Monday, 30 August 2010

சின்னம்மை(CHICKEN POX)-5

சின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ்  நோய்களில் ஒன்று..

ஏற்கெனவே இருந்த SMALL POX  பெரியம்மை  நோய் வைரஸ்  தற்போது உலகின் சில பரிசோதனைக் கூடங்களில் மட்டுமே  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சின்னம்மையைப் பற்றிய முக்கிய விபரங்கள் மட்டும் பார்ப்போம்.

1.சிக்கன் பாக்ஸ் எப்படிப்பரவுகிறது?

 1. இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் எச்சில்,சளி நுண் துளிகள் தூவப்படுகின்றன.  இவற்றை சுவாசிப்போருக்கு இந்தத் தொற்று பரவுகிறது.(  தும்மும் போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்துக்கொள்ள வேண்டும்!)
 2. நோயாளியின் உடலில் தோன்றும் கொப்புளங்கள் உடைந்து அதில் உள்ள நிண நீர் பரவுவதன் மூலம்.

2.இது எந்த வயதினரை அதிகம் தாக்குகிறது?

 • 10 வயதுக்குட்பட்டோரையே அதிகம் தாக்குகிறது.- ஆயினும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோயை எதிர்க்கும் திறன் அதிகம்.
 • இளைஞர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் இந்நோய் தாக்கினால் விளைவுகள் சிறிது கடுமையாகவே இருக்கும்.
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோருக்கும்,லுகிமியா போன்ற நோய் உள்ளோரும் சிகிச்சை பலனளிக்காமல் இறப்பதும் உண்டு.
 • இதன் நோய் காப்புக்காலம் (INCUBATION PERIOD)  14-21 நாட்களாகும்.

3.இந்நோயால் உடலில் எற்படும் விளைவுகள் என்ன?

 • தோலில் சிவந்த தடிப்புகள் (RASHES)
 • உடலில் வயிறு, மார்பு போன்ற மையப்பகுதிகளில் இத்தடிப்புகள் நோயின் இரண்டாம் நாளில் தோன்றும்.
 • அதன் பிறகு முகத்திலும் பின்பு கை,கைல் போன்ற பகுதிகளிலும் தடிப்புகள் ஏற்படும்.
 • தோல் கொப்புளங்கள் தோன்றி, பழுத்து, உடலில் அரிப்பும் ஏற்படும். கொப்புளங்களைச் சொறிவதால் தோலில் தழும்புகள் ஏற்படலாம்.
 • இதன் முக்கிய அம்சம் பழுக்காத கொப்புளங்களிலிருந்து, பழுத்த கொப்புளம் வரை உடலில் ஒரே நேரத்தில் காணலாம்.

4.இதன் பிற விளைவுகள் என்ன?

 • நோய் பொதுவாக கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் சில நேரங்களில் கீழ்க்காணும் விளைவுகள் ஏற்படலாம்.
 • நிமோனியா
 • இதயச் சுவரில் தொற்று (MYOCARDITIS)
 • மேற்கண்ட இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளோருக்கு ஏற்படும்.
 • மூளைத் தொற்று(மூளையழற்சி)
 • சிறு நீரக பாதிப்பு
 • மூட்டுகளில் சலம் பிடித்தல், எலும்பில் சலம்

நிறைய பாதிப்புகள் இருந்தாலும் மேற்சொன்னவையே முக்கியமானவை.

5.சிகிச்சை:

 • பொதுவாக எந்த சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
 • நோய் எதிர்ப்பு குறைவாக உள்ளோருக்கு மருந்துகள் தேவைப்படலாம்.
 • பாக்டீரியா தொற்று தோலில் ஏற்பட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்.

சின்னம்மை பற்றிய மிக அவசிய தகவல்களை மட்டுமே தொகுத்திருக்கிறேன். இன்னும் அதிகம் தகவலுக்கும் சந்தேகங்களயும் கேளுங்கள் பின்னூட்டங்களில்.

தமிழ்த்துளி தேவா.

30 comments:

Mythees said...

gr8 Sir

தேவன் மாயம் said...

நன்றி மைதீஸ்!!

priyamudanprabu said...

தொடர்ந்து நாங்கள் அறியாத பல தகவல்கள் வருகிறது , நன்றி தொடர்க

sathishsangkavi.blogspot.com said...

Very Good Information....

Deepa said...

ந‌ன்றி டாக்ட‌ர்!

நான் என் குழ‌ந்தைக்கு ஒரு வ‌ய‌து இருக்கும் போது சின்ன‌ம்மைக்கான‌ த‌டுப்பூசி போட்டிருக்கிறேன். இது எவ்வ‌ள‌வு தூர‌ம் இந்த‌ நோயை அல்லது அத‌ன் க‌டுமையைத் த‌விர்க்கும் என்று விள‌க்க‌ முடியுமா?

Chitra said...

Very useful post, Dr. Thank you.

சைவகொத்துப்பரோட்டா said...

குறிப்புகளுக்கு நன்றி மருத்துவரே.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மிகவும் உபயோகமான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றீங்க டாக்டர் .
தொடருங்கள் ...
வாழ்த்துக்கள் .

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

அருண் பிரசாத் said...

Good post dr

நட்புடன் ஜமால் said...

இன்னுமா இருக்கு இது

நல்ல தகவல்கள் தேவா!

குழந்தைகளுக்கு வந்து விடாமல் இருக்க பிரார்த்திப்போம்

தேவன் மாயம் said...

பிரியமுடன் பிரபு said...
தொடர்ந்து நாங்கள் அறியாத பல தகவல்கள் வருகிறது , நன்றி தொடர்க
//

பிரபு! நன்றி!

தேவன் மாயம் said...

சங்கவி நன்றி!

Jerry Eshananda said...

உங்கள் பதிவுகள் "ஒரு மருத்துவக்களஞ்சியம்."

பிரபாகர் said...

இந்த நோய் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துவிட்டது தானே? கடவுள் புண்ணியத்தில் இதுவரை வந்ததில்லை... வந்தவர்களைப் பார்த்து பயந்திருக்கிறேன்...

தகவல்களுக்கு நன்றி...

பிரபாகர்...

உண்மைத்தமிழன் said...

நல்ல பயனுள்ள தகவல்கள்..!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஸார்..!

Thomas Ruban said...

குறிப்புகளுக்கு நன்றி...

அம்மை நோய்களுக்கு ஆங்கில மருத்துவும் பயன்படுத்தாமல் வேப்பிலை போன்ற நாட்டுவைத்தியம் பயன் படுத்திகிறர்கள் இது சரியா டாக்டர் ஐய்யா?

பகிர்வுக்கு நன்றி சார்....

Anonymous said...

தேவா சார்...படிக்கும் போதே ஒரு வித கலக்கமா இருக்கு....தகவல் வழக்கம் போல பயனுள்ளது...

அன்பரசன் said...

useful sir..

cheena (சீனா) said...

அன்பின் தேவா

அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி

நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா

'பரிவை' சே.குமார் said...

மிகவும் உபயோகமான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றீங்க...

மதுரை சரவணன் said...

மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்கள் தொடர்ந்து தருவதற்கு நன்றி. வாழ்த்துக்கள்

ஹேமா said...

நன்றி தேவா.தேவையான பதிவு.

josteepan said...

super sir

ஜோதிஜி said...

கூகுள் பஸ்ஸில் இணைத்துள்ளேன்.

Anonymous said...

nandri..

sila kelvigal..

ammai kirumi noi ullavaridam irrunthu veli vantha piragu evalavu neram katril uirudan irrukkum?

ammai koppula neer ulla thunil/aadail evalavu kalam uirudan irrukkum?

ammai noikirumi eppdai uruvagiirukkum? oru kuppai thottiyl podappatta saatham oru maatha kalathiruku pin thirakkappattal varum maasuvilirunthu ??

tharppothaiya kalangalil 1 vayathukku utpatta kulanthaigalukku thaduppusi podappadugiratha??

nandrigaludan..-Bala

Unknown said...

Nanri sri

Unknown said...

good mesage

Learnexcelmac said...

thankyou!!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory