Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Thursday, 7 May 2009

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1

அன்பு வலை நண்பர்களே!!

காதல் வீதியில் கனவு நாயகனாக அலைந்து கடைசியில் கல்யாணம் என்ற கடுமையான கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்ட சங்கத்தின் சிங்கங்களே!!

தினமும் குடும்ப பாரத்தைச்சுமந்து மாத பட்ஜெட்டுகளைக்கண்டு மலைத்துப்போய், டேமேஜர்களின் குடைச்சல்களையும் தாங்கி களைத்துப்போய் வீடு திரும்புகையில் மனைவி காதல் பொங்கப்பார்க்கையில்!!!....இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் எப்படி இவள்? என்று காதலையே மறந்துபோன கணவர்களே(நானும்தான்)!!

நம் பிரச்சினை அன்றாடம் உள்ளதுதான்!! அன்றாட அலுவல்களில் மறந்துபோன காதலை எப்படி உயிர்கொடுத்து மீட்பது என்பதுதான் இந்த பதிவின் ( பதிவுகளின் -- தொடர்ந்து எழுதுவோம்ல) நோக்கமே!!

ஆஹா! நமக்கு உதவுமேன்னு நினைக்கிற மக்கள் தொடர்ந்து படிங்க!!

நமக்குக் கல்யாணமே ஆகலையேன்னு சொல்றவங்க மனைவிங்கிற இடத்தில் காதலின்னு போட்டுக்குங்க!!

இதிலெல்லாம் நாங்க கிங்காக்கும்!! நமக்குப்போய் அட்வைஸான்னு சீறும் சிறுத்தைகள் படித்துவிட்டு பின்னூட்டத்தில் உங்கள் யுக்திகளையும் சொல்லுங்க!! சரியா!!...

1.பிறர் முன்னிலையில், சொந்தக்காரர்களுடன் இருக்கும்போது மனைவி புகழ் பாடுங்கள்!  யார் யாரையோ புகழ்கிறோம். உங்கள் மனைவியின் நல்ல குணங்களை( அப்படி ஒன்னு இருக்கான்னு கேட்கக்கூடாது..... கொஞ்சம் யோசித்தால் அவரிடம் உள்ள நல்ல குணங்கள் தெரியும்!)புகழ்ந்துபேசுங்க!!   எல்லோர் முன்னிலையிலும் ஏன் என்னைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்று கோபப்படுவார்கள்!!............கண்டுக்காதீங்க!....அவர் உள்ளம் கேட்குமே மோர்!!! புகழ்வதில் உண்மை உணர்வு கலந்து ஒன்றி மெய்யாலுமே புகழ்கிற மாதிரி இருக்கணும்!! நக்கல் கலப்பு உடம்புக்கு ஆகாது!!!

2.நீங்கள் நாத்திகராக இல்லாதபட்சத்தில் உங்கள் மனைவியின் பிரார்த்தனைகளில் கலந்துகொள்ளுங்கள்! ”சாமியைக்கும்பிடுங்கப்பா! நான் முக்கியமான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் இதோ வந்திடுறேன்”ங்கிற பதில் நல்லதல்ல! சேர்ந்து கோவிலுக்குப்போங்க!! உடல்,மன,ஸ்பிரிசுவல் என்ற் மூன்றும் கலந்ததே நம் வாழ்க்கை!! மூன்றிலும் நீங்கள் ஒன்றிப் பிணைவதே இல்வாழ்க்கை!!

3.உன்னால இந்த வேலையைக்கூட செய்யமுடியாதா? 24 மணிநேரமும் என்னதான் செய்யுற வீட்டில்? போன்ற குறைசொல்லும் செயல் கூடாது!!  செய்யாத வேலையையே குத்திக் குத்திக் காட்டாமல் (மனதை அடக்கிக்கொண்டு) புன்சிரிப்புடன் பிரச்சினைகளை அனுகவும்! “பரவாயில்லை விடு!! நாளைக்கு நானும் நீயும் சேர்ந்தே இந்த வேலையை முடிப்போம்” என்று விசய்த்தை சிம்பிளா முடிங்க!!

4.அலுவலக அலுப்பையும்,பிரச்சினைகளையும் அலுவலகத்திலேயே விட்டுவிடுங்கள்!! அதை மனைவிமீதுகாட்டி கோபப்படவேண்டாம்!! “கடுகடுன்னு இருக்கார்!!கிட்டப்போனா அவ்வளவுதான்  வள்ளுன்னு விழுவார்” என்று மனைவி பயந்து நடுங்குமாறு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவேண்டாம்!!  ரொம்பத் தாங்க முடியாத பிரச்சினையா? உங்கள் மனைவியுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!! மனசும் லேசாகும்!! மனைவிக்கும் தான் மதிக்கப்படுகிறோம் என்று பெருமை ஏற்படும்!! உங்களுக்கும் பலன் உண்டுங்கோ!!!

5. 10 செகண்ட் முத்தம் என்று சுஜாதா கதை ஒன்னு எழுதினார். நமக்கும் அதுபோல் இலக்கு உண்டு! ஆமா குறந்தபட்சம் 6 வினாடி.......to...> உங்கள் இஷ்டம் முத்தம் கொடுங்க!! காலை எழுந்தவுடன் பெட்காபி போல் ஒரு முத்தம்!! கலையிலேயே மனைவி முகத்தில் புன்னகை!! அப்புறம் டூட்டி போகும் போது, புதுக்கணவன் போல ஒரு முத்தம்!! எது கொடுத்தாலும் நல்லா கொடுங்க!! அப்புறம் பாருங்க! அதன் விளைவுகளை!!

5 பாயிண்ட் எழுதுறதுக்கே தாவு தீந்துபோச்சு!! மக்கள் எப்படி சிறுகதை,தொடர்கதையெல்லாம் எழுதுறீங்களோ? ஆச்சரியந்தான்!!

மிச்சம் உள்ள விசயங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்!!! சரியா!!

பதிவு பிடித்தால் தமிழ்மணம்,தமிலிஷில் குத்துங்க!!

Sunday, 19 April 2009

ஸ்லம் டாக் நட்சத்திரம்!! விற்பனைக்கு!!

 

நான் முந்தைய பதிவுகளில் ஸ்லம்டாக் குழந்தைகள் ஏமாற்றப்பட்டனரா? என்று எழுதினேன்!!

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்த ரூபினாவை விற்க முயற்சி நடக்கிறது. ஆம்! நம்ப முடியாத உண்மை!!

என்னதான் படங்கள் எடுத்தாலும் இந்திய மக்களில் பலரின் வாழ்க்கை வறுமைக் கோட்டைத் தாண்ட முடியாமல் தத்தளிப்பது உண்மை!!

இந்தியாவின் வறுமை படங்களிலும் கதைகளிலும் விருதுகளுக்கும் விற்பனைக்கும் உபயோகப் படுவதாக எழும் குற்றச்சாட்டு உண்மைதான்!

பணத்துக்காக மக்களில் சிலர் பண்பைத்தொலைக்கும் கதை உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!!

ஒன்பது வயதே நிரம்பிய ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!! துபாயில் உள்ள ஒரு குடும்பத்தின் மூலம் இந்த ஏற்பாடு ரகசியமாக நடந்து உள்ளது!!

ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!

Saturday, 18 April 2009

இறந்த மகன் வேண்டும் !!


  அன்பு என்பது மிகச்சிறந்த விசயம்!! அதிலும் பெற்ற தாய் பிள்ளைகள் மேல் வைக்கும் பாசம் அருமையானது!! ஈடு இணை இல்லாதது!!

நம் நாட்டில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படித்தான்!!

மகன் இறந்து விட்டான். ஆனால் இறந்த அந்த வாலிபனுக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை!! அதைத் தன் அம்மாவிடமும் அடிக்கடி கூறியிருக்கிறான்!! அவனுக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்றும் அவர்களுக்கு ஹண்டர்,வான்,டாட் என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் தன் தாயுடன் பேசும் பல சமயங்களில் சொல்லி இருக்கிறான்!

இறந்த நிக்கோலஸ் ஈவான்ஸ்!!

எதிர்பாராத ஒரு நிகழ்வில் அவனுக்கு  தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது!!

கோமா நிலையில் இருக்கிறான்!! ”ப்ரெய்ன் டெத்” என்போமே அதுபோல!

அம்மா தன் மகன் பிழைக்கமாட்டான் என்பது தெரிந்தவுடன் அவனுடைய உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதிக்க்கிறார்..

ஆனாலும் மகன் மேல் கொள்ளை ஆசை அவருக்கு! அந்த மகன் எந்த ரூபத்திலாவது வேண்டும் என்று ஆசைப் படுகிறார்!!

பல உறுப்புகளை இவர் சம்மத்தித்து தானம் செய்வது போல் தனக்கு தன் மகனின் விந்துஅணு தேவை!! அதை வைத்து செயற்கைக் கரு உண்டாக்கி ஏதாவது வாடகைத்தாயின் வயிற்றில் தன் மகனின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார்!!

இப்படி ஒரு விநோதமான நிகழ்ச்சி டெக்சாஸ்,அமெரிக்காவில்  !! ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? இதற்கு முன் இப்படி ஒரு பிரச்சினையை சட்டத்துறைகூட சந்தித்ததில்லையாம்!!

ஆகவே உயிர் அணுக்களை பெற்றோரிடம் கொடுக்கலாமா கூடாதா என்று சட்டத்துறை நிபுணர்கள் ஆராய்ந்தனர்!!அப்படி உயிரணுக்களை எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்தில் எடுக்க வேண்டும்!! அதை எடுக்கும் வரை குறிப்பிட்ட நபரின் உடல் சரியான வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்

மகனின் முக்கிய உறுப்புகளை தானம் செய்ய பெற்ற தாய்க்கு உரிமை இருக்கும்போது அவருடைய உணர்ச்சிகளை மதிக்கவேண்டும் என்றும் தவறாகப் பயன்படுத்தாத போது அவருடைய தாய்மை உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து அவருடைய மகனின் உயிர் அணுக்களை கொடுப்பது தவறில்லை என்று நீதிபதியால் முடிவு செய்யப்பட்டது!!

எவ்வளவு மனிதாபிமானத்துடன் நீதிபதி உடனடி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் பாருங்கள்!!!

ஒரு தாயின் பாசம் இறுதியில் வென்றது!! அறிவியல் முன்னேற்றம் அன்புக்காக நல்ல வழியில் பயன்படுத்தப் படுவது சந்தோசம்தான்!!!

பிடித்திருந்தால் போடுக வாக்குகளை தமிலிஷ்,தமிழ்மணம் இரண்டிலும்!!

Thursday, 16 April 2009

பெண்கள் குண்டாவதை மனம் கோணாமல் சொல்ல 10 வழிகள்!!

 

 

அன்பின் வலை மக்களே!! நம்ம கஷ்டம் நமக்குத்தான் தெரியும்!! நாம் ருசியான பதார்த்தங்களை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு போய், சரி வந்து சாப்பிடலாம் என்று வேலை முடித்து வந்து பார்த்தால் சட்டி காலி!!

நாமும் சரி குழந்தைகள் சாப்பிட்டு இருப்பார்கள் என்று விட்டுவிடுவோம்.

ஆனால் குழந்தைகளோ ஒருபுறம் அப்படியே உடல் பெருக்காமல் இருக்க நாம் எதிர்பாராத விதமாக எதிபாராத நபர் உடல் எடை கூடிக்கொண்டே போவது நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பது உண்மை!!

நடந்தது என்ன? ரேஞ்சில் துப்பறியப்போனால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்!!

சரி சொன்னாலும் குற்றம்!! மனசுக்குள்ள வைத்து இருக்கவும் முடியாமல் நாம் படும் அவதிக்கு வழிதான் என்ன?

பல வகையில் ஆராய்ந்ததில் பல அரிய அருமையான வழிகள் கிடைத்தன!! இவற்றைப் பயன்படுத்தி உடல் எடையை நாசூக்காக சொல்வது எப்படி என்று பார்ப்போம்!!

1.அம்மணியை வெளியே அழைத்துக்கொண்டு போவீர்கள்தானே?  நீச்சல் குளம், பீச், மால் என்று கொடியிடை மகளிர் உலாவும் இடங்களுக்காக அழைத்துச் செல்லவும்!! அம்மணிக்கு நாளைடைவில் நல்ல மாற்றம் தெரியும்!!( கூட்டிக்கொண்டுதான் போகனும்!! நீங்க பாட்டுக்கு ஓவரா லுக் விட்டுக்கிட்டு இருந்தீங்க  வீட்டுக்குப்போனவுடனேயே எதிர் விளைவுகளை சந்திக்க நேரும்!! அதற்கு நான் பொருப்பல்ல!!...)

2. நிச்சயதார்த்த போட்டோ, கல்யாண போட்டோக்களில் அம்மணி கொஞ்சம் ஒல்லியா இருப்பாங்க!! அதையெல்லாம் வெளியே எடுங்க!! அதில் அம்மணி உள்ள போட்டோக்களை மேசைமீது கண்ணில் படுமாறு போடுங்க, அடிக்கடி!! மேடம் கண்ணில் படும். நல்ல பலன் கிட்டும்!!

3.கொஞ்சம் ரிஸ்க் ஆன முறை!! அம்மணி அமரும் நாற்காலி, சோபா போன்றதில் உள்ள ஸ்குரூ, ஆணி போன்றவைகளை சந்தேகம் வராமல் (உங்கள் மேல்) லூஸாக்கி வைங்க! சேர் மெதுவா உடையும்! அம்மணி விழுவாங்க!! ப்ராக்டிகலா எடைகூடிவிட்டது உறைக்கும்!!( நீங்க ஸ்பாட்டில் இருக்கக் கூடாது!! எங்கேயாவது நின்று கொண்டு கெக்கே பிக்கேன்னு உளறினீங்க கதை கந்தல்!!)

4.ஒரு ஜாலி மூட் பார்த்து நீங்கள் முதன் முதலா எடுத்துக் கொடுத்த சுடிதார் , சேலை,ஜாக்கெட்டை போடச்சொல்லுங்க!! அம்மணியால் போடமுடியாது!! பார்த்துக்கொண்டே நீங்க வாயைத் திறக்காமல் இருக்கணும்!! செம எஃபெக்ட் இருக்கும்!

5. மெதுவா அப்படியே நடக்கும் போதெல்லாம் இடுப்பை  (டயரை) தட்டி விட்டு செல்லவும்!! வலிக்காமல் கிள்ளவும் செய்யலாம்!!  சொல்லாமல் சொல்றதுன்னா இதுதான்!!

6.இது நாம செய்ய வேண்டியது!! வீட்டில் காய்கறி , சாலட், கீரை பழவகைகள் போன்றவற்றை வாங்கி வந்து ஒரு ஆடு ரேஞ்சுக்கு உள்ளே தள்ளுங்க!! சாப்பாடு சிஸ்டமே மாறுது இல்லையா? உங்க பேரைச் சொல்லிதானே அவங்க உள்ளே தள்ளுகிறார்கள்!! இப்ப தன்னால் சமையல் முறையே மாறிவிடும்!!( புடிச்ச அயிட்டங்களை வெளியே ஆபீஸ் போகும்போது ருசிபாருங்க!! இஃகி! இஃகி!!)

7. ஒட்டல் போய் சாப்பிடுகையில் கொஞ்சமா ஆர்டர் பண்ணுங்க! நீங்களும் குறைய சாப்பிட்டு போதும்னு சொல்லுங்க!! அம்மணிக்கு தான் அதிகம் சாப்பிடுவது விளங்கும்!!

8.இது ஒரு முறை. நீங்களே உங்கள் உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டது, தொப்பை போடுதுன்னு உடற்பயிற்சிகளில் இறங்குங்க!! உங்களுக்கும் பயன்! அம்மணியும் வாக்கிங்,பயிற்சின்னு ஆரம்பித்து விடுவாங்க!( குரங்கு தொப்பி கதைதானே!!)

9. யோகா பண்ணினா மனசு டென்ஷனில்லாமல் இருக்கும் என்று அம்மணிகளுக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு!! யோகாங்கிற போர்வையைப் பயன்படுத்தி யோகாவுக்கு அனுப்புங்க!!நம்ம சொல்வதைவிட அங்கே சொல்றதை நல்லா கேப்பாங்க!! உங்களுக்கே சொல்லித்தர ஆரம்பித்து விடுவாங்க!

10.அம்மணியோட அளவைத்தெரிந்து கொள்ளுங்க!! அகஸ்மாத்தா வாங்கிவருவது போல அதைவிட ஒரு சைஸ் குறைவா ட்ரெஸ் வாங்கிக்கிட்டு வாங்க!! அதைப்போட்டுப்பார்த்தா நிச்சயம் சேராது. ஓ! இதுதானே உன் அளவுன்னு நினைத்தேன்னு ஒரு பீலா விடுங்க! இப்போ குண்டாயிட்டேன்னு அவுங்களே சொல்லுவாங்க!!

என்ன எல்லா முறைகளையும் சொல்லியாச்சு!! மிகச்சரியா செயல் படுத்தனும்!! கொஞ்சம் தப்பினாலும் உடம்பு ரணகளமாகி விடும்!! அதுக்கு நான் பொறுப்பல்ல!!

குத்துங்க தமிலிஷிலும் தமிழ்மணத்திலும்!!

Sunday, 22 March 2009

மரியாதைக் கொலைகள்? Honour killing!

பாகிஸ்தான், ஜோர்டான்,சௌதிஅரேபியா,சிரியா,துருக்கி,பாலஸ்தீனம்,இஸ்ரேல்,சிசிலி,கார்சிகா போன்ற நாடுகளில் ஒருவர் ஜாதி அல்லது கிளான் விட்டு காதலித்தாலோ,அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது தவறாக நடந்தாலோ அதனை பெரிய அவமானமாகக் கருதுவார்கள்!

நம்ம ஊரிலும் அப்படித்தாங்க என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்! நம் ஊரிலும் கொல்லுகிறார்களே என்றால் ஆமாம்!

இங்கு அதற்கு தண்டனை உண்டு!

அங்கு பெரிய தண்டனை கிடையாது!

இப்படிக்கொல்லுவதற்கு ”ஹானர் கில்லிங்”

என்று பெயர்.

ஜோர்டான் நாட்டில் 19 வயது பெண் அலங்காரம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அவளுடைய அப்பாவும் சகோதரரும் கோபம் கொண்டு அடித்தே கொன்று விட்டார்கள்.

ஜோர்டானில் ஒவ்வொரு வருடமும் 20 பெண்கள் இதுபோல் கொல்லப்படுகிறார்கள்!

ஜோர்டான் சட்டம் 340,98 களின்படி இது அனுமதிக்கப்பட்டு உள்ளது!

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு!

,ஜூன் 2007ல் கொல்லப்பட்ட ஒரு பெண்!

இந்தியா

இந்தியாவில் 1.1.2003ல் 21 வயது சுனிதா தேவி,அவருடைய காதலன் ஜஸ்பீர்சிங் ஆகியோர் பல்லா கிராமம் ஹரியானா மாநிலத்தில் இந்த மரியாதைக்கொலை செய்யப்பட்டனர்.

http://blogs.reuters.com/gbu/2008/05/22/honor-killing/

Photo

மேலேயுள்ள படத்தில்:ஹானர் கில்லிங் செய்யப்பட்ட சாரா ஆமினா.

பெர்லின்

ஹாடின் சருகுவின் துருக்கிய முஸ்லிம் சகோதரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்

கனடா

கனடாவில் க்ரேட்2 மாணவி அவரது அப்பாவால் பர்தா அணியாததால் கொல்லப்பட்டார்!

மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் தீவிரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!

Monday, 5 January 2009

அம்மா செல்லமா!!! அப்பா செல்லமா?....


                சாதாரணமா குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பார்த்தால் அப்பாக்கள் தாங்கள் குழந்தைகளுக்கு நிறைய சொல்லித்தரலாம்!!!                            
                கிரிக்கெட்டை எடுத்துக்கிட்டா......
                டிபன்ஸ் ஆடுவது எப்படி....
                டிரைவ் செய்வது எப்படி.......
                கட் அடிப்பது எப்படின்னு.....
     ஆனா நிறைய இடங்களில் பார்த்தா அப்பாக்கள் “எனக்கு எங்கங்க நேரம் இருக்கு அதுதான் ஸ்கூல்ல போய் கத்துக்கிறான் இல்ல!! அவன் பிரில்லியண்ட் பாய்!!எல்லாத்தையும் ஈஸியா கத்துகிட்டு விடுவான்”னு....எஸ்கேப் ஆயிடுவாங்க!! 
                பையனுக்கும் தெரியும்!!!அவனும் ஸ்கூலில் ஆடுகிறான் இல்ல!!
வீட்டில் அவனோடு சேர்ந்தும் அண்ணன் எல்லாம் ஆடுவாங்க!!
கடைசியில என்ன ஆகும் ! 
                அம்மாகிட்ட போவான் பையன்.....
               ”அண்ணனை அவுட் ஆக்கவே முடியலைம்மா என்னைய பேட்டிங் புடிக்க விடமாட்டேன்கிறான்னு ”புகார் போகும்.
                அப்புறம் அம்மா சமாதானம் பண்ணி பந்தை போட்டு அவனை அடிக்கச்சொல்லி ஆட்டத்தில ஜெயிக்க வச்சு , அப்புறம் அவனை சமாதானப்படுத்தி சாப்பாட்டை ஊட்டி தூங்க வைப்பார்கள்!
                 அதேமாதிரி பாருங்க ஒரு குழந்தையை , இவ்வளவு நல்லா டான்ஸ் ஆடுறியே!!! யார் உனக்கு கத்துக்குடுக்கிறாங்கன்னா இந்த மிஸ்கிட்ட கத்துக்கிறேன்னு சொல்லும்!!!சரி வீட்டில் என்ன பண்ணுவேன்னு கேட்டா....“அம்மாகிட்டதான் நான் டான்ஸ் கிளாஸ் போயிட்டு வந்தா வீட்டுலயும் ஆடிக்காட்டுவேன்னு” சொல்லும்!!
                 சரி உங்க அம்மாவுக்கு டான்ஸ் தெரியுமான்னு கேட்டா “அவங்களுக்கு தெரியாதுன்னுதான் சொல்லும்!!!
                 சரி உங்க அப்பாகிட்ட ஆடிக்காட்டுவியா?
                 எங்க!! “அவர் ஆபீஸ் விட்டு வந்தா கம்பியூட்டர்ல உக்காந்துடுவாரு!!
அதை முடிச்சா டிவி பார்ப்பார்!!! அவருக்கு நேரமே இல்லை”ன்னு... ஒரு பதில் தரும்!!!!
                நான்அப்பாகிட்ட ஏதாவது கேட்டா”அப்பாவுக்கு வேலை இருக்கும்மா!.......நீ அம்மாகிட்ட கேட்டுக்கம்மான்னு சொல்லிவிடுவார்”னும் சொல்லும்!!
                 இது தாங்க நிறைய இடத்தில நடக்குது!!!!
                விளையாட்டுக்கு சொல்லவில்லை !!!”நிறைய அப்பாக்களுக்கு குழந்தை என்ன கிளாஸ் படிக்குதுன்னு தெரிஞ்சு இருக்கும்!! ஆனா செக்‌ஷன் என்னன்னு கேட்டுப்பாருங்க தெரியாது!!!
                இன்னும் நிறைய எழுதலாம்!! ஆனா இதுவே போதும்!!! உங்களுடைய சிந்தனையில் நிறைய எண்ணங்கள் இதைப்படிக்கும்ப்போது தோன்றியிருக்கும்!
நானே எல்லாத்தையும் சொல்லுவதை விட உங்க சிந்தனைக்கு சில விஷயங்களை விடுவதே சிறந்ததுன்னு நினைக்கிறேன்!!!இதுக்கு நேர்வினையோ , எதிர்வினையோ நிறைய எழுதுங்க!!!
                நாம் ஆண்கள், அம்மாவைப்போல கொஞ்சம் மாறனும்னு நினைக்கிறேன்!!!
               அன்பையும், அக்கறையையும் நம் குழந்தைகள்,குடும்ப உறுப்பினர்கள்,நண்பர்கள் எல்லோரிடத்திலும் செலுத்துவோமே!!!! 
                என்னங்க நான் சொல்லுறது!!!சரிதானே?......
           
                                      தேவா.....              
                 
                 
                

Monday, 15 December 2008

என் கனவுகள்!!!


            நிறைய பேர் கனவுகளைப்பற்றி எழுதுகிறார்கள்! இளம்வயதில் 

அனைவருக்கும்  கனவுகள் பல விதமாக தொடர்ந்து வரும்!

            பறப்பது போன்ற கனவு வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்!

எனக்கு வந்த இரண்டு கனவுகளைப் பற்றி இங்கு சொல்லலாம் என 

நினைக்கிறேன்.

            ஒன்று என்னுடைய 10 - 15 வயது பருவத்தில் வந்தது.   நான் மெதுவாகப் 

பறப்பது போல இருக்கும். ரொம்ப மெதுவாக!!

           எனக்கு முன் தூரத்தில் நிலவு இருக்கும்! நிலவின் ஒளியில் நான் பறந்து

 கொண்டு இருப்பேன்.
  
           நிலவுக்கும் எனக்கும் இடையில் பின்னப்பட்ட வலை போல வானம் 

முழுக்க இருக்கும்! அந்த வலைகளுக்குள் மிகக்கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக நான் 

செல்வது போல வரும்! இந்தக்கனவு எனக்கு நிறைய முறை வந்து உள்ளது!

           ஆனால் ஒருமுறை கூட நான் வலையை தாண்டி போனதேயில்லை! 

நிலவையும் தொட்டதில்லை!!!!

            அந்த வயதுக்குப்பிறகு அந்த்க்கனவு வரவில்லை.

            இன்னொரு கனவு -- நானும் ,என் தம்பி தங்கையும் வாசலில் 

விளையாடிக்கொண்டு இருக்கிறோம். திடீரென இருட்டி விடுகிறது! என் 

தம்பிகளையும், தன்கையயும் உள்ளே கொண்டு வந்து விட்டு கதவைச்சாத்தி

விடுகிறேன். திரும்பிப்பார்த்தால் பின் கதவு திறந்து கிடக்கிறது!

            மறுபடியும் பின் கதவைச் சாத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் பக்கக் கதவு

திறந்து கிடக்கிறது!

            பிள்ளைகள் மறுபடி அது வழியாக வெளியே செல்லுகிறார்கள்! மறுபடி 

அவர்களை உள்ளே இழுத்துப்போட்டு கதவைச் சாத்துகிறேன். மறுபடி பார்த்தால்

இரண்டு கதவுகள், மூன்று, நான்கு என்று வீடு முழுவதும் நிறைய கதவுகள் 

திறந்து கிடக்கின்றன!! 

         கனவு முடிந்து விழிப்பு வரும் வரை ஒரே பயம்தான் !!!!

கனவுகள் ஏன் வருகின்றன?

     கனவுகள் நமது வெளிமனதையும் ஆழ்மனதையும் இணைக்கும் பாலம் 

என்கிறார்கள்!!!!

   
உலகின் பாலூட்டிகள் அனைத்தும் கனவு காண்பதாக சொல்கிறார்கள்!!!

   நம் வீட்டு நாய் கூட கனவு காணுதாம்!!!

 எப்படியோ நம்ம கலாம் கூட கனவு காணுங்கள் என்கிறார்!!!!

    மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவுதான் அமெரிக்காவில் ஒபாமா வடிவில்

நிறைவேறியதே!!!

      சரி அதுக்கும்  நம்ம கனவுக்கும் என்ன சம்மந்தம்ங்கிறீங்களா?

எனக்குத்தெரியல!!! நீங்கதான் சொல்லுங்களேன்!!!!


Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory