என்னுடைய ஹவுஸ்சர்ஜன் பணிக்காலம் அது. கடைசிவருடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பல்வேறு சிகிச்சைப்பிரிவுகளிலும் பணிபுரிய வேண்டும்.
பொதுவாக வார்டு வேலைகளில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை தினமும் கணக்கு எழுதி வாங்க்குவது முதல் வேலை. அது தொல்லையான வேலை. பெரும்பாலும் பெண் மருந்துவர்களை அந்த வேலைக்கு விட்டுவிடுவோம். அதேபோல் நோயாளிகளுக்கு ஊசி போடும் வேலையையும் பெரும்பான்மை ஆண்கள் பெண் ஹவுஸ் சர்ஜன்களின் தலையில் கட்டி விடுவார்கள்.
அதே நேரம் காயங்களுக்கு மருந்து கட்டுவது, தையல் போடுவது போன்ற வேலைகள் ஆண் மருத்துவர்களின் தலையில் விழும்.
இப்படிப் பணியில் இருந்தபோது என் நண்பர் ஒருவரின் அக்காவை தீக்காயப் பகுதியில் சேர்த்திருந்தனர். அவர் தன் கணவருடன் ஏற்பட்ட பிணக்கில் தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்காயங்க்களுடன் படுக்கையில் இருந்தார்.
நண்பர் என்னிடம் நீங்கள்தான் அக்காவுக்கு சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் நான் என் நண்பர்களிடம் பேசி அந்த வார்டை நான் பார்த்துக் கொள்வதாகக் கூறி என் பணியை அந்த வார்டுக்கு மாற்றிக்கொண்டேன்.
நண்பணின் அக்கா உட்கார்ந்த நிலையில் அவருடைய கால்களிலிருந்து தொடைவரை மண்ணெண்ணையை ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு விட்டார். இதனால் அவருடைய கால்கள் பாதத்திலிருந்து தொடைவரை வெந்திருந்தது, தோல் சிறிது ஆழமாக வெந்திருந்தது.
நானும் நண்பனின் அக்கா என்பதால் தினமும் தொடைவரை வெந்து இரத்த ஓட்டமில்லாத தோல் பாகங்களை வெட்டி மருந்திட்டு வந்தேன். தோல் பகுதியில் இரத்தம் வரும்வரை வெட்ட வேண்டும். இதற்கு நல்ல கத்தரிக்கோல் தேவை. ஸ்கால்பெல் எனப்படும் பிளேடு மற்றும் தசை வெட்டும் கத்திரிக்கோல் இரண்டும் அவசியம்.
பெரும்பாலும் வார்டுகளில் நல்ல கத்திரிக்கோல் இருக்காது. அறுவை அரங்கில்தான் அறுவை சிகிச்சைக்கு உபயோகிக்கும் நல்ல கத்திரிகள் இருக்கும். அங்கு சென்று கணக்கில் கையெழுத்திட்டு நல்ல கத்தரிக்கோல் ஒன்றை வாங்க்கிக் கொண்டேன்.
அப்போதுதான் படிப்பு முடிந்திருந்ததாலும் இளம் வயதின் ஆர்வம் காரணத்தினாலும் நண்பனின் அக்கா என்பதனாலும் மிக ஆர்வத்துடன் அவருக்கு சிகிச்சை செய்ய ஆரம்பித்தேன். தினமும் அந்தப்பெண்ணுக்கு புண்ணை சுத்தம் செய்ய ஒருமணி நேரமாவது ஆகும்.
எனக்குத் தெரிந்து உலகில் மிக மோசமான வாடை என்ன என்று கேட்டால் மனித உடல் அழுகும் நாற்றம்தான் என்பேன். இதனை தீக்காய வார்டிலும். போஸ்ட்மார்ட்டம் பிரிவிலும் காணலாம்.இதனாலேயே தீக்காய வார்டை பெரும்பாலும் மருத்துவமனையின் ஏதாவதொரு மூலையில் வைத்திருப்பர். தீக்காய வார்டில் வித விதமான சதவீதங்களில் உடல் வெந்து போன நோயாளிகள் இருப்பார்கள்.
அவர்களில் பலருடைய நிலை மோசமாக இருக்கும். உடல் முழுவதும் வெந்து போனவர்கள் கத்திக் கொண்டே இருப்பார்கள். இளம் பெண்கள், கண நேரத்தில் முடிவெடுத்து மண்ணெண்ணை ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டவர்கள் “என்னைக் காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க” என்று கத்தும் ஓசையும் அடிக்கடி கேட்கும்.
இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு அந்த நோயாளிகளுடன் ஆறுதலாகப் பேசி சிகிச்சையளிப்பதற்கு மிகவும் மனத்திடம் வேண்டும். இவர்களில் பலருடைய படுக்கைகள் அடிக்கடி காலியாகிவிடும். ஆம் பலரும் இறந்து போவதும், அந்தப்படுக்கைக்குப் புது நோயாளிகள் வருவதும் சகஜம். உயிர் தப்பிப்பிழைப்பவர்கள் குறைவுதான்.
இப்படி அடிக்கடி நோயாளிகள் இறப்பது கண்டு நண்பரின் வீட்டிலுள்ளோர் மிகுந்த மனக் கலக்கம் அடைந்தனர். நானும் விடாமல் சிகிச்சை செய்து கொண்டிருந்தேன். மருந்துகள் போதாமல் பல வார்டுகளில் மிச்சமாகும் மருந்துகளைக் கொண்டு வந்தும் சிகிச்சை அளித்ததில் அந்தப் பெண்ணின் உடல் நிலை நன்கு தேறி வந்தது. எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படியிருக்கையில் ஒரு நாள் காலை அந்த நண்பர் என் விடுதி அறைக்கு வந்தார். அக்கா ஒன்றும் பேசவில்லை. எங்களுக்கு பயமாக உள்ளது என்றார். நானோ இரண்டு நாள் விடுப்பு எடுத்திருந்தேன். வேறு ஒருவர் அந்த வார்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரி வாருங்கள் என்று போய்ப் பார்த்தேன். அந்தப் பெண் சுய நினைவில்லாமல் கோமாவில் இருந்தார். நான் ஷாக் நிலைக்கான சிகிச்சையைச் செய்ய ஆரம்பித்தேன். சுமார் 4 மணி நேரம் கழித்து அவருக்கு சுய நினைவு வந்தது. சிகிச்சையைத் தொடர்ந்து விடாமல் செய்து கொண்டிருந்தேன். மறுபடியும் 6 மணி நேரத்தில் சுய நினைவு போய்விட்டது.
மறுபடியும் போட மருந்துகள் இல்லை. பல தெரிந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை விசாரித்து, மருந்துகளை வாங்கி வரச்செய்தேன். அதையும் போட்டோம். இந்த சிகிச்சையிலேயே அன்றிரவும் கழிந்தது. மறு நாள் காலையும் அவர் நிலையில் முன்னேற்றமில்லை. நாடித்துடிப்பும், இரத்த அழுத்தமும் குறைந்துகொண்டே இருந்தது. அதற்கு மருந்துகளைப் போட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தேன். மதியம் கழிந்து மாலை 6 மணிபோல் சிகிச்சைகள் பலனின்றி அந்தப் பெண் இறந்து விட்டார். என்னுடைய முயற்சிகள் அனைத்தும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் தோற்றுப் போயின.
. மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். தீக்குளிப்பவர்களும், தற்கொலை முயல்வோரும் மரணத்தை விரும்பி நாடியவர்கள்.
என் ஹவுஸ்சர்ஜன் வாழ்க்கையில் அவ்வளவு சிரமப்பட்டு வேறு எந்த நோயாளிக்கும் சிகிச்சை செய்ததில்லை
ஆம்! முதல் நாள் காலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரியின் தீக்காயப் பிரிவுக்குள் அந்தப் பெண் கோமாவில் இருந்தபோது நுழைந்த நான் மறு நாள் மாலைதான் வெளியில் வந்தேன், அதுவரை வெறும் தண்ணீர் மட்டுமே குடித்திருந்தேன். வேறு எந்த உணவும், நான் சாப்பிடவில்லை.
32 comments:
எப்படியோ... அடித்து பிடித்து முதல் கருத்து சொல்ல இதோ வந்துட்டேன் தேவா சார்.
ஆஹா.. ஏற்கனவே.. கருத்துகள் வந்திருக்கும் போலிருக்கே... சரி முழுவதும் படித்துட்டு வரேன் சார்.
//மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். //
இவர்களை வாழும் கடவுளாகத்தான் நினைக்கிறேன்.. அந்த வகையில் நீங்களும்தான் தேவா சார்.
தங்களது விடாமுயற்சயின் அனுபவம் பற்றிய பகிர்வு உண்மையில் மெய்சிலிர்க்க வைப்பதாய்.. உள்ளது. தொடரட்டும் தங்கள் சேவை மருத்துவ வலையுலகில... பகிர்வுக்கு நன்றி சார்.
ரொம்ப கஷ்டமா போயிடுச்சுங்க.
பிரவீன் தங்கள் கருத்துகள் என்னைப் போன்றோருக்கு உற்சாகமளிக்கிறது.
மருத்துவ மனைகளில் கணவன் மனைவியாக வாழ்பவர்களையும் அவர்களின் வேலையையும் பல முறை கூர்ந்து கவனித்து உள்ளேன். மருத்துவராக இருக்கும் பெண்களுக்கு குறிப்பாக மருத்துவரையே தேடும் பெற்றோர்களும் மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.
ஒரு வகையில் பார்க்கப் போனால் இந்த மருத்துவர் கடவுள் தான். கண்ணால் காணாமல் எதை எதையோ நம்பி பாலூம் தேனும் ஊற்றி ஒவ்வொருவரும் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டுருக்கிறோம்.
உங்களைப் போன்றவர்களுக்கு மக்கள் எதுவும் செய்ய வேண்டும்.
ஆறுதலாக ரெண்டு வார்த்தை பேசினாலே போதும்.
நெஞ்சம் கலங்கி விட்டது தேவனே.
கண நேர முடிவு, வாழ்க்க்கையே மாறிடுது.....அதுவும் தீவச்சிகிட்டு உயிர் பொழைச்சவங்க பாடு பாத்திருக்கேன்...அவங்க ஆயுசுக்கும்....கஷ்டம்....
இன்னும் நெறய எழுதுங்க சார்.
//////மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். தீக்குளிப்பவர்களும், தற்கொலை முயல்வோரும் மரணத்தை விரும்பி நாடியவர்கள்.///////
மிகவும் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே .
தீ காயம் ஏற்ப்பட்டவர்களின் நிலை பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் வார்த்தைகள் மிகவும் வருத்தம் தரும் ஒன்றுதான் .
உங்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததும் ஏற்ப்பட்டிருக்கும் முழு வலியையும் இதயமெங்கும் மெல்ல நிரப்பி செல்கிறது பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் . . பகிர்வுக்கு நன்றி நண்பரே .
கருத்துக்கு நன்றி கவிசிவா!
ரொம்ப சிரமமான ஒரு தொழில். இதை தொழிலா நினைக்காம தொண்டா நினைக்கும் டாக்டர்கள் உண்மையிலேயே தெய்வங்கள் தான் டாக்டர்!
நெஞ்சம் கலங்கி விட்டது தேவனே.//
கலக்கிட்டிங்க ஜோதி! இந்த ஒரு வரி போதும்!!
Jey said...
கண நேர முடிவு, வாழ்க்க்கையே மாறிடுது.....அதுவும் தீவச்சிகிட்டு உயிர் பொழைச்சவங்க பாடு பாத்திருக்கேன்...அவங்க ஆயுசுக்கும்....கஷ்டம்....
இன்னும் நெறய எழுதுங்க சார்.
//
தொடருகிறேன் அன்புடன்!
உங்களின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததும் ஏற்ப்பட்டிருக்கும் முழு வலியையும் இதயமெங்கும் மெல்ல நிரப்பி செல்கிறது பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் . . பகிர்வுக்கு நன்றி நண்பரே .
//
உணர்வுள்ள வரிகளுக்கு என் நன்றி!
அபி அப்பா said...
ரொம்ப சிரமமான ஒரு தொழில். இதை தொழிலா நினைக்காம தொண்டா நினைக்கும் டாக்டர்கள் உண்மையிலேயே தெய்வங்கள் தான் டாக்டர்!
//
நான் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்....
ஏன் இன்ட்லி சேர்ப்பது இல்லையா
இன்டலி சேர்த்துவிட்டேன்! திடீரென்று லிங்க் காணவில்லை.
Deva ...iam stunning and spechless..you are Great.
ஜெரி! மிக்க நன்றி. எழுதிய பயன் கிடைத்த திருப்தி கிடைத்துவிட்டது!
கிடைத்த மருந்துகளை வைத்து காப்பாற்ற முடியாது போன அந்த சகோதரியை நினைத்து இப்போதும் வருத்தப்படும் உங்கள் மாதிரி மருத்துவர் வடிவில்தான் நான் கடவுளை பார்க்கிறேன்..
உங்களுக்கு என் வந்தனங்கள்... நன்றி சார்...
உண்மையில் உங்கள் கஷ்டம் விளங்கிடத்தான் செய்கிறது, பணமொன்றே குறியாய் இருக்கு சில போலி(மருத்துவ சேவை என்ற மனப்பான்மையற்றவர்கள்) மருத்துவர்களால் தான் கஷ்டமாயிடுது
உங்கள் நண்பர் என சொல்லிகொள்வதில் சந்தோஷம் தேவா
இன்னும் நிறைய சேவை செய்யுங்கள்
அந்த பெண்ணின் முட்டாள்தனமான முடிவை விடுங்கள். உங்கள் Dedicated serviceக்கு சல்யூட்
அர்பணிப்பு உணர்வோடு செயல்படும் உங்களைப்போல சிலர் இருப்பதால் தான் மருத்துவத்துறை இன்னும் தன் மகத்துவத்தை இழந்து விடாமல் இருக்கிறது.
உங்கள் பணி தொடரட்டும்
நிறைய தெரிந்துக்கொள்ள ஆர்வம், இன்னும் எழுதுங்க தேவா சார்
என்ன் சொல்லதுனு தெரியல.....
எங்க அத்தைகூட வீட்டில் ஏற்பட்ட சிறு சண்டையில் இதுபோல் செய்துகொண்டார். அவரைக் காப்பாற்றபோய் மாமாவுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டது. என் அம்மாதான் மருத்துவமனையில் கூட இருந்து குணமடையும் வரை பார்த்துக் கொண்டார். தீக்காயம் பட்டவர்களின் அவஸ்தைகளையே பார்த்துக் கொண்டிருந்த எனக்கு உங்களின் இடுகை மருத்துவர்களின் சங்கடங்களைப் பற்றியும் உணர வைத்தது.
மிக அருமையான பதிவு..
உங்கள் செயல்களுக்கு எங்கள் சல்யூட்..
வாசிக்கும்போதே நடுங்குகிறது. ஒரு விநாடிக் கோபத்தில் செய்துவிட்டு ரணவேதனை அனுபவிக்கும் கொடுமை.. யாருக்கும் வரக்கூடாது; இறைவன் காக்கட்டும்.
மருத்துவரும் ஒரு கடவுள்தான்.
அவசரத்தில் முடிவெடுக்கும் மக்கள் உயிரின் மதிப்பை மறப்பது விரும்பதாகத ஒன்று.
//அர்பணிப்பு உணர்வோடு செயல்படும் உங்களைப்போல சிலர் இருப்பதால் தான் மருத்துவத்துறை இன்னும் தன் மகத்துவத்தை இழந்து விடாமல் இருக்கிறது.//
Repeat Velu.G
இன்னும் நெறய எழுதுங்க சார்.
அருமையான பதிவு!
இன்றைய மருத்துவ உலகில், வியாபாரத்தன்மை மிகுந்து விட்ட மருத்துவத்துறையில், அர்ப்பணிப்பு மனமும் மனித நேய உணர்வும் கடமையுணர்ச்சியும் உள்ள உங்களைக்கண்டு மனம் மகிழ்வடைகிறது! உங்களைப்போன்ற இளைஞர்கள்தான் நம் நாட்டுக்கு இன்றைய முக்கியத் தேவை!
ஒரு ராயல் சல்யூட் உங்களுக்கு!!
//மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். //
உண்மை தேவன்.. உடல் நிலை சரியில்லாத போது டாக்டர்களை கடவுளாகத்தான் கருதுகிறோம்..
//மரணத்துடன் போராடுவதுதான் மருத்துவனின் வாழ்க்கையும் தொழிலும். //
உண்மைதான் சார்.... உங்களை போன்றவர்கள் இருப்பதால்தான் இன்னும்..... உலகம் சுற்றிகொண்டே இருக்கு...
இன்னும் ஒரு கருத்து,,
மருத்துவமும் கல்வியும் சேவை மனப்பான்மை இழந்து வருகின்றதே உண்மையா? நீங்களே சொல்லுங்கள்
Post a Comment