Friday 31 July 2009

மாரடைப்பு வருமா? ஒரே ஒரு சோதனை!!

அன்பு நண்பர்களே!!

கொலெஸ்ட்ரால் அல்லது கொழுப்புச்சத்து நம் உடலுக்குக் கேடானது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

தற்போது உடல் பருமன்,இதயநோய், நீரிழிவு நோய் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்து நம் உடலுக்கு கேடு விளைவிக்கின்றன.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தால் மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சினைகள் வராதா?

எனக்கு கொலெஸ்ட்ரால் சரியான அளவு உள்ளது. எனக்கு மாரடைப்பு வராதுதானே? என்றெல்லாம் நாம் கேட்கலாம்.

முன்பு ஆம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் தற்போது அப்படி இல்லை..

ஆம்.. தற்போதைய ஆய்வின்படி திடீர் மரணம் சம்பவிப்பதில் 30% பேர் முதல் மாரடைப்பால் மரணமடைகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அதற்கு முன் அவர்களுக்கு இதய நோயோ கொழுப்புச்சத்தோ இருந்ததில்லை.

அப்படியாயின் இதயநோய் வருமா வராதா என்று கண்டுபிடிப்பது எப்படி? என்று கேட்கலாம்...

அதற்கு பதிலும் தற்போது கிடைத்துள்ளது.

கொலெஸ்ட்ரால் கொழுப்பு வெண்ணை போல் பிசுபிசுப்புடன் ஒட்டும் தன்மையுள்ளது. இந்த கொலெஸ்ட்ராலில் Total cholesterol ( மொத்த கொழுப்பளவு) பொதுவாக கீழ்கண்ட வகைகள் உள்ளன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள அவற்றைச் சுட்டியாகவே தந்துள்ளேன்.

  • உயர் அடர்த்தி கொழுப்பு (உடலுக்கு நலம் தருவதால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது) High density lipoprotein cholesterol (HDL-C)
  • குறந்த அடர்த்தி கொழுப்பு( உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது). Low density lipoprotein cholesterol (LDL-C) 
  • ட்ரை கிளிசரைடு கொழுப்பு Triglycerides
  • மிகக் குறைந்த அடர்த்தி கொழுப்பு Very low density lipoprotein cholesterol (VLDL-C).

குறைந்த அடர்த்தி கொழுப்பு உடலுக்குக் கேடு விளைவிப்பதால் தீய கொழுப்பு என்று கூறப்படுகிறது. Low density lipoprotein cholesterol (LDL-C)

ஆகையால் குறைந்த அடர்த்தி கொழுப்பு இரத்தத்தில் குறைவாக இருந்தால் மாரடைப்பு வராது என்று கூறப்பட்டு வந்தது.

கொழுப்புகள் பொதுவாக நீரில் கரையாது. இரத்ததில் அதனால் சரியாக பயணிக்க முடியாது.  ஆகையால் இவை வேறு ஒரு பொருளால் போர்த்தப்பட்டு(கவச வண்டி என்று நாம் சொல்லிக்கொள்வோம்) இரத்தத்தில் பயணிக்கின்றன.

இப்படி குறைந்த அடர்த்தி கொழுப்புக்களை  ஏற்றிச் செல்லும் கலனாக LDL-P கவச வண்டி செயல்படுகிறது.

கொலெஸ்ட்ரால் குறைவாக இருந்தாலும் அதை ஏற்றிச்செல்லும் L D L- P க்களின் எண்ணிக்கை இரத்தத்தில்  அதிகமாக இருந்தால் அது இரத்தக்குழயில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும். இந்த நெரிசலில்தான் இரத்தக்குழாய் சேதமடைந்து(Atheroscerosis) விடுகின்றன.clip_image002

இதுவே மாரடைப்புக்குக் காரணமாக அமைகிறது.

விடை இப்போது தெரிகிறதா? ஆம். LDL-P க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மாரடைப்பு வாய்ப்புகள் குறைவு என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த புதிய சோதனையின் பெயர் NMR LIPID PROFILE .

ஆயிரக்கணக்கான மக்கள் வருடந்தோரும் இதய நோயால் இறக்கின்றனர். இந்த புதிய சோதனைகளின் மூலம் இதை அறிந்தால் நாம் நம் இன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாமே!!!

Thursday 30 July 2009

முன்னேறும் இந்தியா!!

இந்தியா உலக அரங்கில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டுள்ளது. அறிவியலில் முன்னேறிய நாடுகளே இப்போதும் அடுத்த தலைமுறையையும் ஆளும் என்பது நாம் கண்ட உண்மை.

நீண்ட நாட்களாக அமெரிக்கா இந்தியப் பெருங்கடலிலும்,  அரேபிய வளைகுடாவிலும் தன் கப்பற்படைமூலம் ஆதிக்கம் செலுத்திவருகிறது. அதே போல் சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்படையுடன் பலம் பொருந்திய நாடாகத்திகழ்கிறது.

இந்திய கடற்படை அதிகமாக சோவியத் கடற்கலன்களையே கொண்டுள்ளது.

அதுவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் விசயத்தில் உலகில் நான்கு நாடுகளே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரித்து  வந்தன.

ஐந்தாவதாக இந்தியா இப்போது அந்த பலமும், தொழில் நுட்பத்திறனும் மிகுந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

30 ஆண்டுகள் கடின உழைப்பும் $2.9 பில்லியன் செலவுடனும் I N S ARIHANT - இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி அரிஹண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

டாக்டர்.பி.கே.அய்யங்கார்-இதன் பின்னணி விஞ்ஞானிகளில் ஒருவர்.Dr.P.K.IYENGAR

இதன் பலங்கள் என்ன?

 

1. நீர்மூழ்கிகள் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ள கடலின் மேல்பரப்புக்கு வரவேண்டும். இதில் அந்தத்தேவை இல்லை. 100 நாட்களுக்கு மேல் நீருக்கடியில் இருக்க முடியும்.

2.தகவலைப் பெற அனுப்ப ஆழ்கடலில் இயலாது. ஆனால் இந்நீர்மூழ்கி மிககுறந்த அலைவரிசை(V L F) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆழ்கடலிலிருந்தே தகவல் அனுப்பவோ பெறவோ முடியும்.15 வருடத்துக்கு முன்பே இந்திய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்து விட்டனர்.

3.இது பல அமெரிக்க நீர்மூழ்கிகளைவிட வேகமானது...

4.இதனால் இந்தியா முப்படையிலும் அணுசக்தியைக் கையாளும் திறன் படைத்த முன்னணி நாடுகள் வரிசையில் சேருகின்றது.

வாழ்க இந்தியா!!

Wednesday 29 July 2009

ராக்கி சவந்துக்குக் கல்யாணம்? நடக்குமா? நடக்காதா?

அன்பின் நண்பர்களே!!

என்னுடைய

பாலிவுட் நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும்

http://abidheva.blogspot.com/2009/07/blog-post_26.html

என்ற பதிவில் இவர்களைக் கல்யாணம் செய்பவன் என்ன பாவம் செய்தானோ என்று பின்னூட்டங்கள் இட்டிருந்தார்கள். அவர்களில் பலர் கதாநாயகிகள். சாதாரண முன்னணி நடிகைகளும் பலர் அதில் இருந்தனர். அதுக்கே இப்படியென்றால் கவர்ச்சியுலகில் கலக்கும் ராக்கி சவந்துக்குக் கல்யாணம்ங்கோ!!! எப்படி செய்தி?Rakhi Sawant

தனக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய சுயம்வரம் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பாலிவுட் செக்ஸ் பாம் ராக்கி சாவந்த், அதில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பேரும் தன்னைக் கவர்ந்து விட்டதால் அத்தனை பேரையுமே மணக்க விரும்புவதாக கூறி அதிரடித்துள்ளார்.
ராக்கி சாவ்ந்த் கா சுயம்வர் என்ற பெயரில் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் ராக்கி. தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான ரியாலிட்டி ஷோ என இதை அவர் வர்ணித்திருந்தார்.
ராக்கியின் இந்த சுயம்வர அறிவிப்பைக் கேட்டதும் நாடு முழுவதிலுமிருந்து 12,515 பேர் மனு செய்தனர்.
இவர்கள் குறித்து ஆராய்ந்து, பலரை நிராகரித்து, சல்லடை போட்டு சலித்து இப்போது 16 பேரை இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்துள்ளார் ராக்கி. ஆனால் அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாகி விட்டதாம். காரணம், 16 பேரும் பக்கவாக, பர்பக்ட் ஆக இருப்பதால், யாரை விடுவது, யாரை தேர்வு செய்வது என்று அவருக்குப் புரியவில்லையாம். .

 

கொஞ்ச நாள் முன்பு இதே ராக்கி விருந்து நிகழ்ச்சி ஒன்றில்  நடனம் ஆடிய போது பாப் பாடகர் மியாசிங் இவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

இதுபற்றி ராக்கி போலீசில் புகார் கொடுத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவர் நடித்த இந்தி டி.வி. தொடர் ஒன்றில் குளியல் காட்சி ஒன்றில் ஆபாசமாக நடித்து உள்ளார். அவர் குளிக்கும்போது அருகில் புத்தர் சிலை ஒன்று இருப்பது போல காட்டப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த மதத்தினர் போராட்டத்தில் குதித்தனர். மராட்டிய மாநிலம் அமராவதியில் புத்த மதத்தினர் ராக்கிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி கொடும்பாவி எரித்தனர்.

இப்படி நடிக்கும் நடிகையைக் கல்யாணம் செய்ய 12515 பேர் போட்டியென்றால் என்ன சொல்வது?

அதுவும் சுயம்வரத்தைப் பற்றிக் கேட்கும்போது” இந்திய சரித்திரத்தில் சுயம்வரங்கள் நடக்கவில்லையா? சீதையே சுயம்வரம் நடத்தித்தானே திருமணம் செய்தார்”” என்று பதிலளித்துள்ளார் இந்த கலியுக சீதை!! எப்படி இருக்கு?

இதைப் படிக்கும்போது நாம் மிகவும் பின்தங்கியுள்ளோமோ என்று தோன்றுகிறது. உணர்வு ரீதியாக நடிகர் நடிகைகளைக் கல்யாணம் செய்பவன் அவ்வளவுதான் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் இந்திப்படவுலகில் அன்றைய ஹேமாமாலினியிலிருந்து, சல்மானுடன் மான் வேட்டை ஆடிய ரவீணா டாண்டன் வரை கல்யாணமாகி செட்டில் ஆகியுள்ளனர். இதை எவ்வாறு வடநாட்டில் வசிக்கும் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம்ம ஊரிலும் மீனாவுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ரம்பாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்!!!

சரி இதுபற்றி எழுதுங்கள் பின்னூட்டத்தில்!

ராக்கியின் கல்யாணம் ஆகஸ்ட் 2 டிவியில் லைவாக....என்று சொல்லப்பட்டது..

மாப்பிள்ளை கனடாவில் உள்ள Elesh Parujanwala என்ற தொழிலதிபர். ராக்கியாவில் இந்தியாவுக்கு ஒரு நன்மை என்னவென்றால் அவர் கணவராகப்போகும் நபர் தன் வியாபாரத்தை மும்பைக்கு மாற்றவுள்ளார். எப்படியோ ஒரு தொழிலதிபர் இந்தியா திரும்புவதில் சந்தோசமே!!

ஆனால் ராக்கி இதை இன்று மறுத்துள்ளார். ”சுயம்வரம்தான் நடத்தியுள்ளேன். ஆனால் என் இளவரசனை நன்கு புரிந்துகொண்ட பின்தான் திருமணம் “ என்று பல்டி அடித்துள்ளார்.

ஏற்கெனவே அபிஷேக் அவஸ்தியுடன் இருந்த காதல் பற்றிக் கேட்டால் அது முடிந்த கதை அதைப்பற்றிப் பேசவேண்டாம் என்கிறார் அம்மணி!!

நான் நடிகைகள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை!! நாட்டு நிலைமையைச் சொன்னேன்!!!

Tuesday 28 July 2009

கொஞ்சம் தேநீர்- மருமகள்!!

கவிதை எழுதி ரொம்ப நாளாகிவிட்டதே! சும்மா மொக்கையா ரெண்டு எழுதியிருக்கேன். மக்கள் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்!!

 

நல்லா உடம்பைப்

பார்த்துக்கொள்ளுங்கள்,

நாங்க அடிக்கடி

வந்து பார்த்துக்கொள்கிறோம்!

உங்களை விட்டு

எப்படி இருக்கப்போறமோ?

கதறி அழுதாள்

புதுக் குடித்தனம்

போகும் மருமகள்!!

 

மாலை அணிவித்து

ஆணியடித்து

சுவரில் மாட்டப்பட்டது

அம்மாவின் படம்,

அலறி மயங்கி

அடித்துக்கொண்டு

அழுதாள் மனைவி

திருப்தியுடன்!!! 

Monday 27 July 2009

கொலையும் தண்டணையும்!

அன்பு நண்பர்களே!

நம் பதிவர்கள் கொலை பற்றியும் அதனால் காவல்துறை மற்றும் சட்டரீதியாக என்ன நடவடிக்கைகள் என்பதுபற்றியும் அறிவது அவசியம்!

அதற்காகவே இந்தச்சிறு பதிவு. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லவும்.

கொலை என்பது என்ன?

கொலையில் சட்டரீதியாக இரண்டு வகைகளாகக் கூறுகிறார்கள்.

1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

  2.1-கொலை

  2.2-கொலைக்குக்காரணமாக இருத்தல், உயிர் பறிக்கும் வகையில் காயம் ஏற்படுத்துதல்.

 

1.1.சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது, மன்னிக்கப்படுபவை

  #சட்டரீதியாக மரணதண்டணை வழங்கப்படுதல்

  #காவல் துரையினர் சட்டம் ஒழுங்கைக் காக்கும்போது ஏற்படும் இறப்புகள்.

#குற்றம் தடுக்கும்போது மரணம் சம்பவித்தல்- ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயலும்போது அப்பெண் அவனிடமிருந்து காத்துக்கொள்ளும் போது ஏற்படும் மரணம்.

1.1மன்னிக்கத்தக்கவை

#தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியில்லாமல் கொலை செய்தல்.

#விபத்தில் ஏற்படும் மரணம்.

#சட்டரீதியான நடவடிக்கையில் மரணம்

#மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர் செய்யும் கொலை.

2.சட்டரீதியாக தண்டிக்கப்படும் கொலைகள்

#கொலைசெய்யும் நோக்கத்துடன் மரணம் ஏற்படுத்துதல்

#மரணம் ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்

#இப்படிச் செய்தால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்து அச்செயலைச் செய்தல்.

 

ஒரு சண்டையின்போது ரத்தக் குழாய் வெடித்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பது பிரேதப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டால் அது கொலை அல்ல. இதுபோல் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவர் இறக்க வாய்ப்புள்ளதால் இது கொலையாகக் கருதப்படாது.

ஏற்கெனவே ஒரு நபருக்கு உடல் உள் உறுப்புகளில் வியாதியிருந்தால்-அல்சர், இதயநோய், மண்ணீரல் வீக்கம்,காசநோய்,பார்க்கின்சன் போன்றவை இருக்கும் நபரை ஒருவர் சாதாரணமாகத் தாக்கினார். அதனால் வியாதியுள்ள நபர் நோய் அதிகமாகி இறந்துவிட்டார் என்றால்:-

         1. அடித்தவருக்கு கொலை செய்யும் நோக்கம்      இல்லை.

         2.அவருக்கு இவருக்குள்ள நோய் பற்றித்தெரியாது.

         3.அந்தக் காயம் சாதாரண நபருக்கு ஏற்பட்டால் மரணம் ஏற்படாது.

          என்றால் அது கொலைக்குற்றம் அல்ல. ஆனால் சாதாரண அல்லது கொடுங்காயங்களுக்கு வழங்கப்படும் தண்டணை வழங்கப்படும்.

உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்கள்- கத்தியால் நெஞ்சில் குத்துதல், முக்கிய பாகங்களில் ஆயுதங்கள் அல்லது கை,காலால் தாக்குதல் கொலையில் சேரும்.

இந்தியக் குற்றவியல் சட்டம்  - பிரிவு 302 படி,Sec.302 I.P.C.கொலைக்குற்றத்துக்கு

       1.மரண தண்டணை

       2.ஆயுள் தண்டணை

       மற்றும் அபராதம்.

 இந்தியக் குற்றவியல் சட்டம்- பிரிவு 304-A தவறுதலாக மரணம் ஏற்படுத்துதல்

தவறுதலான ஒரு செயலால் ஒரு மரணத்துக்குக் காரணமானால் இரண்டு வருட கடுங்காவல் மற்றும் அபராதத் தொகை, அல்லது 2 வருட கடுங்காவல் மட்டும்.

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 305-

ஒரு குழந்தை அல்லது மனநலம் குன்றிய ஒருவரின் மரணத்துக்குக் காரணமாக அமைதல்-10 வருட சிறைத்தண்டணை!  

இந்தியக் குற்றவியல் சட்டம்-பிரிவு 306-

ஒருவரின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தால் ஆயுள் தண்டணை -10 வருடம் வரை மற்றும் அபராதம்.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 307-

கொலை முயற்சிக்கு 10 வருடம்வரை சிறைத்தண்டணை.

இந்தியக்குற்றவியல் சட்டம்-பிரிவு 309-

தற்கொலை முயற்சிக்கு ஒருவருடம் வரை மற்றும் அபராதம்.   

இதில் விளக்கங்கள் நிறைய உள்ளன. சாராம்சத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன். விரிவாக வேண்டுமெனில் சொல்லவும்.

தமிழ்த்துளி தேவா.

Sunday 26 July 2009

பாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது! வாழ்த்துங்கள்!!

maduraibloggermeet 24-5-2009 004

நம் இளைஞரணித் தலைவர்!!

மதுரையின் பாசக்காரப் பதிவர்,

வைகைத் தென்றல்!!,

அகில உலக அன்புடன் குழுமத் தானைத்தலைவர்,  

வேறு யார்..??

நம் அண்ணன் சீனா அவர்கள் இல்லத்தில் ஒரு புதிய

வரவு!

ஆம்! அன்பர் சீனாவின் மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

சீனா வின் அன்பு மகள் பிரியா & மணி தம்பதியினருக்கு பெண் குழந்தை லண்டனில் பிறந்துள்ளது.

ஆகையினால் அன்பர் சீனா தற்சமயம் லண்டனில் உள்ளார்.

அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

பாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்!!!

 

பின் நவீனத்துவக்கவிதை ஒன்னு எழுதலாம்னு ஒரு யோசனை வீட்டுவேலையின் நடுவில் வந்து தொலைத்தது.

சுவத்தில் ஊரும் பல்லி, பக்கத்தில் கரப்பான் பூச்சி, சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறு பூச்சிகள், சுவற்றில் சிகப்புக் கறை, .......எல்லாத்தையும் குழப்பி எழுதலாம்னா ஒன்னும் பிடிபடலை...

”ஏங்க!! ஒட்டடை அடிங்கன்னா சுவத்தையே முறைச்சுப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு?... என்றாள் அகஸ்மாத்தாக கையில் துடைப்பத்துடன் என்னைப் பார்த்து என் அம்மிணி( ஒன்னுமில்லை... தரையைக் கூட்டிப்புருக்கிக்கொண்டிருந்தார்கள்... அதுதான் கையில் துடைப்பம்.

சரி வேலையைப் பார்ப்போம் என்று ஒட்டடைக்கம்பை எடுத்தேன்.. நீளமான ஒட்டடைக் கம்பு.... நுனியில் குஞ்சம் போல் தேங்காய் நார்...ஆகா.. அன்புமணி,ஹைக்கூ ந்.துரை பாணியில் ...ஒரு கவிதை..

தேங்காய் நாரானபின்

மறுபடியும்  பூத்தது

ஒட்டடைக் கம்பின்

நுனியில்!!!

அட இந்தக் கவிதை நம்மல விடமாட்டேங்குதே...சரி ஒட்டடையை முடித்துவிட்டு பதிவு எழுதுவோம் என்று அமர்ந்தேன்.. ஒரு மேட்டரும் செட்டாகலை!! மண்டை காய்ந்து,வரண்டு போனதுதான் மிச்சம்!!

சரி ஞாயிறு குஜாலா ஒரு பதிவு போடுவோம் என்று பம்பாய் நடிகைகளின் பக்கம் திரும்பினேன். முன்னணி நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும் .. என்று ஒரு பதிவு தயாராகிவிட்டது. இந்த படங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. நேரில் பூனை மாதிரி இருந்து கொண்டு சினிமாவில் கலக்கி எடுக்கும் மும்பை அம்மணிகளைப் பாருங்கள்.

1.ஊர்மிளா மேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும்!!!.

...clip_image002[6]..

n

2.நெஹா தூபியா

--------------------------

 

.clip_image002[12].நெஹா தூபியா -மேக்கப் இல்லாமல்!!

..அதே நேஹா துபியா மேக்கப்புடன் கீழே!!!.....

3.தனுஷ்ரி தத்தா

மேக்கப் இல்லாமல், மேக்கப்புடன்.

-clip_image002[20]..

.

.

3.மலைக்கா அரோரா

கீழே மேக்கப் இல்லாமல் அதற்கும் கீழ் மேக்கப்புடன்..

.clip_image002[22].

4.பிரீத்தி ஜிந்தா

மேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும்.clip_image002[24]..

.

.5தியா மிஸ்ரா.கீழே clip_image002[26]....

.

------------------------------------------------------------------------------

6.லாரா தத்தா

.clip_image002[28]...

.6.பிரியங்கா சோப்ரா..clip_image002[30]....

7.அமிஷா படேல்

.clip_image002[34].

..

8.அந்த்ரா மாலி மேக்கப் இல்லாமல்

..clip_image002[36]

.மேக்கப்புடன்....antara8.jpg image by piyaara.

9.காட்ரினா கைஃப்

மேக்கப்பில்லாமல்..

 

 clip_image002[40]

...அண்ணா!! என்னைய உட்ருங்னா.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல....

10.கரினா கபூர்

.clip_image002[42].

..

எப்பவுமே இது 10 .. அது 15ன்னு பதிவு போட்டுத்தான் பழக்கம் நமக்கும்.

இதுல 11 வந்துவிட்டது. மேக்கப் இல்லாமல் மேக்கப்புடன் ... நடிகைகளைப் பார்த்தீர்கள். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

சினி தேவா...!!!

படங்களை பக்கவாட்டில் அடுக்கி போடுவது எப்படி என்று சொல்லுங்களேன்.

Friday 24 July 2009

நட்பு -10 !!!

நட்பு என்பது கல்லூரியில் ஒன்றாக அரட்டை அடித்து,ஆசிரியரைக் கிண்டல் செய்து ஒன்றாகத் தூங்கி, மகிழ்ச்சியாக ஊர் சுற்றுவது மட்டுமல்ல்.

நண்பனுக்கு வரும் பிரச்சினையை தன் பிரச்சினை போல் உணர்ந்து, அதிலிருந்து மீள நல் வழி காட்டுவதும் ஆதரவு கொடுப்பதும் நல்ல நட்பின் அடையாளங்களில் ஒன்றாகும்.

நட்பு எப்போது ஆரம்பிக்கிறது? தாயுடன் இருக்கும் குழந்தை சுமார் இரண்டு வயதில் விளையாடும்போது பிற குழந்தைகள்பால் ஈர்க்கப்படும்போதிலிருந்து நட்பு ஆரம்பிக்கிறது!!

இளம் வயதில் சம வயதுடையவர்களின்  குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு அங்கீகாரத்தை தனக்கு ஏற்படுத்திக்கொண்டால் மன ரீதியாக ஒரு இளைஞன் சந்தோசத்தை அடைகிறான். பிறரின் அன்பைப் பெறுவதில் வெற்றியும் பெறுகிறான்.  

பெற்றோர்கள் இதைத் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள்.” இவ்வளவு நாள் வளர்த்த எங்களைவிட நேற்று வந்த நண்பன் பெரிதாகப் போய்விட்டதா?” என்று வருத்தப் படுகிறார்கள்.

நண்பர்களுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வளரும் இளைஞர்களாலேயே பிற்காலத்தில் தன் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் நல்ல முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்.

நண்பர்களுடன் பழகாத இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் இளம் வயதுப் பிரச்சினைகளுக்கு  (பெற்றோருடன் சொல்லமுடியாத) தீர்வு சொல்ல ஆதரவு சொல்ல ஆளில்லாமல் விரக்தி. தாழ்வு மனப்பான்மை, வாழ்வில் பிடிப்பின்மை போன்ற நிலைகளுக்குத் தள்ளப் படுகிறார்கள்.

தனிமையில், ஒத்த கருத்துடைய நண்பர்களுடன் பழக முடியாத வேலைஇடங்களில்,வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களுக்கு வலை நட்பானது மிகப் பெரிய களமாக அமைகிறது.

இங்கு காதுகுத்து முதல் கல்யாணம் வரை குடும்பத்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் படுகின்றன. இணைய நட்பு மிகப்பெரிய நிகழ்வுகளை ஏற்படுத்தவிருக்கிறது.

இந்த நேரத்தில் புதுகைத்தென்றல் என்ற அசுர பதிவர், புதுக்கோட்டைக்காரர் நட்புடன்--- ”இவர் என் நண்பர்” என்று என்னைக் குறிப்பிட்டுள்ளார்.

..

நட்பு இந்த சொல் எனக்குள் உண்டாக்கும் அதிர்வு சொல்லில் அடங்காது

என்று குறிப்பிடுகிறார் என்றால் நட்பின் அருமையை நாம் அறியலாம்.

"மனதில் உறுதி வேண்டும் எஸ்,பி.பீ போல
மருத்துவருக்குள் இம்புட்டு திறமையா என நான்
வியக்கும் நண்பர்
டாக்டர் தேவா.

 பின்ன என்ன?
இன்றைய அவரது பதிவில் இருக்கும் பென்சில்
ஸ்கெட்சிங் அவரே போட்டதுங்க
..

என்று இவர் பாராட்டியதை தன்னடக்கமில்லாமல் இங்கு நான் சந்தோசத்துடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பதிவர்கள் என் நண்பர்கள் என்று நான் குறிப்பிட விரும்புபவர்கள்:

1. திரு. சீனா( சீனா)- மூத்த பதிவர், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர், மிகுந்த அன்புள்ளம் கொண்டவர். 20 வயது இளம் மனதுக்காரர்.

2.அதிரை ஜமால் - இணையத்தில் என் முதல் நண்பர்.  என் மீது அன்பு மழை பொழிபவர். 

3.துரை- கவிதைகள் எழுதிக்கொண்டே இருப்பவர். இவர் தளம் முழுக்க கவிதைதான். அன்புடன் குழுமத்தில் கிடைத்த இனிய நண்பர்.

4.அகநாழிகை - திருச்சி சந்திப்பில் அறிமுகமான அன்பு நண்பர். கவிதைகள் கலக்குபவர். 

5.இயற்கை - இதயத்தில் பூக்கள் வைத்திருக்கும் இனிய நண்பர். 

6.பிரியமுடன் வசந்த்- விஜய் ரசிகர். படங்களுடன் விளையாடுபவர். அபார கற்பனை வளம் கொண்டவர்.

7.தமிழரசி- கவிதை இயந்திரம். பயமறியாப் பாவை. அடிமனதிலிருந்து பதிவும்,பின்னூட்டமும் எழுதுபவர்.

8.ஸ்ரீ - மதுரையின் பாசக்காரப் பதிவர். பதிவுலக மன்மதன்களாக என் பதிவில் இடம் பெற்றவர்.  

9.வழிப்போக்கன் - பள்ளியில் படிக்கும் அன்புத்தம்பி. இளம் வயதிலேயே இவ்வளவு அறிவா என்று வியக்க வைப்பவர்.

10.பீர்- மீண்டும் ஒரு மதுரை மண்ணின் மைந்தர். நட்புள்ளம் கொண்டவர்.

நண்பர்களே நம்  நட்பு வட்டம் பெரிதுதான். ஆனால் எல்லோருக்கும் நானே கொடுப்பது சரியல்ல என்பதால் பத்தோடு நிறுத்திக்கொண்டேன்!

பதிவில் கொடுத்தவர்கள் போக இன்னும் பலரை என் மனதில் பதியவைத்து இருக்கிறேன்!!

இந்த விருதுக்கு சில விதிகள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும். 

நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பருக்கு
விருது கொடுத்து பெருமைப்படுத்துங்கள்.

=============================

.

Tuesday 21 July 2009

இப்படி நடக்க விடலாமா?

எல்லோருக்கும் எல்லா விசயமும் தெரியும். இந்தத் தகவல் தொழில் நுட்ப காலத்தில் எல்லா விபரங்களும் புத்தகங்களில், தொலைக்காட்சியில்,வலைப் பக்கங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

இருந்தாலும் நோய்கள் பற்றி நிறைய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை என்றெ கூறலாம்.

சக்கரை நோய் சாதாரணமாக எல்லாக் குடும்பங்களிலும் காணப்படும் ஒன்று. ஆனால் சிகிச்சையில் அக்கறை செலுத்தா விட்டால் என்ன ஏற்படும் என்று சுருக்கமாகக் கீழே சொல்லி இருக்கிறேன். இவை மிக முக்கியமான குறிப்புகள். 

சக்கரை நோயாளிகள் சக்கரை கண்டு பிடிக்கப்பட்ட நாளிலிருந்தே கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

மாத்திரையால் சக்கரை குறையவில்லையெனில் உடனடியாக இன்சுலினுக்கு மாறிவிட வேண்டும்.

1 மாத்திரை பிறகு 2 மாத்திரை என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றும் STEP CARE THERAPHY இப்போது கடைப்பிடிக்கப் படுவதில்லை.

சக்கரையைக் குறைக்க உடனடியாக ஒன்றுக்கும் மேற்பட்ட வகை மாத்திரைகளை உண்பது அப்படியும் சக்கரை குறையாவிடில் இன்சுலின் சிகிச்சைக்கு மாறுவதே சிறந்தது. ( சில நோயாளிகள் இன்சுலின் போட வேண்டும் என்றால் வேண்டாம் மாத்திரையே போதும் என்று அடம் பிடிப்பார்கள்!!!).

சக்கரைக்கு தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். கொழுப்புச்சத்து மற்றும் சிறுநீரக,கண் பரிசோதனை அவசியம்.

ஓயாமல் மருத்துவர் சிகிச்சைக்கு வரச்சொல்லி காசு பிடுங்குகிறார்கள் என்று  ஒரு சாரார் குற்றம் சுமத்துவார்கள். தொடர்ந்து இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும்,  சொந்தமாக ரத்த சக்கரை சோதிக்கும் மிஷின் வாங்கி ஒரு நோட்டுப் போட்டு சக்கரை அளவைச் சோதித்துக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் செய்ய மாட்டார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தால் கட்டாயம் தொடர் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வார்கள்.

1.எனக்கு சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது. நான் ஏன் தொடர் சிகிச்சைக்கு வர வேண்டும் என்று மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டு வந்தார் ஒரு நோயாளி. 2 ஆண்டுகளுக்குப் பின் கால்கள் வீங்கிவிட்டது. பரிசோதித்தபோது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தது. டயலிசிஸ் செய்ய வாரம் 1500, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் சிகிச்சைக்குப் பின் வாரத்துக்கு 6000 செலவாகும்  என்பது பலருக்குத் தெரிவதில்லை.

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இளம் வயது. சக்கரையால் சிறுநீரகம் பாதிக்கப் பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய ஆகும் செலவும் அதன் பிறகு வாரம் 6000 ரூபாய் போல செலவாகும் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த செலவு செய்ய முடியாது என்பதால் படுத்த படுக்கையாகி 25 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

2.கால் பரிசோதனை செய்ய வேண்டும். இதனை நிறைய நோயாளிகள் ஒத்துக் கொள்வதில்லை. இதனால் சக்கரை நோயாளி நன்கு படித்தவர் ஒருவருக்கு காலில் புண் ஏற்பட்டு அந்தப் புண்ணை ஆற்றி சிகிச்சை பெற 50000 செலவானது.

3.கண் பரிசோதனைச் செலவு 100 ரூபாய் வரும். இதைச் செய்தால் ஆரம்பத்திலேயே கண்ணில் கோளாறு வராமல் தடுக்கலாம். ஆனால் விட்டுவிட்டால் கண்ணில் இரத்தக் கசைவைக் கண்டு பிடுத்து சிகிச்சை செய்துகொள்ள  10000 வரை செலவு ஆகும்.

அடிக்கடி செக் அப் செய்துகொள்வதே சிறந்தது. நமக்குத்தான் இன்சூரன்ஸ் இருக்கே பெரிய ஆஸ்பத்திரிகளில் மதுரை,சென்னையில் போய் வைத்தியம் செய்து கொள்வோம் என்று நாளைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போவது ஆபத்து. பிறகு உயிருக்கு ஆபத்து என்று வரும்போது எவ்வளவு செலவுசெய்தாலும் உடல் பழைய நிலைக்கு வராது..

தமிழ்த்துளி தேவா..

Monday 20 July 2009

சாப்பிட்ட பின் மாரடைப்பு!

சாப்பிட்டபின் இரத்தத்தில் சக்கரை 140 க்குக் கீழ் இருக்க வேண்டும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு 160 மி.கி. க்குக் கீழ் இருக்க வேண்டும்.

சாப்பிட்ட பின் மாரடைப்பு ஏற்படுவது இந்தியர்களில் அதிகம் காணப்படுகிறது. இந்தியர்களாகிய நாம் தானிய உணவுகளை அதிகமாக உண்கிறோம்.

இதனால் நமக்கு உணவு உட்கொண்ட உடன் சர்க்கரை அளவு இரத்தத்தில் அதிகமாகிறது. இதனால் இரத்தக் குழாய்கள் உடனடியாக பாதிக்கப் படும்.

அதே போல் இரவு உணவு 9-11 மணிவரைதான் உண்கிறோம். இது மிகவும் ஆபத்தானது.

சாப்பிட்ட 2 மணிநேரத்தில் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும். 10 மணிக்கு உணவு சாப்பிட்டால் இரவு 12 மணிக்கு உணவு செரித்து இரத்தத்தில் இனிப்பு அதிகரித்து இரவு முழுக்க அதிகமாகவே இருக்கும்.

இதனால் பகலில் இரத்தப் பரிசோதனை செய்யும் போது குறைவாக சர்க்கரை தெரிவது கண்டு நாம் ஏமாந்து விடுகிறோம். இதனால் இரவு முழுக்க சர்க்கரை உடலை பதம் பார்த்துவிடுகிறது.

மேலை நாட்டினர் சக்கரை  நோயாளிகள் 6-7 க்குள் குறைந்த  உணவு சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். இதனால் இரவில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.

சாப்பிட்ட பின் ஏன் சக்கரை அதிகமாகிறது?

1.இட்லி.தோசை,சப்பாத்தி,உப்புமா,பொங்கல்,சேமியா,சேவை போன்றவற்றில் மாவுச்சத்து அதிகம். இவற்றை உண்பது சக்கரையைக் கூட்டும்.

2.மூன்று வேளையும் காய்கறிகளற்ற( நார்ச்சத்து இல்லாத) உணவை உண்பது.

3.பாலிஷ் செய்த தானியங்கள், மைதாவில் செய்த நான், ரொட்டி,பன்,பிரட், பீட்ஸா போன்றவை உண்பது.

தீர்வு என்ன?

1.மதியம் தூக்கம் வரும் அளவு உண்ணக் கூடாது.

2.இரவு 8 மணிக்குள் உண்ண வேண்டும்.

3.காய்கறிகளை உண்ண வேண்டும். மேலே சொன்ன தானிய உணவுகளைக் குறைக்க வேண்டும்.

3.தினமும் உடல் பயிற்சி செய்ய வேண்டும்.

4.வாரம் இரண்டு நாட்கள் மதியம் , இரவு சாப்பிட்ட பின் சக்கரை அளவு பார்க்க வேண்டும்.

Sunday 19 July 2009

கவிஞர் ராஜமார்த்தாண்டன்!

ஒருவரின் மரணம் சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கவிஞர் ராஜமார்த்தாண்டனின் மரணம் இலக்கியத்தளத்தில் நவீன கவிதைத் தளத்தில் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தின் மீது தீராத காதலுடன் அவர் இருந்தார்.

6.6.2009 அன்று சாலை விபத்தில் அவர் மரணமைந்தார்.

அவர் கன்யாகுமரி மாவட்டத்தில் சந்தையடி என்ற கிராமத்தில் 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.இளங்கலை கணிதத்தில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பற்றால் கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ்ப்படிப்பை முடித்து புதுக்கவிதையில் ஆய்வும் செய்தார். தினமணி மதுரைப் பதிப்பில் 20 ஆண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளார். அதன் பின் காலச்சுவடு இதழில் பணியாற்ற ஆரம்பித்தார்.

 

 

image image

மேலே இருக்கும் இரண்டு படங்களும் நான் அவசரமாக  வரைந்த பென்சில் படங்கள்.

சிறந்த கவிதை விமரிசகராகத்திகழ்ந்த அவர் புதுக்கவிதைத் தொகுதிக்காக 2003 ல் தமிழக அரசு விருது பெற்றார்.

இந்த ஜூலை காலச்சுவடு இதழில் மறைந்த ஆளுமைகள் என்று கவிஞர்.ராஜமார்த்தாண்டனைப் பற்றி விரிவான கட்டுரைகள் வந்துள்ளன.

இவருடைய முக்கிய நூல்களில் புதுமைப் பித்தனும் கயிற்றரவும்,ராஜமார்த்தாண்டன் கவிதைகள்,புதுக்கவிதை வரலாறு, சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை ஆகியவை அடங்கும்.

குடியும் ,புகைப்பழக்கமும் அவரது உடலைப் பாதித்தன. இருப்பினும் அதை அவர் வெளியே சொல்லவில்லை. இரண்டு முறை மரணத்தின் வாயிலுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பி சிறிது காலம் இப்பழக்கங்களை விட்டிருந்தார்.பின் உடல் நலம் தேறிய பின் மீண்டும் பழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்டார்.

நவீன கவிதை இயக்கத்தின் உயிர்மூச்சாக அவர் இருந்தார். எந்த ஒரு புதிய கவிதைத் தொகுதியையும் படித்துவிடும் ஆர்வம் அவரிடம் இருந்தது.

”திராவிட இடதுசாரி இயக்கங்கள் தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை எதிர்த்து செயல்பட்ட போதெல்லாம் அவர்களுக்கு எதிராக எதிர்வினை புரிந்தவர் இராஜ மார்த்தாண்டன். தமிழ் புதுக்கவிதை இயக்கத்தின் வரலாற்றினையும் பதிவு செய்திருக்கிறார்” என்று திரு.கண்ணன் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய படைப்புகள் தமிழில் நவீன கவிதை எழுதும் நம் வலையுலக நண்பர்களால்  அவசியம் படிக்க வேண்டியவை.

இதுவே அவரைப்பற்றி நான் இங்கு எழுதுவதற்குக் காரணமாகவும் அமைகிறது.

 

காலச்சுவடு இதழிலிருந்து

அவருடைய கவிதை ஒன்று

வான்வெளி துலங்கிற்று!

நேற்றைப் போலிருக்கிறது

ஐம்பதைத் தாண்டியது

இன்றோ அறுபதில்

 

“சென்றதினி மீளாது...”

என்றாலும் திரும்பிப் பார்க்கிறேன்

சாணேற முழம் சறுக்கிய

கதையாய்

நின்ற நிலையில்

என் பயணம்

 

அயர்வுடன் முன்னோக்கினால்

சகபயணிகளோ வெகுதொலைவில்

பின்பயணிகளும் கடந்தவண்ணம்

 

ஒரு துளி மேகமில்லை

ஒரு சிறு பறவையில்லை

வெறுமையாய் வானம்

அடியெடுத்து வைப்பதா

அமர்ந்தோய்வு கொள்வதா?

 

’தாத்தா...’

குரல் கேட்டுத்திரும்பினால்

பனித்துளி தங்கு

பூவிதழ் சிரிப்பில்

பவன் --- அவன்

குறுநடை தொடர்ந்தேன்

 

பறவையின் சிறகசைப்பில்

வான்வெளி துலங்கிற்று.

-----------------------------------------------------------------

மேலேயுள்ள செய்திகள் காலச்சுவடிலிருந்து பெறப்பட்டவை! காலச்சுவடு இதழாசிரியருக்கு நன்றியுடன்!!

_______________________________________________

கீழ்க்கண்ட தளங்களில் அவரைப் பற்றி மேலும் படிக்கலாம்.

http://www.kalachuvadu.com/issue-105/page67.asp 

http://jeyamohan.in/?p=577

.http://www.thinnai.com/?module=displaystory&story_id=60907167&format=htm

.http://www.kalachuvadu.com/issue-115/page44.asp.

--------------------------------------------------------------------------

தமிழ்த்துளி தேவா.

----------------------------------------------------------------------------

இந்தக் கட்டுரை வலைக் கவிஞர்களை சென்றடைய தமிழ்மணம்,தமிலிஷில் வாக்கிடவும்.

-------------------------------------------------------------------------

Saturday 18 July 2009

செந்தழல் ரவிக்கும்,வசந்துக்கும் கண்டனம்!!

ஏங்க இந்த செந்தழல் ரவி இப்படி பண்ணிக்கிட்டே இருப்பார். எல்லாம் பார்த்துக்கிட்டே இருப்பீங்களா? ஒருத்தராவது என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா? இம்சையைக் கூட்டுவதே வேலைங்கிறார்.

அந்த இம்சை என்னையும் தாக்கிவிட்டதே! ஆமாங்க! செந்தழல் குடுத்த வலையுலக சுவாரசியமான பதிவர் விருது வசந்த் மூலமா என்னைத்தாக்கி இரண்டு நாளாகுது...உடனடியா பதிவு போடமுடியாம நம்ம போன பதிவுக்கு

காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16
வழிமுறைகள்

பின்னூட்டமாத்தாக்கிவிட்டார்கள் மக்கள்!! இதில் அன்புத்தம்பி பிரியமுடன் வசந்த் 9 பின்னூட்டம் போட்டு விட்டார். நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் போடாம ஏமாத்தியிருக்கேன். ஆனா மக்கள் தொடர்ந்து பின்னூட்டமடித்ததால் நாமளும் சேர்ந்து ஒரு 110 பின்னூட்ட்ங்களுடன் நிறுத்திக்கொண்டோம்.

விருது கொடுத்து வாங்கிக்கொண்ட எல்லோரும் பதிவு போட்டுவிட்டார்கள். நான் தாமதமாகப் போடுவதற்கு தம்பி வசந்த் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.

இந்த விருதை ஆரம்பித்தவர் செந்தழல் ரவி!!தனித்திரு விழித்திரு பசித்திரு! என்ற வலைத்தளம் இவருடையது.சிறுகதைகளைப் பிரித்து மேய்வார் இவருடைய தளம் காண்க. http://tvpravi.blogspot.com/

இவருடைய இன்னொரு தளம் இருக்கு! இதில் செந்தழல் ரவி இம்சையைக்கூட்டுவதே நோக்கம் என்று  imsai.blogspot.com ல் இம்சிக்கிறார். இடுகைகள் படிக்க:

இந்த விருதை ஆரம்பித்து ஞாயிற்றுக் கிழமையும் உட்கார்ந்து பதிவு எழுத காரணமாக இருந்த ரவிக்கு..............................!!!

இந்த விருது தந்த பிரியமுடன் வசந்த் சாதாரண ஆள் இல்லை. கண் மூடிக் கண் திறப்பதற்குள் பதிவு போட்டு விடும் அசகாய சூரன்[DSC00931.JPG]!

http://priyamudanvasanth.blogspot.com/ இவருடைய சமீபப் படைப்புகளைப் படியுங்கள்!!

வசந்த் கொடுத்துவிட்டார். யாருக்குக் கொடுப்பது? ஏகப்பட்ட சுவாரசியமான பதிவர்கள் கொட்டிக்கிடக்கும் வலையுலகில் நான் யாரைத் தெர்ந்தெடுப்பேன்? எனினும் இது அன்பால் இயங்கும் உலகம். ஆகவே நான் கொடுக்காவிட்டாலும் நான் கொடுக்கும் ஆறு நபர்கள் அவர்களுக்குத்தருவார்கள்!! 

1.வேத்தியன் -http://jsprasu.blogspot.com/ பழகுவதற்கு இனிய நபர். ஆர்சனெல் கால்பந்துக்குழுவின் தீராக் காதலர்! தற்போது படிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். கோவையில் I.T.படிக்கிறார். இவருடைய தளம் சென்று இவர் பதிவுகள் பாருங்கள்!!

2.http://aammaappa.blogspot.com/அம்மா அப்பா என்று பிளாகில் எழுதிவரும் ஆ.ஞானசேகரன்!

19-06-2009+new.jpg (1155×185)

சிங்கப்பூரில் வேலை செய்தாலும் கிராமத்து மண் வாசம் போகாதவர்.

3. http://gunathamizh.blogspot.com [55.bmp]என்ற பதிவில் எழுதும் முனைவர்.குணா. ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடன் அகத்திணையும்,புறத்தினையும் கலந்து அமுதூட்டுபவர்.

4..http://sollarasan.blogspot.com/ [20080808_099010702845_MED.JPG]சொல்லரசன்! அருமையான விசயங்கள்  மட்டுமே பதிவிடுபவர். பனியன் ஏன் போட்டு இருக்கிறார் என்றால்......... ஆம் திருப்பூரில் பனியன் விற்கிறார். நமக்கு இல்லை.. வெளிநாட்டுக்கு மட்டும்...!!!

5.பித்தன்.http://paarvaigalpalavitham.blogspot.com/.பித்தன் இரண்டு வலைத்தளம் வைத்திருக்கிறார். தொடர்வண்டியில்http://maargalithingal.blogspot.com/ஒரு தொடர்கதை என்று பயணங்கள் பற்றி எழுதுகிறார்.

6.ஹரிணிஅம்மாhttp://www.hariniamma.blogspot.com/. இவரைப் பெரும்பாலும் தெரிந்தவர் குறைவு. நல்ல கவிதை எழுதக்கூடியவர். மீண்டும் இவரை மீண்டும் எழுத வைக்கவே இந்த விருது.

ஆறு பேர் சொல்லியாச்சு. ஆளைவிடுங்கப்பா. இதை எழுத வைத்த ரவிக்கும்,வசந்துக்கும் இனிய கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்த்துளி.

தேவா.

Friday 17 July 2009

காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்!

அன்பின் வலை மக்களே!! ஒவ்வொருமுறை நான் கட்டுரை எழுதும் போதும் “கல்யாணம் ஆகாத எங்களுக்கு எழுதுங்க!!” என்று கேட்கும் காதல் கஸ்டமர்(கஷ்டமர்?)களுக்கு இந்தப் பதிவு.

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!  அதில் சாதிப்பது எப்படி? அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.

1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!

3.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

5.அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.

6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

7.தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

8.கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

9.கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள்  காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!

11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!

12.அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!

13.அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..

15.அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். 

16.இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

மேலே சொன்னதெல்லாம் முதல் சந்திப்புக்குத்தான். எனக்குத் தெரிந்தவை, படித்தவற்றைத் தொகுத்துள்ளேன். இன்னும் விசயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும்!!

தமிழ்த்துளி

தேவா.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday 15 July 2009

15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை!

மேரிலாண்ட்டைச் சேர்ந்த 15 வயது டேனியல் ப்ளாக் என்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.பொதுவாக 15 வயதினருக்கு ஆயுள்தண்டணை வழங்கப்படுவதில்லை.

15 வயதே ஆனதால் அவருக்கு கொலைக்குற்றம் சுமத்தப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் தன் 19 வயது நண்பர் அலெக் ஸ்காட் எகெர் என்ற மாணவனிடம் தன் தந்தை தன்னைக் கொடுமைப் படுத்தியதாகவும் அவரைக் கவனிக்கும் படியும் கூறியுள்ளார். ஆயின் அவருடைய நண்பர் இவர் தந்தையின் உடலில் பல இடங்களில் குத்தியதில் அவர் இறந்துவிட்டார்(நவம்பர் 8 2008).  வாழ வேண்டிய வயதில் இவருடைய தந்தையின் முறையற்ற செயல் இவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இந்தக்கட்டுரையை முழுதும் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களைக் கூறவும்.

அவருடைய மைஸ்பேஸ் தளத்தில் சில சுவாரசியமான பதிவுகள் உள்ளன!!

எப்படி வாழவேண்டும் என்ற அவரின் சிறு கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”The only thing left is the need for vengeance against those who cause pain, sorrow.People get away with things they should never have done yet no one punishes them. Killers, child molesters, rapists, wife beaters, etc. So the question I ask is this. Is it wrong to extract vengeance on those who deserve it, in defense and revenge for those who cannot protect themselfs. Because in this world of unjust ignorance you are the only one who will stand up for the those who need help..

அவர் இந்த வருடம் மார்ச் மாதம்  மைஸ்பேஸில் ”பாண்ட்எய்ட்” குழுவினரால் எழுதப்பட்ட பாடலைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பாடலில் அவருடைய உணர்வுகள் தெரிகிற்து..

Harsh words & violent blows
Hidden secrets nobody knows
Eyes are open, hands are fisted
Deep inside I'm warped & twisted
So many tricks & so many lies
Too many whens & too many whys
Nobody's special, nobody's gifted
I'm just me, warped & twisted
Sleeping awake & choking on a dream
Listening loudly to a silent scream
Call my mind, the number's unlisted
Lost in someone so warped & twisted
On my knees, alive but dead
Look at the invisible blood I've bled
I'm not gone, my mind has drifted
Don't expect much, I'm warped & twisted
Burnt out, wasted, empty, & hollow
Today's just yesterday's tomorrow
The sun died out, the ashes sifted
I'm still here, warped & twisted

அவருடைய இன்னொரு மார்ச் பதிவில் அமெரிக்கர்களின் மனநிலை பற்றிக்குறிப்பிடுகிறார்..

I bet at least three fourths of amercians don't know that everyday people try to kill themselves because of depression. Not everyone has a perfect life like people think. Most suicidal attempts are attempted by teens. Most teens that attempt suicide say that they did it because they were trying to escape from a situation that seemed impossible to deal with or get relief from really bad thoughts or feelings..

இவர் தன் தந்தையைக்கொல்லச்சொல்லவில்லை என்கிறார். அப்படியாயின் அவருடைய நண்பர் தன்னிச்சையாக எடுத்த முடிவா இது? உண்மையில் இந்தப் பெண் தண்டிக்கப்படவேண்டியவரா?போன்ற நிறையக்கேள்விகள் தொக்கி நிற்கின்றன. நீங்கள் இன்னும் படிப்பதற்கு கீழே சுட்டிகள் தந்துள்ளேன். இந்தப் பெண்ணின் மைஸ்பேஸ் தளத்தையும் பாருங்கள்!! 

http://www.truecrimereport.com/psychogirl1993b.pdf

http://www.truecrimereport.com/911r3ap3r911.pdf

http://www.dailytelegraph.com.au/news/danielle-black-15-in-court-over-fathers-killing/story-e6freuy9-1225717549028.

தமிழ்த்துளி தேவா.

உங்கள் கருத்துக்களை இடதுபுறம் உள்ள வாக்குப்பெட்டியிலும் தெரிவிக்கலாம்!!

ஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா!-புகைப்படங்களுடன்!

அன்பின் வலை மக்களே!

சமீபத்தில் என் ஊர்த் திருவிழாவுக்குச்சென்று இருந்தேன். பொதுவாக என் ஊரில் முதல் நாள் தேரோட்டமும், மறுநாள் மஞ்சுவிரட்டும் நடப்பது வழக்கம்.

முதல் நால் தேரோட்டத்துக்கு கட்டாயம் சென்று வடம் பிடித்து குடிதண்ணீர் ஊரணியை சுற்றி வந்து மறுபடியும் தேர் நிலை குத்துவதுவரை தேரை இழுக்கும் கூட்டத்தில் நானும் இருப்பது வழ்க்கம்!

தேரின் சக்கரங்களில் திருப்பும் வசதிகள் இருக்காது. திருப்புவது என்றால் கட்டைகளை தேரோடும்போது சக்கரத்தில் கொடுத்து நெம்பித்தான் திருப்புவார்கள். ஆகையினால் திருப்புவது கடினமான செயலாக இருக்கும்!

புகைப்படங்களை கீழே தந்துள்ளேன்! கிளிக் செய்து பெரிதாக்கிப்பார்க்கவும்!!

 

 Image0312 Image0325

Image0307Image0313  

.Image0325Image0337 Image0306  

Image0336

Image0346Image0343 Image0342

மாலை 6 மணிக்கு ஆரம்பித்த தேரோட்டம் இழுத்து சுற்றி வந்து முடிக்கும்போது சற்றே இருள் சூழ ஆரம்பித்து விட்டது!!!

தமிழ்த்துளி தேவா.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory