என் தெருவில் குழி கண்டு ஒதுங்கிப்போவேன்!
பிச்சையெடுக்கும் கிறுக்கனைக் கண்டு முகம் சுளிப்பேன்,
கொள்ளையடிக்கும் கவுன்சிலா¢டம் சிரித்துப்பேசுவேன்,
அ¡¢மா, ரோட்டரி சங்கத்தில் இருந்து பெருமைப்படுவேன்,
அங்கு வரும் அமைச்சருடன் போட்டோவில் நிற்பேன்,
எல்லோருடைய வரிப்பணத்தில் நான் படிப்பேன்,
ஐ.ஐ.டி என்பேன், எயிம்ஸ் என்பேன்,
நல்ல வேலை தேடிப் பல நாடு செல்வேன்,
அமெரிக்காவில் என்ன சுதந்திரம் என்று பூரித்துப்போவேன்,
சிங்கப்பூரில் சுத்தம் கண்டு அகமகிழ்வேன்,
என் அறிவை அன்னியருக்கு விற்பேன்,
நீ பெறுவது ஆயிரம்தான்,
என் சம்பளம் லட்சங்களில் என்று எண்ணி மகிழ்வேன்,
பணச்செல்வம் கொணர்ந்து என் கணக்கில் சேர்ப்பேன்,
சின்ன அடிபட்டாலும் மல்டிஸ்பெசாலிட்டியில் நிற்பேன்,
சிகிச்சை பில் கண்டு பகல் கொள்ளை என்பேன்,
பிளைட் ஏறுவேன், ஏசிக் காரில் செல்வேன்,
பெட் ரோல் விலை அதிகம் என்று வருத்தப்படுவேன்,
ஸ்டார் ஓட்டலில் பிஸ்ஸா, பர்கர்,எல்லாம் தின்பேன்,
அறை தங்கி பிளாக் லேபிள், மார்ட்டினி எனக் குடிப்பேன்,
அந்தரங்க ஆசைகளும் தீர்த்துக் கொள்வேன்,
விளை நிலங்கள் வீட்டுமனையாகுதல் கண்டு வருந்துவேன்,
சீப்பாய்க் கிடைத்தால் சில ஏக்கர் பட்டாப் போட்டுக்கொள்வேன்,
அய்யோ வரி அதிகமென்பேன்,பொய்க்கணக்குக் காட்டுவேன்,
முதலாளித்துவம் என்பேன், முடிந்தால் கம்யூனிசமும் பேசுவேன்,
லஞ்சத்தை எதிர்ப்பேன், லஞ்சம் ஒழிந்தால் நாடு உருப்படும் என்பேன்,
காரியம் விரைந்து முடிக்க தெரியாமல் நானே லஞ்சமும் கொடுப்பேன்,
ஜாதி ஒழியவேண்டும் என்பேன், சமத்துவம் பேசுவேன்,
என் ஜாதிப் பெண் பார்த்துத் திருமணம் முடிப்பேன்,
தமிழ் தமிழ் என்பேன்,
என் வீட்டுக்குழந்தைகளை கான்வென்ட் சேர்ப்பேன்,
இந்தியா இன்னும் திருந்தவில்லை என்பேன்,
இன்னும் சுதந்திரம் இல்லை என்று எழுதிக் குவிப்பேன்,
இன்னும் பல செயல்களெல்லாம் மறைவாய்ச் செய்வேன்,
கேட்டால் நான் சாதாரண மனிதன் என்பேன்!
டிஸ்கி! இது யாரையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல!