Saturday 28 February 2009

மரணம் நேரடி ஒளிபரப்பு!

 

 

 

சில்பா செட்டியுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில்

கலந்து கொண்டு நிகழ்ச்சியின்போது இனவெறியுடன்

நடந்து கொண்ட நடிகை ஜேட் கூடி நேற்று ஜேக்

ட்வீட் என்ற வாலிபரைத் திருமணம் செய்து

கொண்டார்!

 

அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற ஜேக்

முன் வந்தார். அதன்படி, எஸ்ஸெக்ஸ் என்ற இடத்தில்

உள்ள டவுன் ஹால் என்ற ஓட்டலில் வைத்து

இருவருக்கும் நேற்று திருமணம் நடந்தது.

 

ஏன் கடைசி ஆசை என்கிறீர்களா? சில்பாவுடன்

சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜேட் கூடிக்கு   கர்ப்பப்பை

வாய் புற்றுநோய் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று

வருகிறார்.

 

கர்ப்பப்பை புற்றுநோய்க்காக   லண்டன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு

கீமோ தெரபி' சிகிச்சை அளித்ததால் தலையில்

மொட்டை அடிக்கப்பட்டது

 

அவருக்கு புற்று நோயானது தற்போது

குடல்,கல்லீரல்,மற்றும் அதைச் சுற்றியுள்ள வயிற்றின்

சுவர்களிலும் பரவியுள்ளது!!

 

ஜேட் கூடியின் உயிருக்கு டாக்டர்கள் இன்னும் சில

வாரங்களே கெடு விதித்துள்ளனர்! 

 

திருமணத்தை முன்னிட்டு தனி ஹெலிகாப்டர்

மூலமாக நேற்று முன்தினமே ஜேட் கூடி ஓட்டலுக்கு

வந்து சேர்ந்தார். மணமகன் ஜேக், தனது இல்லத்தில்

இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டு நேற்று

காலை 10 மணிக்கு ஓட்டலுக்கு வந்தார். அதன் பிறகு,

45 நிமிட நேரம் திருமண சடங்குகள் நடைபெற்றன

 

இன்னும் சில வாரங்களில் இறக்கப்போகும் ஜேட்

கூடியின் திருமணம் மகிழ்ச்சியும் சோகமும்

இழையோட நடந்து முடிந்தது. மணமகன் ஜேக், ஒரு

அடிதடி வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது

குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் தான்

அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது

 

எனினும், 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே

செல்ல கூடாது, எஸ்ஸெக்சில் உள்ள ஒரே

முகவரியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது

உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சில வாரங்களுக்கு முன்

சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது புது மனைவியுடன் முதலிரவு

நடத்துவதற்காக 7 மணிக்கு மேல் வீட்டில் இருக்க

வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் ஒரு நாளுக்கு

தளர்த்தப்பட்டு உள்ளது.

 

என் வாழ்நாளில் அதிகநேரம் நான் டி.வி. சினிமாவில்

கழித்துள்ளேன்  என் இறப்பையும் நேரடி ஒளிபரப்பு

செய்யவேண்டும்என்று விரும்புகிறேன் என்று

கூறுகிறார்.இதன் மூலம் இளம் வயதினருக்கு இந்த

வியாதியுடன் மன உறுதியுடன் வாழ்வதைப் பற்றி

நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்கிறார்..

 

27 வயதே ஆன அவருக்கு பாபி(5

வயது),ஃப்ரெடி(4 வயது) என்ற இரு குழந்தைகள்

உள்ளனர்.

என்ன மரணத்தை நேரடியாகப் பார்ப்பது சரியா? தப்பா? 

 

 

 

 

ஸ்லம்டாக் அசாருக்கு அறை!

 

 

 

ஊருக்கு ராசான்னாலும் அப்பனுக்குப் பிள்ளைதானே?

என்னங்க நான் சொல்றது!!!

”ஸ்லம் டாக்”ல நீ பரிசுவாங்கினா அப்பன் நான் விட்டுறுவேனா உன்னைய!!”

அப்படி கதை ஆயிப்போச்சு அசாருக்கு!

விசயம் என்னன்னா ஸ்லம்டாகில் நடித்த தம்பிஅசாருக்கு 10

வயசுதான் ஆகுது!!

நம்ம ஜூனியர்கள் பேச்சு கேக்கவா வேணும்!

 

பேட்டி தரும்போது பார்த்து

இருப்பீங்க! “அமித்தாப்பச்சன் கூட அங்கே

போனதில்லியாம்னு “ தொண்டை கிழியக்கத்துறான்

டி.வி.யில்! ( எவனோ சின்னப்பையன் கிட்ட

எவனோ அரசியலைத் திணித்து

இருக்கான் பாருங்க!)

 

அமித்தாப் கூட

அங்கே போனதில்லை! நாங்கள் போய் வந்து

விட்டொம்னு நிச்சயம் அவனுக்குத்தெரிந்து இருக்காது!

இப்படி டி.வி.யில் சொல்லுன்னு எவனோ ட்ரைனிங்

குடுத்து இருக்கான்!! பய புள்ள அப்படியே டி.வி.ல

சொல்றான்! நல்லது!

இருந்தாலும் நல்ல மீடியா மக்கள் தொடர்ந்து

தொல்லை தருகிறார்களே! அசந்து தூங்குவோம்னு

போயி படுத்து இருக்கான்!!

 

நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!

 

மீடியா கோஷ்டி அசார் அப்பாவை நெருக்க, அவர்

போய் பொடியனை எழுப்பி இருக்கார்!! பையன் செம

டையர்ட்!!! ”ரெஸ்ட் எடுக்கிறேன் அப்பா” என்று

சொல்ல ,அப்பாவுக்கு வந்ததே கோபம்!!

 

ரெஸ்டாவது மண்ணாங்கட்டியாவது இந்த நேரத்தில்

தூங்கினா என்ன ஆவது? காத்தடிக்கும் போதே

தூத்திக்கணுமே! ன்னு விட்டார் ஒரு அறை!!!

 

ஆஸ்காராவது! கீஸ்காராவது ? எந்திரி மொதல்லேன்னு

செல்லமா ஒரு அறை விட்டு எழுப்பிட்டார்!

பையனும் சமாளிச்சு எந்திரிச்சுட்டான்!!!

 

எனக்கு அப்பா அடித்ததில் கோபமில்லைன்னு ஒரு

பேட்டியும் கொடுத்து விட்டான்!!!

அடித்தாலும், பிடித்தாலும் அப்பனும் மவனும் ஒன்னு

சேந்துப்பானுவ..!

நம்ம வேலையப்பாப்பம் வாங்க!

.நமக்கு இதுதானே வேலையேங்கிறீகளா? சரி அடுத்த

அடுத்தவன் கதையைப்பாப்போம்!

”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா?-டானி பாய்ல்!

Film still for Mumbai rising

டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின்

இயக்குனருக்கு

நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய

பதிவு தெரிந்து விட்டது!!!

 

அவர் மும்பாய் வாழ் குடிசை சிறுவர்களை

வறுமையிலிருந்து வெளிக்கொணர ஒரு நிதியமைப்பு

ஏற்பாடு செய்கிறார்!!

 

இதற்காக அடுத்தவாரம் லண்டனில்

இதில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டம்

ஒன்றைக்கூட்டியிருக்கிறார்..அதில் பணம் எவ்வளவு

போடுவது, எப்படி அதை சரியான

முறையில் வீணாகாமல் உபயோகிப்பது போன்ற

விசயங்கள் தீர்மானிப்பார்கள்!

கீழே அவர் சொன்ன முத்தான பாராட்டத்தக்க வரிகள்! 

"We want to set it up as soon as possible. What absolutely mustn't happen is that the money disappears or people think this is a PR stunt," Boyle said.

 

பாயிலும் கோல்சனும்(தயாரிப்பாளர்களில் ஒருவர்)

ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி படம் எடுத்து

பணம் சம்பாரிக்கிறார்கள் என்ற குரல்கள் பல

பக்கங்களிலிருந்தும் எழுந்ததையொட்டி தங்களின்

இந்த திட்டத்தை வெளியிட்டனர்!

டைம் பத்திரிக்கையும் இவர்களை

மேற்சொன்னதுபோல் விமரிசித்து இருந்தது!

 

ஆயினும் இந்த விமரிசனங்களால் தாங்கள் இந்த

முடிவு எடுக்கவில்லை என்றும் இந்தப்படத்தின் அபார

வெற்றியில் கிடைத்த அதிகமான பணத்தில் இந்த

மிகச் சிறந்த நகருக்கு ஏதாவது செய்யவேண்டும்

என்ற எண்ணமே காரணம் என்றும் மனம் நெகிழ்ந்து

கூறியுள்ளார்.

 

தங்க க்ளோப் விருது பெற்றவுடனே தாங்கள் இந்த

முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்..

 

ஒரு (இளைஞர்) நடிகர்களுக்குக் கொடுப்பது போல்

மூன்று மடங்கு வருடச்சம்பளம் அசாருக்கும்,

ரூபினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது!என்றார்!!

 

அதாவது ஒரு மாதம் நடித்ததற்கு ஒரு வருட

சம்பளம் தரப்பட்டு உள்ளதாம்!

 

ஆச்சரியம்தான்!!

 

இதன் பிறகு அவர்களுக்கு 18 வயது ஆகும்

போது,பள்ளிப்படிப்பை முடித்தால் அவர்களுக்கு பெரிய

தொகை கிடைப்பது போன்ற தனி ஏற்பாடும்

செய்வதாகக் கூறியுள்ளார்!!!

 

இந்த அருமையான 

மனிதனை  தலைதாழ்த்தி

வணங்குகிறேன்.

Friday 27 February 2009

உயிருடன் புதைப்பு?

 

பங்களாதேசத்தில் மொத்தம் ஐம்பத்து ஒரு

பங்களாதேச ரைபில்ஸ் படைப்பிரிவைச்சேர்ந்த உயர்

அதிகாரிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு

உள்ளன.

மேலும் 100

உயர் அதிகாரிகளின் விபரங்கள் தெரியவில்லை.இந்த

உடல்கள்  பங்களாதேச ரைஃபில்ஸ் தலைமையக

வளாகத்தில் ஒரு குழியில் மொத்த உடல்களையும்

போட்டு மூடியிருந்ததை இராணுவ அதிகாரிகள்

தோண்டி எடுத்தனர்!சில அதிகாரிகள் குற்றுயிரும்

குலைஉயிருமாக உயிருடன் புதைக்கப்பட்டு

இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது!!

இந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என்று பிரதமர்

ஹசீனா கூறியுள்ளார்.

     முன்னர்,    பங்களாதேசத்தில்பில்கானாடாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்

இதில்அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர்

ஜெனரல் சுடப்பட்டு இறந்தார். மேலும் பல

அதிகாரிகளும் இறந்தனர்!

அது தற்போது அந்த நாட்டு இராணுவத்தால்

கட்டுப்படுத்தப்பட்டது!!

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் தற்போது

சரணடைந்துவிட்டனர்.

 

.

இறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்!!!

 

ரஹ்மானுக்குக் கோபமா?

         இந்தியாவுக்குப்பெருமை சேர்த்த ஆஸ்கார்

நாயகன் இந்தியா வந்து சேர்ந்தார்.சென்னையில்பிரஸ்

மீட் ஹாலுக்கு வந்த அவரைச் சுமார் 50 போட்டோ

கிராபர்களுக்கு மேல் சூழ்ந்துகொண்டார்கள்.

கிட்டத்தட்ட 20 நிமிடம் அவரை மாற்றி மாற்றிப் படம் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். 

"நான் இங்கேதான் இருப்பேன். எங்கேயும் ஓடிட மாட்டேன். மும்பை போட்டோ கிராபர்கள் மாதிரி செட் செட்டா எடுத்துக்கொள்ளுங்களேன்" என்று ரஹ்மான் கேட்டுக்கொண்டும் ஒருவரும் காதில் வாங்கிக்கொள்வதாக இல்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், "அப்படின்னா நான் கிளம்புறேன்" என்று மூன்று முறை செல்லக் கோபம் காட்டினார். ம்ஹும், அதற்கும் சளைத்தால்தானே? வேறு வழியில்லாமல் அவர்களின் போக்குக்கே விட்டுவிட்டார்.

ஒரு வழியாக அவர்கள் அவரை விட்டு விலகியதும்தான் பிரஸ் மீட் துவங்கியது. கேள்வி கேட்கவும் நிருபர்கள் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டார்கள். 

இரண்டு பகுதிகளாக நடைபெற்ற பிரஸ் மீட்டில், முதலில் நடந்த பிரிண்ட் மீடியா பிரஸ் மீட்டில்தான் இந்தக் களேபரம். இரண்டாவதாக நடந்த எலக்ட்ரானிக் மீடியா பிரஸ் மீட்டில் ஒரு களேபரமும் இல்லை.

"இங்கே ரொம்ப டீசன்ட்டா இருக்கே?" என்று கமெண்ட் அடித்துக்கொண்டே சீட்டில் அமர்ந்தார் ரஹ்மான். எல்லாக் கேள்விகளுக்கும் சரமாரியான ஜாலி மூடில் பதிலளித்துக்கொண்டிருந்தவர், உங்களுக்கு எம்பி பதவி கொடுக்கப் போறதா ஒரு பேச்சிருக்கே என்று கேட்டதற்கு "ஐயய்யோ, வேண்டாம்" என்று பதறினார்.

 

 

மரணத்திற்கு பின் வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது

 

ஹீத் லெட்ஜர்

அதிக அளவு போதையில் இறந்தவருக்கு ஆஸ்கார் விருது!!

தி டார்க் நைட் படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்ற ஹீத் லெட்ஜருக்கு ஆஸ்கர் விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.

லெட்ஜருக்கு அளிக்கப்பட்ட விருதை அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டிசி காமிக்ஸ்-ன் பேட்மேன் தொடரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் தி டார்க் நைட்.

இந்தப் படத்தில் ஹீத் லெட்ஜர் கிலௌன் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம், போதை மருந்தை அதிக அளவில் உட்கொண்டதால் ஹீத் லெட்ஜர் மரணம் அடைந்தார்.

எனினும் அவரது நடிப்பை போற்றும் வகையில் சிறந்த துணை நடிகருக்கான விருது ஹீத் லெட்ஜரின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இது ஹீத் லெட்ஜரின் சாதனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று அவரது தந்தை கிம் லெட்ஜர் தெரிவித்தார்...

மும்பை தாக்குதல்-இந்தியர் உதவி!!

ஃபாஹிம் அன்சாரி,சஹாபுதீன் ஆகிய இரண்டு இந்தியர்களின் உதவியுடந்தான் மும்பை தாக்குதல் நட்ந்து உள்ளது!!!

இவர்கள் இருவரும் சி.பி.ஆர்.எஃஃப் முகாமின் மீது தாக்குதல் நடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டவர்கள்!

மு‌ம்பையை சுமா‌ர் 59 ம‌ணி நேர‌ம் செய‌லிழ‌க்க‌ச்செ‌ய்த குண்டு வெடிப்புகளில் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ள 46 பே‌‌‌ரி‌ல், அ‌ஜ்ம‌ல் அ‌மீ‌ர்கசா‌ப், ஃபாஹ‌ி‌ம் அ‌ன்சா‌ரி, சபாபு‌தீ‌ன் அஹமதுஆ‌கிய மூ‌ன்று பே‌ர் மு‌ம்பை மாநகர‌க்காவ‌ல்துறை‌யி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌க்காவ‌லி‌ல் உ‌ள்ளன‌ர்.

மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌‌லி‌ன்போதுபாதுகா‌ப்பு‌ப் படை‌யினருட‌ன் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி‌ச்சண்டையில் 9 பய‌ங்கரவா‌திக‌ள்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன‌ர். இத‌ன் மு‌க்‌கிய‌ச்ச‌திகார‌ரு‌ம் பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ப் ப‌யி‌ற்‌சிஅ‌ளி‌த்தவருமான லா‌க்‌வி உ‌ள்‌ளி‌ட்ட மேலு‌ம் 35 பே‌‌ர்தேட‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்.

ஹ‌பீ‌ஸ் சையது, அபு அ‌ல் காமா, ஜரா‌ர் ஷா,காஃபா, யூசு‌ப் எ‌ன்ற முஜா‌மி‌ஜ், அபு ஹ‌ம்ஜா,ஹமா‌த் அ‌மீ‌ன் சா‌தி‌க், ஜாவெ‌த் இ‌க்பா‌ல்,எ‌ம்.டி. ‌ரியா‌ஸ் ஆ‌கிய பய‌ங்கரவா‌திக‌ள் ‌தீ‌விரமாக‌த் தேட‌ப்படு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்க‌ள்பா‌கி‌ஸ்தா‌னி‌ல் பது‌ங்‌கியு‌ள்ளன‌ர் எ‌ன்பதுகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கு‌ற்ற‌ப் ப‌த்‌தி‌ரிகையை‌த் தா‌க்க‌ல் செ‌ய்த‌ பிறகு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வெ‌ளி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச்ச‌ந்‌தி‌த்த ‌சிற‌ப்பு அரசு வழ‌க்க‌றிஞ‌ர் உ‌‌ஜ்வா‌ல் ‌நிகா‌ம், "வழ‌க்கு ‌விசாரணையை ஆறுமாத‌‌‌ங்களு‌க்கு‌ள் முடி‌க்க முய‌ற்‌சி‌ப்போ‌ம்." எ‌ன்றா‌‌ர்.

ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள், காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள்ஆ‌கியோ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சா‌ட்‌சிக‌ள்கு‌ற்ற‌ப்ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் ப‌‌ட்டிய‌லி‌ட‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, அ‌ன்சா‌ரி சா‌ர்‌பி‌ல் வா‌தி‌ட்ட வழ‌க்க‌றிஞ‌ர் இஜாஸ் நா‌க்‌வி, தனது க‌ட்‌சி‌க்காரரைஅமெ‌ரி‌க்கா‌வி‌ன் உ‌ள் புலனா‌ய்வு அமை‌ப்பானஎஃ‌ப்.‌பி.ஐ. அ‌திகா‌ரி கு‌று‌க்கு ‌விசாரணை செ‌ய்யஅனும‌தி‌க்க‌க் கூடாது எ‌ன்று கே‌ட்டு‌க்கொ‌ண்டா‌ர்.எ‌ன்ன அடி‌ப்படை‌யி‌ல் எ‌ஃப்.‌பி.ஐ.‌க்கு அனும‌திதர‌ப்ப‌ட்டது எ‌ன்று‌ம் அவ‌ர் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

.
பய‌ங்கரவாத‌த் தா‌‌க்குத‌ல்க‌‌ள் தொட‌ர்பாக அ‌ப்போது ‌பிடிப‌ட்ட ஒரே பய‌ங்கரவா‌தியான அ‌ஜ்ம‌ல்கசா‌ப்‌பி‌ற்கு எ‌திராக 12 வழ‌க்குகளை கு‌ற்ற‌ப்‌ பி‌ரிவுகாவ‌ல்துறை‌யின‌ர் ப‌திவு செ‌ய்தன‌ர்.

இ‌ந்‌தியத‌ண்டனைச் ச‌ட்ட‌த்‌தி‌ல் கொலை, கொலைமுய‌ற்‌சி, ‌திரு‌ட்டு, நா‌ட்டி‌ற்கு எ‌திராக‌ப் போ‌ர்தொடு‌த்த‌ல் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு ‌பி‌ரிவுக‌ளிலு‌ம்,கு‌ற்ற நடைமுறை‌ச் ச‌ட்ட‌ம், ஆயுத‌ங்க‌ள்,வெடிபொரு‌ட்க‌ள் ச‌ட்ட‌ம் உ‌ள்‌ளி‌ட்ட வேறுபலச‌ட்ட‌ங்க‌ளிலு‌ம் அ‌ஜ்ம‌ல் ‌மீது வழ‌க்குக‌ள் ப‌திவுசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

பய‌ங்கரவா‌திக‌ள் கட‌ல் வ‌ழியாக வ‌ந்து இற‌ங்‌கியதுமுத‌ல் நா‌ரிம‌ன் இ‌ல்ல‌ம், தா‌ஜ், டிரைட‌ன்‌ட்ந‌ட்ச‌த்‌திர ‌விடு‌திக‌ள், கேஃ‌ப் ‌லியோபோ‌ல்‌ட், ச‌த்ரப‌தி ‌சிவா‌‌ஜி இர‌யி‌ல் ‌நிலைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறுஇட‌ங்க‌ளி‌ல் அவ‌ர்க‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌ல்க‌ள் வரைநே‌ரி‌ல் பா‌ர்‌த்த சா‌‌ட்‌சிக‌ள், ‌விசாரணை நட‌த்‌தியப‌ல்வேறு புலனா‌ய்வு அமை‌ப்புக‌ள் ஆ‌கியோ‌‌ர்தெ‌ரி‌வி‌த்த கரு‌த்து‌க்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் கு‌ற்ற‌ப்‌ ப‌த்‌தி‌ரிகை தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தா‌ன் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றது முத‌ல்மு‌ம்பை‌யி‌ல் கட‌ந்த ஆ‌‌ண்டு நவ‌ம்ப‌ர் 26ஆ‌ம்தே‌தி காவ‌ல்துறை‌யா‌ல் தா‌‌ன் கைதுசெ‌ய்ய‌ப்ப‌ட்டது வரை தனது பயண‌ம் கு‌றி‌த்துஅ‌ஜ்ம‌ல் கசா‌ப் அ‌ளி‌த்து‌ள்ள ஒ‌ப்புத‌ல்வா‌க்குமூலமு‌ம் கு‌ற்ற‌ப் ப‌த்‌தி‌‌ரிகை‌யுடன்இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஃபாஹ‌ி‌‌ம் அ‌ன்சா‌ரி‌யிட‌ம் பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌ல்வரைபட‌ம் தயா‌ரி‌க்க‌‌ச் சொ‌ன்ன சஹாபு‌தீ‌ன்அஹமது, கு‌ற்ற‌ப் ‌பி‌ரிவு காவல‌ர்க‌ளிட‌ம்அ‌ண்மை‌யி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள 40 ப‌க்க ஒ‌ப்புத‌ல்வா‌க்குமூல‌த்‌தி‌ல், பா‌கி‌ஸ்தா‌ன் உயர‌திகா‌ரி க‌ர்ன‌‌ல்கயா‌னியை‌த் தா‌ன் ச‌ந்‌தி‌த்து ஆலோசனைகளைப்பெ‌ற்றதை ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இதுவு‌ம் கு‌ற்ற‌ப்‌ ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் இணை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ரா‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படைமுகா‌மி‌ன் ‌மீது நட‌த்த‌ப்ப‌ட்ட தா‌க்குத‌ல் தொட‌ர்பாககட‌ந்த ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி மாத‌ம் ஃபாஹ‌ி‌ம்அ‌ன்சா‌ரியை உ‌த்தர‌ப்‌பிரதேச‌க் காவ‌ல்துறை‌யின‌ர்கைது செ‌ய்தன‌ர்.

இவ‌‌ரிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், தன‌க்கு 26/11 தா‌க்குத‌‌லி‌ல்பங்‌கிரு‌ப்பதை ஒ‌ப்பு‌க்கொ‌‌‌ண்டா‌ர்.
சஹாபு‌தீ‌ன் அஹமது கூ‌றியத‌ன் பே‌ரி‌ல்,மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள ந‌ட்ச‌த்‌திர வ‌ிடு‌திக‌ள், ச‌த்ரப‌தி ‌சிவா‌ஜி இர‌‌யி‌ல் ‌நிலைய‌ம் உ‌ள்‌ளி‌ட்ட இல‌க்குகளைதானே தனது கை‌யினா‌ல் வரை‌ந்து கொடு‌த்ததாக ‌விசாரணை அ‌திகா‌ரிக‌ளிட‌ம் ஃபாஹ‌ி‌ம்கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த அ‌க்டோப‌ர் 2004 முத‌ல் அ‌க்டோப‌ர் 2007வரை பா‌கி‌ஸ்தா‌ன் உளவு அமை‌ப்பான ஐ.எ‌ஸ்.ஐ.இ‌ன் தலைவராகவு‌ம், த‌‌ற்போது பா‌கி‌ஸ்தா‌ன்இராணுவ‌த் தளப‌தியாகவு‌ம் உ‌ள்ள ஜெனர‌ல்ப‌ர்வே‌ஷ் அ‌‌ஷ்ஃபா‌க் கயா‌னியை தா‌ன் ச‌ந்‌தி‌த்ததாகசஹாபு‌தீ‌ன் அஹமது ஒ‌ப்பு‌க்கொ‌‌ண்டு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 2002இ‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் இராணுவநடவடி‌க்கைக‌‌ளி‌ன் தலைமை இய‌க்குநராக இரு‌ந்தகயா‌னி, மு‌ம்பை பய‌ங்கரவாத‌த் தா‌க்குத‌லி‌ற்கு‌ப் ‌பி‌ன்னா‌ல் உ‌ள்ள ச‌திகார‌ர்க‌ளி‌ல் ஒருவ‌ர் எ‌ன்று‌ம்,அவ‌ர்தா‌ன் மு‌ம்பை‌யி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்தசஹாபு‌தீ‌னி‌ற்கு வ‌ழிகா‌ட்டியவ‌ர் எ‌ன்று‌ம் அரசுவழ‌க்க‌றிஞ‌ர் உ‌‌ஜ்வா‌ல் ‌நிகா‌ம் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்..

பாகிஸ்தானின் கடல்பகுதி தீவிர ரோந்தில் இருப்பதால் எந்ததீவிரவாதியும் பாகிஸ்தான் கடல் வழியாக இந்தியா செல்லவில்லை என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது!!!

இன்னும் சிறிது நாளில் பாகிஸ்தானுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று இந்தியாவே சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!!

Thursday 26 February 2009

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவேன்! வைரமுத்து!

 

ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

ஆஸ்கார் விருது பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி, உலகமே எழுந்து நின்று கை தட்டுகிறது.

இந்திய திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இன்று தமிழ் திரையுலகுக்கு வந்திருக்கிறது.

இதன் மூலம் உலக திரையுலகுக்கு தலைமை தாங்கும் தகுதி, இந்திய திரையுலகுக்கு வந்திருக்கிறது.

.தமிழன் எடுக்கிற படத்துக்கு ஏன் ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று இப்போது சிலர் கேட்கிறார்கள்.

தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்கரை வெல்லும் தகுதி  இருக்கிறது

இங்குள்ள கலைஞர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உலக கலைஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல


மலேசியத் தமிழர்கள் நடத்திய விழா ஒன்றில் நானும், ஏ.ஆர்.ரஹ்மானும் பங்கேற்றோம். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்ற பெயரில், வேறு ஒரு பாடலை பாடினார்கள்.

இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நீராரும் கடலுடுத்த... என்ற பாடலை அவர்கள் பாடவில்லை.

நீராரும் கடலுடுத்த... பாடலில், இந்திய எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளன. அதை உலக தமிழன் எப்படி பாடுவான்?

                ஆதலால்   இந்த சிக்கலைத் தீர்க்க உலக தமிழர்களுக்காக, புதிய     தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதப் போகிறேன். அந்த பாடலுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதித்திருக்கிறார்.

 

 

 

 

 

 

.

ஊசி பீதி!!!

 

குஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற

பகுதியில் ஹெபடைடிஸ் பி,நோய் தாக்கியுள்ளது.

 

பயன்படுத்தப்பட்ட ஊசி,சிரிஞ்சுகளை ஒரு கும்பல்

கழுவி அடைத்து புதிய சிரிஞ்ஜ் என்று விற்பனை

செய்து வந்து உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது..

 

இதுவே இந்நோய் மிக வேகமாகப்பரவிய காரணம்

என்று தெரிகிறது!

.

பொதுவாக தரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு

வருவதால் உபயோகப்படுத்தப்பட்ட ஊசி குழல்கள்

மறு சுழற்சி செய்யப்பட்டு, குடம், மலிவான

பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படும்.

 

இதனால் இதனை வியாபாரிகள் வாங்கி விற்பது

வழக்கம்.சிராஜ் என்ற வியாபாரி பயன்படுத்தப்பட்ட

ஊசிக்குழல் வியாபாரி.

 

இவர் தினமும் ஆஸ்பத்திரிகளில் இதனை வாங்கி

பெரிய வியாபாரிகளிடம் விற்று உள்ளார்.

 

12 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடியாக நடத்திய

சோதனையில் லட்சக்கணக்கான ஊசி குழல்கள்

கண்டுபிடிக்கப்பட்டன..

 

இதன் அடிப்படையில் சபர்கந்தா பகுதியில் உள்ள 5

மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.

 

வியாபாரி சிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு

உள்ளது..!!!!

 

இது ஒரு குறிப்பிட்ட குஜராத்தில் மட்டும் உள்ள

பிரச்சினை அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரச்சினை.

 

நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று

தெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்

பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்

கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்

இருக்கத்தான் செய்யும்.

 

கலெக்டர்களும், மந்திரிகளும் மருத்துவக்கல்லூரிகள்

திறப்பதிலும், பத்திரிக்கைச் செய்திகளில்

இடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு

சற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்

செலுத்துவது நல்லது.

 

ஏனெனில் கல்யாணவீட்டில் மாப்பிள்ளையும்

இவுங்கதான்!! செத்தவீட்டில் பிணமும் இவுங்கதான்!!

13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்! கொடுமை!

 

சிங்கப்பூர் இளையர்கள் இடையே கோபமும்

வன்செயலும் அதிகரித்து வருகிறதாம்!!

 

சிறுவர்கள் மீண்டும் மீண்டும் குற்றம் செய்வது இங்கு

அதிகரித்து உள்ளது என்கின்றனர்!

இதனால் நீதிமன்றத்தில்

இத்தகைய வழக்குகள் குவிந்த வண்ணம்

உள்ளனவாம்!!.

 

நீதிபதிகளின் கடுமையான கேள்விகளுக்கு 

சிறுவர்களுடைய பெற்றோர்களும் உள்ளாகின்றனர்.

 

தங்கள் பிள்ளைகள் செய்த தவறுக்காக சிறார்

நீதிமன்ற வாசலில் ஒவ்வொரு நாளும் பல

பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

நீதிமன்றத்தில் நடந்த ஒரு  வழக்கைப் பாருங்கள்!!

இந்த வழக்கைப்பார்த்தாலே சிங்கை இளைஞர் பற்றி

புரியும்!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த  வழக்கு!

என்னதான்  13 - 16 வயது வரையுள்ள வயதினர்,

வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டாலும்

அடிப்பார்கள்,திட்டுவார்கள், நாம் கேள்விப்பட்டவரை!

இந்த சம்பவம்    ரொம்ப ஓவர்!

 

மேட்டர் என்னன்னா   பதினாறு வயதுப்பெண்

ஒருத்தியை பதிமூன்று வயதுப்பெண்

தரக்குறைவாகவும்,அசிங்கமாகவும் பேசித்திட்டி

விட்டாளாம்.

 

தன்னைப் பற்றித் தரக் குறைவாகப் பேசி அவமானப்

படுத்தியதற்காக அந்தப்பெண் பதிமூன்று

வயதுப்பெண்ணை பழிவாங்க திட்டமிட்டாள்!!


அதற்காக ஆள் வைத்து அந்த பதிமூன்று வயது

சிறுமியைக் கற்பழிக்குமாறு கூறியிருக்கிறாள்!

(அப்பா! சிங்கப்பூர் எங்கே போகிறது?)

 

அந்த ஆடவரால் எவ்வளவோ முயன்றும் சிறுமியைக்

கற்பழிக்க முடியவில்லை.

ஆத்திரமடைந்த 16 வயது பெண், 13-15 வயது நிரம்பிய

சக நண்பர்களுடன் சேர்ந்து, 13 வயதுச் சிறுமியைக்

கடுமையாக அடித்துத் துன்புறுத்தியிருக்கிறாள்!

அந்த ஆணுடன் பிற பாலியல் செய்கைகளில்

ஈடுபடுத்தியிருக்கிறாள்!

 

நினைக்கவே கொடுமையாகவுள்ளது! இதுபோன்ற

நிகழ்வுகள் பல நாடுகளில் நடக்கின்றன. சிங்கப்பூரில்

நடந்தது வெளியில் தெரிகிறது..

அந்த 16 வயதுக் குற்றவாளியைச் சிறார் நீதிமன்றம்

மறுவாழ்வு பயிற்சிக்கு அனுப்பிவைத்து உள்ளது!!!

கொடுமைடா சாமி!!!

 

இளம் வயதினரிடையே நிலவும் வன்முறை பற்றிய

விழிப்புணர்வுக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது

சிங்கப்பூர் நற்பணிப் பேரவை.

 

ஏதாவது செய்யுங்க! குழ்ந்தைகளின் மேல் கவனம்

செலுத்துங்கள்!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.
.
.

 

 

 

 

.
.

Wednesday 25 February 2009

இளையராஜா ஏமாற்றப்பட்டாரா?

.

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.

17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். .

இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.

இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ…

சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!

எது சிறந்த இசை?

ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?

அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.

ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.

ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.

இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும்  அதிர்ச்சியைத் தந்தது.

இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.

அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு?  இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?

தேவர்  மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )

ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

என்னதான் செய்தார் அப்படி?

இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!

இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.

இதை என்னவென்று சொல்வது?

ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

.ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் .

டாக்டர்.ரஹ்மான்!

அலிகார்: இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த ஒரே ‘இந்திய’ இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

ரஹ்மான் தவிர, டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளரும், முன்னாள் சாஹித்ய அகாதமி தலைவருமான பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அலிகார் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

திடீர் துப்பாக்கி சூடு-2

வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் 14 பிரதிநிதிகள் அடங்கிய குழு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

முன்னதாக,

இன்று காலை டாக்காவில் உள்ள வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர்.படிக்க என் பதிவு--

திடீர் துப்பாக்கி சூடு

. இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர டாக்கா கண்டோன்மென்டில் உள்ள ராணுவத்தினரை எல்லைப் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் அந்நாட்டு அரசு குவித்தது.

இன்று மதியம் வரை இரு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. ஹெலிகாப்டரில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், பிரதமர் ஷேக் ஹசீனா அனுப்பிய 4 உறுப்பினர்கள் கொண்ட தூதுக் குழு ஜஹாங்கீர் கபீர் நானக் தலைமையில் சென்று, வங்கதேச எல்லைப்படை தலைமை அலுவலகத்தில் வீரர்களுடன் பேச்சு நடத்தியது.

இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேச வங்கதேச எல்லைப்படையின் தரப்பில் 14 பிரதிநிதிகள் கொண்ட குழு, தூதுக் குழுவினருடன் பிரதமர் இல்லத்திற்கு சென்றது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜமுனா குடியிருப்பில் வங்கதேச எல்லைப்படையின் பிரதிநிதிகள் குழு மாலை 4 மணியளவில் பிரதமர் ஹசீனாவை சந்தித்து பேசியது. எனினும் இதில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளரிடம் பேசுகையில், கலகத்தை கைவிட வேண்டுமென்றால் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுடன், தலைமை அலுவலகத்தை சுற்றிக் குவித்துள்ள ராணுவத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் பின்னர் தங்களுடன் பிரதமர் நேரடியாகக் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.

இதேபோல் மற்றொரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கூறுகையில் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தலைமை அலுவலகத்தை தரைமட்டமாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்லம்டாக் வெட்கக்கேடு!

 

ஸ்லம் டாக் படத்தில் நடித்த குழந்தை

நட்சத்திரங்களுக்கு விரைவில் புது வீடு கிடைக்கும்

என்று அரசியல்வாதிகளின் அறிக்கைகள்

வரத்துவங்கியுள்ளன!

பந்த்ரா குடிசைப்பகுதியில்தான் படத்தில் நடித்த அசார்

வசிக்கிறான். அவனுடைய பெற்றோர் விரும்புவது

எல்லாம் ஒரு நல்ல வீடு. இவர்கள் வசிப்பது

டெண்ட்போன்றது!

 

2 மாதாதிற்கு ஒரு முறை மும்பாய் முனிசிபல்

புல்டோசர் கொண்டு பொறம்போக்கில் கட்டிய வீடுகள்

என்று இடித்துத்தள்ளுவதும் பின் இவர்கள்

கட்டிக்கொள்வதும் வாடிக்கை.

 

ரூபினாவின் வீடும் இங்குதான்

உள்ளது,அவர்களுக்கும் இதே நிலைதான்!!

 

படத்தின் வெற்றியை தங்களுக்குச் சாதகமாக

மாற்றிக்கொள்ளப்பார்க்கும் லோகல் காங்கிரசார்

முதல்வரிடம் இவர்களுக்கு வீடு

வழங்கக்கோரியுள்ளனர்..

முதல்வரோ பிடி கொடுக்காமல் பேசியுள்ளார்.

படத்தின் புகழ் மறைவதற்குள் நடந்தால் உண்டு!

 

இந்திய ஏழ்மையை வைத்து படம் எடுப்பதும்,

பதக்கம்,பரிசுகளை வெல்லுவதும்,அதனை

இந்தியாவின் சாதனை என்று சொல்லி இந்தியர்கள்

கொண்டாடுவதும் இந்தியாவின் சாபக்கேடு!

 

படத்தின் முக்கிய கருவைக்கருத்தில் கொண்டு

இத்தகைய நிலை மாற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுவே படத்தின் சாதனை.அப்படி ஏதாவது நடந்ததா

என்றால் இல்லை.

 

நாயகனும் நாயகியும் ஈடுபாட்டுடன் நடித்து ஜோடியாக

படத்தின் புகழ் பரப்ப வெளிநாடெல்லாம்

சுற்றுகிறார்களாம். காதல் வேறாம்.

இந்த விசயங்களில் செலுத்தும் கவனத்தை

குழந்தைகளின் எதிர்காலங்களில் செலுத்துவார்களா?

 

ஏற்கெனவே கோடீஸ்வரர்களாக இருக்கும் அனில்

கபூர்.ஏ.ஆர்.ரஹ்மான்,மேலும் பணக்காரர்களாக

ஆனதுதான் மிச்சம்.

 

கோலாகலமாக வெற்றியை கொண்டாடும் போது அதே

நகரத்தில் இத்தகைய சேரிகளும் உள்ளன என்று

இவர்கள் சிந்திக்கவே இல்லையா? அல்லது படம்

இவர்களை பாதிக்கவே இல்லையா?

 

படத்தைப்பார்த்து உருகி  பரிசு வாங்கவேண்டும்!!என்ற

நோக்கத்தில் ஆஸ்கார் தேர்வுக்குழுவுக்காக மட்டும்

எடுக்கப்பட்டதா இந்தப்படம்??

Tuesday 24 February 2009

திடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி!!

 

   பங்களாதேசத்தில் பில்கானா , டாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல்.

 

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்

அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர் ஜெனரல்

சுடப்பட்டு இறந்தார். மேலும் பல அதிகாரிகளும்

இறந்தனர்!

இதில் நிறைய அதிகாரிகளை பினைக்கைதிகளாக்ப்

பிடித்து வைத்து உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில்

ஒரு பள்ளியும் உள்ளது!

இந்த கலவரம் சம்பள உயர்வு கேட்டு என்று

தெரிகிறது!!

ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

 

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் கதையைப் போலத்தான் என் வாழ்க்கையும் என்றாலும், நான் அந்தளவு போராடவில்லை என்றே நினைக்கிறேன் என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல நாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டி:

'ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். மும்பை சேரிப் பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?

முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் என்னிடம் பேசினார். டேனி தனது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய 'டிவிடி'யை பார்த்தேன். அதில் படம் குறித்த தகவல்கள் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். பின்னர் மூன்று வாரங்களில் இசையமைத்துக் கொடுத்தேன்.

இந்தப் படத்தின் கதை உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்ததா?
ஒரு விதத்தில் ஆமாம்... ஆனால் இந்த அளவுக்கு நான் போராடவில்லை என்றே நினைக்கிறேன். நானும் நடுத்தர குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்கள் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டன. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிற அளவுக்கு வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்குப் பின்னால் பெரும் போராட்டங்கள் இருந்தது உண்மைதான்.

பாய்ல் உங்களிடம் எந்த மாதிரியான இசையை எதிர்பார்த்தார்?
சென்டிமென்ட், சோகமான இசையே வேண்டாம் என ஆரம்பத்திலேயே அவர் கூறிவிட்டார். சில காட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதைக்கூட மாற்றும் வகையில்தான் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கையை வலியுறுத்தும் விதத்தில் இருக்கும் அந்த இசை.
'ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் இப்போதுதான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற்றுள்ளேன். இது புதிய அனுபவம். இனிமையாக, த்ரில்லிங்கான அனுபவம்

 

நீங்கள் முதலில் பெற்ற சம்பளம்?
முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.

ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?
சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன். பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?
எலிசபத்' படத்திற்காக இது வரை எந்த இசையமைப்பாளரும் முயற்சித்திராத புதிய பாணியில் இசையமைத்தேன் என்றார் ரஹ்மான்.

வெளிநாட்டு முட்டாள்கள்!!

 

பரோலில் விடுதலை செய்யப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாத்திமா நகரில் ஆசிரமம், மற்றும் பள்ளிகளை நடத்தி வந்தார் பிரேமானந்தா.

(நம்ம மக்களுக்கு மறதி அதிகம்!  ஞாபகப்படுத்தனும் இல்ல!!).

கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், த‌ன்னை மு‌ன்கூ‌ட்டி ‌விடுதலைசெ‌ய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்பிரேமானந்தா மனு ஒ‌ன்றை தா‌க்க‌ல் செ‌ய்‌தா‌ர்.

அ‌ந்த மனு‌வி‌ல், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

(நல்லா இருக்கே!!)

 

இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் மு‌ன்‌னிலை‌யி‌ல் ‌விசாரணை‌க்குவ‌ந்தது. அ‌ப்போது, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.
மேலு‌ம் ‌பிரேமான‌ந்தா சீடர்கள் மனுவும் ‌நிராக‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

(நல்ல வேளைடா சாமி)

 

இந் நிலையில் இவரது ஆசிரமத்தில்  23ம் தேதி சிவராத்திரி பூஜை நடைபெற்றது.  இதில் கலந்து கொள்ள இவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டு  தனது ஆசிரமத்துக்கு வந்தார்.

இவருக்கு 6 நாட்கள் மட்டுமே (ஆறு நாளா? பத்தாதா?) பரோலில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் 27ம் தேதி இவர் கடலூர் சிறையில் அடைக்கபடுகிறார்.

இதேல்லாம் மேட்டர் இல்ல!

வந்த பிரேம்ஸ் வெளிநாட்டு,உள்நாட்டு பக்தைகள் முன்னிலையில் பூஜை செய்து லிங்கத்தை வாயில் இருந்து வரவழைத்தார்!!! பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!!(ஆறு நாள் பரோலில் என்னென்ன பண்ணுவானோ தெரியலயே)!!

பிரேமானந்தா மீது இவ்வளவு புகார்கள் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இவரைத் தேடி வரும் வெளிநாட்டு பக்தைகளின் எணணிக்கை மட்டும் குறையே இல்லை. ஏராளமான பக்தைகள் இவரது ஆசிரமத்துக்கு வந்தவண்ணம் இருக்காங்களாம்!

என்னடா உலகம் இது?

.

ஒபாமாவின் ஆசை!

 

எட்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்

சென்ற ‘ஸ்லம்டாக்

மில்லியனர்’படத்தைப் பார்க்க அமெரிக்க அதிபர் பராக்

ஒபாமா விரும்புவதாகவெள்ளை மாளிகை

தெரிவித்துள்ளது.

ஹாலிவுட் திரைத்துறையின் உயரிய விருதாக

ஆஸ்கார் கருதப்படுகிறது.

ஆஸ்கார் விருது விழாவில் மும்பையில்

உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான ஸ்லம்டாக்

மில்லியனர் 8 விருதுகளை வென்றது.

இதனால் சர்வதேச அளவில் இப்படத்திற்கு புகழ்

கிடைத்துள்ளது.இந்நிலையில், இப்படத்தைப் பார்க்க

அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புவதாக வெள்ளை

மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ்

தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை

தெரிவித்த அவர், " சமீபத்தில் நிறைய படங்களை

ஒபாமா பார்த்துள்ளார். அவற்றில் பல படங்கள் 7

முதல் 10 வயது உடையவர்களுக்கானது.

குழந்தை மனசு ஒபாமாவுக்கு!

அந்த வகையில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை

அவர் ஏற்கனவே பார்த்து விட்டாரா எனத் தெரியாது.

ஆனால் அப்படத்தைப் பார்க்க அவர் விரும்புகிறார்

என்று மட்டும் தெரிகிறது " என்றார்.

அவருக்கிட்ட கேக்க வேண்டியதுதானே!

பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி!

அதிர்ச்சி! ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் பிடிவாரண்ட்!!!

     

        ழக்கொழிந்த சொற்கள் தொடர் பதிவுக்கு நம்ம

செய்யது கூப்பிட்டார். ஏற்கெனவே நிலாவும்

அம்மாவும்  உங்களுக்குப்பிடித்த நபர் னு ஒரு

தொடர் பதிவுக்கு அழைத்து அதப்பத்தி இப்பத்தான்

போட்டேன்!

      தொடர் பதிவுக்கு நான் அழைத்து டிமிக்கி

கொடுக்கும் (காணாமல் போன சொற்கள் போல

இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)

ஜமால்,

செய்யது,

அபு அப்ஸர்

ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும்

(எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!).

ஏன் சொல் உபயோகமில்லாமப்போகுதுன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு!

காரணம் யாராவது சொன்னா நல்லா இருக்கும்!

கீழே உள்ள சொற்கலெல்லாம் கூட உபயோகத்தில் இல்லையாம்!

 

அகன்றில்-ஆண் அன்றில் பறவை

 

அகப்பு-ஆழம்

 

அகளி-மண் ஊறுகாய் ஜாடி

 

அதள்-தோல்

 

இட்டரை-  இரு புறமும் வேலிகள் உடைய குறுகிய பாதை. பெரும்பாலும், ஒரு மாட்டு வண்டி மட்டும் செல்லத்தக்க அகலத்தில் இருக்கும்.

 

அஃகரம்- தாவர இனம். வெள்ளெருக்குச்செடி

 

அகன்மணி-அகலமான இரத்தினம்

 

அக்கணா-தான்றி மரம்

 

அக்காரம்-ருத்திராட்ச கொட்டையால் ஆன மாலை

 

அதர்-வழி

 

அஃகம்-தானியம்

 

அலரி-அரளி

 

அசகம்-ஆடு

 

அகங்கை-உள்ளங்கை

 

அடலை-போர்க்களம்

 

இப்படியே ஏகப்பட்டது இருக்குங்க! எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்!

அவை கீழே!

வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல்

பிருமணை-பானைக்குக்கீழ் வைக்கும் ரிங்க் போல உள்ளது!

வாங்குப்பலகை-குளிக்க, சமைக்க அமரும் சிறிய மரப்பலகை

சொளகு,சொலகு-அரிசி புடைக்கும் முறம்

கொட்டான்- பனை ஓலையில் செய்த சின்ன கின்னம் போல்

கடகம்- பெரிய பனை ஒலைப்பெட்டி

வாங்கருவா-தொரட்டி போல் மரத்தின் உயரத்தில் இருக்கும் காயைப்பிடுங்க உதவும் அரிவாள்+ நீண்டகம்பு

குதிரைவல்லி-ஒருவித சிறிய தானியம்-முன்பு அரிசியில் கலந்து வரும்.

பனங்கை-பனைமரம் வெட்டி சீர் செய்த துண்டு! குடிசை போட வாங்குவர்.

செய்-வயல்..

இவற்றில் சில இன்றும் கிராமப்புறங்களில் உண்டு!!

அதே மாதிரி இதுக்கும் தொடர் பதிவு உண்டாம்!!

விதிப்படி குறைந்த பட்சம் 3 பேரைக்கூப்பிட வேண்டுமாம்!

நம்ம கொஞ்சம் அதிகபட்சம்தானே!இதோ நான் அழைப்பவர்கள்-

வேத்தியன் -வேத்தியன் பக்கம்

ஹேமா-வானம் வெளித்த பின்னும்!

நிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி!

அன்புமணி-இலக்கியா

இயற்கை-இதயப்பூக்கள்!

மிஸஸ்.டவுட்- மிஸஸ் டவுட்

அருணா-அன்புடன்அருணா!

கவின்-கவின்

 

+

ஜமால்,

செய்யது,

அபு அப்ஸர்

இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!

தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!

தேவா.

Monday 23 February 2009

ஸ்லம் டாக் காதல்!!

 

  

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் காதலர்களாக

நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும்

புதுமுகங்கள் - ஜமல் மலிக்காக தேவ் படேல்,

லதிகாவாக ஃப்ரீடா பிண்டோ! இருவரும் கதைக்குள்

கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார்கள். நடிப்பிலும்

பாஸ் மார்க்.

          அனில்கபூர் இவர்கள் இருவரும் நிஜ

வாழ்விலும் கதலிப்பதாகக்  கூறியுள்ளார்! மேலும் ஒரு

அமெரிக்க ரேடியோ பேட்டியில் இருவருக்கும்

இடையில் ஒரு மாயக்கவர்ச்சி இருப்பதாகக்

கூறியுள்ளார்.மேலும் இருவரும் மிகச்சிறந்த ஜோடி

என்கிறார்.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)

       

பிண்டோமாடல்அழகியாஇருந்தவர்,திருமணமானவர்.

படம் புகழ் பெற்றவுடன் கணவனை கைவிட்டுவிட்டார்!

(இப்பிடித்தான் இருக்க வேண்டும்................)

        

18 வயதான படேலும், 24 வயதான பிண்டோவும்

உலகம் முழுவதும் படத்தை

விளம்பரப்படுத்துவதற்காக ஒன்றாகச் சென்றதால்

நெருக்கமாகி விட்டதாக சொல்லப்படுகிறது!

        

சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா

இவன்க உண்மையிலேயே

காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி?

தேவா.

 

.

.

செல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்!!

 

சிலாங்கூர் நிர்வாக மன்ற உறுப்பினரும் புக்கிட் லான்ஜான் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எலிசபெத் வோங், அவரது நிர்வாணப் படங்கள் பொது மக்களிடையே பரப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து தமது இரு பதவிகளையும் ராஜினமா செய்திருக் கிறார்.

இதனால் இரு மாதங் களுக்குள் 3வது இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் நிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் செவ்வாய் கிழமை அன்று கைத் தொலைபேசி வழியாக பரவியதைத் தொடர்ந்து மலேசியாவில் அரசியல் புயல் வீசியது.

“நான் தவறு எதுவும் செய்யவில்லை. திருமண மாகாத ஒரு பெண் என்ற நிலையில் என்னுடைய காமத்தன்மை குறித்து வெட்கப்படவில்லை,” என்று கண்ணீருடன் எலிசபெத் வோங் சொன்னார்.

“நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை ஆற்றுவேன், நீதிக்காகப் போராடுவேன்,” என்றும் நாடறிந்த மனித உரிமைக்காகப் போராடும் எலிசபெத் வோங் சொன்னார்.
நிர்வாணப் படங்கள் உங்களுடையதா? என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருடைய முன்னால் காதலர் அவருக்குத் தெரியாமல் அந்தப் புகைப்படங்களை எடுத்ததாக பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
அண்மையில் எலிசபெத் வோங்கும் அவருடைய காதலரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.

 

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங்கின் சர்ச்சை குறித்து மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து  மாநில அரசு, சுல்தானின் ஆலோசனையை நாடும்.

“அவ்விவகாரம் பற்றி விளக்கமளிக்கவும் ஆலோசனை பெறவும் சுல்தானைச் சந்திப்பேன்”, என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

“சில தரப்பினர், அவரின் (வோங்) நற்பெயருக்கும், ஒழுங்குக்கும் களங்கம் கற்பிக்கும் இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருப்பது அவப்பேறான ஒரு விசயமாகும்.

“இப்படிப்பட்ட வெட்கக்கேடான செயலையும் அதைச் செய்தவர்களையும் கண்டிப்பதில் சிலாங்கூர் மக்களும் சக மலேசியரும் ஒன்று சேர்வார்கள் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.

தமது நிர்வாணப் படங்கள் பொதுமக்களிடையே புழக்கத்துக்கு வந்தததன் தொடர்பில் வோங், இன்று காலை  புக்கிட் லஞ்சான் சட்டமன்ற பதவியையும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியையும் துறந்தார்.

கட்சியின் நலனை முன்னிறுத்தி வோங் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று காலிட் கூறினார்.

வோங்கிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெற்றதை காலிட் உறுதிப்படுத்தினார்.

“அவருக்கு இது ஒரு சிரமமான நேரம். அதனால் முதலில் விடுப்பில் சென்று நன்கு ஓய்வெடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளேன்”, என்றாரவர்

திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள்! நடக்குமா?

நடிகர்,கலைஞநடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலில் இறங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா, நடிகர் சங்கம் சார் பில் ராதாரவி உட்பட தயாரிப்பாளர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.இதில்தான் இப்படி ஒரு முடிவு பண்ணி இருக்காங்க!!

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் நஷ்டமடைந்தால் அந்தப் படத்தில் நடித்த நாயகன், நாயகி, இயக்குனர் மூவரும் அந்தப் படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து ஓராண்டிற்குள் அந்த தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் படம் நடித்து தர வேண்டும்.

சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது!

இதெல்லாம் நடக்குமா? சாமி!

சிறிய பட் ஜெட் படங்கள் வாரத்தில் இரண்டு படங்கள் மட் டுமே வெளியிடப்படும்.
பெரிய பட்ஜெட் படங் கள் ரிலீஸ் ஆன நாளிலிருந்து ஒரு வருடம் கழித் தும், சிறிய பட்ஜெட் படங்கள் ஆறு மாதத்திற்கு பிறகும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

படத்தை வினியோகஸ்தர்கள் இன்றி நேரடியாக ரிலீஸ் செய்தவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் விரும்பும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

"விசிடி' நேரடி ரிலீஸ் குறித்தும் சங்கத்துடன் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

நடிகர், நடிகைகள், இயக் குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அட்வான்ஸ் அடிப்படையில் தான் படங் கள் முடித்துக் கொடுக்க வேண்டும்.

அட் வான்ஸ் விவரங்களை தயாரிப் பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சங்கம் உதவும்.

கார்ப்பரேட் நிறுவனங் கள் படங்கள் தயாரிக்கும் போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள குறைந்தது மூன்று நேரடிப் படங்களையாவது தயாரித்துள்ள தயாரிப்பாளரின் பெயருடனும், அவரின் ஒப்புதலோடும் தான் படம் தயாரிக்க வேண்டும்.

அதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.

மேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா?

இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?

தளராத தமிழ் எழுத்தாளர்!

 

 

இர‌ண்டு ஆ‌‌‌ஸ்கா‌ர் ‌விருதுக‌ள் பெ‌ற்ற இசையமை‌ப்பாள‌ர் ஏ.ஆ‌ர்.ரகுமானு‌க்கு தமிழக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிவாழ்த்து தெரிவித்துள்ளார்.

தள்ளாடிய வயதிலும் தமிழைத் தள்ளாத,அயராத எழுத்தாளர்-கருணாநிதி!!!

அவரின் தமிழைக்கொஞ்சம் பருகுவோமா?

 

, இசை என்றாலே தமிழி‌‌ல் புகழ் என்று தான் பொருள். அந்தப் பொருளுக்குஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்றுசிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடுநம்முடைய வாழ்த்துக்களைப் பெறுகிற,சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான்.இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள்கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச்செல்வம் இன்று ஆஸ்கார் விருதுகளைப்பெற்றதின் மூலம் தரணி வாழ் கலைஞர்கள்உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்லவேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக்கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை.ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார்பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்தவிருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத்தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும்,தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன்இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும்,உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று,மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடுசேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகின்ற போது, அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் எ‌ன்று கருணா‌நி‌திகூறியுள்ளா‌ர்.

Sunday 22 February 2009

ஏ. ஆர். ரஹ்மான்! சாதனை இந்தியன்!

'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு

இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த

இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான

இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்

விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் மணிரத்னம் இயக்கத்தில்

வெளிவந்த ரோஜாதிரைப்படத்தின் மூலம்

இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி,

தமிழ், ஆங்கிலம்மற்றும் பல மொழித்

திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல்

என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப்

விருது, பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட

விருதுபோன்ற புகழ் பெற்ற விருதுகளைப்

பெற்றவர்.ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக்

மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு

இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம்

ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா

விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற

முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப் குமார்.!!.

அவருடய இணைய தளம்--இதோ  ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தியர்களுக்கு பெருமை!

    

ஏ.ஆர். ரஹ்மான் அடக்கத்தில் இருந்து ரஹ்மான் எப்போதும் வழுவியதில்லை..

"உயர உயரப்பணிவு கொள்பவனுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இது"..

 

ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகளை தனது தயாருக்கு

சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

         

            'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தி‌ற்கு

இசையமை‌‌த்த ஏ.ஆர்.ரகுமான், சிறந்த

இசையமைப்பாளர் மற்றும் பாடலுக்கான

இசையமைப்பாளர் ஆகிய இரண்டு ஆஸ்கார்

விருதுகளை பெற்று, சாதனை படைத்துள்ளார்.

         இன்று ஆஸ்கார் விருது கிடைத்துவிட்டது, நம்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு!கனவு கண்டது

கிடைத்துவிட்டதுபேசாமல் சாதித்து விட்டார்.

A.R. Rahman wins two Oscars for "Slumdog"

 

.இந்தியாவில் இதுவரை யாருக்கும் கிடைக்காத

பெருமை ஆகும். இந்தப் படம் அண்மையில்

கோல்டன் குளோப் என்ற சர்வதேச விருதைப்

பெற்றது. இந்தப் படத்தில் இசையமைத்ததற்காக

ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பளார் விருதும்

கிடைத்தது. .

இரட்டை ஆஸ்கார் விருது பெறும் முதல் இந்தியர்

ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்கு சிறந்த

ஒலிக்கலவை பிரிவில் ஆஸ்கார் விருது

கிடைத்துள்ளது. ரெசூல் பூக்குட்டி என்ற இந்தியர் இந்த

விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தப் பிரிவில்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் என்ற

பெருமையை அவர் பெற்றுள்ளார்

 

இந்திய சிறுமியை மையமாக வைத்து

தயாரிக்கப்பட்ட 'ஸ்மைல் பிங்கி' என்ற

குறும்படத்துக்கு சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான

விருது கிடைத்துள்ளது.

வாழ்த்துவோம் அந்த தமிழனை ! ! ! !

தமிழா ! !  வென்று விட்டாயடா ! ! ! ! ! !

 

.

Friday 20 February 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

        

 நிலாவும் அம்மாவும் காலையிலேயே நம்ம செய்திப்பதிவுக்கு 3 கமெண்ட் அடிச்சாங்க.சரி அவர்கள் பதிவைப்பார்ப்போம்னு போய்ப் பார்த்தேன்.அகராதி புடிச்சவ!

         பாப்பா நிலாவுடைய அருஞ்சொல் அகராதியை வெளியிட்டு இருந்தார்கள்!!(நிலா போல கூலா இருப்பாங்க!!!!!!!)

         அதுகுழந்தைகளில்மழலைத்தொகுப்பு!!.அருமையா இருந்த்து!  ரெண்டு கமண்ட் போட்டுட்டு வந்தா மருக்கா வரச்சொல்லி உத்தரவு மெயிலில் வருது!!!

          சரின்னு அங்கே போனா நிலா அம்மாவுடைய ரெண்டாவது முகம்? ”பொன்னாத்தா என்ற சண்டைக்கோழி”!!!எனக்குப்பிடித்தவர்கள்!

          தலைப்பைப்பார்த்தவுடன்   ஆஹா! ஏதோ வெவகாரம், எஸ்கேப் என்று மண்டை ஓரத்தில் மணி அடிச்சது.

           சரி நம்ம இதுக்கெல்லாம் பயந்த ஆளான்னு உள்ளே போனா நல்லா மாட்டிக்கிட்டேன்.!  அவுங்க ஆபீசில் வேலையில்லாத நேரத்தில் (அதாவது காலை 10.00-மாலை 6.00 வரை!  சும்மா! ஜோக்கு! கோவிக்கவேண்டாம் நிலா அம்மா!)   உங்களைக்கவர்ந்த மனிதர் யார்? என்று எல்லோரும் சொல்லனும்னு ஒரு  முடிவு பண்ணி அதைத் தொடர் விளையாட்டா ஆரம்பித்து விட்டாங்க. அதோட விட்டா பரவாயில்லை.

அவங்க ஆபீஸில் ஆரம்பித்த தொடர் விளையாட்டு கணினிக்குள் வைரஸ் மாதிரி பரவி பலரைத் தாக்கி விட்டது! அதுல என்னையும் கலந்துக்கச்சொல்லி அழைப்பு!! 

வேறு வழி!

எனக்குப்பிடித்தவர்-- புராணகாலத்தில்

1.கர்ணன்! கர்ணனைப் பிடிக்காதவர் உண்டோ? போர் என்றாலே சாவுதான்! எவனோ 2 பேர் பிரச்சினையில் ஆயிரம் பேர் சாகும் இடம் போர்க்களம்! அதிலேயே நேர்மையை நிலைநாட்டினான் கர்ணன்!!  இறைவனை(கண்ணனை) மனிதன் விஞ்சியது இங்குதான் !  

2.அம்பேத்கார்! காந்தி போன்ற மாஸ் லீடர் இருந்த காலத்தில் எல்லோரும் கதருக்கு மாறிய காலத்தில் தனித்து சிந்தித்த ஜீவ நதி! பணம், பதவிக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளில் இந்தியாவில் வந்தவாய்ப்புகள் துறந்து  போராடிய பொருளாதார மேதை!       

இந்த இருவர் போதுமே இப்போது!

                                                                                                   ”விதிமுறைப்படி நீங்க குறைந்த பட்சம் 2 பேரை அழைக்கணும்” .

கூப்பிட்டுவிடுவோம்!

காசா ! பணமா ?

நான் கூப்பிடுவது

1.ஜமால்!     கற்போம் வாருங்கள்!   

2.ஆதவாகுழந்தை ஓவியம்!

3.செய்யது மழைக்கு ஒதுங்கியவை!

4.அபு அஃப்ஸர்என் உயிரே!

5.வேத்தியன் வேத்தியனின் பக்கம்

6.இராகவன் நைஜீரியா..

தேவா..

Thursday 19 February 2009

வக்கீல் போலீஸ் மோதல்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி  மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.

இதனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.

மாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.

இதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது!

மக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.

கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட கோலம்!

 

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!

Tuesday 17 February 2009

எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!!

 

 

                ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத

முடியவில்லை. மன்னிக்கவும்! என்று ரொம்ப நம்ம

அலட்டிக்கிறோம். உண்மைதான்!

நம்மில்நிறையபேருக்கு அப்படித்தான்! எனக்குக்கூட!
                 

                  இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க!
                 

                  மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.
சொல்லவா?

                  1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!

                  2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.

                  3.அவரது மாநில தலைமைச்செயலகத்தை உருவாக்கினார்.

                  4.லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.

                 5.ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.

                6.இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை உருவாக்கினார்.

                7.வயலினில் தேர்ச்சி பெற்றார்.

                8.லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.

               9.பல்கலைக்கழக வேந்தரானார்.

              10.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.

               11.அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்தார்.

              12.அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????

               அப்பாடி  இவர் என்ன மனிதனா?

யார்னு கேக்கிறீங்களா?

                தாமஸ் ஜெஃபர்சன்!!!

3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?

ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!

தேவா..

Monday 16 February 2009

கொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை!

 

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

நான் உனக்காக

எதுவும்

எழுதப்போவதில்லை.

என் எழுத்துக்கள்

எவர் மனதும்

தொடாத போது!

 

படித்து கசக்கி

எறியப்படும் சொற்களால்

என்ன பயன்?

என் எழுத்துக்கள்

எதுவும்

செய்யப்போவதில்லை,

காற்றில்

கரைந்து மறைந்த

உன் அழுகுரல் போல்,

கன்னத்தில் உறைந்து

மறைந்த உன்

கண்ணீர் போல்,

 

நான் எதுவும்

எழுதப்போவதில்லை!

 

என் பேனாவின்

முனை கூர்தான்,

உனக்கு உணவளிக்காத

உன் மானம் காக்காத

என் பேனா எதற்கு?

 

பீரங்கிகளுக்கும்,

குண்டுகளுக்கும் பயந்து

ஓடும்  நீ

என் கதைகள்

படிக்கப்போவதில்லை!

 

துப்பாக்கியும்,தோட்டாக்களும்

துளைத்த உன்

உடலுக்கு என் வார்த்தைகள்

உயிர் தருமா?

 

உனக்குப் பயன்தராத

என் கணினி எழுத்துக்கள்

எதற்கு!

மன்னித்துக்கொள்!

என்னிடம் வார்த்தைகள்

எதுவுமில்லை!

கவிதைகளுமில்லை!!

Friday 13 February 2009

இன்று காதலர் தினம்!

காதல்,காதலர்

இன்று காதலர் தினம்!

காதல் இல்லையென்றால் இந்த உலகில் எதுவுமில்லை. பொதுவாக காதல் என்பது நேசம். பிறர் மீது அன்பு செலுத்துதல்! காதல் என்பது மனிதநேயம். தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். பிறர் மகிழ மகிழ்ந்து, பிறர் வருந்த நெகிழ்ந்து பிறர் உணர்வுகளோடு ஒன்றாகக் கலக்கும் அன்பின் வெளிப்பாடு- காதல்.

மீதம் படிக்க

http://blogintamil.blogspot.com/

Wednesday 11 February 2009

நான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்!

உறவு-குடும்பம்!

உறவுகளும் குடும்பமும் நம் இந்தியக் கலாச்சாரத்தின் தூண்கள்.

இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து.

சுற்றத்தால்சுற்றப்படஒழுகல்செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்!

                                                                    குறள்.

ஆதலினால் இந்த வலைச்சரத்தில் நான்காம் நாளில் என் வாழ்வின் வழியில் இணந்து நிற்கும் என் உறவுகளை நினைவு கூர்கிறேன்!

மேலும் படிக்க

வலைச்சரம் செல்க!!!

                          -------------------------------

Saturday 7 February 2009

வலைச்சர 101 வது ஆசிரியர்!!!

வலைச்சரம்-ஆசிரியர்

101!

என் வலை நண்பர்களே! வணக்கம்!!

என்னை வலைச்சரம் 101வது தொகுப்பாளராக
தேர்ந்து எடுத்து உள்ளது!
தேர்ந்து எடுத்த நண்பர் சீனா அவர்களுக்கு என் நன்றி!
கடந்த இரண்டு வார ஆசிரியர்கள் ரம்யா தூள் கிளப்பி விட்டார்.
ஜமால் அதுக்கு முதல் வாரம் விருந்து வச்சார்!
இந்த வாரம் என் கையில் மாட்டிக்கிச்சி!
வலையை விரிப்போம்!

சரத்தைத் தொடுப்போம்!

வலைச்சர வாசம் பரப்புவோம்!

9.2.2009 முதல் 15.2.2009 வரை என் பதிவுகளையும்

நான் தொகுப்பதையும் படித்தோ, படிக்காமலோ

கருத்துக்களை சொல்ல வந்து விடவும்! அனைவருக்கும் நன்றி.

திங்கள் காலை 10.30க்கு என் முதல் பதிவு

வலைச்சரத்தில் வரும்! அனைவரும் அங்கு

வருக..

கீழுள்ள சுட்டியில் வலைச்சரத்தில் தற்போது என்ன என்று

அறியலாம்!!

வலைச்சரம்-6 ஆம் நாள்

Friday 6 February 2009

போலிகள் உசார்!!போலீஸ் உசார்!!

போலி சாமியார், போலி வைத்தியர்(நான் இல்லை) கேட்டு இருக்கோம்! ஆனா போலி நீதிபதி கேள்விப்பட்டு இருக்கீங்களா?

எங்கேன்னு கேக்கிறீங்க? வேற எங்கெ? சட்டம் ஒழுங்கு கோலோச்சும்(தூய தமிழ் வந்து விழுது)......................
நம் தமிழ்நாட்டில்தான்.
.மாப்பு!!!(அதாங்க நம்ம ஆளு) ஒரு காரை லோன்ல செட் பண்ணி சைரன்,தேசிய கொடின்னு செம அளப்பர............
கேட்டா கேரளாவில் ஓய்வு பெற்ற நீதிபதி!

போலீஸ் சல்யூட்,குவாலிஸ் கார்னு ஏக ரகளை! பக்கத்து வீட்டு பார்ட்டி சந்தேகமாகி போலீஸில் போட்டுக்குடுத்துட்டான்..

போலீஸ் விசாரிச்சா பார்ட்டி லண்டன் போயிட்டார்னு கப்ஸா.

மொபைலில் கால் பண்ணா லண்டனில் இருந்து நேரா வந்து பார்க்கிறேன்னு டூப்.
உள்ளூரிலிருந்து சிக்னல் வருதென்னு பார்த்து வீட்டிலே போய் தேடினா பார்ட்டி வீட்டில் மறைவா இருந்தார்.
அப்புறம் அவர் சிங்கப்பூர் ரிடர்னாம்!!!
இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சிங்கப்பூர் ஆட்களிடம் ஜாக்கிரதை....இஃகி..இஃகி..இஃகி..
கொசுறு: காரை லோன் வாங்க போலி அட்ரெஸ் கொடுத்து உள்ளார். அதுக்கு பணம் கட்டாம நம்பரை மாத்தி விட்டார்!!!!!!!!!! சூப்பர் நீதிபதி..

இப்ப்டின்னா போலீஸை பாத்து போலீசே ஓடுறதை கேட்டு இருக்கீங்களா? நம்ம கோயம்புத்துரிலதான்!

சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களின் சிடி விக்கிறாங்கன்னு திருட்டு வீடியோ ஒழிப்பு ஏட்டு,போலீஸ்கு ரகசிய தகவல் கிடைத்து

இடத்திற்கு விரைந்த திருட்டு வீடியோ ஒழிப்பு போலீஸ் மக்கள் அவனுங்கட்ட 10000 கேட்டு தொல்லை! எப்படி!

எவனோ இதையும் போட்டுக்கொடுத்து விட்டான்..... (போட்டுக்குடுக்கிறவன் தொல்லை தாங்க முடியலைப்பா! தொழில் பண்ண வுட மாட்றானுங்க!!!)
அப்போது அங்கு அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியைக் கண்டதும் லஞ்ச ஒழிப்பு போலிஸ் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடி விட்டனர்( நம்ப ஆளுங்க ஓடுனா புடிக்க முடியுமா?)

சும்மா உக்காராம ஏதாவது எழுதுவோம்னு ஏதோ எழுதினேன்.

.a href="http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_06.html"

அப்படியே பொடிநடையா மேலே உள்ள வலைச்சரம் பக்கம் வாங்க.இன்னிக்கு முழுக்க கடை ரம்யாக்கா
தான்!
வந்து ரெண்டு கும்மி அடுச்சிட்டு போங்க..

Thursday 5 February 2009

எச்சரிக்கை காதலர்களே! உஷார்!

காதலர்களே உஷார்!!!

கண்ட இடங்களில் கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .வருகிற 14 ஆம் தேதி அல்லாக் காதலர்களும் அமுக்கி வாசிங்க.நாங்களுமா நீங்களுமான்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது.

எங்கேன்னு கேக்கறீங்களா?
நம்ம கலாச்சாரத்தலை நகரம் பெங்களூரூவில்தான்!!

என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது கிறிஸ்துவ பாணியில் செய்யப்படுவது.இந்தியர்கள் கடைப்பிடிக்கக் கூடாதுன்னும் சொல்லி இருக்காங்க.

சொன்னதோட நின்னா பரவாயில்லை.அவர்கள் அமைப்பு பொதுக்குழு கூடி
கலந்து முடிவு பண்ணி தீர்மானம் நிறைவேற்றி அவங்க அமைப்பு சார்பில் 5 குழு உருவாக்கி இருக்காங்க.

அந்த 5 குழுக்களும் வீடியோ காமிராவோட(பாருங்க வீடியோ செலவும் மிச்சம்),தாலிக்கயிறுகளுடன் சுத்துவாங்க.

அப்படியே காதலர்களை கையும் மெய்யுமா பிடித்து தாலியைக்கட்ட வைப்பாங்க! தாலி கட்டச்சொன்னாக் கூட பரவாயில்லை. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும் கூட்டிப்போய் பதிவும் பண்ணிக்குடுத்துவிடுவார்கள்(ஃஃஃபீஸ் அவங்களே கட்டிவிடுவாங்களேன்னு கேக்கிறீங்க அதானே! அது நேரில் போய் தெரிந்து கொள்க.)

கல்யாணம் பண்ணமுடியாம வருடக்கணக்கில் பீச்சுகளிலும், பார்க்குகளிலும் உருண்டு கிடக்கும் மக்கள் துணிந்து போகலாம்.கல்யாணம் பண்ணிவிட்டு அந்த அமைப்பிலேயும் சேந்துகிட்டீங்கன்னா வீட்டாளுங்க ஒன்னும் பண்ண முடியாது..

கண்ணாலே காதல் கவிதை படிச்சு(படிப்பை மறந்து) திரியும் சின்னப்பசங்களும்,தள்ளு முள்ளு கேசுகளும் மறந்தும் வீட்டை விட்டு வெளியே போயிடாதீங்க. அன்னைக்கு லீவைப்பொட்டுட்டு சமத்தா வீட்டில உக்காந்து டி.வி.பாருங்க

எச்சரிக்கை தேவா..

Tuesday 3 February 2009

தமிழா! தலைகுனிந்து நில்!

நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!

சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....

,வாங்கிவந்த பலாச்சுளையில் 6 சுளையை தட்டில் வைத்து,.........
உக்கார்ந்து இருக்கோமா படுத்து இருக்கோமான்னு தெரியாத ஒரு நிலையில் தலகாணி மேல் சாய்ந்து மாட்ச் பார்க்க ஆரம்பிச்சேன்!!

கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...

இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!

இதுதாங்க இப்ப என்னுடைய, நம்முடைய உண்மை நிலை!

செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.

இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.

இனி விஷயத்துக்கு வருவோம்!

ஒன்றும் நடக்காததுபோல் இந்திய அணி இலங்கை செல்வதும் இந்தியாவும்,இலங்கையும் விளையாடுவதும்,ஒரு நிமிடம் நினைவுக்கு வந்தவுடன் தொலைக்காட்ச்சிபெட்டியை அணைத்து விட்டு அமர்ந்தேன்.

ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்.

இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..

தமிழர்கள் இந்தியாவிலும் சிறுபான்மையினர்தானோ?
இங்கும் நம் குரல் செல்லாதோ?

ஊடகங்கள் வழி பார்க்கும் எவரும் இலங்கையில்
ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது,

குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்!

பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று நம்ப் முடியுமா?

ஒருநாட்டின் அரசே பயங்கரவாதத்திலும்,இனஒழிப்பிலும் ஈடுபடும் போதும்,
அதற்கு ஆதரவாக ஊடகங்களும்,உலகநாடுகளும் செயல்படும்போதும்

நாம் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியாமல் கூக்குரல் இடமட்டுமே முடிந்த இழிநிலையில் இருப்பதும் கேவலமானதுதான்.

இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.

இலங்கை தன் கலாச்சாரம்,பண்பாடு,வளம் எல்லாவற்றையும் இழந்து கொடுங்கோல் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு,உணவின்றி இறக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையையே அடையும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா! என்று எட்டுத்திசையெங்கும் முழங்கிய
மகாகவி பாரதியும் கண்ணீருடன் இதைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பானோ?
Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory