Friday, 17 July 2009

காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்!

அன்பின் வலை மக்களே!! ஒவ்வொருமுறை நான் கட்டுரை எழுதும் போதும் “கல்யாணம் ஆகாத எங்களுக்கு எழுதுங்க!!” என்று கேட்கும் காதல் கஸ்டமர்(கஷ்டமர்?)களுக்கு இந்தப் பதிவு.

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும். முதல் சந்திப்பு!  அதில் சாதிப்பது எப்படி? அதைப் பற்றி கொஞ்சம் ஆராய்ந்து இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.

1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!

3.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

5.அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.

6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

7.தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

8.கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

9.கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவரசியமான செய்திபற்றி உங்கள்  காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

10. முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்றுவிட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!

11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!

12.அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேச நான் உங்களுக்கு சொல்லித்தரவேண்டுமா என்ன!!

13.அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

14.அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் .. ஏன் வளர்க்கவில்லை என்று கேட்டு பேச்சை வளர்க்கலாம்..

15.அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். 

16.இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விசய்ங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது!!

மேலே சொன்னதெல்லாம் முதல் சந்திப்புக்குத்தான். எனக்குத் தெரிந்தவை, படித்தவற்றைத் தொகுத்துள்ளேன். இன்னும் விசயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும்!!

தமிழ்த்துளி

தேவா.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

112 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!//

பரிட்சைக்கு போற மாதிரின்னு சொல்லுங்க சார்......

Thamiz Priyan said...

தாவணிக் கனவுகள் எல்லாம் கலர் கலரா வருதுங்க.. ;-))

ப்ரியமுடன் வசந்த் said...

//2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!//

அப்பிடி சொல்லலைனாத்தேன்...ஆத்தாக்கு கோவம் வந்து பேயாட்டம் ஆடிடுமே......

Thamiz Priyan said...

///4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.///
அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே? முன்னாடியேவும் அவங்க தான் பேசனுமா? அவ்வ்வ்வ்வ்

ப்ரியமுடன் வசந்த் said...

//3.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.//

எப்பிடி சார் அடிவாங்கி விடுறதா உத்தேசமா?

ப்ரியமுடன் வசந்த் said...

//4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.//

எப்பவுமே அவங்க தான ஜாஸ்தி பேசுறாங்க......

பீர் | Peer said...

//“கல்யாணம் ஆகாத எங்களுக்கு எழுதுங்க!!”//

இது கல்யாணம் ஆகாதவங்களுக்கா? இது நம்ம ஏரியா இல்ல, நான் வர்ட்டா சார்............

ப்ரியமுடன் வசந்த் said...

//6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!//

எப்பவுமே அதத்தான சார் செய்யுறோம்..

ப்ரியமுடன் வசந்த் said...

//7.தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.//

ட்ரை பண்றோம் சார்......

ப்ரியமுடன் வசந்த் said...

//8.கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.//

ரைட்டு.......

ப்ரியமுடன் வசந்த் said...

//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்.......

தினேஷ் said...

நமக்கு இது தேவ இல்ல , அல்ரடி தாண்டியாச்சு..

வர்ரேண்ணே..

ப்ரியமுடன் வசந்த் said...

மொத்தமா இந்த வரிகள் எல்லாம் எல்லா இளைஞர்களும் கண்டிப்பா தங்களோட பாக்கெட்டில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டியவை........

தேவன் மாயம் said...

//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்...///

ஆகா! வசந்து அலைஞ்சுதானே ஆகணும்!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!//

பரிட்சைக்கு போற மாதிரின்னு சொல்லுங்க சார்....../

அதே! அதேதான்!

தேவன் மாயம் said...

Blogger தமிழ் பிரியன் said...

தாவணிக் கனவுகள் எல்லாம் கலர் கலரா வருதுங்க.. ;-))//

கனவுகளை எங்களுக்கும் சொல்லுங்க!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது!!//

அப்பிடி சொல்லலைனாத்தேன்...ஆத்தாக்கு கோவம் வந்து பேயாட்டம் ஆடிடுமே....///

இதுக்கு நம்ம பூசாரியா மாறனுமே!!

தேவன் மாயம் said...

Blogger தமிழ் பிரியன் said...

///4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.///
அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தானே? முன்னாடியேவும் அவங்க தான் பேசனுமா? அவ்வ்வ்வ்வ்///

நிறையப் பேர் அமைதியாயிடுறாங்களே பார்க்கலை நீங்க!!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//3.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.//

எப்பிடி சார் அடிவாங்கி விடுறதா உத்தேசமா?///

அடி ஒரு குட் டச்சுங்கோ!!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.//

எப்பவுமே அவங்க தான ஜாஸ்தி பேசுறாங்க......//

எங்கேயும் பேசுரவங்க இங்கேயும் பேசட்டுமே!

தேவன் மாயம் said...

Blogger பீர் | Peer said...

//“கல்யாணம் ஆகாத எங்களுக்கு எழுதுங்க!!”//

இது கல்யாணம் ஆகாதவங்களுக்கா? இது நம்ம ஏரியா இல்ல, நான் வர்ட்டா சார்............///

ஓகே!!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!//

எப்பவுமே அதத்தான சார் செய்யுறோம்..///
அதுதான் நல்லது!

17 July 2009 09:02

அப்துல்மாலிக் said...

தேவா சார்
இந்த பதிவை ஒரு 5 வருசத்துக்கு முன்னர் போட்டிருந்தீங்கனா யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்

இருந்தாலும் படித்தேன், அனைத்தும் உண்மையே

சென்ஷி said...

ஆஹா.. அண்ணா.. தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க :))

சென்ஷி said...

//நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும்.//

அய்யா.. எங்களை மாதிரி காதலிக்க பொண்ணு கிடைக்காதவங்களுக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தா கொடுங்க சாமி! :)

சென்ஷி said...

//முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! //

பிட் அடிக்க வுடுவாங்களா?!

சென்ஷி said...

//6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!//

பர்ஸ் கிழிஞ்சுடும் :)

சென்ஷி said...

டாக்டர் சார்! பதிவு செம்ம கலக்கல்.. அதான் ஜாலியா கும்மிட்டேன். நோ டென்சன். :))

சென்ஷி said...

// தமிழ் பிரியன் said...

தாவணிக் கனவுகள் எல்லாம் கலர் கலரா வருதுங்க.. ;-))//

அண்ணிக்கு தெரிஞ்சது பேண்டு கிழிஞ்சுடும் அண்ணே :)

Unknown said...

// காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்! //சூரியா மாதிரி கிட்டார கையில வெச்சுபோட்டு .... " நெசுக்குள் பெய்திடும் மாமழை ......" ன்னு பாடுனா ...... அஞ்சோ.... பத்தோ.... போட்டுட்டு போவா.....!! அதைய வெச்சுகிட்டு நாயர் கடையில டீ வேணுமின்னா வாங்கி குடிக்கலாம்....!!!

// முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! //

எத்தனமணி நேரம் பருச்சைங்ணா ....???

// முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். //தயாரா வேணுமின்னா இருக்கலாமுங்......!!!! ஆனா தெளிவா இருக்கமுடியாதுங்நோவ்....!!!
// இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! //நெம்ப கஷ்டமுங்ணா.... !!! பிட்டு வேணுமின்னா தயாரிக்கலாமுங் ......// சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்! //சுவையானா......?? அல்வா ' வதானுங் சொல்ல்ட்ரீங்கோ......??
// 2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். //இந்த ஆள பத்திதான் பேசனுமுங்களா .....??? இல்ல வேற ஆள பத்தியும் பேசலாமுங்களா....??// அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) //

ஓஒ.....!!! நீங்க பரமசிவங் குடும்பம் மாதிரி பிரச்சனைய உண்டு பண்நீருவிங்கலாட்டோ ....!!!!!// அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். //

அப்புடீனா... " கோலங்கள் " சீரியல பத்தி கேக்கலாமுங்களா.....??
// அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். //

சாப்பிங் போலாமா....?? சினிமா போலாமா....? உனக்கு கிப்ட் வாங்கித் தருட்டுமா...???
// அவர்களைப் பாராட்டுங்கள். //

" நா எவ்வளோ மொக்கைய போட்டாலும் ... கேக்குரமா.... !!
நீ ரொம்போ நல்லவ...!!! "

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!!!!!// கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். //ஆனா.... பயந்து ... ஓடீரக் கூடாது..... !!!!!
// கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். //தினப் ப்ளவர் - சல்பா பேட்டையில் ... புதிய முறையில் சால்னா விக்கராங்கோ...

தின மெயில் - நடிகை குசலாம்பாள் ... தோட்டகாரனுடன் ... காம்பவுண்டு ஏறி குதித்து தப்பி ஓட்டம் .....!!

தினக ஓட்டம் - நம்ப மெர்ஸ்லுகுப்பம் முன்சாமி .... நம்ம கட்சி
கொ.ப.செ 'வா ஜாயின்ட் ஆயிட்டாரு.......
இந்த செய்தியவா.....???

// அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். ///அப்பத்தான் ... ரெண்டுபேரும் எஸ்கேப் ஆகுற சமயத்துல ... நெம்ப வசதியா இருக்கும்.....// அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! //ஜான் அப்ரகாம் மாதிரியா .....??
// .அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். //
எதுக்கு ... அடிக்கடி... அதுங்குளுக்கு பிஸ்கட்டு வாகிப் போடுரதுக்கா .....??// .அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். //ஆமாங்கோவ்....!! அடிக்க எத்தன ஆள் வரும்..... எத்தன கம்பு.. அருவா வருமின்னு முன்னாடியே ... கணக்கு போட்டு வெச்சுக்கோங்கோவ் .... !!
// மேலே சொன்னதெல்லாம் முதல் சந்திப்புக்குத்தான். எனக்குத் தெரிந்தவை, படித்தவற்றைத் தொகுத்துள்ளேன். இன்னும் விசயம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் எழுதவும்!! //அண்ணா.... எழுதீட்டேனுங்.....!!!!

போயிட்டு வாரனுங்......!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

அனுபவம் பேசுது போல‌

jothi said...

எல்லாம் முடிஞ்சு போச்சு,.. இப்போதைக்கு பார்வார்டு மட்டும்தான் பண்ண முடியும். வேறு எதுவும் பண்ணினால் மனைவி உண்டு/இல்லைனு ஆக்கிருவா,..

கல்யாணம் ஆனவங்களுக்கு பதிவு எல்லாம் இல்லையா??

ஹேமா said...

தேவா அசத்தல் பதிவு.நான் கொஞ்சம் பிரதிகள் எடுத்து விநியோகிக்கப்போகிறேன் என் சிநேகிதர்களுக்கு.அனுமதி வேணும்.

ஊர்சுற்றி said...

நாங்கல்லாம் இதுல ஏற்கெனவே பழம்தின்னு கொட்டை போட்டாச்சு.... இருந்தாலும் இந்த விசயங்களை திரும்பவும் படிக்கும்போது நல்லாத்தான் இருக்குது.

நிலாமதி said...

இந்த கால பசங்க பொண்ணுங்க ரொம்ப ஒரு படி மேலே போயிடாங்க. எதுக்கும் மற்றவங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவுக்கு நன்றி

அ.மு.செய்யது said...

நல்ல யோசனைகள் தேவா !!!

ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க பேசுதலை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

முதல் சந்திப்பு என்பதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.( பேச்சை தவிர்த்து )

முடி வெட்டல்,சவரம் செய்தல்,நகம் வெட்டல்
பெண்களுக்கு பிடித்த ஃபெர்ஃபியூம் தேர்ந்தெடுத்தல் ( இவையெல்லாம் கூட‌ அட‌க்க‌ம் )

//முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.//

நீங்கள் சந்திக்கப் போவது சக வலைபதிவரை அல்ல...உங்கள் காதலியை..

எனவே,காதலி என்றாகி விட்ட பிறகு, செயற்கையான கடலை தத்துவம் இங்கு ஒத்து வராது.

மன்னித்து விடுங்கள்!!! இது ஒரு அனுபவ பதிவு என்று எனக்கு தோணவில்லை.

Admin said...

நன்றி நண்பரே எங்களைப்போன்றவர்களுக்கு எதிர் காலத்தில் பயன்படுமல்லவா...

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
தேவா சார்
இந்த பதிவை ஒரு 5 வருசத்துக்கு முன்னர் போட்டிருந்தீங்கனா யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்

இருந்தாலும் படித்தேன், அனைத்தும் உண்மையே
///

நீங்க அனுபவஸ்தராச்சே!

Anbu said...

கலக்கல் பதிவு சார்...

தேவன் மாயம் said...

சென்ஷி said...
==============
ஆஹா.. அண்ணா.. தெய்வமே.. நீங்க எங்கயோ போயிட்டீங்க :))//

உங்க நெஞ்சுக்கு அருகில்தான் இருக்கேன்

17 July 2009 10:57

சென்ஷி said...
=============
//நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழப்பமாகத்தான் இருக்கும்.//

அய்யா.. எங்களை மாதிரி காதலிக்க பொண்ணு கிடைக்காதவங்களுக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தா கொடுங்க சாமி! :)///

கொடுப்போம்!

17 July 2009 10:58

சென்ஷி said..
=============.
//முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! //

பிட் அடிக்க வுடுவாங்களா?!//

எழுதி வச்சு அடிக்கலாம்..........

17 July 2009 11:00

சென்ஷி said..
=============.
//6.அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!//

பர்ஸ் கிழிஞ்சுடும் :)//

ஏற்கெனவே என்ன இருந்துச்சு அதுக்குள்ளே?

17 July 2009 11:01

சென்ஷி said..
==========.
டாக்டர் சார்! பதிவு செம்ம கலக்கல்.. அதான் ஜாலியா கும்மிட்டேன். நோ டென்சன். :))//

நீங்க கும்மத்தானே இடுகையே!
17 July 2009 11:02

சென்ஷி said...
===========
// தமிழ் பிரியன் said...

தாவணிக் கனவுகள் எல்லாம் கலர் கலரா வருதுங்க.. ;-))//

அண்ணிக்கு தெரிஞ்சது பேண்டு கிழிஞ்சுடும் அண்ணே :)
//
இது வேறயா!!
17 July 2009 11:04
----------------------------------

வழிப்போக்கன் said...

அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் ..//

நாமலே நயாகிடலாமுன்னா???
:)))

Anonymous said...

சார் ஏன் இந்த ஓரவஞ்சனை எப்பவுமே ஆண்களுக்கு மட்டுமே..சிறப்பு பதிவு....

Anonymous said...

பிரியமுடன்.........வசந்த் said...
//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்.......

என்ன வசந்த் அனுபவமா?

Anonymous said...

பிரியமுடன்.........வசந்த் said...
//1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!//

பரிட்சைக்கு போற மாதிரின்னு சொல்லுங்க சார்......

எப்படியும் பரிட்சைக்கு போக மாட்டீங்க அட்லீஸ்ட் இங்கனா?

Anonymous said...

பிரியமுடன்.........வசந்த் said...
//4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.//

எப்பவுமே அவங்க தான ஜாஸ்தி பேசுறாங்க......

நீங்க தான சொல்றீங்க நீ பேசிகிட்டேயிருந்தா கேட்டுகிட்டேயிருக்கனும் போல இருக்குன்னு.....

Anonymous said...

அபுஅஃப்ஸர் said...
தேவா சார்
இந்த பதிவை ஒரு 5 வருசத்துக்கு முன்னர் போட்டிருந்தீங்கனா யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்

இருந்தாலும் படித்தேன், அனைத்தும் உண்மையே

இப்ப மட்டும் என்ன அபு இதையே இன்னும் வீட்டில் மெயிண்டெயின் பண்ணுங்கோ உபசரிப்பு அதிகமாகும்ல....

வந்தியத்தேவன் said...

காதலிப்பவர்களுக்கு மட்டும் என்ற டிஸ்கி போட்டிருக்கவேண்டும். மற்றவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால் செருப்படி நிச்ச்யம். நல்ல பதிவு முயற்சிசெய்தவர்கள் விளைவுகள் பற்றிச் சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

கிரி said...

எனக்கு வாய்ப்பு கடந்து போய் விட்டது :-((

சொல்லரசன் said...

இது நீங்க சந்தித்த முதல் காதலின்போது ஏற்பட்ட அனுபவமா? அல்லது மருத்துவ படிப்பின் இறுதியாண்டு காதலின் அனுபவமா?
எப்படியோ நம்ம சிவகாசி அன்புக்கு நல்ல யோசனை சொல்லியிருக்கீங்கோ

குடந்தை அன்புமணி said...

இப்படி ஒரு அண்ணன் இருக்கிறது முன்னமே தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணியிருக்கலாம்னு தோணுது. காதலிக்கும்போதைவிட இப்பதான் அதிகம் (கொஞ்சி) பேசுறேன்னு என் மனைவி சொல்லுறா...

சொல்லரசன் said...

//அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!//

ஆமாங்க முதல் சந்திப்புக்கு அப்புறம் அவர்களுக்கு வாங்கிகொடுபதற்கே பணம்இருக்காது,அதற்குபின் புதுசு எல்லாம் நினைச்சு பார்க்கமுடியுமா?

சொல்லரசன் said...

குடந்தை அன்புமணி said...
இப்படி ஒரு அண்ணன் இருக்கிறது முன்னமே தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணியிருக்கலாம்னு தோணுது. காதலிக்கும்போதைவிட இப்பதான் அதிகம் (கொஞ்சி) பேசுறேன்னு என் மனைவி சொல்லுறாஅடி உதை உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்க அன்பு மணி

Suresh Kumar said...

நீங்க பதினாறு ஐடியா சொன்னீங்க இத படிச்சிட்டு ஆளாளுக்கு கிளம்பீட்டாங்களே சார் ........................

அருமையான ஐடியாக்கள் அடுத்த பிகர கரெக்ட் பண்ணும் பொது இதையே பாலோ பண்ணுறேன்

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...

// தமிழ் பிரியன் said...

தாவணிக் கனவுகள் எல்லாம் கலர் கலரா வருதுங்க.. ;-))//

அண்ணிக்கு தெரிஞ்சது பேண்டு கிழிஞ்சுடும் அண்ணே :)
/

ரிப்பீட்டேய்
:)))

மங்களூர் சிவா said...

/
கிரி said...

எனக்கு வாய்ப்பு கடந்து போய் விட்டது :-((
/

கிரி அளுவாதீங்க நம்மல்லாம் வேணா இன்னொருக்கா ட்ரை பண்ணலாமே!
:)))))))))))))))

மங்களூர் சிவா said...

/
சென்ஷி said...
அய்யா.. எங்களை மாதிரி காதலிக்க பொண்ணு கிடைக்காதவங்களுக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தா கொடுங்க சாமி! :)
/

சென்ஷி
நீங்கல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
அப்பிடியே ஜாலியா இருங்க.

மங்களூர் சிவா said...

/
பிரியமுடன்.........வசந்த் said...
//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்.......
/

ஹா ஹா
:)))

S.A. நவாஸுதீன் said...

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. ஆனா இது நமக்கில்ல. அபு அஃப்ஸர் சொன்னமாதிரி ஒரு ஏழு வருஷதுக்கு முன்னாடி வந்திருக்கணும். ஹ்ம்ம் என்ன பண்ண.

Mohan said...

எப்படிங்க?.... இப்படி பின்றீங்க?.....

தேவன் மாயம் said...

//
= லவ்டேல் மேடி said...
====================/
/ காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்! /

சூரியா மாதிரி கிட்டார கையில வெச்சுபோட்டு .... " நெசுக்குள் பெய்திடும் மாமழை ......" ன்னு பாடுனா ...... அஞ்சோ.... பத்தோ.... போட்டுட்டு போவா.....!! அதைய வெச்சுகிட்டு நாயர் கடையில டீ வேணுமின்னா வாங்கி குடிக்கலாம்....!!!///

காதலிக்க அலையிறத விட் டீ பேட்டரா!! அனுபவம்!!!..

--------------------

// முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! //

எத்தனமணி நேரம் பருச்சைங்ணா ....??? //

கீப் இட் ஷார்ட்!!
-----------------------

// முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். //தயாரா வேணுமின்னா இருக்கலாமுங்......!!!! ஆனா தெளிவா இருக்கமுடியாதுங்நோவ்....!!!//

மயக்கத்திலே இருப்பீரோ!!!
--------------------------
// இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! //நெம்ப கஷ்டமுங்ணா.... !!! பிட்டு வேணுமின்னா தயாரிக்கலாமுங் .....///

மாட்டாம அடிங்க...
-----------------------------.

// சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்! //சுவையானா......?? அல்வா ' வதானுங் சொல்ல்ட்ரீங்கோ......??///

அல்வா குடுத்தா வாங்கிக்க வேண்டியதுதான்!!
-----------------------------
// 2.மிக எளிமையான வழி என்னவென்றால் உங்க ஆளைப்பற்றியே அதிகம் பேசுங்கள். //இந்த ஆள பத்திதான் பேசனுமுங்களா .....??? இல்ல வேற ஆள பத்தியும் பேசலாமுங்களா....?? ///

பேசலாம்! கேக்க ஆள் இருக்காது!!

----------------------------// அவர்களைத்தான் இந்த பூமியே சுத்திவருது( நீங்க சுத்தி வருகிறீர்கள்!!!) //

ஓஒ.....!!! நீங்க பரமசிவங் குடும்பம் மாதிரி பிரச்சனைய உண்டு பண்நீருவிங்கலாட்டோ ....!!!!!///

ஒராள் சுத்துங்கப்பு!!!
----------------------------// அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். //

அப்புடீனா... " கோலங்கள் " சீரியல பத்தி கேக்கலாமுங்களா.....??///

கோலமே போடுங்க புள்ள!!!

-----------------------------
// அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விசயங்களைப் பேசுங்கள். //

சாப்பிங் போலாமா....?? சினிமா போலாமா....? உனக்கு கிப்ட் வாங்கித் தருட்டுமா...???///

எனக்கு எதுக்குங்க இதெல்லாம்!!இஃகி!இஃகீ

-----------------------------
// அவர்களைப் பாராட்டுங்கள். //

" நா எவ்வளோ மொக்கைய போட்டாலும் ... கேக்குரமா.... !!
நீ ரொம்போ நல்லவ...!!! "

ஆஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!!!!!
///

மொக்கை போட்டா மொட்டைதான்!!

----------------------

தேவன் மாயம் said...

லவ்டேல் மேடி said...

// கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். //ஆனா.... பயந்து ... ஓடீரக் கூடாது..... !!!!!
///

ஏன் முண்டக்கண்ணா?

------------------------------// கொஞ்சம் அன்றாடச்செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். //தினப் ப்ளவர் - சல்பா பேட்டையில் ... புதிய முறையில் சால்னா விக்கராங்கோ...

தின மெயில் - நடிகை குசலாம்பாள் ... தோட்டகாரனுடன் ... காம்பவுண்டு ஏறி குதித்து தப்பி ஓட்டம் .....!!

தினக ஓட்டம் - நம்ப மெர்ஸ்லுகுப்பம் முன்சாமி .... நம்ம கட்சி
கொ.ப.செ 'வா ஜாயின்ட் ஆயிட்டாரு.......
இந்த செய்தியவா.....???///

உங்காளு பேட்டைன்னா இதெல்லாம் வோணும்!!!

-------------------------------

// அவள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை,கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளார்கள் என்று நாசூக்காக கவனியுங்கள். ///அப்பத்தான் ... ரெண்டுபேரும் எஸ்கேப் ஆகுற சமயத்துல ... நெம்ப வசதியா இருக்கும்.....
///

இங்கேயே தொழிலா.............

----------------------------

// அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! //ஜான் அப்ரகாம் மாதிரியா .....??
//

தியாகராஜ பாகவதர் மாதிரி!!

-----------------------------// .அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். //
எதுக்கு ... அடிக்கடி... அதுங்குளுக்கு பிஸ்கட்டு வாகிப் போடுரதுக்கா .....??///

இல்லன்னா தொப்புள் ஊசி போடுவாய்ங்க மக்கா!!

-------------------------// .அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். //ஆமாங்கோவ்....!! அடிக்க எத்தன ஆள் வரும்..... எத்தன கம்பு.. அருவா வருமின்னு முன்னாடியே ... கணக்கு போட்டு வெச்சுக்கோங்கோவ் .... !!///

தப்பிச்சு ஓட சந்தெல்லாம் பார்த்துவச்சுக்கங்க!!!

-----------------------------_________________________________

17 July 2009 11:16

தேவன் மாயம் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அனுபவம் பேசுது போல‌

17 July 2009 11:28///

ஏன் சாமி!! எதெழுதினாலும் எம்மேலேயே பாயுறீயளே நாயமா!!

தேவன் மாயம் said...

jothi said...
எல்லாம் முடிஞ்சு போச்சு,.. இப்போதைக்கு பார்வார்டு மட்டும்தான் பண்ண முடியும். வேறு எதுவும் பண்ணினால் மனைவி உண்டு/இல்லைனு ஆக்கிருவா,..

கல்யாணம் ஆனவங்களுக்கு பதிவு எல்லாம் இல்லையா??

17 July 2009 12:34///

என் பதிவில் பாதி கல்யாணமானவங்களுக்குத்தான்!!

தேவன் மாயம் said...

ஹேமா said...
தேவா அசத்தல் பதிவு.நான் கொஞ்சம் பிரதிகள் எடுத்து விநியோகிக்கப்போகிறேன் என் சிநேகிதர்களுக்கு.அனுமதி வேணும்.

17 July 2009 13:16///

செய்யுங்க!! நம்ம பிளாகுக்கும் வரச்சொல்லுங்க!!

தேவன் மாயம் said...

ஊர்சுற்றி said...
நாங்கல்லாம் இதுல ஏற்கெனவே பழம்தின்னு கொட்டை போட்டாச்சு.... இருந்தாலும் இந்த விசயங்களை திரும்பவும் படிக்கும்போது நல்லாத்தான் இருக்குது///

மீண்டும் படிங்க!

தேவன் மாயம் said...

நிலாமதி said...
இந்த கால பசங்க பொண்ணுங்க ரொம்ப ஒரு படி மேலே போயிடாங்க. எதுக்கும் மற்றவங்களுக்கு உதவியாய் இருக்கும். பதிவுக்கு நன்றி

17 July 2009 15:38///

பிறருக்காகத்தானே எல்லாம்!!!

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said...
நல்ல யோசனைகள் தேவா !!!

ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க பேசுதலை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

முதல் சந்திப்பு என்பதில் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.( பேச்சை தவிர்த்து )

முடி வெட்டல்,சவரம் செய்தல்,நகம் வெட்டல்
பெண்களுக்கு பிடித்த ஃபெர்ஃபியூம் தேர்ந்தெடுத்தல் ( இவையெல்லாம் கூட‌ அட‌க்க‌ம் )

//முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.//

நீங்கள் சந்திக்கப் போவது சக வலைபதிவரை அல்ல...உங்கள் காதலியை..

எனவே,காதலி என்றாகி விட்ட பிறகு, செயற்கையான கடலை தத்துவம் இங்கு ஒத்து வராது.

மன்னித்து விடுங்கள்!!! இது ஒரு அனுபவ பதிவு என்று எனக்கு தோணவில்லை.

17 July 2009 18:37//

இதுல இன்னும் ஏகப்பட்ட பதிவு போடலாம் செய்யது!!

எதுக்கு மன்னிபெல்லாம்!!

இஃகி!!இஃகி!!

தேவன் மாயம் said...

சந்ரு said...
நன்றி நண்பரே எங்களைப்போன்றவர்களுக்கு எதிர் காலத்தில் பயன்படுமல்லவா...

17 July 2009 18:54//

நல்லா உபயோகியுங்கள்.

தேவன் மாயம் said...

Anbu said...
கலக்கல் பதிவு சார்...

17 July 2009 19:57//

வாங்க அன்பு!!

தேவன் மாயம் said...

வழிப்போக்கன் said...
அவள் நாய்,பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்! ஒன்றும் வளர்க்கவில்லையென்றாலும் சரிதான் ..//

நாமலே நயாகிடலாமுன்னா???
:)))///

நாயாகவே மாறுவதா?
எங்கேயோ போயிட்ட தம்பி!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
சார் ஏன் இந்த ஓரவஞ்சனை எப்பவுமே ஆண்களுக்கு மட்டுமே..சிறப்பு பதிவு....

17 July 2009 20:52//

ஆண்கள்தானே அவஸ்தைப்படுவது!!

க.பாலாசி said...

//அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.//

சிறப்பம்சமா.. அவளோட அண்ணன்டையா?
போங்க சார். அந்த குடும்பத்தில அவள் பிறந்ததுதான் சார் சிறப்பு. சேற்றில் முளைத்த செந்தாமரை சார் அவள்.

தேவன் மாயம் said...

தமிழரசி said...
பிரியமுடன்.........வசந்த் said...
//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்.......

என்ன வசந்த் அனுபவமா?

17 July 2009 20:52///

அலையிறதுதான் நம்ம வேலையாச்சு!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
பிரியமுடன்.........வசந்த் said...
//1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து தயாராகவேண்டியது அவசியம்! சாதாரணமான கேள்விகளுக்கு சாதாரணமான பதில்கள் அவ்வளவு சுவையாக இருக்காது. சுவையான, தனித்தன்மையான பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!//

பரிட்சைக்கு போற மாதிரின்னு சொல்லுங்க சார்......

எப்படியும் பரிட்சைக்கு போக மாட்டீங்க அட்லீஸ்ட் இங்கனா?

17 July 2009 20:53//

இங்கே ஓரல் டெஸ்ட்தான்!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
பிரியமுடன்.........வசந்த் said...
//4.அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.//

எப்பவுமே அவங்க தான ஜாஸ்தி பேசுறாங்க......

நீங்க தான சொல்றீங்க நீ பேசிகிட்டேயிருந்தா கேட்டுகிட்டேயிருக்கனும் போல இருக்குன்னு.....

17 July 2009 20:54//

வாய்தவறி உளறுவதுதான்!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
அபுஅஃப்ஸர் said...
தேவா சார்
இந்த பதிவை ஒரு 5 வருசத்துக்கு முன்னர் போட்டிருந்தீங்கனா யூஸ்ஃபுல்லா இருந்திருக்கும்

இருந்தாலும் படித்தேன், அனைத்தும் உண்மையே

இப்ப மட்டும் என்ன அபு இதையே இன்னும் வீட்டில் மெயிண்டெயின் பண்ணுங்கோ உபசரிப்பு அதிகமாகும்ல....

17 July 2009 20:56//

இதுவும் சரிதான்!!

தேவன் மாயம் said...

வந்தியத்தேவன் said...
காதலிப்பவர்களுக்கு மட்டும் என்ற டிஸ்கி போட்டிருக்கவேண்டும். மற்றவர்கள் இந்த முறையைப் பின்பற்றினால் செருப்படி நிச்ச்யம். நல்ல பதிவு முயற்சிசெய்தவர்கள் விளைவுகள் பற்றிச் சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

17 July 2009 21:06///

வாய் தொறக்க மாட்டாங்க!!!

தேவன் மாயம் said...

கிரி said...
எனக்கு வாய்ப்பு கடந்து போய் விட்டது :-((

17 July 2009 21:42///

அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்!

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
இது நீங்க சந்தித்த முதல் காதலின்போது ஏற்பட்ட அனுபவமா? அல்லது மருத்துவ படிப்பின் இறுதியாண்டு காதலின் அனுபவமா?
எப்படியோ நம்ம சிவகாசி அன்புக்கு நல்ல யோசனை சொல்லியிருக்கீங்கோ

17 July 2009 21:45///

சிவகாசி அன்பு,தேனி சுந்தர், மேவி,பித்தன்@ வந்தியத்தேவன்,பாலகுமார், ஆதவா எல்லோருக்கும் சமர்ப்பணம்!!

தேவன் மாயம் said...

குடந்தை அன்புமணி said...
இப்படி ஒரு அண்ணன் இருக்கிறது முன்னமே தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணியிருக்கலாம்னு தோணுது. காதலிக்கும்போதைவிட இப்பதான் அதிகம் (கொஞ்சி) பேசுறேன்னு என் மனைவி சொல்லுறா.///

நம்ம டெக்னிக்கை உபயோகிங்க!!

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
//அதே போல் அப்போதயை பேசன் உடைக்கு மாறிவிடுங்கள்! பெண்களுக்கு நீட்டாக உடை அணிபவகளையே பிடிக்கும். அடிக்கடி குளிக்கவேண்டும். புதுப் புது சட்டைகளைப் போடவேண்டும். நல்ல செண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!//

ஆமாங்க முதல் சந்திப்புக்கு அப்புறம் அவர்களுக்கு வாங்கிகொடுபதற்கே பணம்இருக்காது,அதற்குபின் புதுசு எல்லாம் நினைச்சு பார்க்கமுடியுமா?///
ஆகா உங்க அனுபவம் சூப்பர்

தேவன் மாயம் said...

சொல்லரசன் said...
குடந்தை அன்புமணி said...
இப்படி ஒரு அண்ணன் இருக்கிறது முன்னமே தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் இம்ப்ரஸ் பண்ணியிருக்கலாம்னு தோணுது. காதலிக்கும்போதைவிட இப்பதான் அதிகம் (கொஞ்சி) பேசுறேன்னு என் மனைவி சொல்லுறா

அடி உதை உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்க அன்பு மணி

17 July 2009 21:57///

ரொம்பத் தைரியம் மக்கா!!

தேவன் மாயம் said...

Suresh Kumar said...
நீங்க பதினாறு ஐடியா சொன்னீங்க இத படிச்சிட்டு ஆளாளுக்கு கிளம்பீட்டாங்களே சார் ........................

அருமையான ஐடியாக்கள் அடுத்த பிகர கரெக்ட் பண்ணும் பொது இதையே பாலோ பண்ணுறேன்

17 July 2009 21:58.///

மொத பிகர் போணியாகலியா?

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
/
கிரி said...

எனக்கு வாய்ப்பு கடந்து போய் விட்டது :-((
/

கிரி அளுவாதீங்க நம்மல்லாம் வேணா இன்னொருக்கா ட்ரை பண்ணலாமே!
:)))))))))))))))

17 July 2009 22:18///

இன்னொரு சான்ஸ் கட்டாயம் உண்டு!!

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
/
சென்ஷி said...
அய்யா.. எங்களை மாதிரி காதலிக்க பொண்ணு கிடைக்காதவங்களுக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தா கொடுங்க சாமி! :)
/

சென்ஷி
நீங்கல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
அப்பிடியே ஜாலியா இருங்க.

17 July 2009 22:19//

சுழி எப்படியும் சும்மா இருக்க விடாது!!

தேவன் மாயம் said...

மங்களூர் சிவா said...
/
பிரியமுடன்.........வசந்த் said...
//11.அவளின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!!//

அவங்க பொழுது போக்கே நம்மல அலைய விடுறதுதான சார்.......
/

ஹா ஹா
:)))

17 July 2009 22:21///

நாயா அலையிறதை நினைத்தால் சிரிப்பு வருதா!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. ஆனா இது நமக்கில்ல. அபு அஃப்ஸர் சொன்னமாதிரி ஒரு ஏழு வருஷதுக்கு முன்னாடி வந்திருக்கணும். ஹ்ம்ம் என்ன பண்ண.

17 July 2009 22:58///

கனவுதான் காணலாம்!

தேவன் மாயம் said...

Mohan said...
எப்படிங்க?.... இப்படி பின்றீங்க?.....

17 July 2009 23:16///

இதுதானே தொழிலே!!

தேவன் மாயம் said...

பாலாஜி said...
//அவளின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி, அண்ணன்கள்,தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.//

சிறப்பம்சமா.. அவளோட அண்ணன்டையா?
போங்க சார். அந்த குடும்பத்தில அவள் பிறந்ததுதான் சார் சிறப்பு. சேற்றில் முளைத்த செந்தாமரை சார் அவள்.

18 July 2009 00:45///

ஆள் ஆப்டுக்கிட்ட மாதிரி இருக்கே!!

Rajeswari said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..

ரவி said...

vote !!!!!!!!!!!!!!!

நட்புடன் ஜமால் said...

தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

தேவன் மாயம் said...

Rajeswari said...
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க..

18 July 2009 01:3//

நல்லா இருங்க தாயி..

தேவன் மாயம் said...

செந்தழல் ரவி said...
vote !!!!!!!!!!!!!!!//

ஒகே!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

18 July 2009 04:06///

ஊட்டுக்காரம்மா டின் கட்டிடும்!!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

பாயிண்ட்டுக்கு ஒண்ணுன்னு 16 ட்ரை பண்ணு மாப்ள

S.A. நவாஸுதீன் said...

சென்ஷி said...

அய்யா.. எங்களை மாதிரி காதலிக்க பொண்ணு கிடைக்காதவங்களுக்கு ஏதாவது அட்வைஸ் இருந்தா கொடுங்க சாமி! :)

எங்கேயோ ஒரு பொண்ணு சந்தோசமா இருந்துட்டு போகட்டும் தல. விடுங்க பாவம்

முனைவர் இரா.குணசீலன் said...

நீங்க பொது மருத்துவரா....
மனநல மருத்துவரா..........
தங்கள் பதிவுகள் வழி பல உளவியல் உண்மைகளை அறிந்து கொள்ளமுடிகிறது...

முனைவர் இரா.குணசீலன் said...

100வது இடுகைக்கு வந்த தங்களுக்கு 100வது கருத்துரை வாழ்த்து ....

வினோத் கெளதம் said...

இவ்வளோ விஷயம் பார்க்கணுமா..

தேவன் மாயம் said...

Blogger S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

பாயிண்ட்டுக்கு ஒண்ணுன்னு 16 ட்ரை பண்ணு மாப்ள///

இது அநியாயம்!!

தேவன் மாயம் said...

Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

நீங்க பொது மருத்துவரா....
மனநல மருத்துவரா..........
தங்கள் பதிவுகள் வழி பல உளவியல் உண்மைகளை அறிந்து கொள்ளமுடிகிறது...///

உபயோகப்பட்டால் சரி!!

தேவன் மாயம் said...

Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

100வது இடுகைக்கு வந்த தங்களுக்கு 100வது கருத்துரை வாழ்த்து ....//

100 க்கு வாழ்த்துக்கள்!

ஆ.ஞானசேகரன் said...

ஹோம் ஒர்க் நல்லா இருக்கு

100 வது பதிவுக்கும் வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

Blogger வினோத்கெளதம் said...

இவ்வளோ விஷயம் பார்க்கணுமா.//

இன்னும் இருக்கு மாப்ள!!

தேவன் மாயம் said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

ஹோம் ஒர்க் நல்லா இருக்கு

100 வது பதிவுக்கும் வாழ்த்துகள்///

100 வது பதிவு முனைவருக்குங்கோ!!

S.A. நவாஸுதீன் said...

தேவன் மாயம் said...

Blogger S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

பாயிண்ட்டுக்கு ஒண்ணுன்னு 16 ட்ரை பண்ணு மாப்ள///

இது அநியாயம்!!

Then Give atleast 50% Discount!!!

தேவன் மாயம் said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

ஹோம் ஒர்க் நல்லா இருக்கு

100 வது பதிவுக்கும் வாழ்த்துகள்///

100 வது பதிவு முனைவருக்குங்கோ!!

18 July 2009 06:31
Delete
Blogger S.A. நவாஸுதீன் said...

தேவன் மாயம் said...

Blogger S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

தேவா!

இத எத்துனை பேர்ட்ட முயற்சி செய்யலாம் ...

பாயிண்ட்டுக்கு ஒண்ணுன்னு 16 ட்ரை பண்ணு மாப்ள///

இது அநியாயம்!!

Then Give atleast 50% Discount!!!///

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கு! ஜமால் எஸ்கேப்!!

ஷங்கி said...

ரொம்ப ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்க போல! உபயோகிச்சா காதலி கிடைச்சுருவான்னுதான் தோணுது! காதலிப்பது மட்டுமல்ல, காதலிக்க வைப்பதும் ஒரு கலை?!

அப்புறம் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் பக்கத்திற்கு, நீங்கள் ”கொஞ்சம் தேநீர்” தொடங்கியதிலிருந்தே வருவதுண்டு, ஆனால் அப்போது வலைப்பூ தொடங்கியிருக்கவில்லையாதலால் பின்னூட்டமிடுவதில்லை.

ஆடுமாடு said...

நல்லாத்தான் இருக்கு. எனக்கு கல்யாணமாயிடுச்சே..!

SUBBU said...

எனக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சி :))

சுசி said...

புரியுது சார் உங்க ஐடியா...
அவங்க 16 விதமா அடிய வாங்கிகிட்டு உங்க ஹாஸ்பிடல் பக்கம் வரணும்னுதானே இது?
சாரி. என் பதிவில தமிழ் நண்பன்கிற உங்க பதிவு தான் இருக்கிறதால இது மிஸ் ஆயிடிச்சு. இனி தவறாம வந்திடுவேன்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory