையாடும் போலோ விளையாட்டு வீரங்கனை!! இவர் விளையாடும்போது விரல் உடைந்து,கை எலும்பு உடைந்து கஷ்டப் பட்டார். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்!!

4.ALONA BONDARENKO UKRAINE- அலோனா

உக்ரைனில் பிறந்த அலோனா டென்னிஸ் ஒற்றயர், இரட்டையர் பிரிவுகளில் ஆடுகிறார்!

டென்னிஸ் இப்படியா ஆடுவது!! எப்படியோ நல்லா ஆடினா சரிதான்!!( எப்படி ஆடினாலும் நாங்க பாப்போம்ல).

5.அமெண்டா பெர்ட்- அமெரிக்கா

இவர் தண்ணீர் தேவதை!! நீச்சலில் அமெரிக்காவுக்காக போட்டியிடுபவர்! பத்திரிக்கை மாடலாகவும் விளங்குகிறார்.  

தனது 14 வது வயதிலேயே புகழ் பெற ஆரம்பித்தார். பதக்கம் வாங்கும்போது தன் டெட்டிபேர் கரடி பொம்மையை கையில் கொண்டு பதக்கப் படியில் நின்றிருக்கிறார்..

இதுவே போதும்.. மிச்சம் பிறகு பார்ப்போம்!!

எயிட்ஸ் - ஒரு அறிமுகம்

எயிட்ஸ் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்.நிறைய படித்தும் இருப்போம். ஆனால் ரொம்ப புரியாத நுட்பமான அறிவியல் வார்த்தைகள் இருப்பதால் அப்படியே பாதியில் படிக்காமல் விட்டு விடுவோம்! இதனால் இந்த நோய் பற்றி ஒரு தெளிவு இருக்காது!! நான் ஒரு நோயாளியின் கதையாக ஒரு முன்னுரை தருகிறேன்.

நான் செல்லும் அரசு ஆஸ்பத்திரிக்கு 5 மாதம் முன்னாடி ஒரு நோயாளியைக் கூட்டி வந்தனர்!

டி.பி. மாதிரி எலும்பும் தோலுமாக இருந்தார்! அவருக்கு மூன்று மனைவியர்(அப்பாடி).கடைசி மனைவிதான் கூட்டிவந்தது! டி.பி.மாதிரியேசளி,காய்ச்சல்,வேகமான எடை குறைவு எல்லாம் இருந்தது! ஆனால் பரிசோதனை செய்து பார்த்ததில் டி.பி.இல்லை என்று தெரிய வந்தது! அப்படியானால் என்ன?

உங்களுக்குத்தெரியும்! ஆம்! எச்.அய்.வி.என்று சொல்ற எயிட்ஸ் தான்! ஏற்கெனவே வேறு மருத்துவமனையில் செய்த சோதனைகளில் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளி.இவரும் மருந்துஒழுங்காகச் சாப்பிடலை.ஆனால் பாருங்க இந்தநோய்க்குஆயிரக்கணக்கான ரூபாய்க்கான மருந்து அரசு இலவசமா தருதுங்க! அதை ஒழுங்கா வாங்கி சாப்பிடவில்லை இவர்.

இந்தநோய்கட்டிப்பிடிப்பதால்,ஏன்முத்தமிடுவதலநோயா-ளியைக்கடித்த கொசு நம்மைக்கடித்தால்,ஒரே தட்டில் உணவு சாப்பிட்டால் கூட பரவாது!

கிருமியின் மீது 10 நிமிடம் வெய்யில் பட்டால்கூட கிருமி இறந்துவிடும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் நோயுடனேயே 10-15 வருடம் கூட வாழ்கிறார்கள்! உடலுறவு தவிர போதை மருந்து ஊசியை இரண்டு மூன்று பேர் கழுவாமல் போட்டுக்கிறதுனால கூட இது பரவிவிடும்!

மருத்துவமனை போனா தனி புதிய சிரிஞ் உபயோகிக்கிறார்களான்னு பாருங்க! ரொம்ப கிராமம்னா ஒரு புதிய சிரிஞ் வாங்கிக்கொண்டு போய் விடுங்கள்!!

எயிட்ஸுக்கு நல்ல மருத்துவம் தாம்பரம் டி.பி.சானிடோரியத்தில் கிடைக்கிறது!அது தவிர எல்லா தாலுகா அரசு மருத்துவ மனைகளிலும் கிடைக்கும்! என்ன இந்த வியாதியை குணப்படுத்த முடியாது! கட்டுப்படுத்தி கொஞ்ச நாள் வாழ்க்கையை தள்ளிப்போடலாம்!

இன்னும் இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை! நீங்க கண்டுபிடிச்சீங்கன்னா அடுத்த நோபல் பரிசு உங்களுக்குத்தான்!

அப்புறம் அந்த நோயாளியை விட்டுவிட்டமே! அவர் 3 நாள் கழித்து உடல்நிலை ரொம்ப சீரியஸ் ஆகி கோமா நிலைக்குப்போய்விட்டார்! உற்வினர்கள் பாருங்க ஒருத்தன்கூட பக்கத்தில இல்லைங்க! சேர்த்துவிட்டு எல்லாரும் ஓடி விட்டனர்!போன் மூலம் கூப்பிட்டாலும் யாரும் வரவில்லை! இறக்கும் தருவாயில் எந்த நபரும் இன்றி அநாதையாய் இறந்தார்!பிணம் கூட எங்களுக்கு வேண்டாம் என்று ஒரு கடிதம் எழுதி தெரிந்த ஆள் மூலம் எங்களுக்கு கொடுத்து அனுப்பிவிட்டார்கள்!

கடைசியில் வேறு வழியில்லாமல் அநாதைப்பிணமாக நகராட்சியால் அவர் உடல் எரிக்கப்பட்டது!

பிடித்து இருந்தால் தமிலிஷ், தமிழ்மணத்தில்

ஓட்டுப்போடவும்!!

-------------------------------------------------------------


Sunday, 12 April 2009

இன்னும் வராத அதிரடி திரைப்படம்!!


அன்பின் நண்பர்களே!!
அடுத்த மாதம் திரைக்கு வரப்போகும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் மென் ஆரிஜின்ஸ் வொல்வரின்” திரைப்படம்!!

சமீபத்தில் அதன் வீடியோ ட்ரைலர் வெளிவந்து “அதிகம் பார்க்கப்பட்ட விடியோவாக உள்ளது!! 

நீங்களும் ரசிக்கவும்!!!

Saturday, 11 April 2009

நான் மறுபடியும் கல்லூரி சென்றால்!(காலக் கடிகாரம்-கல்லூரிக்கு விடாது)

அன்புடன் நண்பர்களே!  
நிலாவும் அம்மாவும் என்னை தொடர் பதிவிட அழைத்து இருந்தார்கள், யோசித்துக்கொண்டு இருந்தேன். அதற்கான நேரம் தற்போதுதான் அமைந்தது.
தலைப்பு ”திரும்ப நான் கல்லூரி சென்றால்”.இது ஒரு கஷ்டமான தலைப்புத்தான். ஏனென்றால் பெரும்பாலும் திருத்திக்கொள்ளக்கூடிய விசயங்கள் குறைவுதான். அப்படியே இருந்தாலும் சொல்ல முடியாத சங்கதிகள் அதிகம!

நிலா உங்கம்மா வச்ச தலைப்பு தொடர் பதிவுக்கு எவ்வளவு கஷ்டம் பார்! ஒரே ஒரு விசயம் மட்டும்தான் நான் சொல்லப்போறேன்! மற்றவர்களுக்கும் விசயம் தேவைதானே!

கல்லூரியில் சேர்ந்தவுடன் நிறைய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள முயன்று இருப்பேன்.என் கல்லூரியில் எனக்கு நண்பர்கள் வட்டம் இருந்தாலும் எல்லோரையும் கவரும் விதமாக அது இல்லை.

.
நண்பர்கள் அதிகம் வேண்டுமென்றால் அதற்கு உபரியாக படிப்பைத்தவிர நிறைய திறமைகள் வேண்டும்.

கல்லூரியில் எனக்கு நெருங்கிய வட்டம் ஒன்று இருந்தது. இப்போதும் அது உள்ளது.

அது தவிர அருகாமையில் இருந்த பெண்கள் பொறியியல் கல்லூரியிலும், ஆண்கள் பொறியியல் கல்லூரியிலும் நண்பர்கள் இருந்தார்கள்.

பொதுவாக வாரத்தில் 5-7 முறை நாங்கள்{பொறியிய்லும்} கும்பலாக வெளியில் செல்வது வழக்கம்! மகளிர் கல்லூரி மக்கள் காசு கட்டி படிப்பவர்கள், பணக்கார மங்கைகள், வெளியே கும்பலாக் கிளம்பினா போற இடம் எல்லாம் ஓட்டலாக இருந்தாலும் சரி, தியேட்டராக இருந்தாலும் செம ரகளையாக இருக்கும்! அலம்பல் தாங்க முடியாது.

ஓட்டலுக்குச் சென்று ஆர்டர் செய்தால் ஒவ்வொரு அயிட்டமாக வருவதற்குள் தீர்ந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் ஒரே பிளேட் அல்லது இரண்டு பிளேட்டில் எல்லோரும் சாப்பிட்டு விடுவோம்! எல்லாம் ஸ்போன்,கை ஊட்டல்தான்! நவரத்ன புலவு எத்தனை,மொகலாய் பிரியாணி எத்தனை  என்று வெயிட்டர் குழம்பும் அளவுக்கு ஆகிவிடும்!
அதே போல் சினிமா சென்றாலும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் யாரையும் கண்டு கொள்ளாமல் சட்டென்று கவுண்டர் அருகில் சென்று டிக்கெட் எடுத்துவிடுவார்கள் அந்த பொறியியல் தோழிகள்! பணத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை! முறை வைத்து செலவு செய்வது, கணக்குப் பார்ப்பது எல்ல்லாம் இல்லை, பெரும்பாலும் எங்கள் தோழிகளே செய்துவிடுவார்கள்1 நாங்கள் எப்பவாவதுதான்!

என்னிடம் காசு நிறய இருக்கும். ஆனால் செலவழிக்கத்தெரியாது. நம் வீட்டில் அப்படி வளர்த்து விட்டார்கள்!!

கல்லூரியில் என் திறமையை இன்னும் நன்றாக வெளிப்படுத்தி இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்!!  
எழுத நிறைய உள்ளது!
ஆயினும் நான் கல்லூரி செல்ல வாய்ப்புக்கிடைத்தால் பாட்டு,கிடார்,டான்ஸ் மூன்றும் அல்லது ஒன்றைக் கற்றுக்கொள்வேன்.

நானே கல்லூரி சென்று டேபிள் டென்னிஸ் கற்றுக்கொண்டேன். ஸ்டேட் பாங்கில் டோர்னமெண்டில் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். சந்தோசமாக இருந்தது. ஆயினும் எனக்கு ஒரு வாத்தியக்கருவியோ அல்லது பாட்டோ ஏதாவது ஒன்றோ தெரிந்திருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது கலை ஒன்றை இளம் வயதிலேயே கற்றுக்கொடுங்கள்!! அது கல்லூரியில் அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும்!!

நமக்குக் கிடைக்காத சந்தர்ப்பங்களை குழந்தைகளுக்கு அளிப்போம்!

சரிதானா! நிறைய மிச்சம் விட்டு இருக்கிறேன், தொடருக மக்களே!

நான் தொடர அழைப்பது:

1.இராகவன் நைஜீரியா

2.அபு அப்ஸர்

3.அன்புமணி

4.ராஜேஸ்வரி

5.செய்யது.

வாங்க வந்து எழுதுங்க மக்களே!!

Friday, 10 April 2009

பார்லி நீர் அருந்துதல்!!அதிவேக மன்னர்கள்!!

அன்பின் வலை மக்களே!! இன்று சனிக்கிழமை.வேலை குறைவு! ஜாலிதான்! பார்லி நீரை அதிகம் பருகிவிட வேண்டாம். உங்களை சற்று குஷிப்படுத்த சில விடியோக்களை கீழே தொகுத்துள்ளேன்!!பார்த்து மகிழுங்கள்!

கீழே உள்ள வீடியோக்களைப்பாருங்கள்!

1.ஒரு பெரிய மக் நிறைய 5 விநாடிக்குள்!!! உங்களால் முடியுமா? சீரியஸாக முயல வேண்டாம். ஏதோ பெரிய புனலுக்குள் நேரடியாக ஊற்றியது போல் உள்ளது.

 

2.60 அவுன்ஸை எவ்வளவு வேகமாக உள்ளே தள்ளுகிறார் பாருங்கள் கீழே:

 

3.இவர்தான் உலகின் வேகமான குடிமகன்!! சின்னப் பையனாட்டம் இருக்கிறார்! இளம் வயதிலேயே என்ன ஒரு திறமை!

 

4.6 போத்தல் அளவை இவர் குடித்து முடிக்கிறார்! அதுவும் இரண்டே கல்ப்பில்!!

 

5.ஒரு பாட்டில் பார்லி நீரை இரண்டு வினாடியில் குடிக்க முடியுமா? அருந்திமுடிக்கிறார். இதுதான் ஒரு டின் பார்லி நீர் அருந்துதலில் உலக சாதனையாம்!!

என்ன சனிக்கிழமைக்கு ஏற்ற நல்ல செய்திகளை காணொளியில் கண்டீர்கள்!!!

இனிய வார இறுதி உங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்!!

குத்துங்க !  தமிலிஷ், தமிழ்மணம்

இரண்டிலும்!!

கமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சிறந்த காட்சியும்!!

கமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போது பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிறது!.

மூலப்படமான ”எ வெட்னஸ் டே” படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்த ஒரு சிறந்த காட்சியைப்பாருங்கள்!!

புடிச்சா தமிழ்மணம் தமிலிஷில் ஓட்டு போடுங்க!!

Thursday, 9 April 2009

கமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்கமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போதுபெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போதுஉன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிற து!

பம்பாய் குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்தியகுடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம்எடுக்கப்பட்டிருந்தது.

கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள்.

கமல் இப்படத்தில் இந்தியக் குடிமகனாக நடிக்கிறார். நசருதீன்ஷா இந்தப்பாத்திரத்தை ஏற்றிருந்தார்! மோகன்லால் அனுபம்கேர் ஏற்றிருந்த கமிஷனர்வேடத்தில் மலையாளத்திலும், தெலுங்கில் நடிக்கின்றனர்.

இசை யார் தெரியுமா? கமலின் மகள் சுருதி கமல்தான்!!! வைக்கும்போதே சுருதின்னு சரியா வச்சு இருக்கார்.

மேலே உள்ள படம் சுருதி யின் படம். பின்னணி இசைக்கு வந்தமாதிரி தெரியல படத்தைப் பார்த்தால்!!

அன்புடன் ஒரு சிகிச்சை-3-ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்(Ankylosing spondylitis)

ஆங்கிலோசிங் ஸ்பாண்டிலைடிஸ்(Ankylosing spondylitis)

இது எலும்பைத்தாக்கும் ஒரு வியாதி.இதன் பெயரை ஆங்கிலத்தில் படிப்பதே நல்லது.ஏனெனில் எங்காவது பார்க்கும்,படிக்கும்போது ஞாபகம் வரும்.

இது எதனால் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை!பரம்பரையாக சில இனத்தில் இது காணப்படுகிறது.

இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலோரிடம் H L A B 27 என்ற ஆண்டிஜன் காணப்படுகிறது.

இந்த வியாதி வந்தவர்களின் எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் விரைவில் முற்றி சவ்வுகளும் எலும்புபோல ஆகிவிடுகின்றன.

எலும்புகளை இணைக்கும் சவ்வுகள் ஏன் விரைவில் எலும்பு போல மாறி தன் இழுவைத்தன்மையை இழக்கின்றன என்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

அதாவது இரண்டு எலும்புகளை சவ்வு இணைக்கிறது! இந்த சவ்வானது எலாஸ்டிக் போல விரிந்து சுருங்கும் தன்மையுள்ளது! நாம் வளையும்போது விரிந்து கொடுக்கும். எலும்புகள் விலகாமல் பிடித்துக்க்கொள்ளவும் செய்யும்!

இந்த சவ்வுகள் விரைவில் முற்றிவிடுவதுதான் இந்த நோயின் காரணம்!

இது ஒரு தொடர்நது தொல்லை செய்யும் வியாதி. இது நமது முதுகு நடு எலும்பை பாதிக்கும்.

30-40வயதில் இது ஆரம்பிக்கும்.ஆண்களில்தான் இது அதிகம்.

இது பரவிய முதுகு வலியுடன் ஆரம்பிக்கும்.பிற மூட்டுகளிலும் வலி இருக்கும்.

சோதித்துப்பார்த்தால் முதுகெலும்பின் அசைவு பெருமளவு குறைவாக இருக்கும். நெஞ்சின் விரிவு குறைந்து(<5செ.மீ),அதாவது 5 செ.மீக்கு குறைவாக இருக்கும்.

நோயின் முற்றிய நிலையில் கழுத்து முதல் கீழ்முதுகுவரை இறுகி அசைவற்று போய்விடும்.உடல் முன்னுக்குத்தள்ளி காணப்படும்!

விசுவின் படம் ஒன்றில் கிஷ்மு கையைபின்னால் கட்டி முன்புறம் குனிந்து நடப்பாரே! அதே போல்தான் இந்த வியாதியில் இருக்கும்! இது ஒருவகையில் முதுகெலும்பின் அசைவிக்குறைக்கிறது.அதேபோல் நெஞ்செலும்பின் அசைவையும் குறைக்கிறது.

மேலே உள்ள படம் பார்த்தால் நான் சொன்னது ஓரளவு புரியும்!

மாத்திரைகள் இந்த வியாதியை ஓரளவே கட்டுப்படுத்தும்!!

இடுப்பு எலும்பு இணைந்து விட்டால் இடுப்பு எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரலாம்.

முதுகெலும்பு ஒன்றோடொன்று இணைந்து மூங்கில் போல ஆகிவிடும்!(BAMBOO SPINE).

வளையும் தன்மை இழந்துவிடுவதால் முதுகெலும்பு கழுத்துப் பகுதியில் மூட்டு விலகுதல், தண்டுவடம் அழுத்தப்படுதல்,முதுகெலும்பு உடைதல் ஆகியவை ஏற்படும். அந்த சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை செய்யவேண்டிவரும்!!

இது முடக்குவாதம் போல் உடலின் அனைத்து மூட்டுக்களையும் பாதித்து விடுவதையும் அறுவை சிகிச்சை மூலம் ஓரளவு குறைக்கலாம்!!

இந்த நவீன காலத்திலும் இன்னும் காரணம் கண்டு பிடிக்கப்படாத, தடுக்கும் முறைகள், குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத கொடிய நோய்களில் இதுவும் ஒன்று!!

இந்த இடுகை உண்மையில் பயனுள்ளதாக  இருந்ததா?

தமிலிஷ், தமிழ்மணத்தில் வாக்களிங்க!

Wednesday, 8 April 2009

அசல்- அஜித்-நீங்கள் இதுவரை பார்க்காத குளோஸப் படங்கள்!

தல படங்களைப்பார்த்துக்கொண்டு இருந்தபோது சில படங்களை மக்கள் விட்டு விட்டது தெரிந்தது!

அந்தப்படங்கள் உங்களுக்காக!படத்தை கிளிக் செய்து முழு அளவும் பார்க்கவும்! மக்களே பட்ங்களில் ஏதோ வில்லங்கம் செய்து உள்ளார்கள்! ஒட்டுகிறது. ஆனால் இடுகையில் தெரியவில்லை. கீழுள்ள சுட்டியைத் தட்டி ரசிக்கவும்!

http://www.chennai365.com/movies/asal-movie-launch-–-a-celestial-event/

நன்றி: சென்னை 365 . காம்!!

சிவாஜியில் ரஜினி நாம் பார்க்காத காட்சிகள் -வீடியோ!!

அன்பின் வலை மக்களே , வலைக்குள் தேடியபோது அகப்பட்டது இந்த காணொளி!!! நான் இதைப் பார்க்கவில்லை!

சில பேர் பார்த்து இருக்கலாம்!! இருந்தாலும் பார்க்காத  மக்களுக்காக இது!!

 

தேவா.

மாரடைப்பைத்தடுக்க!

 

இடுப்பளவு குறைய வேண்டும் என்பது இன்றைய மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் பெரும்பாலும் ஆண்களோ பெண்களோ தங்கள்  இடுப்பளவைக்குறைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. அப்படியே எப்போதாவது நினைத்தாலும் சரியான பயிற்சி என்ன என்பது நிறைய பேருக்குத்தெரிவதில்லை.

இடுப்பளவு, வயிறு அளவு ஆகியவற்றை ஏன் குறைக்க வேண்டும்? இந்தக் கேள்வி சிலருக்குத்தோன்றலாம்.

ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இடுப்பு, வயிறுப் பகுதில் உள்ள கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால் மாரடைப்பு அதிகம் வருகிறது என்கிறார்கள்.

ஆகவே இந்த இடுப்பு, வயிறு அளவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது மிக அவசியம்.

இடுப்பளவை எப்படிக்குறைக்கலாம் என்று பார்ப்போம்!!

1.ஹிந்து ஸ்குவாட்ஸ்-(சாதாரண ஸ்குவாட்ஸ்தான்)-இந்தப் பயிற்சியானது ஆக்ஸிஜன் தேவையை அதிகப்படுத்தி கொழுப்பை சக்தியாக எரிப்பதனால் இடுப்பில் உள்ள கொழுப்பு குறைகிறது. இதற்கு எந்த விலையான உபகரணங்களும் தேவையில்லை.

நேராக நிற்கவும். பின் அப்படியே தோப்புக்கரணம் போட உட்காருவது போல்  கீழே (சிட்அப்ஸ்) குதிகால்வரை அமர்ந்து மறுபடியும் எழுந்திருக்கவும். ஆரம்பத்தில் சிரம்மாக இருந்தாலும் கொஞ்சம் பழகினால் ஈஸியாக வரும். நாம் பள்ளியில் செய்ததுதானே!

100 தடவை வேகமாக 5 நிமிடத்திற்குள் செய்தால் நல்லது.

மறுபடி 100 தடவை 10 நிமிடத்தில் செய்ய வேண்டும்!

2.மேடான பகுதியில் ஏறுதல்- மேடான சாலையிலோ, அல்லது ட்ரெட்மில்லில்10-15 டிகிரி உயர்த்தி வைத்தோ 15 நிமிடம் நடக்கவும். எளிமையாகத்தெரிகிறதா? செய்து பாருங்கள்!!!

3.இந்தப் பயிற்சியில் தொப்புள் பகுதி குழிவாக மூச்சை உள்வாங்கி தொப்புள் பகுதி முதுகெலும்பை தொடுவதுபோல் மூச்சை இழுத்துப் பிடிக்கவும். 15 லிருந்து 60 வினாடிவரை அவ்வாறு வைத்து இருக்கவும். சாதாரணமாகத்தெரிகிறதா?1.75 இன்சிலிருந்து 3 இன்ச்வரை  ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் இடுப்பளவு குறையும்.

4. பக்கவாட்டில் --நேராக நிற்கவும். இடுப்பை இடதுபுறம் முடிந்தவரை வளைக்கவும். வலதுபுறம் வளைக்கவும். இதனை மாறிமாறி செய்யவும்.

5.நேராக நிற்கவும் -- இடுப்பை இடது புறம் வளைக்கவும்(TWIST).முடிந்தவரை வளைக்கவும். பின்பு நேராக வந்து வலதுபுறம் இடுப்பை (திருகவும்)வளைக்கவும்.

மூன்று பயிற்சியையும் ஒருமாதம் செய்தால் இரண்டு அங்குலம் இடுப்பு குறைவது உறுதி.

தினமும் 8 குவளை தண்ணீர் அருந்தவும். பழங்கள், காய் அதிகம் சாப்பிடவும். இதனுடன் பொதுவான பயிற்சி, நடை, ஓட்டம் ஆகியவையும் சேரும்போது நிச்சயம் இடுப்பளவு குறையும்.

படித்துவிட்டீர்கள்!! இனியென்ன?

தமிலிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டைப்போடுங்க!!

Tuesday, 7 April 2009

ஆஸ்திரேலியப் பெண்களுக்கு பெருசாகிகிட்டே போகுதாம்!!

Bra

அய்யன்மீர்!!

பதிவுலகத்தில் அது பெருசு இது பெருசுன்னு பதிவு போட்டு உள்ளே போய் பார்த்தா கீர்த்தி பெரிது மூர்த்தி பெரிதுன்னு பீலா விடுவாங்க!

ஆர்வத்தில் போன நம்ம சங்க மக்கள் ஜொள்ளு வேஸ்டாகி(  எப்படியும் 100 -- 200 மில்லி இருக்குமா) ரிடர்ன் ஆனதுதான் மிச்சம்!

ஆனா நம்ம பதிவு அயனான பதிவு!! ஏமாற்றுவேலை, பித்தலாட்டம் எதுவுமே இல்லை!

உண்மைதாங்க! சூடான பதிவுல வரணும்கிறது என் நோக்கம் இல்லை!! உங்களுக்கு சுடச்சுடக்குடுக்கணும்கிறதுதான் என் ஆசை!!

சூடு ஆறிப்போனா ருசிக்குமா?

இந்த மேட்டரும் அப்படித்தாங்க! கேட்டாலே அதிர்ச்சியா இருக்கு. நம்ம ஏதாவது செய்தாத்தான் இது ஒரு முடிவுக்கு வரும்! சங்கமே கிளர்ந்தெழு!!

சாராம்சத்தைக் கொஞ்சம் பார்ப்போமா!

சமீப காலமாக ஆஸ்திரேலிய அம்மணிகளின் அது    பெரிதாகிக்கொண்டே போகிறதாம்!(நம்ம ஊரில்?)

அதன் அளவு தெரியாத மக்கள் கீழேயுள்ள படங்களைப் பார்க்கவும்! படத்தின் மேல் மவுசை வைத்து வலது கிளிக் செய்து view image  சொடுக்கவும்! படம் பெரிதாகப் பார்க்கலாம்! 

40% பெண்களுக்கு DD அல்லது அதைவிடப் பெரியதாக இருக்கிறதாம்.

இதற்கு முக்கியமான காரணங்கள்:

1.உடல் பருமன்

2.கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உண்ணுதல் 

3.செயற்கை ஹார்மோன்கள் உபயோகித்தல்!

1950 ல் அதிகம் உபயோகித்த உள்ளாடை அளவு பி அதாவது டிடி யைவிட  மூன்று அளவுகள் குறைவு! இப்போது நிலைமையே வேறு!

சில உள்ளாடைக்கம்பெனிகள் ”கே” வரை அளவுகள் உள்ள உள்ளாடைகளைத் தயாரிக்கின்றனவாம்!!

கடந்த ஐந்து வருடங்களில் ’டிடி+’ உள்ளாடயின் தேவை 28% அதிகரித்து இருக்கிறதாம்!

மற்ற உடலமைப்புகள் சிறிதாகவும் இந்த அளவு அதிகமாகவும் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஆடை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் தற்போது அளவைக்குறைக்கும் அறுவை சிகிச்சை இரண்டு மடங்கு ஆகியிருப்பதாகக் கூறுகிறார்கள்!

மார்பளவு அதிகமாக இருப்பதால் விளையாட்டு உடற்பயிற்சி ஆகியவற்றில் பெண்கள் விருப்பமுடன் ஈடுபடுவது குறைந்து உள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்!
மாறிவரும் உணவுப் பழக்கங்களும், மாத்திரைகள் உட்கொள்ளுவதும் இதன் காரணங்கள் என்று தெரிந்து உள்ளதால் நம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!!!

படித்தாகிவிட்டது!

தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்

போடுங்க ஓட்டு!

Monday, 6 April 2009

உயிர் எந்திரம்-கொஞ்சம் தேநீர்--13

 

கேள்வியின் துளிகள்

சிந்திக்கிடக்கும்

முடியாத இரவில்

நீண்டு!

 

வெப்பம் தாங்கிய

மயிர்க்கால்கள் அடங்கியும்

எழுந்தும்

உயிர்த்தெழும்

மீண்டும் மீண்டும்!,

 

பிறப்பின் நீண்ட

கரையோரங்களின் வளைவுகளில்

தொக்கி நிற்கும்

சொல்லியும் சொல்லாத

ஒரு செய்தி!

 

உள்ளும் புறமுமாய்

இயங்கும்

உலகின் முதலும்

முடிவுமான

உயிர் எந்திரம்!!

இப்படியும் ஒரு மருத்துவ விடுப்பு???

பொதுவாக மருத்துவரிடம் சென்று விடுப்பு கேட்டால், தலை வலி,காய்ச்சல் என்று ஏதாவது எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவார்கள்!

இங்கு நம்ம போதைப் பார்ட்டி ஒருவர்  சனி,ஞாயிறு போதையில் கிடந்துவிட்டு, திங்கள் கிழமை  எழுந்திரிக்க முடியாமல் மருத்துவரிடம் போயிருக்கிறார்.

மருத்துவர் என்ன நிலையில் இருந்தார் என்று தெரியவில்லை!!

Nature of illness பகுதியில் போதையில் இவர் இப்படித்தான் தலைவலி என்று வருவார், சோதித்துப் பார்த்தால் ஞாயிறு தண்ணி ஓவர் ஆகி  தண்ணியில் இருந்து மீளமுடியாமல் லீவு கேட்பார் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு இருக்கிறார் பாருங்கள்!!

 

யார் போதையில் இருந்தார்கள்? இருவருமா?

படித்து ரசித்தீர்களா?

போடுங்க ஓட்டு தமிலிஷில், தமிழ்மணத்தில்!!

Sunday, 5 April 2009

சிறந்த நடுத்தர கார்கள் 10 !!!

கார்கள் மனித வாழ்க்கைக்கு மிக அவசியமான பொருளாகி வருகின்றன. நாம் படிக்கும் காலத்தில் இருந்ததைவிட தற்போது அதிக வாகனங்கள் தெருவில் செல்வதைக் காண்கிறோம்!

மாசுக்குறைவான, விலை அதிகமில்லாத, சொகுசுக்காராக இல்லாமல் சிறந்த திறனுடைய நடுத்தர கார்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

1.CHEVROLET MALIBU --நடுத்தரக்கார்களில் முதலிடம் பெறுகிறது!

சிறந்த தோற்றம், பாதுகாப்பு, ஒட்டும் திறன் ஆகிய அடிப்படையில் வாங்கக்கூடிய விலையில் மற்ற கார்களை முந்தி முதலிடத்தில் உள்ளது. காரின் உட்புறம் இன்சுலேட் செய்யப்பட்டு உள்ளதால் கார் ஓடும் சத்தம் பயணிகளுக்கு தொந்தரவாக இருக்காது.கண்ணாடிகளும் தடிமனாக அமைக்கப்பட்டு உள்ளன. எலக்ட்ரானிக் கண்ட்ரோல் தடுமாறாமல் ஓட வகை செய்கிறது.

2.FORD FUSION --ஃபோர்ட் ஃப்யூஷன் 

நல்ல பெரிய பயணிகள் பகுதி, எளிய ஓட்டும் வசதி,ஃபோர்ட் சின்க் மல்டிமீடியா, சிறந்த பாதுகாப்பு ஆகியவை இதனை சிறந்த கார் வரிசையில் சேர்க்கின்றன.2006 அதிக மாற்றமில்லாமல் வெளிவரும் கார் இது. இதன் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் பட்டன்கள் ஒழுங்கான வரிசையில் இல்லாததால் புரிந்துகொண்டு செயல்படுத்துவதில் கொஞ்சம் சிரமம் காணப்படுகிறது.

3.HONDA ACCORD-- அதிகம் விற்ற கார் இது. பெரிய இருக்கைப்பகுதி, அருமையான பாதுகாப்பு வசதிகள் இதில் உள்ளன. மேலும் கார் கதவுகளை 4 மாடல்களில் தேர்ந்தெடுக்கலாம். உடல் பகுதியும் 2 வகைகள் உள்ளன! இதன் அனைத்து அம்சங்களும் பிற கார்களுக்கு சற்றும் குறைவில்லாமல் தரமாக அமைக்கப்பட்டு உள்ளன. ஆயினும் டொயட்டோவின் காம்ரி இதனை விட சிறந்த உள்பகுதி அமைப்பைக்கொண்டு உள்ளது.

4.MAZDA MAZDA 6  --  மஸ்டா கார் நல்ல வடிவமைப்புடன் சிறந்த தோற்றம் கொண்டது!

நல்ல ஓடும் திறன், மற்ற போட்டி கார்களை விட கனமாகவும் உள்ளது. இதனால் கொஞ்சம் எரிபொருள் சிக்கனக் குறைவு காணப்படுகிறது.அதிக அளவு உட்புறம், நல்ல தோற்றம் கொண்டது.இதற்கு நேரெதிர் போட்டியாளராக நிஸ்ஸான் அல்டிமா,ஃபோர்ட் ஃப்யூஷன் ஆகிய கார்கள் உள்ளன.

5.TOYOTA CAMRY 

எரிபொருள் சிக்கனம், சிறந்த ஓடும் திறன், சவுகரியமான பயணம் ஆகியவை இதனை முன்னிறுத்துகின்றன. நடுத்தர கார்களில் இது சிறந்த வடிவமைப்பையும் கொண்டுள்ளது.ஆயினும் மஸ்டா 6 இதனை பல சிறப்பு அம்சங்களில் முந்துகிறது. ஹோண்டா அக்கார்டும் இதைவிட சிறப்பாக உள்ளது.ஆயினும் டொயோட்டோவின் நம்பகம்,விலைக்கு ஏற்ற தரம் ஆகியவையே இதனை சிறந்த கார் வர்சைக்குக் கொண்டு வருகின்றன.

6.MERCURY MILAN  இதுவும் சிறந்த பாதுகாப்பு வசதி, ஒட்டும் எளிமை, பரந்த உள்பகுதி ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது.

இஞ்சின் திறன் மட்டும் ஒரு குறையாக உள்ளது இந்தக்காரில்.ஃபோர்ட் ஃப்யூஷனுடன் கடும் போட்டியை சந்திதாலும் இது அதைவிட சொகுசான கார் என்பதே இதன் சிறப்பு.

7.SATURN AURA நடுத்தர கார்கள் வரிசையில் இதுவும் வருகிறது. எரிபொருள் சிக்கனமானது. இலகுவான ஒட்டும் திறன், 4 சிலிண்டர் எஞ்சின், விலை குறைவு ஆகியவை இதனை வாங்குவதற்கு தூண்டும் அம்சங்கள். இதனை ஜெனரல் மோட்டார் நிறுவனம் விரைவில் நிறுத்திவிட உள்ளது!

8.SABARU LEGACY 

நான்கு சக்கர ட்ரைவிங் கொண்ட கார் இது. உடனடி பிக் அப், நல்ல பயண உள்ளமைப்பு கொண்டது. பாதுகாப்பு வசதிகளில் நடுத்தரக்கார்களில் இதுவே சிறந்த்து.  ஆனால் ஃபோர்ட் ஃப்யூஷன், மெர்குரி மிலன் ஆகியவை இதனைப் போட்டியில் பிந்தள்ளுகின்றன!

9.VOLKSWAGEN PASSAT

பாதுகாப்புக்கு வோல்க்ஸ் வாகனை சொல்லவா வேண்டும். சிறந்த திறன் மிக்க கார் இது! விலைதான் மற்ற எல்லா கார்களைவிட அதிகம். உயர்ந்த தரமான இருக்கைகள், பெரிய அமரும் இடம், அதிக வேகத்திலும் நிலயாக ஓடும் திறன் பாதுகாப்பு மற்றும் வோல்க்ஸ்வாகனின் நற்பெயர் ஆகியவையே இந்தக்காரின் சிறப்பு அம்சம்.

எரிபொருள் சிக்கன்மின்மை இதில் பெருங்குறை.

10.NISSAN ALTIMA

மிகவும் எழினான தோற்றத்துடன் காணப்படுகிறது இந்தக்கார். இதன் வெளிப்புறத்தோற்றம் சொகுசுக்கார் தோற்றத்தைத் தருகிறது. சிறந்த எஞ்சின் மற்றும் நல்ல எரிபொருள் சிக்கனமான கார்.

இந்த நடுத்தரக் கார்களில் விலை குறைவானதும் இதுதான். மாஸ்டா கார் இதைவிட சிறப்பான பின் இருக்கை வசதிகொண்டது.ஆயினும் எரிபொருள் சிக்கனத்தை யோசிப்பவருக்கு சிறந்த கார்.

என்ன ஓரளவு கார்களைப் பார்த்தோம். உங்கள் கருத்துக்களை எழுதவும்.

மறக்காமல் தமிலிஷில் கீழேயுள்ள

ஒட்டுப்பட்டையிலும்,தமிழ்மணத்தில்

மேலேயுள்ள ஓட்டுப் பட்டையிலும்

ஒட்டுப்போட்டு விட்டுப் போங்க மக்களே!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory