Tuesday 29 September 2009

பிரிவுபசாரக் கவிதை!

என் தலைமை மருத்துவர் திருமதி. ரூபா அவர்கள் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களின்  பிரிவுபச்சார விழாவில் நான் வாசித்த சில வரிகள்:

 

தந்தையைப் பிரிந்தால் அது கரு!

தாயைப் பிரிந்தால் அது குழவி!

வயலைப் பிரிந்தால் அது நெல்,

உதட்டைப் பிரிந்தால் அது சொல்!

இரவைப் பிரிந்த பொழுதுதான் காலை,

செடியைப் பிரிந்த மலர்தான் மாலை!

மலையைப் பிரிந்த கல்தான் சிலை,

செடியைப் பிரிந்தால்தான் காய்க்கு விலை!

இமைகள் பிரிந்தால்தான் பார்வை,

உழைத்துக் களைத்தால்தான் வேர்வை!

கூட்டைப் பிரிந்தால்தான் பறவை,

நாங்கள் வேண்டுவதோ உங்கள் உறவை!

விண்ணைப் பிரிந்தால் மழைத்தண்ணீர்,

உங்களைப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்!

நாங்கள் பிறந்தது வேறுவேறு தாய்க்கு,

ஆயினும் பிள்ளைகள் இந்த ஒரே தாய்க்கு!

 

உங்களிடம் பிடித்தது உங்கள் பிடிவாதம்,

நாங்கள் செய்ததோ எதிர்வாதம்,

நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்!!

Monday 28 September 2009

என் நினைவுகளிலிருந்து!-காதல்!

 

காதல், அழகு, கடவுள் மற்றும் பணம்!!!

இந்த நான்கு தலைப்புகளில் எழுதச் சொல்லி மூவரிடமிருந்து அழைப்பு!

காதல்- காதலுக்கு யார் விளக்கம் சொல்ல முடியும்? காதல் ஒவ்வொருவராலும் உணரப்படும் ஒரு உணர்வு.

இளம் வயதில் ஐந்தாம் வகுப்பில்  படித்த, இப்போது பெயர்தெரியாத  பெண்ணைப் பிடித்தது காதலா? முகம் மறந்துபோன கலங்கலான இன்னும் மறக்காத அந்த நினைவுகள் இன்னும் மன ஆழத்தில் உள்ளனவே! ஆயினும் அங்கு உடல் கவர்ச்சி ஏதுமில்லை. ஆயினும் அந்த நினைவுகள் மறக்கவில்லை.

வாழ்வின் ஒரு தருணத்தில், ஏதாவதொரு தருணத்தில் வரும் அழகிய காதல் போல் எதுவுமில்லை என்று சொல்லலாம்!

தாஸ்தாவ்ஸ்கியின் ”வெண்ணிற இரவுகள்” போல் காதல் ஒரு மாயவலை! ஆழமறிந்தார்ப் போல் இருந்தாலும் அறியமுடியாத வளைவுகளைக் கொண்ட அற்புதத் தீ அது!  அந்தத் தீயின் சுவையை அறிந்தவர்களாலும் சொல்லமுடியாத அற்புத வேதனை அது.

”காதலா? அப்படியென்றால் என்ன?“ என்று கேட்கும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் என் நெருக்கமான நண்பகளும் கூட! அவர்களுக்கும் காதல் கவிதைகளை அப்போது எழுத்த் தொடங்கியிருந்த எனக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது ஆச்சரியம் என்பதைவிட சூழ்நிலையின் கட்டாயம்தான் என்றும் கூறலாம். இன்றும் கூட என் தலைமை மருத்துவ அதிகாரியின் பிரிவுபச்சாரத்தில் நான் ஒரு கவிதை வாசித்தபோது ஆச்சரியக் கரவொலி எழுப்பியோர் அதிகம்.

”உன் இன்னொரு முகத்தை இதுவரை காட்டவில்லையே தேவா!”  என்று சிரித்தார் என் நண்பர்.

காதல் கவிஞர்கள் எப்போதும் என் நண்பர்களாக அமையவில்லை! எல்லோருக்கும் இதுபோல்தானோ?

கல்யாணத்தில் முடிந்தால்தான் காதல் வெற்றிபெற்றதாகக் கூறும் முட்டாள்கள் இங்கு நிறையப் பேர்.

காதல் யார் அழைத்து வந்தது? ஒரு காற்றுப் போல் அனுமதியின்றி  நுழைந்து ஆக்கிரமித்த காதலை எப்படிச் சொல்வது?

இத்தனை வரிகளுக்குள் இந்த இடுகையை முடிக்கமுடியாமல் காதல் மட்டுமே இவ்வளவு வரிகள் என்னை இழுத்து வந்து விட்டதே!

பிரபஞ்சத்தின் அறியமுடியாத மாயம் காதல்! என்னைத் தீண்டிய அந்தக் காதல் எல்லோரையும் தீண்டும்! ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அதன் சுவடுகள் இருக்கத்தான் செய்யும்.

தொடர்ந்து எழுதுவேன்!!

Saturday 26 September 2009

இவரைப் போல் பலரும்!

”என்னைப் போல் ஒருவன் “ வந்தாலும் வந்தது, ஆளாளுக்கு பதிவு போட்டு கலக்கிவிட்டீர்கள்!! நாமும் இதுபோல் போட வேண்டும் என்று ஒரு ஆசை விடாமல் துரத்தியது.

என்னடா செய்யலாம் என்று பார்த்தால் மாட்டினார் உண்மைத்தமிழன்!!

விரயச் சனியின் முடிவும், ஏழரைச் சனியின் துவக்கமும்..! 

என்ற அவரின் பதிவில் என் இடுகையைச் சொல்லியிருந்தார்.

எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்து கை அரித்ததினால் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்து தமிழ்மணத்தை நோண்ட.. மிகச் சரியாகப் பாருங்கள்.. நமது சக பதிவர் தேவன்மாயம், சர்க்கரைக் குறைவு - என்ன செய்ய வேண்டும்? என்கிற தலைப்பில் பதிவு போட்டிருக்கிறார். இது எப்படி இருக்கு..? படித்துப் பாருங்கள் பதிவர்களே.. இந்தக் குறை உள்ளவர்கள் இனிமேலாச்சும் தேவன்மாயம் அண்ணன் சொல்ற மாதிரி சூதானமா நடந்துக்குங்க..
இதைத்தான் தெய்வச் செயல் என்பதா..?
நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இன்னொன்று..
கடந்த இரண்டரை வருடங்களாக
என்னை ஆட்டி வைத்தது 'விரயச் சனி'யாம்.. நமக்குத்தான் செலவே இல்லையே என்று தெம்பாக இருந்தவனுக்கு 'விரயச் சனி' முடிய இருந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் வேலையைக் காட்டிவிட்டான் சனி பகவான்..

---------------------------------------------

இதைச் சொல்லும்போது கட்டாயம் சிலருடைய கேள்விக்கும் பதில் சொல்லணுமே!

” கேள்வி பதிலா? யோவ் ஆளை விடுய்யா ”- என்று பலர் அலறி ஓடுவது தெரியுது! இஃகி! இஃகி!!

எங்கே போகப்போறீங்க! என் நண்பர்கள் (நிறைய நேரம் நானும் எழுதும்!!!) மொக்கைகளைப் படிக்கப்போவீங்க.

சரி!! ஓகே!! சாவகாசமா வந்து தொடர்ந்து படிங்க!

Blogger1.யோகன் பாரிஸ்(Johan-Paris) said..clip_image002.

பயனுள்ள விடயம்.
எனக்கு சர்க்கரை வியாதி இல்லை. இது வரை செய்த சோதனை முடிவு.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட பல அறிகுறிகள் எனக்குப் பல சமயம் இருந்ததுண்டு.
பரிசோதனை வீட்டில் செய்வேன். அளவாகத் தான் உள்ளது.
உணவுக் கட்டுப்பாட்டுடனே வாழ்கிறேன்.ஏன்? இந்த அறிகுறிகள் .
என் வைத்தியருடனும் ஆலோசித்தேன். பரிசோதனைகளின் பின் ஏதும் இல்லை என்றார்.
மகிழ்வே..எனினும் அறிகுறிகள் யோசிக்க வைக்கின்றன.
நன்றி!

25 September 2009 02:05//

இப்படி இருப்பது நார்மல்தான்!! உங்களுக்கு சக்கரை வியாதி இல்லை. பயம் வேண்டாம். சரியான நேரத்தில் சாப்பிடவும். சக்கரை அதிகமாக இரத்தத்தில் சிறிநீரில் இருப்பதையே சக்கரை வியாதி என்கிறோம்.

Blogger 2.வால்பையன் said...

சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு குறைந்தாலும் இதே போல் ஆகுமா?

25 September 2009 02:57///

ஆமாம்!! சக்கரை அதிகம் உள்ளவர்களுக்குத்தான் அடிக்கடி இப்படிக் குறையும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் மிகக் குறைவாகச் சாப்பிட்டும்போது சக்கரை அளவு 140 இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் மாத்திரை போட்டவுடன் 60 இரத்த சக்கரை வந்துவிட்டால் உங்களுக்கு மயக்கம் வந்து விடும். உண்மைத் தமிழன் போல் காலையில் சாப்பிடாமல் போனாலும் இரத்தத்தில் சக்கரை குறையலாம். இதுபோல் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.

3.அபுஅஃப்ஸர் said...

தகவல் அருமை
தாழ்நிலை சர்க்கரைக்குறைவு அந்தளவிற்கு பாதிப்பு குறைவுதான் சரியா

25 September 2009 03:50///

உண்மைதான்! மிகவும் சக்கரை குறைந்து தூங்குகிறார்கள் என்று கவனிக்காமல் விட்டுவிட்டால் சிரமம்!

 

Blogger4.அமர பாரதி said...

தேவா,
நல்ல கட்டுரை. //உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்//. அதிக சர்க்கரை உடனடியாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டு உடனடியாக சரி செய்யப்படாவிட்டால் (சர்க்கரை எடுக்கப்படாவிட்டால்) மூளை பாதிப்பு, கோமா மற்றும் மரணம் கூட ஏற்படும்.
//குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்// நீங்கள் சொல்ல வந்தது, நினைத்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யாமல் ஒரு ஒழுங்குடன் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் என்பது. சரியா டாக்டர்? ஏனென்றால் உடற்பயிற்சி சர்க்கரை அளவைக் குறைக்கும்.//

உண்மைதான்!! மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்!!

 

Blogger5.புதுகைத் தென்றல் said...

ஆஹா எனக்கான பதிவு. நன்றி தேவா.
ஒரு சந்தேகம் தாழ்நிலைச் சக்கரை பரம்பரையாக வர வாய்ப்பிருக்கிறதா?
அம்மா, அப்பா, நான், தம்பி என நாங்கள் இதனால் அவதி படுவதால் கேட்கிறேன்.

25 September 2009 23:19///

தாழ்நிலைச் சக்கரை அப்படி வரலாம். ஆனால் இது ஒரு வியாதி அல்ல! பயம் வேண்டாம்.

 

Blogger6.உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நல்லதொரு விளக்கம் நண்பரே..!
முருகன் புண்ணியத்தில் என் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதிவு போட்டிருக்கிறீர்கள்..!
பார்க்க எனது பதிவு.. http://truetamilans.blogspot.com/2009/09/blog-post_26.html
நன்றி.. நன்றி.. நன்றி..!

26 September 2009 00:19//

என் பதிவு உங்களுக்கு உபயோகமாக இருப்பதில் மிகவும் மகிழ்கிறேன். நான் இதை எழுதியதற்குப் பயன் கிடைத்த சந்தோசம். காலையில் சாப்பிட்டு விடுங்கள்!

Blogger

7.லவ்டேல் மேடி said...

// சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!! //
உடனே மளிகை கடைக்கோ... ரேஷன் கடைக்கோ...... போய் ஒரு கிலோவோ... ரெண்டு கிலோவோ.... வாங்கிட்டு வர வேண்டியதுதானுங்க தலைவரே.....

26 September 2009 15:27///

மேடி! ஜாலியான ஆளுய்யா நீ!!  சமையல் புலி மேடி சொல்வதை அடுப்படியில் பின்பற்றுங்க!!

”இவரைப் போல் பலரும்” கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாச்சு!

----------------------------------------

Friday 25 September 2009

சக்கரைக் குறைவு-என்ன செய்யவேண்டும்!!

 

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும். இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை,  உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.

இவற்றில் எது ஆபத்தானது? தாழ்நிலைச் சக்கரையினால் என்ன அறிகுறிகள் தோன்றும்? இவற்றை அறிந்து கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தாழ்நிலைச்சக்கரை அறிகுறிகள்:

1.உடல் நடுக்கம்

2.படபடப்பு

3.வியர்வைப் பெருக்கு

4.பசி எடுத்தல்

5.உடல் சோர்வு

6.உடல் அசதி

7.தலைவலி

8.குழப்பமான  மனநிலை

9.குழறிய பேச்சு

10.இரட்டைப் பார்வை

11.உடல் ஜில்லிட்டுப்போதல்

12.முகம் வெளுத்துப் போவது

13.மயக்கம், கோமா- சுய நினைவிழத்தல்

நாம் நமது சக்கரை அளவு கூடிவிடாமலும், குறைந்து விடாமலும் கவனித்துக்கொள்வது அவசியம். நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.

ஆனால் உடல் இதற்கு ஏற்ப உடலில் சக்கரையை அதிகப்படுத்த முயற்சிக்கும்.  அப்படி  முடியாத போது மேல் சொன்ன அறிகுறிகள் தோன்றும்.

சக்கரைக்குறைவினால் உடனடியாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது.  உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்.

அதே நேரம் சக்கரை அதிகமிருந்தால் மெதுவாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உடலிலுள்ள உறுப்புக்களை எல்லாம் செயலிழக்க வைக்கும்.

தாழ்நிலை சக்கரையைத் தடுக்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சுய ரத்தப் பரிசோதனை கருவிகளின் மூலம் வீட்டிலேயே சக்கரை அளவை சோதித்துக்கொள்ள வேண்டும்!!

Thursday 24 September 2009

கொஞ்சம் தேநீர்- அன்புக் காதலிக்கு!!

என்றோ நான் எழுதிய கவிதை

என் மனப் பெட்டகத்திலிருந்து!!!

-------------------------------------------

 

 

இனிய காதலியே!

என் மனதில்

அன்புவிதைகளை

ஆழமாய்த் தூவியவளே!

 

மெல்லிய தென்றலாய்த்

தவழ்ந்து என் நெஞ்சில்

வண்ணமலர்களைப்

பூக்கச் செய்தவளே!

 

ஒரு மார்கழி மாதத்தில்

நீயும் நானும்

நடந்து சென்ற பாதைகள்!

 

அந்த சோலைவனக்

குயில்களின்

கீதத்தையும் மீறி

என்னைக் கிறங்கடிக்கச்செய்த

உன் பவளவாய் மொழிகள்!

 

மணலில் பதிந்த

உன் பாதச் சுவடுகளில்கூட

உன் காதலையே

நான் பார்த்த நாட்கள்!

 

இன்றும் நான்

அந்த வழியாகத்தான் செல்கிறேன்!

அன்றிருந்த

சோலைவனத்தை

இன்றிங்கே காணவில்லை,

 

குயிலின் மென் குரலைத்

தேடியலைகிறேன்,

குயிலையே காணவில்லை!

 

அந்த பரந்த

மணல் வெளியில்

உன் பாதச் சுவடுகளைக்

கூடக் காணவில்லை!

 

என் இதயக்கூட்டில்

சேமித்து வைத்த

எண்ண மணிகளெல்லாம்

என் முன்னே

சிதறிக் கிடக்கின்றன!

 

அன்புக் காதலியே!

இன்றும் நான்

அந்த வழியைத்தான்

கடந்து செல்கிறேன்!

 

முன்பிருந்த எதையும்

காணவில்லைதான்!

 

வரண்ட இந்தப்

பாதையிலும் கூட

உன் நினைவுகள்

என் நெஞ்சில்

நிழலாய்ப் படிகின்றன!!

Tuesday 22 September 2009

குழந்தைகள்-கவனம்!!

 

என்னால் என் குழந்தைகளை கவனிக்க இயலவில்லை. அவர்களுக்கு நேரமும் ஒதுக்கமுடியாத அளவுக்கு தற்போது வேலைப்பளு உள்ளது.

”அதனால் என்ன? நான் வார இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் போகிறேன். பிஸா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை என்று அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கிறேன். நானும் பிள்ளைகளும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்”.

இது பெரும்பாலும் தற்போது அனைத்துக் குடும்பங்க்ளிலும் காணும் நிலை. எண்ணிப் பார்த்தால் நம்மில் பலரும் இதைத்தான் செய்கிறோம்.

நம்மில் பலராலும் குழந்தைகளுடன் நம் நேரத்தைச் செலவிட முடியாததை அவர்களுக்குப் பிடித்தமான சாக்கலேட்டுகள், கேக்குகள் சிப்ஸுகள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வுடன் தின்பதைக் கண்டு மகிழ்கிறோம் என்று தோன்றுகிறது.

பொருளாதார நெருக்கடி நேரத்தில் இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், நிறைய அலுவலக வேலைச்சுமைகள் ஆகியவை நம்மால் நம் குழந்தைகளின்  உணவுப் பழக்கங்களை சீராக அமைக்க முடியாததற்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன.

பெருமான்மையான் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் பழக்கத்தை விட்டு டி.வி யிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுவதும், நொறுக்குத்தீனி அதிகம் உண்பதையும் பார்க்கிறோம்.

இதன் விளைவு என்ன?

கருத்துக் கணிப்பின்படி 2004 ல் 16% ஆக இருந்த உடல் பருமனான இளைஞர்களின் விகிதம் 2006லேயே 28% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாம் ஷாப்பிங் காம்ப்ளகஸ், ஏர்போர்ட் என்று எல்லா இடங்களிலும் குண்டான இளைஞர்கள், குழந்தைகளைக் காண்கிறோம். சற்று அந்தக் குழந்தைகளைப் பார்த்துப் பொறாமைப் பட்டு தன் குழந்தைகளைத் திட்டும் பெற்றோரும் உண்டு.  சில குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் குண்டாகவில்லையே என்ற வருத்தம்  உண்டு. 

குழந்தைகள்,இளைஞர்கள் குண்டாகுதல், உடல் எடை கூடுதல் மிக அதிகமாக வளர்ந்த நாடுகளிலும், சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் கவலை கொள்ளத்தக்க அளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 

இதன் விளைவுகள் என்ன?

1.ஆஸ்துமா- உடல் பருமனான குழந்தைகளுக்கு அதிகம் வருகிறது.

2.பித்தப் பைக்கல்-இதுவும் மேல்சொன்னபடியே!

3.இதய நோய்கள்- இது இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

4.இரத்தக் கொதிப்பு-இதுவும் குண்டான இலைஞர்களில் அதிகமாக உள்ளது.

5.ஈரல் நோய்கள்- ஈரல் அழற்சி ஏற்படுதல் அதிகம்.

6.மாதவிடாய்த் தொந்திரவுகள்-விரைவில் பூப்படைதல், பிற்காலத்தில் கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் கட்டிகள் வருதல், ஒழுங்கில்லாத மாதவிடாய்.

7.தூக்கக் குறைபாடுகள்- தூக்க பாதிப்பு, தூங்கும் போது  மூச்சு சரியாக விடமுடியாமை!

இவையனைத்தும் நம் குழந்தைகளின் உடல் நலனைப் பாதித்து அவர்கள் வாழ்வையும் கெடுக்கின்றன.

ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை குழந்தைகளுக்கு நடைமுறைப் படுத்துங்கள். இளம் வயதில் எதைச் சாப்பிடுகிறார்களோ அதுவே அவர்களுக்குப் பிடித்த உணவாக அமையும்!!

கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!!

 

முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்,

கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்,

தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்,

புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்,

உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்,

நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்,

உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!

எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!

Monday 21 September 2009

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

என் இனிய வலை நண்பர்களுக்கு ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் ரசிக்க உலகின் அழகிய மசூதிகளின் படங்கள்!

..

ப்ரொபட் முஹமது மசூதி.

.Masjid-e-Nabwi.

போர்னியோவின் அழகிய மசூதி!!.

.Mosque.

 

பஹரைன் மசூதி.

.Lightful Mosque.

.புரூனை மசூதி

Beautiful mosque.

.amazing pictures.

beautiful mosque photo..

.Blue Mosque.

.mosque.

.amazing mosque.

.Desktop Wallpaper.

.Incredible Photo.

.Mosque Art.

.Faisal Mosque.

மசூதிகளின் அழகும் அவற்றின் அமைப்பும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாக உள்ளன!!

உலகின் பல இடங்களிலும் அமைந்துள்ள இந்த மசூதிகள் கட்டிடக்கலையின் உன்னத எடுத்துக்காட்டாக விளங்குகின்றன!!

Saturday 19 September 2009

சிந்துவும்! சாஷிகாவும்!

சிந்து மனதில் ஏதும் வைத்துக்கொள்ளாத பெண். கல்லூரி மாணவி!!

சாஷிகா பல்துறையில் கலக்குபவர்!! 

இந்த இருவரும்  SCRUMPTIOUS BLOG AWARD எனக்கு  வழங்கிவிட்டார்கள்.விருதுகளை பதிவர்களிடையே அன்பை வளர்க்கும் ஒரு பாலமாகத்தான் நான் கருதுகிறேன். கொடுப்பதும் பெறுவதும் மனத்துக்கு மிகவும் இதமான விசயம்.
 
.

 

1.சாஷிகா- சாஷிகாவின் பதிவுக்குப் போனால் அசந்து போவீங்க! அவ்வளவு அருமையான சமையல் குறிப்புகளுடன் பிச்சு உதறியிருப்பாங்க. இறால் சமையல் குறிப்புகள் அவர்கள் தளத்திலிருந்து சுட்டு உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளேன். பிளாகில்தான் நாம இந்த மாதிரி சமையலைப் பார்த்து நாக்கைத் தொங்கப்போட முடியும்.  இதே ஞாபகத்தில் வீட்டில் போய் இந்த மாதிரி சமைன்னு  கேட்டீங்க.. கிடைகிறதே வேறயா இருக்கும். ஒரு எச்சரிக்கைக்காகச் சொன்னேன்.!!! இஃகி!! இஃகி!!

இறால் தொக்கு!!.

Labels: அசைவம், இறால், வறுவல் - Thursday, 13 August 2009

தே.பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் - 500கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை கட் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு+இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.
*ஈஸி இறால் தொக்கு ரெடி.

*************************************************


2.சிந்து - சிந்துவும் இந்த விருதை எனக்குக் கொடுத்து உள்ளார்கள்.

சிந்து மாணவர்தான். அன்பு , நடைமுறை வாழ்க்கையை உன்னிப்பாக கவனித்து பதிவிடுபவர் .  அவர்  பணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

பணம்
இது இல்லாவிட்டால் எவ்வளவு பெரிய புண்ணியவானாக இருந்தாலும் வாழ முடியாது. பணமா குணமா என்று கேட்க்கப்படும் கேள்விக்கு அதிகமானவர்களின் பதில் பணமாகவே அமைகிறது. பணம் இல்லாத காரணத்தால் மட்டுமே பலர் பலரால் புறக்கணிக்கப் பட்டத்தை என் வாழ்நாளின் பல பாகங்களில் கண்டிருக்கிறேன். பணம் இல்லாததால் நான் அனுபவித்த துன்பங்களும் பல (இதானால் குணத்துக்கு நான் முன்னுரிமை கொடுக்கவில்லை என்று நினைக்க வேண்டாம் - எனக்கு இந்த இரண்டுமே வேண்டும் என்பது தான் உண்மை..)வாழ்க்கையின் எந்த மூளையையும் இது தட்டும் வரை மக்களிடையே பிரச்சனை தான். உறவுகள் பாசத்தால் இணைக்கப் பட்டவை என்று கூறுவதெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதது (அதற்காக எல்லா உறவுகளையும் சொல்ல வரவில்லை...) இப்போதெல்லாம் சில உறவுகள் பணத்தை நம்பியே என்பது தான் உண்மை.

*************************************************


இந்த விருதை இன்னும் பத்து பேருக்குக் கொடுக்கணுமாம்.

1.ஜெரி ஈஷாநந்தா-http://jerryeshananda.blogspot.com

2.சிங்கக் குட்டி-http://singakkutti.blogspot.com/.

3.எஸ்.ஏ.நவாசுதீன்.http://syednavas.blogspot.com/

4.ஹேமா-http://kuzhanthainila.blogspot.com

5.கதிர்-ஈரோடு-http://maaruthal.blogspot.com/

6.அன்புமணி-http://anbuvanam.blogspot.com/

7.பட்டர்ஃப்ளை சூர்யா-http://butterflysurya.blogspot.com/

8.விதூஷ்-http://vidhoosh.blogspot.com/

9.ஸ்ரீ-http://sridharrangaraj.blogspot.com

10.சி @ பாலாசி.http://balasee.blogspot.com/

ஒரு வழியாகப் பத்துப்பேருக்கு இந்த விருதை வழங்கிவிட்டேன். அவர்கள் இதனைப் பத்துப் பேருக்கு வழங்கலாம்!!

தமிழ்த்துளி தேவா!!

Friday 18 September 2009

சைபர்கிரிமினல்கள்-டாப்-8 !!

நண்பர்களே!!

சைபர் கிரைம் பற்றி  நாம் படித்திருப்போம். கம்ப்யூட்டரும் கிரெடிட் கார்ட் வர்த்தகத்திலும் இந்த மோசடிகள் அதிகம் நடக்கிறது. உலகம் செல்லும் பொருளாதாரப் பாதையில் நாமும் செல்லவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

உலக அளவில் சைபர்கிரைம் என்பது பல நிறுவனங்களின்  பொருளாதாரத்தைக் கூட பாதிக்கும் என்பது அதிர்ச்சியான ஒன்று என்றாலும் இப்படிப்பட்ட செயல்களை நாம் ஆங்கிலப் படங்களிலும் செய்திகளிலும் காண்கிறோம். இதனைப் பற்றி அறிவது மிகவும் அவசியமாகத்தெரிகிறது.

மிகவும் பயங்கரமான சைபர் கிரைம்கள்பற்றிப் பார்ப்போம்.

1.கோடியாக்-KODIAK- கோடியாக் மிகவும் புத்திசாலித்தனமாக மிகப் பெரும் பணக்காரர்களின் வங்கிக்கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து  பல நாடுகளிலும் போலி கம்பெனிகளின் பெயரில் மாற்றிவிட்டான். அவன் மாற்றிய தொகை $10.7 மில்லியன். அப்புறம் என்ன? மூன்று வருட ஜெயில் தண்டணை அனுபவித்தான்!

2.டான் ஃபனுச்சி-DON FANUCCI-இவன் தன் சைபர்கிரைம் வேலைகளை ஆரம்பிக்கும்போது வயது 15 தான். பிப்ரவரி 2000 ல் மிகவும் பிரபலமான வணிக இணைய தளங்களின் மீது தன் கைவரிசையைக் காட்டினான். இதனால் பல நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. செப்டம்பர் 2001 ல் வீட்டுக்காவலில் எட்டுமாதம் வைத்தனர்.பெருந்தொகை அபராதமும் விதிக்கப்ப்பட்டது. இவனுக்கு இண்டெர்நெட்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க $7.5 மில்லியனிலிருந்து $1.2 பில்லியன் இழப்பு இவனால் ஏற்பட்டது.

3.POX-பாக்ஸ்- Love Bug-I love you- என்ற பிரபலமான ஈமெயில் வைரஸை உருவாக்கியவர்களில் ஒருவன். இவனுடைய இந்த வைரஸ் பெண்டகன் ,C I A கம்ப்யூட்டர்களையே தாக்கியது என்றால் பாருங்கள்! மே 4 2000 ல் 50 மில்லியன் கம்ப்யூட்டர்கள் இவனால் செயலிழந்தன.  பாக்ஸ் பிலிப்பைன்ஸில் இருப்பதால், அந்தநாட்டில் கம்ப்யூட்டர் ஹேக்கிங்க் சட்டங்கள் எதுவும் இல்லாததால் எந்த தண்டணையும் இல்லாமல் சுகமாக வாழ்கிறான்!

4.MISHKAL-மிஷ்கல்  Eastern European carding rings என்ற அமைப்பில் ஒருவன் என கருதப்படுகிறது.  போலி கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் கோடிக்கணக்கில் தயாரிப்பதுதான் தொழில். தொழிலின் உச்சத்தில் இருக்கும்போது இவனுடைய ஒருநாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? $100,000!!!! கடைசியில் கைது செய்யப்பட்டு வெறும் ஆறு மாதம் மட்டும் ஜெயிலில் கழித்தான். உடனடியாக நம் ஊரைப்போல் உக்ரைன் அரசில் பிரதிநிதியாகிவிட்டான்.

5.THE WIZ AND PIOTREK- இருவரும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்! 50000 கிரெடிட் கார்டுகளின் தகவல்களைத் திருடி கோடிக்கணக்கில் சம்பாதித்தனர் இருவரும். இருவருக்கும் மூன்று வருட சிறைத்தண்டணையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

6.Roper, Red_Skwyre, and Dragov-ரோபர்,ரெட்ஸ்கையர்,ட்ராகோவ்- இவர்களும் சைபர்கிரைம் கில்லாடிகள். இவகளால் 40 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்பட்டது. 2007 அக்டோபரில் பிடிபட்ட இவர்களுக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது!

7.BANDIT-பண்டிட் - இவன் 500000 கம்ப்யூட்டர்களை ஹாக் செய்து அவற்றைத் தன் தவறான செயல்களுக்குப் பயன்படுத்தி பணம் பார்த்துவந்தான்.2005 நவம்பரில் கைது செய்யப்பட்ட இவனுக்கு ஐந்துவருட ஜெயில் தண்டணை வழங்கப்பட்டது. மிலிட்டரி கம்ப்யூட்டர்களில் இவன் கைவரிசையைக் காட்டியதால் அமெரிக்க அரசாங்கத்துக்கு $15000 பணம் செலுத்தினானாம்!!

என்ன இந்தியாவில் எதுவும் நடக்கவில்லையா? என்கிறீர்களா? இருக்கு! அதற்காக ஒரு கொசுறு:

8.Li Chen Sien , Wynne Peter- இந்தியாவில் இந்த இருவரும் 56540 பவுண்டுகளை இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து நெட் வழியாக சுட்டதால் 2009 பிப்ரவரியில் நோய்டாவில் கைது செய்யப்பட்டனர்.

கிரெடிட் கார்டுகளிலும், இண்டெர்நெட் வங்கிகளிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெருகிவரும் இந்த வசதிகளால் சைபர்கிரைம்களும் அதிகரிக்கத்தான் செய்யும்!! அவற்றிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழிகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!!

Thursday 17 September 2009

பிரிட்னி, ஏஞ்ஜலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ் உடல் எடை குறைக்க உதவிய மருந்து!

 

 

பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆங்கிலப் பாடல் உலகின் முக்கிய நட்சத்திரம்!! அவர் தனது இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் 20 பவுண்டுகள் எடை அதிகமாக ஆகிவிட்டார்.

உடல் எடை குறைப்பதற்காக நிறைய வழிகளைக் கையாண்ட அவர் எல்லாவற்றிலும் எந்த முன்னேற்றமும் காணவில்லை!

நிகழ்ச்சிகளின்போது பலரும் அவருடைய எடை கூடிவிட்டதாக்த் தெரிவித்தது அவருக்கு மிகுந்த மன வருத்தம் அளித்தது!!

பல நேரங்களில் தன் கலையுலக வாழ்க்கை அவ்வளவுதான் என்றுகூட எண்ணிக்கலங்கினார். ஏற்கெனவே பல பிரச்சினைகளில் சிக்கி ஒருவழியாக வெளிவந்த அவருக்கு எப்படியாவது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.

Acai Berry அகாய் பெர்ரி என்ற எடை குறைக்கும் மாத்திரைகள் கடைசியில் அவருக்கு உடல் எடை குறைக்க உதவியதாகக் கூறுகிறார் இந்த சூப்பர் ஸ்டார்.

இந்த மாத்திரைகளைச் சாப்பிட்டு அவருக்கு 26 பவுண்ட் எடை குறைந்ததாகக் கூறியுள்ளார்

 

.File:Acapalms.jpg

 

 

அகாய் பெர்ரி என்றால் என்ன? அகாய் பெர்ரி ஒரு பனைமர வகையைச்சேர்ந்த மரம். இது தென் அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதன் தண்டின் உள் பாகம் வாழைத்தண்டுபோல் உண்ணப் பயன்படுகிறது.

ஒரு இன்ச் நீளமுள்ள பழங்கள் இதில் விளைகின்றன. இது பிரேசில் ,பெரு நாட்டு மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று.

 

File:Acai-berry.jpg

 

தற்போது உடல் எடை குறைக்க மருந்தாக இதனைப் பயன்படுத்துகிறார்கள்.

பிரிட்னியும் சொல்லிவிட்டார் இதுதான் அவருடைய உடல் எடை குறையக் காரணம் என்று. இதை அப்படியே நாம் நம்பிவிடலாமா? எப்படி ஆராயாமல் நம்புவது?

அகாய் பெர்ரி மாத்திரைகள் உட்கொள்ளும் முறைப்படி எடுத்துக்கொண்டு 8 தம்ளர் தண்ணீர் தினமும் அருந்தினால் எடை குறைந்துவிட்டதாக பிரிட்னி சொல்லுகிறார்.

இது அகாய் பெர்ரி விற்கும் பெரிய பிராண்ட் முதலைகளுக்கு அதிர்ச்சியளிக்கிறதாம். பிரிட்னி திடீரென்று இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் என்று கூறுகின்றனர் இந்த வியாபாரிகள். இந்த விளம்பரத்தால் அகாய் பெர்ரியின் விற்பனை பதினைந்து மட்ங்கு அதிகரித்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!

பிரிட்னி சொன்னவுடன் ஜெனிபர் லோபஸ்.ஏஞ்ஜெலினா ஜோலி, முதலிய ஹாலிவுட் அழகிகள் எல்லோரும் இந்த முறையைக் கடைப் பிடித்ததாகக் கூறுகிறார்கள்.

சரி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அகாய் பெர்ரியில் சத்துப் பொருட்கள் உள்ளது உண்மை.  இவர்கள் கூறுவது போல் உடல் எடை குறைக்கிறது என்று கூறுவதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று.Center for Science in the Public Interest (CPSI) கூறுகிறது. ஆயிரக் கணக்கானோர் இதை பரிச்சாத்த முறையில் உபயோகித்துப் பார்த்து எந்தப் பலனுமில்லாமல் புகார் அளித்துள்ளனராம்.

உடல் எடை குறைக்கிறது, சக்கரையை குணப்படுத்துகிறது, உடல் இன்பத்தை நீட்டிக்கிறது, நாடிநரம்புகளை முறுக்கேற்றுகிறது என்றெல்லாம் நம்ம ஊர் லேலிய வியாபாரிகள் போல் ஏகப்பட்ட விளம்பரங்கள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர் இந்த வியாபாரிகள் என்று கூறப்படுகிறது.

இதுவரை எந்த அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லாத பொருள் பிரிட்னியால் சக்கைப்போடு போடுகிறது.

பிரிட்னியையும் பிற ஹாலிவுட் நடிகைகளையும் வைத்து செய்யும் விளம்பர வியாபாரத்தந்திரமா? இல்லை உண்மையில் அகாய்பெர்ரி எடையைக் குறைக்கிறதா? யார் பதில் சொல்வது?

Wednesday 16 September 2009

ஸ்லம் டாக் மில்லியனர்கள்!

சில படங்களைப் பார்க்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. சில செய்திகளும் அது போல் படிக்கும் போது மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. அதுபோலத்தான் நான் சில படங்களைப் பார்க்கும்போது நேர்ந்தது.

அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இதை நான் எழுதுகிறேன்.

உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழத் தகுதியற்ற நிலையில் வாழ்கிறார்கள். இன்னும் இருபத்தைந்து வருடத்துக்குள் இது இரண்டு மடங்காகிவிடும் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன!

இவர்களுக்கு சுத்தமான குடிநீர்கூடக் கிடைப்பதில்லை. இவர்கள் சுவாசிக்கும் காற்று மாசுபட்டது. இவ்ர்கள் மிக அதிகமாக தொற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இவர்களின் குழந்தைகள் வளர்ச்சி குன்றிப் போகிறார்கள்.

.Children in the Dharavi slum of India (P. Nunan).

!

..

... .மேலேயுள்ள படங்கள் இந்தியாவில் குறிப்பாக பம்பாயில் எடுக்கப் பட்டவை. ”ஸ்லம்டாக் மில்லியனர்”  மில்லியனர் போன்ற படங்கள் இந்த நிலையை படம் பிடித்துக் காட்டினாலும் அது பரிசுகளை வெல்லவும் பணம் ஈட்டவும் உதவியதே தவிர இவர்கள் வாழ்வு உயர உதவவில்லை!!

ஊரெல்லாம் சுற்றி கட்சியை வளர்க்கும் நமது இளம் அரசியல் புள்ளிகளும்,

வெளிநாட்டுப் பணத்தையும், உள்நாட்டுப் பணத்தையும் கோடிக்கணக்கில் பெறும் தொண்டு நிறுவனங்களும் ஏன் இவர்களுக்கு சுகாதாரத்தையும் கல்வியையும் அளிக்க உதவவில்லை?

மனித உரிமை என்று பிதற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் ஏன் இவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளான உறைவிடம், குடிநீர் போன்றவற்றில் ஆர்வம் காட்டவில்லை!

எல்லா ராசிக்காரர்களும் இங்கு இருந்தாலும் சனிப்பெயர்ச்சி மட்டும் ஏன் இவர்கள் ஜாதகங்களில் இல்லை.

கடவுளின் சக்தியால் திருநீறு முதல் லிங்கம் வரை வரவழைக்கும் நமது வல்லமை மிக்க சாமியார்கள் ஏன் இவர்களுக்கு உதவவில்லை!  

எல்லோருக்கும் அள்ளிக்கொடுக்கும் தெய்வங்கள் ஏனோ இவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பதில்லை.

சுற்றுச்சூழல் மாசு பற்றி நட்சத்திர விடுதிகளில் கூட்டம் போட்டுப் பேசும் மனிதர்கள் ஏன் இந்தக் குடிசை மக்களின் சுற்றுப் புறத்தைக் கண்டு கொள்ளவில்லை?

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் அரசுகள் இவர்களின் பக்கம் பார்வையைத் திருப்பக் கூடாதா?

கழிவுகளை ரோட்டில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கும் நகராட்சிகள் தெருக் குப்பைகளையெல்லாம்  இவர்கள் வீடுகளில்தான் கொட்டுகிறீர்களா?

இப்படி நிறையக் கேள்விகள் தோன்றுகின்றன! யாரிடம் கேட்பது? என் மனதில் தோன்றியவை இவை. உங்கள் கருத்துக்களையும் எழுதுங்களேன்!!

Monday 14 September 2009

ஹைட்ரோசீல்(Hydrocele )-7 கேள்விகள்!

ஹைட்ரோசீல் என்று பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்! விரை வீக்கம் என்று அழைக்கப்படும் ஹைட்ரோசீல் பற்றிப் பார்ப்போம்!

1.ஹைட்ரோசீல் என்றால் அர்த்தம் என்ன?

ஹைட்ரோ என்றால் நீர்.

சீல் என்றால் தேங்கியிருத்தல்.

 

2.ஹைட்ரோசீல் எங்கு ஏற்படுகிறது?

ஹைட்ரோசீல் விரையைச்சுற்றியுள்ள உறையில் ஏற்படுகிறது.

 

 

 

மேலேயுள்ள படத்தில்

       1.Testicle- என்பது விரை Hydrocele என்று குறிப்பிட்டுள்ள அரக்கு நிறப் பகுதியில்தான் நீர் தங்குகிறது.

3.ஹைட்ரோசீல் ஏன் ஏற்படுகிறது?

ஹைட்ரோசீல் விரையில் அடிபடுதல், விரையில் கட்டி, விரைவில் வேறு வியாதிகள் ஆகியவற்றால் உண்டாகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விரையின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும். 

4.விரையில் அடிபட்டால் வரும் விரைவீக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

விரையில் அடிபட்டால் உடனே வீக்கம் பெரிதாகி வலி வந்தால் உடனே அறுவை சிகிச்சை மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஏனெனில் இரத்தக்கசிவாக இருக்கலாம். இதை உடனடியாக சரிசெய்யவில்லையென்றால் விரை செயலிழந்துவிடும்.

5.விரையின் இருபுறமும் வருமா? 

விரையின் ஒரு புறம் அல்லது இரண்டு புறமும் வரலாம்! 

6.இதற்கு பழைய சிகிச்சை என்ன?

இதற்கு முன்காலத்தில் விரைப்பையில் ஓட்டை போட்டு நீர் எடுப்பார்கள். இவ்வாறு செய்வதால் இது குணமடையாது. மீண்டும் நீர் சேரும். மேலும் நோய்தொற்றும் அபாயம் உண்டு. இன்னமும் அறுவை சிகிச்சையில்லாமல் அண்டகோசத்தை சரிசெய்கிறேன் என்று போலி வைத்தியர்கள் விளம்பரம் செய்து வருகிறார்கள். அவர்கள் செய்யும் முறையும் இதுதான்!

7.இதற்கு நிரந்தர தீர்வு?

அறுவை சிகிச்சை செய்து நீரை அகற்றி , பெரிதாக படந்திருக்கும் விரை உறையைச் சின்னதாகக் கத்தரித்து, அறுவை சிகிச்சை செய்தால் நிரந்தரமாக திரும்ப வராது.

8.கட்டி புற்றுநோய் போன்றவற்றால் விரைவீக்கம் வந்தால் என்ன செய்வது?

உடன் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் பரவாமல் குணப்படுத்திவிடலாம்!!

சக்கரை நோய் Hb A1c - சில சந்தேகங்கள்!!

image

 

அன்பின் வலை நண்பர்களே!! போன பதிவைப் படித்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் சில கேள்விகள் கேட்டுள்ளனர். அவற்றிற்கு சிறு விளக்கம் அளிக்கவே இந்தப் பதிவு!! போன பதிவைப் படிக்காதவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் படிக்கலாம்!

மூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒரு சோதனை!

அந்த சோதனையின் பெயர் Hb A1c

கேள்விகள்:

1.கேள்வி:

சீனா said...  அன்பின் தேவன் மாயம்!

பயனுள்ள தகவல் - யாரெல்லாம் Hb A1c இச்சோதனை செய்து கொள்ள வேண்டும்? -

நான் மாதா மாதாம் பாஃஸ்டிங் - பீப்பி சோதனை செய்து கண்ட்ரோலில் இருப்பதாக திருப்தி அடைகிறேன். இச்(Hb A1c)சோதனையும் செய்து கொள்ள வேண்டுமா?

பதில்: மாதாமாதம் சாப்பிடாமல் சக்கரை பார்ப்பது நல்லதுதான். சாப்பிட்ட பின்னும் பார்க்க வேண்டும். குறிப்பாக மதியம் உணவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்துப் பார்க்கவேண்டும். அப்படிப்பார்த்தால் அது 140-160 க்கு மேல் இருந்தால் உணவுக்கட்டுப்பாடு தேவை. அல்லது மருத்துவரை அணுகவேண்டும்.

Hb A1c- ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம்!

 

********************************************************************************

12 September 2009 19:3

2.மங்களூர் சிவா said...

டாக்டர் நல்ல தகவல். சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதும் ஒன்றா வேறு வேறா?

சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்டும் (randon) இதுவும்(Hb A1c) வேறு வேறு!! HB A1c - என்பது இரத்த சிவப்பணுக்கள் மேல் ஒட்டி இருக்கும் சக்கரையைக் கணக்கிடுவது. அதாவது கடந்த மூன்று மாதங்களாக இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த சிவப்பணு தன் மேல் எவ்வளவு சக்கரையைப் பூசிக்கொண்டுள்ளது என்பதனை அளப்பது!!

.வேறு எனில் இந்த டெஸ்ட்டுக்கு எவ்வளவு செலவாகும்?

இந்த சோதனைக்கு 250 லிருந்து 350 ரூபாய்வரை ஆகும்!

 இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.

2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7%-8%- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!

3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!

4.பத்துக்கு மேல்->10% - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!!

சாதாரணமாக செய்யப்படும் ப்ளட் குளுகோஸ் டெஸ்ட்: (randon): இரத்தத்தில் சக்கரை பார்ப்பதென்பது அன்று அப்போது எவ்வளவு சக்கரை எவ்வளவு இரத்தத்தில் இருக்கிறது என்பதைக் கணக்கிடுவது!! இதன் அளவு கீழ்க்கண்டவாறு இருக்கும்!

இரத்தத்தில் சக்கரை சாப்பிடும் முன்: 80-110 இரத்தத்தில் சக்கரை சாப்பிட்ட பின்: 100-140

இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் !! நன்றி *************************************************************************************** .

3.அபுஅஃப்ஸர் said... //சோதனையின் பெயர் (Hb A1c) //

இதே பெயரை சொல்லி சோதனை செய்துக்கொள்ளனுமா?

சர்க்கரை அளவை 85 முதல் 110 வரை இருக்கலாம் என்று கால்குலேட் பண்ணி சொல்லுகிறார்கள்,

இதற்கு தாங்கள் சொன்ன அளவிற்கும் என்ன வித்தியாசம்? 13 September 2009 11:06

பதில்: ஆமாம்! அந்தப் (Hb A1c) பெயர் சொல்லியே செய்து கொள்ளலாம்!

சக்கரை அளவு ஏற்க்குறைய 85 முதல் 110 வரை இருக்கலாம் என்று சொல்வது அப்போது ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தில் எவ்வளவு சக்கரை கலந்துள்ளது என்பதைக்குறிக்கும்.

HbA1c என்பது கடந்த மூன்று மாதங்களாக இரத்தத்தில் இருந்த சக்கரை இரத்த சிவப்பணுமேல் எவ்வளவு ஒட்டியுள்ளது என்று தெரிந்துகொள்ள உதவும்!

12 September 2009 22:01

*************************************************

மேலும் சக்கரை நோய் இடுகைகள் படிக்க:

ரம்ஜான் நோம்பும் சக்கரை நோயும்!!

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?-2

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா

Saturday 12 September 2009

மூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒரு சோதனை!

 

சக்கரை வியாதி எவ்வளவு சாதாரணமாகிவிட்டது என்பதை அனைவரும் அறிவோம். ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை அது பார்ப்பதில்லை!

ஒவ்வொரு 10 வினாடியிலும் ஒரு புதிய சக்கரை நோயாளி கண்டு பிடிக்கப்படுகிறார் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை!!

சக்கரை நோயாளிகள் உடலில் சக்கரையின் அளவு 24 மணி நேரமும் சீராக இருக்க வேண்டும்!! ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடியவில்லை!!

இதனால் சக்கரையின் அளவானது உடலில் சில நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக மதிய உணவு உண்டவுடன்!! ஏனென்றால் நம் உணவு முறையில் மதிய உணவில் கலோரிகள் அதிகம்!

”அப்படியானால் என் ரத்தத்தில் எவ்வளவு சக்கரை கடந்த சில மாதங்களாக இருந்தது?”  

என்ற கேள்வி எழும்!!

அதனைத் தெரிந்து கொண்டால் நிச்சயம் நமது உடலில் சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று அறிந்து கொள்ளலாம்!!

அப்படி ஒரு சோதனை இருக்கிறதா? என்று கேட்டால் ”ஆம் உள்ளது” என்பதுதான் பதில்!!

அந்த சோதனையின் பெயர் என்ன? 

அந்த சோதனையின் பெயர் Hb A1c .

இந்த சோதனையின் மூலம் கடந்த இரண்டிலிருந்து மூன்று மாதங்களாக ரத்தத்தில் சக்கரை இருந்தது என்று அறியலாம்.

இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாள் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள்வரை! இவை இரத்தத்தில் இருந்தபோது அவற்றின்  உடல் மீது இரத்தத்தில் கலந்திருக்கும் சக்கரை ஒட்டி இருக்கும். அதிகம் சக்கரை இருந்தால் அதிகமாகவும் குறைய சக்கரை இருந்தால் குறைவாகவும் ஒட்டி இருக்கும்!  இதனை அளந்தால் சக்கரை நம் ரத்தத்தில் நான் சொன்னபடி கடந்த மூன்று மாதமாக எவ்வளவு இருந்தது என்று அறியலாம்!

இதன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

1. ஏழு அல்லது 7க்குக்கீழ்- சக்கரை அளவு மிகச்சரியாக உள்ளது.

2. ஏழுக்கும் எட்டுக்கும் இடையில் - 7%-8%- பரவாயில்லை. 7க்கு குறைக்க வேண்டும்!

3.எட்டுக்கும் 10க்கும் இடையில்-இரத்தத்தில் சக்கரை மிக அதிகம்!

4.பத்துக்கு மேல்->10% - உங்கள் சக்கரை அளவு மிக மிக அதிகம்!!

ஆகையினால் சக்கரை நோயாளிகள் மற்றும் என் சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளது என்போர் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்!!!

Friday 11 September 2009

கொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

உன் மூச்சு முட்டும் வரை
நெஞ்சோடு
இறுக அணைத்து
என் ஆன்மாவின்
இறுதிச்சொட்டும்
உருகி உன்
காலடியில் விழும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்!

ஏழேழு பிறவிகளையும்
தாண்டி
உனக்காக,
என் மனதின் கதறலை
நீ உணரும் வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

வானவெளியையும்
நட்சத்திரங்களையும்
தாண்டி
என் கண்ணீர் உன்னை
அடையும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை விரும்புகிறேன்!

இடைவிடாத ஆன்மவெளியில்
காத்து நிற்பேன்
உனக்காக
என் கால்கள்
மரமாகி கல்லாகும்வரை!

ஆம் அதுதான் உண்மை
நான் உன்னை
விரும்புகிறேன்.!!

Thursday 10 September 2009

தேவதையின் வரங்கள்!!

’அன்புடன் வசந்த்’
மிக்க அன்புடன் எனக்கு  ஒரு தேவதையை அனுப்பியிருக்கிறார்!!

அவருடைய தளத்திலிருந்து:

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 
தேவதையின் வரங்கள்.....

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.


அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

 

இந்த தேவதையை இப்போ ஒரு நாலு பேரோட ஆசைகளை நிறைவேற்ற அனுப்பிவைக்கிறேன் அவர்கள் ஆசையும் நிறைவேறுவதாக.....


1.குழந்தைநிலா ஹேமா


2.தமிழ்துளி தேவா சார்


3.திருமதி.மேனகா சத்யா


4.மனவிலாசம் S.A.நவாஸுதீன்


தொடருங்கள் நண்பர்களே!!”

என்று சொல்லியிருக்காரு நம்ம வசந்த்!!! செய்வோமே!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1. மாயாவி போல் மறையும் வரம்!!

.என்னடா இவன் இப்படி ஒரு வரம் கேட்கிறானே! என்று யோசிக்கிறீங்களா? சும்மா இல்லீங்கோ!

மாயாவியா பாஸ்போர்ட் இல்லாமல் பிளேட் ஏறி! (இஃகி! இஃகி)  ..........நோ ஜோக்ஸ்! பீ சீரியஸ்!!

கொழும்பில் இறங்கி மகிந்த பட்சே மற்றும் அவனுடைய மந்திரிகள் அனைவரையும் என் கையால் கொல்ல வேண்டும்.

*************************************************

2.சூப்பர்மேன் போல் பறக்கும் வரம்!!...

சூப்பர் மேன் கணக்கா ஆகாயத்தில் பறந்து உலகம் பூரா வேலை செய்யும் தமிழர் எல்லாருடைய வீட்டுக்கும் செல்ல ஆசை!( உள்ளே விடுவாங்களா?)

*************************************************

3.ஆபுத்திரன் கை அமுத சுரபி!!-

.மணிமேகலையில் வரும் அமுத சுரபிப் பாத்திரம் வேண்டும்!! நான் தான் சூப்பர் மேனாச்சே! அனைவரும் பசியில்லாமல் வாழ்க!.

*************************************************

4.ஞானப்பால்!! ஞானப்பால் குடிச்ச மாணிக்கவாசகர் தமிழ்ப் பாட்டாக் கொட்ட ஆரம்பிச்சாருங்க! இந்தப்பாலை உலகமெங்கும் வாழும் தமிழ் தெரியாத தமிழ் மக்களின் வாயில் ஊற்ற ஆசை!

*************************************************

5.டார்சான் ...டார்சான் பாத்து இருப்பீங்க! கவலையே இல்லாமல் காட்டில் சுத்தித் திரிவான்! மிருகமெல்லாம் நண்பர்கள்! என்ன ஜாலி! மாதம் ஒரு நாள் டார்சானாக் காட்டுக்குள் திரிய ஆசை!

*************************************************

6.ஆகாய கங்கை!..

ஈசனின் தலயில் இருக்கும் ஆகாய கங்கை! பறந்து போய் சென்னை முதல் எல்லா தண்ணித் தொட்டியிலும் தினமும் ரொப்பிவிட ஆசை! குளிக்காத ஆட்டோ டிரைவர், முதல் பஸ் பயணிவரை ஸ்பாட்டிலேயே தலையில் தண்ணி ஊற்றிவிட ஆசை!

*************************************************  7.லில்லி புட்!.

 

.குட்டியாக மாறி எறும்புடன் அதன் புற்றுக்குள் போய் நட்புக்கொண்டு ஒரு நாள் அதனுடன் வாழ ஆசை!

*************************************************.

8.என் மனைவியே அத்தனை ஜென்மத்திலும் மனைவியாய் வர..இது ரொம்ப தன்னலமான வரம்தான்!  பத்து வரத்தில் ஒன்னு சொந்த உபயோகத்துக்கு... வீட்டுக்கு பயந்து இந்த வரம் கேட்கிறேன்னு நினைகிறீங்களா? சேச்சே!!

*************************************************

9.2000 ஹிட் பெறும் வரம்!.ஒவ்வொரு பதிவு போடும் போதும் 2000 ஹிட் கிடைத்து இஃகி! இஃகி! இஃகி!! ஜாலியா இருக்கும் வரம்!

*************************************************

10.இறந்தவருக்கு உயிர் தரும் வரம்!இந்த வரத்தை வைத்து ஈழத்தில் இறந்த அத்தனை தமிழ்த்தலைவர்களையும், அத்தனை தமிழ் மக்களையும் உயிர்ப்பிக்க ஆசை!

*************************************************

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory