சர்க்கரை நோயாளிகள் ஓட்டலில் சாப்பிட நேர்ந்தால்?
அன்பு
நண்பர்களே! சர்க்கரை வியாதி என்று பொதுவாக அழைக்கப்படும் நீரிழிவு நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு
மிக அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
உள்ளூரில் வேலை பார்த்துக் கொண்டு வீட்டு சாப்பாடு சாப்பிடுபவர்களே
உணவுக்கட்டுப்பாட்டை முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை எனும் போது ஊர் ஊராக அலையும் வேலையில் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் என்ன சாப்பிடுவது எப்படி சாப்பிடுவது, சர்க்கரை ஏறாமல் பார்த்துக்கொள்வது எப்படி?
ஒரு
நாள் போய் விட்டு திரும்பி வந்து விடுபவர்கள் என்றால் வீட்டிலிருந்து கொண்டு செல்ல்லாம். அப்படி இல்லாமல் சுற்றிக்கொண்டே இருப்பவர்கள் என்றால் என்ன செய்வது? மேற்கண்ட நபர்களின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர கீழ்க்கண்ட வழிகளைக் கடைப் பிடிக்கலாம்.
இந்த குறிப்புகளைக்
கடைப்பிடிப்பது சற்று சிரமம்தான், இருந்தாலும் முடிந்த அளவு முயற்சி செய்து பார்க்கலாம்.
முதலில் தவிர்க்க வேண்டிய
உணவுகள் என்னென்ன என்று பார்ப்போம்:
1.பிரியாணி
2.பூரி
3.புரோட்டா
4.ரோஸ்ட்
5.பொங்கல்
6.வடை
7.சேவை
போன்ற உணவுகள் அதிக கலோரி உள்ளவை என்பதால் அவற்றைத் தவிர்ப்பது
நலம்.
முழு
சாப்பாடு, அன்லிமிடெட் மீல்ஸ் போன்றவை வாங்காமல் கொஞ்சம் சாதம் வாங்கி அதில் கூட்டு போன்ற காய்கறிகளை சரிக்கு சம்மாகக் கலந்து சாப்பிடலாம்.
கறி,கோழி போன்ற அசைவம் சாப்பிட நேர்ந்தால் சாதத்தை குறைத்துக் கொள்ளவும்.
சைவ
உணவுகளில் சில்லி கோபி, சில்லி காளான் போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
மேலே
சொன்னவை தவிர்க்க வேண்டியவை!
ஹோட்டலில்
சாப்பிட நேர்ந்தால் என்னென்ன சாப்பிடலாம்.
1.தயிர் சாதம்
2.சப்பாத்தி
3.சாலட்
4.கொட்டை வகைகள்
5.இட்லி,
6.எண்ணெய் குறைந்த தோசை
7.சப்பாத்தி
8.இடியாப்பம்
8.காய்கறி சாலட்
9.பழ சாலட், ப்ப்பாளி அதிகம் சேர்ந்த்து.
8.ஒரு ஆப்பிள்
9.வெள்ளரிக்காய்
இந்தச் சின்னச் சின்ன குறிப்புகளைக் கடைப்பிடித்தால் சர்க்கரையின் அளவு குறைவது
உறுதி.