Tuesday, 6 September 2011

200/200

நாம் பனிரெண்டாவது அதாவது +2 எழுதும் போது இருந்த நிலைக்கும் தற்போது உள்ள நிலைக்கும் பல மாறுதல்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும்.

அவற்றில் பல நல்ல     விசயங்கள் இருக்கலாம்.            

ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க விசயம் எனக்கு  நெருடலாக  இருக்கிறது.

அதுதான் 200 க்கு 200 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை.

உங்களுக்குத் தெரியும் நம் காலத்தை விடவும் தற்போது முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். இதனைப் பார்க்கும் போது எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன.

1.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் அறிவாளிகளா??

2.நம்மை விட தற்போதுள்ள மாணவர்கள் நன்கு படிக்கின்றனரா?

3.ஆசிரியர்கள் திருத்தும் முறை மாறிவிட்டதா?

4.இதனால் ஏற்பட்ட்டுள்ள அனுகூலங்கள் பாதிப்புகள் என்ன?

நண்பர்களே இவற்றை உங்கள் கருத்துகளோடு அடுத்து அலசுவோம்!!!

Monday, 21 February 2011

அர்த்தம்!

 

image

வரிசையின் கட்டுக்குள்

அடங்காதிருந்தன

என் சொற்கள்!

சில அர்த்தமற்றும்

சில புரியாமலும்.

 

கோடு போட்ட

தாள்களுடன் உன்

கையேடு,

வரிசை மாறாத

எழுத்துக்களை அதில்

செறுகியிருந்தாய்!

 

என் பெயரும்

உன் பெயரும்

அருகருகில் இருந்த

தாள்களின்

முனைகளில்

தடவப்பட்ட மஞ்சள்!

 

எழுத்துகள் அழிந்து

மவுனத்தை மட்டுமே

சுமந்து கொண்டிருந்தது

அந்த இரவு!

 

முடிவில்

அர்ததமற்ற

என் சொற்களையெல்லாம்

கவிதையாக்கியிருந்தாய் நீ!

Friday, 18 February 2011

நான் ஏன் எழுதவில்லை?

image 

என்னால் சில நாட்களாகத்  தொடர்ந்து பதிவில் எழுத

முடியவில்லை.  கடைசியாக டிசம்பரில் எழுதியது. நான்

எழுதமுடியாததற்கு காரணங்கள்,

இந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்தான். 

1.இந்திய மருத்துவ கழகம் செட்டிநாடு கிளைக்கு  என்னை செயலராகத் தேர்ந்தெடுத்திருப்பது.

கழக செயலர் என்றால் கொஞ்சமாவது செயல்படவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு.

அதன்படி மருத்துவ முகாம்கள் நடத்துவதில் கொஞ்சம் முனைப்புக்காட்டி வருகிறேன்.

அதுபோல் மருத்துவர்களுக்கான கருத்தரங்குகள் நடத்தும் பொறுப்பும் செயலருடையதே.

இதனிடையில் இன்ன்னொரு மாற்றமும் சேர்ந்து கொண்டது.

2. அது முதுநிலை குடிமை மருத்துவராக பதவி உயர்வு பெற்று நான் அரசு மருத்துவமனை நாமக்கல்ல்லுக்கு மாற்றலாகி இருப்பது.

பதவி உயர்வு மகிழ்ச்சி தரக்கூடியதுதான்.

ஆனால் நான் இருக்கும் ஊரிலிருந்து நாமக்கல் வெகு தொலைவு. 

நாமக்கல்லுக்கு நான் செல்வது இதுவே முதல் முறை. யாரையும்

தெரியாத ஊர்.

பணி மாற்றத்தால் மருத்துவ சங்க செயலராக செயல்படுவதே பெரிய

வேலையாக உள்ளது.

அதனாலேயே வலைப் பக்கம் வர இயலவில்லை.

இருந்தாலும் அவ்வப்போது நடு நடுவே எட்டிப்பார்க்கிறேன்.

அன்புடன்

தேவகுமார்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory