அன்பு நண்பர்களே!
தமிழ்மணம் வலைப் பதிவர்களுக்கான போட்டி அறிவித்துள்ளது
தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் எப்படி ஜாலியோ அப்படித்தான் இதையும் லைட்டாக எடுத்துக் கொள்வதே சிறந்தது ( மனதுக்குள் இப்படி 10 முறை சொல்லிப்பாருங்கள்-மனம் லேசாகி விடும்… எப்புடி…………….. ஹி…. ஹி…….}
மேலே சொன்னது போல் அமைதியாக இருந்த என்னை சும்மா விடாமல், என் வீட்டு எடிட்டர் ( வேறு யார்.. வீட்டம்மாதான் ) என் இடுகைகளில் மூன்றை என் அனுமதியில்லாமல் { என் லாகின் ஐ.டி,, பாஸ்வேர்ட் எல்லாம் பறிக்கப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டன.. …..} தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டார்.
அந்த மூன்று இடுகைகள்:
1. பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)
தேவன் மாயம் : கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!
2. பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள
தேவன் மாயம் : நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!
3.பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்
ஹி … ஹி.. இவற்றிற்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம். அட … உண்மைதாங்க!!
என்னது? படித்துப்பார்க்கப் போகிறீர்களா? .. சொன்னாக் கேக்க மாட்டேங்கறீங்களே! சரி! உங்க இஷ்டம்! …..
ஓட்டுப் போடுங்க! நீங்க போடுகிற ஓட்டையெல்லாம் நெகடிவ் ஓட்டாக எடுத்துக் கொள்ளச் சொல்லி தமிழ்மணத்துக்கு ஏற்கெனவே மெயில் பண்ணிவிட்டேனே!!!………………………………………
என்னடா . இவனுக்கு லூசா …. என்று நினைக்கவேண்டாம்.
உண்மையில் நல்ல இடுகைகள் யார் எழுதியிருந்தாலும் அவர்கள்ளுக்கே ஓட்டுப்போடவும்.. அதுதான் சரி…..
என்ன நண்பர்களே! நான் சொல்வது சரியா?
-----------------------------------------------------------
ஒரு சின்ன கவிதை……. கவிதை மாதிரி…
கேள்விகளுக்கும்
பதில்க்களுக்கும் இடையில்
இருந்தது,
இறந்து கொண்டிருந்த
அழகான
காதல்!
---------------------------------------------------------------