என் தலைமை மருத்துவர் திருமதி. ரூபா அவர்கள் இந்த மாதம் பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களின் பிரிவுபச்சார விழாவில் நான் வாசித்த சில வரிகள்:
தந்தையைப் பிரிந்தால் அது கரு!
தாயைப் பிரிந்தால் அது குழவி!
வயலைப் பிரிந்தால் அது நெல்,
உதட்டைப் பிரிந்தால் அது சொல்!
இரவைப் பிரிந்த பொழுதுதான் காலை,
செடியைப் பிரிந்த மலர்தான் மாலை!
மலையைப் பிரிந்த கல்தான் சிலை,
செடியைப் பிரிந்தால்தான் காய்க்கு விலை!
இமைகள் பிரிந்தால்தான் பார்வை,
உழைத்துக் களைத்தால்தான் வேர்வை!
கூட்டைப் பிரிந்தால்தான் பறவை,
நாங்கள் வேண்டுவதோ உங்கள் உறவை!
விண்ணைப் பிரிந்தால் மழைத்தண்ணீர்,
உங்களைப் பிரியும் எம் கண்ணில் கண்ணீர்!
நாங்கள் பிறந்தது வேறுவேறு தாய்க்கு,
ஆயினும் பிள்ளைகள் இந்த ஒரே தாய்க்கு!
உங்களிடம் பிடித்தது உங்கள் பிடிவாதம்,
நாங்கள் செய்ததோ எதிர்வாதம்,
நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்!!
32 comments:
மிக அருமை .!
ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.
மிக அருமையான கவிதை,இவர் இளையகவியின் சித்திதானே.
நல்ல கவிதை..
கவிதை ரொம்ப டாப்பா இருக்கு தேவா சார்
உறையை பிரித்தால் மாத்திரை..
நல்லாயிருக்கு மருத்துவரே
வழக்கம் போல் :-))
//உங்களிடம் பிடித்தது உங்கள் பிடிவாதம்,
நாங்கள் செய்ததோ எதிர்வாதம்,
நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்//
அருமை டாக்டர்.
சூப்பர் : )
அருமை
உங்களிடம் பிடித்தது உங்கள் பிடிவாதம்,
நாங்கள் செய்ததோ எதிர்வாதம்,
நாங்கள் கேட்பது உங்கள் ஆசீர்வாதம்//
பிரமாதம். டாக்டர்
பிரிவுபசாரக் கவிதை அருமை நண்பரே...
அசத்தல் கவிதை டாக்டர்.. விரும்பி படித்தேன்!
அருமை சார் !
அட்ரா அட்ரா அட்ரா சக்கை!
:):)
very touching!!!
கலக்கிறிங்க டாக்டர்.....
கலக்கிறிங்க டாக்டர்.....
குளிர்ந்துருப்பாங்களே!
டச்சிங் வரிகள்... மிகவும் அசத்தல்...
அழகுக் கவிதை.
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!
முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...3
வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!
மிக அருமை. வாழ்த்துக்கள்.
ஆஹா...!! ரொம்ப அழகா சொல்லீருக்குறீங்க...
superb.
அருமையான கவிதை!!!
excellent!!
pls see this link
http://sashiga.blogspot.com/2009/10/blog-post.html
கவிதை அழகு..
நல்லா இருக்கு.
சூப்பர்.
வலைப்பதிவு பற்றி சொல்லிக்கொடுத்து அனுப்புங்க.
நல்ல கவிதை - உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த கவிதை
நல்வாழ்த்துகள்
Post a Comment